
இந்தியா நாடல்ல சகித்துக்கிடக்கும் சாபக்காடு
++++++++++++++++++++++++++
குற்றம்சாட்டப்பட்டவர்கள்
விடுதலையாகிவிட்டனர்
நீதிபதிகள் இங்கே
குற்றவாளி கூண்டில்
சட்டம் ஓர் விபச்சாரி
பணம்படைத்தவனுக்கு பாய்விரிக்கிறது
ஏழைகளை எட்டி உதைக்கிறது
எளியோர்க்கு கிட்டாத நீதி
காகிதத்தில் இருந்தென்ன இலாபம்
சட்டத்திற்கு வைப்போம் தீயை
சமாதிகட்டுவோம் பொய்சொல்லும் வாயை
இந்திய அதிகாரம்
ஓர் தொழு நோய்வந்த பிச்சைக்காரன்
எல்லோரிடமும் கையேந்தி நிற்கிறது
தானும் சொறிந்து அடுத்தவனையும்
சொறிந்துவிட்டுக்கொண்டு
இந்தியா ஏழைகள் வாழத்தகுந்த நாடல்ல
சகித்துக்கிடக்கும் சாபக்காடு
வாழ்க பணம்படைத்தவர்கள்
No comments:
Post a Comment