
எடிசன்
++++++
கண்டுபிடிப்புகளின் கடவுள்
இரவுக்குத்தீயிட்டவன்
நிலவின் நிம்மதிக்கலைத்தவன்
இரவை பகலாக்கிய இரண்டாம் சூரியன்
அழுதுகொண்டிருந்த மெழுகுத்திரியையும்
அலைபாய்ந்த அகல்விளக்கையும்
அப்புறப்படுத்தியவன்
அமாவாசையையும் பேய் பிசாசுகளையும்
அறிவு வேப்பிலைகொண்டு அடித்து விரட்டியவன்
இருண்ட இரவுக்குமட்டுமல்ல
கர்ப்ப பையிலிருந்து கற்பகிரகம் வரை
ஒளி கொடுத்தவன்
ஆய்ந்துபார்க்காமல் எதையும்
ஏற்பது எடிசனுக்கு ஏற்புடையதல்ல
அவனது ஆய்வுச்சாலைக்கு வரப்பயந்த ஆண்டவனைப்பற்றி
அவன் கவலைப்பட்டதே இல்லை
தோல்வியுறும்போதுதான் மனிதன்
நம்பிக்கையிழக்கிறான்
நம்பிக்கையிழந்த நேரங்களில் மட்டுமே
மனிதன் கடவுளை தேடுகிறான்
எடிசன் 1000 முறை தோற்றாலும்
ஆண்டவனைத்தேடியதில்லை
முடிவுகளை தேடி முனேறியவன்
நம்பிக்கையோடு முயன்ற
வெற்றியின் நாயகன்
மதவாதிகளின் மடத்தனங்களோடு
சண்டையிட்டு என் நேரத்தை வீனடிக்க
விரும்பவில்லை என்றவன்
மனிதகுலத்திற்கு உபயோகமானதை
மட்டுமே கண்டுபிடிக்க உறுதிபூண்டவன்
அவனது பதிவுபெற்ற கண்டுபிடிப்புகள் 1093
பதிவுபெறாதவைகள் கணக்கிலடங்கா
11.02.1847 ல் அமெரிக்காவின் மிலான் நகரில் இந்த சூரியன் பிறந்ததது பெரிய தலையுடன் பிறந்ததால் பள்ளியில் மந்தபுத்தியுள்ள மண்டு என்று
நிராகரித்தார்கள் தாயின் அன்பிலும் அரவனைப்பிலும் பள்ளி நிராகரித்த எடிசன் ஓர் பல்கலைகழகமாக உறுவானார். பள்ளிகள் அறிவாளிகளை உறுவாக்குவதில்லை மனப்பாட எந்திரங்களைத்தான் தயார்செய்கிறார்கள்
14 வயதில் வீக்லி ஹெரால்ட் பத்திரிக்கையின் ஆசிரியர், பதிபாளர் மற்றும் விற்பனை அனைத்தையும் அவரே செய்தார்
எடிசனின் பதிவுபெற்ற முதல் கண்டுபிடிப்பு வாக்குபதிவு எந்திரம் 11 நாட்களுக்கொரு சிறு கண்டுபிடிப்பு
6 மாதத்திற்கு ஓர் பெரிய கண்டுபிடிப்பு இது அவரின் இலக்கு ஆனால் 1882 ல் 141 ஆய்வு செய்து 75 கண்டுபிடிப்புகளை பதிவு செய்தவர்
சொன்ன சொல்லையும் செலவுசெய்த நேரத்தையும்
திரும்பபெறமுடியாது என்றார்கள்
எடிசன் ஒலியை சிறைபிடித்தார் அவரின் சொந்த குரலில்
"Mary had a little lamb" என்ற பாடல்தான் உலகின் முதல் பதிவு செய்த பாடல்
20-08-1879 ல் ஒளியையும் சிறைபிடித்தார்
தையல் நூலில் கரியைத்தேய்த்து 40 மணி நேரம் எரியும்
மின்சார விளக்கை கண்டுபிடித்தார்
தாயாரின் மறைவிற்கு பின் தனிமையில் வாடிய எடிசன் தன்னோடு பணிபுரிந்த மேரி ஸ்டில்வெல்லை நண்பர்களின்
கட்டாயத்தால் மணம்புரிந்தார் ஜீனியர் எடிசன் மற்றும் மரியன் என்ற ஓர் மகள்
முதல் மனைவி இறந்தபின் 1886ல் மினா மில்லரை காதல் மணம்புரிந்தார்
சிறுவயதில் பத்திரிக்கை சுமையுடன் ரயிலில் ஏற சிறமப்பட்ட சிறுவனை ஒரு பெரியவர்
எடிசனின் காதைப்பிடித்து தூக்கிவிட்டார் அன்றுமுதல் காது சரியாக கேட்கவில்லை
பின் வந்த காய்ச்சலில் ஒரு காது சுத்தமாக கேட்காமல் போனது ரயிலில் ஆராட்சி செய்தபோது
தீ விபத்து ஏற்பட்டது அப்போது மேலதிகாரி கன்னத்தில் விட்ட அறையில் அடுத்தகாதும் கேட்கும் திரண் குறைந்தது
நம் காதுகளை இசைகளாய் நிறைத்தவனின் காதுகள் கேளாது இருந்தான்
ஒலியையும் ஒளியையும் ஒன்றாய் பதிவு செய்து
முதல் திரைப்படம் தயாரித்தவன்
1831ல் அக்டோபர் 18ல் இந்த ஓய்வரியா உழைப்புச்சூரியன்
காலமானார் ஆனால் எங்கே ஓர் மின்விளக்கு
எரிகிறதோ அங்கே எடிசன் உயிர்க்கின்றார்
எங்கே ஓர் பாடல் ஒலிக்கிறதோ அங்கே எடிசன் சிரிக்கின்றார்
எங்கே ஓர் திரைப்படம் ஓடுகிறதோ அங்கே எடிசன் மகிழ்கின்றார்
எங்கே சிமெண்டை பயன்படுத்தி ஓர் வீடு கட்டப்படுகிறதோ அங்கே எடிசன் வாழ்கின்றார்.
இந்த நூற்றாண்டல்ல எந்த நூற்றாண்டு வந்தாலும்
உழைப்பிற்கு எடிசனை மிஞ்ச எவனுமில்லை
மே உழைப்பாளர் மாதம் இது எடிசனின் மாதம்
No comments:
Post a Comment