Saturday, August 1, 2015



கருனாநீதி என்ற 5 எழுத்தை
தமிழகம் கலைஞர் என்ற 4 எழுத்தாக்கி கொண்டாடியது உன்னை
கலைத்துறையில் உன் இடம் தொட
ஒருவரும் இல்லை அந்த பராசக்க்தி ஒன்று போதும்
கலைத்துறையை தூக்கியெறி
அது ஓர் காக்கை கூட்டம்
அதிகார அரிசி இருப்போரை அண்டியிருக்கும்

போராட்டாம் என்ற 5 எழுத்தை
பெரியார் வெண்தாடி வேந்தர் என்ற 4 எழுத்து தந்த
தத்துவ சொத்துக்களோடு புத்தன் எதிர்த்த
வேதிய வழக்கங்களை அண்ணாவோடு
சாடித்திரிந்தாயே
சமகால புரட்சியை
சனாதன இருட்டை
சமதர்ம கொடியை தூக்கிப்பிடித்தாயே

தன்மானம் என்ற 5 எழுத்தை
புரட்சியால் புராணம், கடவுள், அறியாமை
தீண்டாமையையெல்லாம் சூரியனாய் உழைத்து
சமூகம், தமிழர் வாழ்வு வெற்றி பெற கற்பனை காவியம் தீட்டி
எழுத்தால் எண்ணத்தால் விடியலுக்காய் உழைத்த உன் 4 எழுத்து தியாகங்கள்
ஊழல் என்ற ஒற்றை மழைத்துழியில்
கறைய விடுவாயா

அரசு பறிபோகும்
எனத்தெரிந்தும் அவரால் வந்த அரசு
அவரால் போகட்டும் என்று நெஞ்சுரத்தோடு
அரசு பதவி வகிக்காத பெரியாரை
அரசு மரியாதையுடன்
அடக்கம் செய்தவனே

அத்தோடு முடிந்ததா உன் வேலை
அரசியல் என்ற 5 எழுத்து மந்திரி
என்ற 4 எழுத்தால் 5 முறை முதல்வர் பதவியில்
அமர்த்திபார்த்தது போதும்
உன் பிள்ளைகளோடும்
உன் பேரன்களோடும் அரசியல் செய்தது போதும்
அரசியலை தூக்கியெறி

அரசியல் சாரா சமூகப்பணி
பெரியாருக்குப்பின்
உன் ஊழியத்திற்காய்
உறங்கிக்கிடக்கிறது
சாக்கடைக்குள் சதிராட
பல பன்றிகள் படுத்துக்கிடக்கின்றன
எழுந்துவா சூரியனே
சந்தனமரங்கள் சாமரம் வீசும்
உன் தலைவனின் ஆயுலை
தாண்டி வாழ வாழ்த்துகிறேன்

No comments:

Post a Comment