
வாழ்வின் நெறிகளையும்
தூய ஒழுக்கத்தாயும்
போதித்த அற்புத மதம் இஸ்லாம்
அந்த மதத்தவர் பெருமை கொள்ளலாம்
அந்த மக்கத்து மாமலர்
குரானை தந்த குணமகன்
நபிகளை வணங்குவோம்
நான் சந்தித்த இஸ்லாமிய நண்பர்களை
நினைவுகொள்கையில்
கொஞ்சம் வருத்தமாக உள்ளது
தனி மனித ஒழுக்கம் தவறி
நேர்மையற்று வாழ்கிறார்கள்
ஒருவேளை தற்கால சூழ் நிலைக்கு
குரானை பின்பற்றி நடக்கமுடியவில்லையோ ?
அல்லது
நடைமுறையில் அவர்களுக்கு பின்பற்ற சிக்கலிருக்கலாம்
அல்லது
மாற்றுமதத்தவர் தவறு செய்வதால்
இவர்களும் சமரசம் செய்து கொள்கிறார்களோ
இருந்தாலும் இத்தனை அருமையான
மத போதனை கிடைத்தும்
5 வேளை தொழுகை செயுதும் தவறு செய்வது
வேதனையாகத்தான் இருக்கிறது
நல்ல ஆசிரியனும் குருவும்
கிடைக்காதவன் வாழ்வு
நல்ல மேய்ப்பன் இல்லாத மந்தையை போன்றது
எல்லாம் இருந்தும் தவறு செய்பவர்களை
என்ன சொல்வது
அவர்கள் தொழுகையை கடமையாக செய்யாமல்
ஓர் கடமைக்காக செய்பவராகவே தோன்றுகிறது
No comments:
Post a Comment