
அவமானக்குப்பைகள்
++++++++++++++++++
தாழ்த்திக்கொள்ளாதே
தரம் தாழாதே
கால்களில் வீழாதே
கையேந்தி நிக்காதே
பல்லிளிக்காதே
காரியம் சாதிக்க
வரிசையில் நின்று
கல்லை வணங்கி
கவிழ்ந்து கிடக்காதே
தகுதி மிக்காரை
தக்ககுணத்தோரை
மனிதருள் மாணிக்கமாய்
மானத்தோடு வாழ்வோரை
தாழ்தொட்டு வணங்குதல்
தவறோன்றும் ஆகா
ஆனவமிக்காரை
அகந்தை கொண்ட அரை
குறைகளையெல்லாம்
அண்டிப்பிழைக்காதே
குப்பிர விழுந்து குவிக்கும் செல்வம்
குடும்ப சொத்தாய் நினைக்காதே அது
உன் தலைமுறைக்கு சேர்த்துவைக்கும்
அவமானக்குப்பைகள்
No comments:
Post a Comment