
எம்.எஸ்.விஸ்வநாதன்
+++++++++++++++++++++
மனையங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன்
1928ம் ஆண்டு, ஜூன் 24ம் தேதி கேரள மாநிலம் எலப்புள்ளி கிராமத்தில்
பாலக்காட்டில் பிறந்தவர் எம்.எஸ்.வி
பாடிப்பு கசப்பானதால் நடிப்பும் நாடகமும் பாட்டுமாக
திசைமாறிய சிறிய வயதில்
தந்தையை இழந்து மிகவும் கஷ்டப்பட்டு
இஷ்டபட்டு சின்ன சின்ன வேடங்களில் நடித்து
நீலகண்ட பாகவதரிடம் முறைப்படி சங்கீதம் கற்று
தனது 13வது வயதில் மேடையில் முதல் கச்சேரி செய்தார்.
இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா மூலம், எஸ்.வி.வெங்கட்ராமனிடம் அறிமுகப்படுத்தப்பட்டு
எஸ்.எம்.சுப்பையா நாயுடு, சி.ஆர்.சுப்பாராமன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றினார்.
வயலின் இசை கலைஞரான டி.கே.ராமமூர்த்தியின் நட்பு கிடைத்தது.
எதிர்பாராதவிதமாக 1952-ல் 'சி.ஆர்.சுப்பாராமன் இறக்க நேரிட, அவர் பணியாற்றி வந்த
தேவதாஸ், சண்டிராணி, மருமகள் போன்ற படங்களுக்கு பின்னணி
இசையமைப்பாளர்களாக இந்த இரட்டையர்கள் தொடர்ந்தனர்.
என்.எஸ்.கிருஷ்ணன், தனது சொந்த படமான ''பணம்'' படத்திற்கு இவர்களை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார்.
இந்த இரட்டையர்களின் வெற்றி கூட்டணி 1965ம் ஆண்டு வரை தொடர்ந்தது.
இருவரும் சேர்ந்து இந்த 13 ஆண்டுகளில், 100 படங்களுக்கு மேல் இசையமைத்தனர்.
விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் இணைந்து 700 படங்களுக்கும், இவர் தனியாக, 500 படங்கள் என,
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என, 1,200 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார்.
1951 முதல் 1981 வரை, 30 ஆண்டுகள், தமிழகத்தில், அவரது இசை ராஜ்யம் தான் நடந்தது.
கலைஞர் முதலமைச்சரானபின் ‘நீராடும் கடலுடுத்த' என்ற தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசையமைக்க
வாய்ப்பழித்தார்.
மனைவி ஜானகி கடந்த 2012-ம் ஆண்டு மறைந்தார்.
ராமமூர்த்தி ஏப்ரல் 17, 2013 ம் ஆண்டு மறைந்தார்.
எம்எஸ்வி - ஜானகி தம்பதிக்கு நான்கு மகன்கள், மூன்று மகள்கள்.
87 வயதான எம்.எஸ்.விஸ்வநாதன் 14-07-2015 அதிகாலை மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.
இறவா வரம் பெற்றது மெல்லிசை
மட்டுமல்ல உன் உடலும் காற்றில் கரைந்துவிட்டது
காற்றிருக்கும்வரை
காதுகள் கேட்கும்வரை
உனக்கு இறப்பில்லை மெல்லிசையே.
No comments:
Post a Comment