Saturday, August 1, 2015



பாகுபலி
+++++++|
சமண தீர்த்தங்கரான ரிசபதேவருக்கு நூறு புதல்வர்கள்
முதலாமவர் பரதன், இரண்டாவது மகன் பாகுபலி
பரதனுக்கு முடிசூட்டு விழா நடக்க,
இளைய மகனான பாகுபலி சகோதரனுடன்
அரியாசனத்திற்காக யுத்தத்தில் ஈடுபட
பாகுபலியே வெற்றி பெற்றாலும்
தமையனின் வாடிய முகம் கண்டு
மனமாறிவிடுகிறது அவனுக்கு
ராஜ்ஜியம் அனைத்தையும் விட்டுவிட்டு
முற்றும் துறந்த ஜைன மத துறவியாக வாழ்ந்திருக்கிறார்.

கர்நாடகத்தில் இவரது சிலை உள்ள இடத்திற்கு மைசூர்-ஹாசன் கிழக்காக 50 மீட்டர் பயணிக்கவேண்டும். பெங்களூரிலிருந்து சுமார் 160 கிமீ தொலைவில் இவ்விடம் உள்ளது. ஷ்ராவனபெலகோள நகரில் உள்ள வித்தியகிரி மலையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஒற்றைக்கல்லினால் வடிக்கப்பட்ட சிலையான கோம்மடேஸ்வரா பாகுபலி சிலை அமைந்திருக்கிறது. கி.மு 983 ஆண்டு கங்கரு வம்ச மன்னர்களால் இது கட்டப்பட்டிருக்கிறது.

பாகுபலி கோயில் மஹாராஷ்ராவில் கொல்ஹாபூரிலும் உள்ளது 28 அடி பாகுபலி சிலை 1935 நிறுவப்பட்டது

No comments:

Post a Comment