Saturday, August 1, 2015



ஷாகிர்
++++++
எங்கள் நிறுவனத்தில் கடை நிலை விற்பனை பிரிதி நிதியாக சேர்ந்து
DGM ஆக உயர்ந்தார் என்பது சாதாரணம் அல்ல
ஒரு சாணி உருண்டையைக்கூட மடித்துக்கொடுத்தால் 
தங்கமென விற்கக்கூடிய வியாபாரத்திறன்
பேச்சாற்றல் மிக்கவர்., வாடிக்கையாளர்கள் நமக்கு வாய்ப்பளிக்கவந்த வரம் என்றார் காந்தியடிகள் பொதுவில் விற்பனை நிலையங்களில் அப்படி நினைப்பதில்லை வாடிக்கையாளர்களை ஆடுகளாகவே பார்க்கிறார்கள் வந்த வாடிக்கையாளர்களிடம் விற்பனை முடித்துவிட்டால் ஆட்டை அறுத்ததாகவே குறியீட்டு மொழியில் சொல்வார்கள் அப்படி அறுக்கமுடியாத ஆடுகளையும்
நரிகளையும் சில சமயம் வேடிக்கைப்பார்க்க வந்தவர்களையும் கூட
வியாபாரம் முடிக்கும் திறமை நண்பர் ஷாகிருக்கு உண்டு

சில சமயங்களில் குறிப்பிட்ட நாட்களில்
வேலையை முடிக்காததால் கொலைவெறியோடுவரும்
வாடிக்கையாளர்களையும் "அண்ணே" என்ற ஒற்றை வார்த்தையில்
சமாதான புறா பறக்கவிட்டுவிடுவார் அவரது தூத்துக்குடி வட்டார மொழி வழக்குக்கு அத்தனை ஈர்ப்பு வயதில் இளையவரையும் "அண்ணே" என்றுதான் அழைப்பார்
இவர் ஒருவர் செய்த வேலையில் 4 MBA முடித்தவர்களை
பணியமர்த்தியும்கூட அவரின் இடம் நிறப்பப்படாமலே உள்ளது
இவரது அனுபவ படிப்புக்கு எதுவும் ஈடாகாது

எல்லாவற்றிலும் ஓர் நேர்த்தி
ரானுவத்தில் பனிபுரிய தகுந்த குணம்
திடீரென அம்பி அன்னியனாகிவிடுவார்
ஷாகிர் என்றதும் பழகிவர்களுக்கு
நன்றாகத்தெரியும் புண்ணாக்கு என்ற வார்த்தை

நான் வீடு வாங்கும் கடைசி நிலையில்
பத்திரப்பதிவுத்துறை கட்டணத்தை ஏற்றியதால்
1 லட்சம் பற்றாக்குறை ஏற்பட்டது
உடனே கொடுத்து உதவிய பேருள்ளம் ஷாகிருக்கு

நீண்ட நாட்களுக்குப்பின் அவரை சந்திக்க நேர்ந்தது
பார்த்தவுடன் சொன்னது அண்ணே முன்னைவிட நன்றாக
சம்பாதிக்கின்றேன் வருடத்திற்கு மூன்று நல்ல காரியம்
செய்யப்போகிறேன் ஒன்று மருத்தவம், கல்வி மற்றும் திருமணம் என்றார்
அந்த உதவும் உள்ளத்திற்கு நம் நல்வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment