Saturday, August 1, 2015



பாபாநசம் படத்துக்கு தமிழக அரசால்
ஏன் வரிவிலக்குத் தரப்படவில்லை என்பதை விளக்கியுள்ளனர். அதன் விவரம்... 
1. தவரை நியாயப்படுத்துவது போன்ற காட்சிகள். 
2. காவல்துறையின் கண்ணியமான செயல்பாட்டுக்கு இழுக்காக அமைந்த காட்சிகள் 
3. தவறு செய்யும் ஒருவன் பாவம் தொலைக்க ஆற்றில் குளித்தால் பாவம் போகும் என்ற பிற்போக்குச் சிந்தனை 
4. பள்ளி மாணவியைக் குளிக்கும்போது படம் பிடித்துக் காண்பிப்பது

இப்போதுதான் தந்தை பெரியாரின் நினைவு வந்திருக்கிறது தமிழக அரசுக்கு
ஒருவன் பாவம் தொலைக்க ஆற்றில் குளித்தால் பாவம் போகும் என்பது பிற்போக்குச் சிந்தனை
என்றால் தன் தலைவி சிறை சென்ற போது
பெரியாரை மறந்து கோயில் கோயிலாக சுற்றித்திரிந்தார்களே
மந்திரிமார்களெல்லாம் மாவிளக்கு போட்டார்கள்
அதிகரிகளே அர்ச்சகரானார்கள்
அரசு எந்திரம் கோயில்களில் சுழன்றது
மண் சோறு மொட்டை அடித்தல் அலகு குத்துதல்
பால் குடம் காவடி என்று வித விதமாக நடித்தார்களே
அப்போதும் அது தவறு
பிற்போக்குச் சிந்தனை என்று இந்த அரசும்
தலைமையும் அறிவுருத்தவில்லை

No comments:

Post a Comment