Saturday, August 1, 2015



இனிய ரமலான் நல்வாழ்த்துகள்
+++++++++++++++++++++++++++++
இஸ்லாம் ஓர் பார்வை
கி.பி 571ல் சவுதியில் அப்துல்லா - ஆமினா தம்பதிகளுக்கு
ஒரே மகனாக நபிகள் பிறந்தார்
பிறக்கும் முன்பே தந்தையையும் 6 ஆண்டுகளில் தாயையும்
அடுத்த 2 ஆண்டுகளில் வளர்த்த பாட்டனாரையும் இழந்தார்
மிக மோசமான சமூக சூழ் நிலையிலும்
ஓழுக்கம், உயர்ந்த பண்பு, நேர்மை நாணயத்தோடு
வணிகம் செய்துவந்ததால்
செல்வ சீமாட்டி கஜீதா அம்மையார் தன் வாணிபத்தை
இவர் பொருப்பில் கொடுத்தார் கூடவே தன் இதயத்தையும் கொடுத்தார்
தன் 25 வயதில் 15 வயது மூத்த
கஜீதா அம்மையாரையே திருமணம் செய்து கொண்டார்
அவரைத்தவிர ஆயிஷா, ஹஃப்ஷா, உம்முலைமா
மனைவிகளும் உண்டு

தன் 40 வயதில் ரமலான் மாதத்தில் ஹிராஜ் குகையில்
தியானத்தில் இருக்கையில் ஞானம் பெற்றார்
இறைவன் அவரை ஓத உத்தரவிட்டார்
அதுமுதல் தன் 63 வயதில் இறக்கும் வரை அவர்
சொன்னதையெல்லாம் நபியின் மறைவுக்கு பின் ஹழ்ரத் அபுபக்கர் தொகுத்து
6666 வசனங்கள் கொண்ட குரானை வெளியிட்டார்

ஆக்கவும், காக்கவும், அழிக்கவும்
தனித்தனி கடவுள் இல்லை
இந்த உலகம் தானாகவும் தோன்றவில்லை
இறைவனின் விருப்பத்தில் தோன்றியது
அவன் விரும்பும் வரை உலகம் இயங்கும்

மனிதன் தானாகவோ தற்செயலாகவோ
பரிணாம வளர்ச்சியிலோ படைக்கவில்லை
மனிதருள் நல்லவர்கள் கெட்டவர்கள்
உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற ஏற்ற தாழ்வு
இல்லாமல் இறைவன் படைத்தான்

இறைவன் ஒருவனே தனித்தவன் அவன்
இணை, துணை, உதவி இல்லாத பாலின பாகுபாடு இல்லாதவன்
மனித பலவீனமற்ற புற கண்ணுக்கு புலப்படாத
எல்லையற்ற அன்பு, நீதி, நேர்மை கொண்டவன்
நேர்வழி காட்டவோ பரிகாரம் செய்யவோ
மனித, விலங்கு உருவில் அவதாரமெடுப்பதில்லை

இறைத்தூதர்கள் பிரபஞ்ச உண்மையையும்
ஓரிறைத்தத்துவத்தையும் மறுமை இறைச்சட்டம் பற்றிய
அறிவை வழங்க இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் இறைதூதர்

இறைவனை ஏற்பது, நினைவு கூருவது, துதிப்பது, பணிவது
வணங்குவது பிராத்திப்பது இதுவே மனிதனின் கடமை
தொழுகை: ஒரு நாளுக்கு 5 வேளை இறைவனின் அடிமை என்பதை ஞாபகப்படுத்த
இறைவனை வணங்க நிற, இன, குல, தேச பாகுபாடுகள் கடந்து
உடல், உள்ளம், இடம், உடை தூய்மையோடு தொழவேண்டும்

ஜகாத்: செல்வத்தின் மேல் உள்ள பற்றை போக்கவும்
ஏழைகளின் வறுமை தீர்க்கவும் தன் வருமானத்தில்
2.5% பிறருக்கு தானமாககொடுக்கவேண்டும்

ரமலான் நோன்பு: சூரிய உத்யத்திலிருந்து மறைவு வரை
உணவு உட்கொள்ளக்கூடாது இந்த கால கட்டத்தில் தாம்பத்தியம்
தவிர்க்க வேண்டும்

ஹஜ்: புனித பயணம் வசதி, வாய்ப்பு உடல் நலம் கொண்டோர்
வாழ் நாளில் ஒரு முறை தரிசிக்கும் இடம்

திருமணம் : பெரியோரின் சம்மதத்துடன் நடக்கவேண்டும்
மனமொத்து போகாதபோது பிரிந்து மறுமணம் செய்து கொள்ளலாம்

மறுமை வாழ்வு : நன்மை தீமைகளின் கூலி மறுமையில்தான் கிட்டும்

No comments:

Post a Comment