
ஈ.எம். ஹனீஃபா
++++++++++++++
இசையின் எட்டாத அதிசயம் இசைமுரசு ஈ.எம். ஹனீஃபா
இறந்தாலும் இசையில் வாழும் இசைமுரசு ஈ.எம். ஹனீஃபா இசையை நான் கவணிக்க தூண்டியதில் முதன்மையானவர் நாகூர் ஹனீஃபா. மன்னார்குடியில் பள்ளி பருவத்தில் முதல்முதலாக அந்த காந்தக்குரலை கேட்க நேர்ந்தது கேட்டவுடனே மறக்கமுடியாத அளவில் நெஞ்சத்தில் நிறைந்த பாடல்கள். என் தந்தையின் நண்பர்கள் நிறைய இஸ்லாமியர்கள் அவர்களில் ஒருவர் மதுக்கூர் மஜீத் இவரும் நல்ல பாடகர் அவர் மூலமாக நேஷனல் பானாசோனிக் டேப் ரிக்கார்டர் எங்கள் வீட்டிற்குள் வந்தது அவர்தான் ஹனீஃபாவின் நிறை கேசட்டுகளை அறிமுகப்படுத்தியவர் என்னிடம் வேறு கேசட்டுகள் கிடையாது எப்போதும் ஹனீஃபா எனக்காக பாடிக்கொண்டிருப்பார் நான் நிறுத்த சொன்னால் நிறுத்தி பாடசொல்லும் போது பாடிக்கொண்டிருந்தார் அந்த டேப் ரிக்கார்டரின் பட்டன்கள் வாயிருந்தால் அழுதிருக்கும் எங்கள் அப்பா வீட்டில் இருந்தால் நாங்கள் படிக்கவேண்டும் இது சட்டம் நாங்க எங்கே படித்தோம் படிக்கிறமாதிரி நடிப்போம் அவர் தலை தெருவில் மறைந்தவுடன் ஹனீஃபா பாடத்தொடங்கிவிடுவார், பிறகு இந்துப்பாடல்களில் எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களின் பாடலும் எனை ஈர்த்தவை பள்ளியில் மேல் வகுப்பு நாகையில் சென்றபோது பாதி தூக்கத்தில் கிளப்பி பூஜைக்கு போகவேண்டும் ஏசு எதிரே தொங்கிகொண்டிருப்பார் நாங்க தூங்கிக்கொண்டே ஆமென் சொல்லிக்கொண்டிருப்போம் பூஜையில் தூங்கியவர்கள் எங்களில் ஓர் உளவுப்படை உண்டு தயாரித்து தந்த பட்டியலை வைத்து தண்டனை தருவார்கள், இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி பாட்டுப்பாடும் குரூப்பில் சேர்வதுதான் ஏனென்றால் ஒரு மணி நேர பூஜையிலும் ஒரு மூலையில் மறைவான இடத்தில் முட்டி போடாமல் எழும்பாமல் அமர்ந்தே இருப்பவர்க்ள் அவர்கள்மட்டும்தான் குரல் தேர்வில் ஹனீஃபாவின் பாடலைத்தான் பாடினேன் என்னை சேர்த்துக்கொண்டார்கள் இனிமேல் இந்தபாடல்களை இங்கு பாடக்கூடாது இதைத்தான் பாடவேண்டும் என 105 பாடல்கள் கொண்ட தொகுப்பை கொடுத்தார்கள் முதல் பாடலாக " எந்தன் நாவில் உந்தன் பாடல் எந்தன் ஏசு தருகிறார்" பாடிக்காட்டினேன் அன்றிலிருந்து காலையில் ஒரு மணி நேரம் அந்த மந்தையில் இந்த ஆடு தூங்கிக்கொண்டேய இருந்தது.
ஏனோ எல்.ஆர்.ஈஸ்வரி, ஹனீஃபா பாடல்கள் போல் ஓர் ஈர்ப்பு இல்லை எல்லம் பாடல்களும் ஒப்பாரி பாடல்கள் போலவே தெரிந்தது தேவாலயத்தைதாண்டி வேகுஜனங்களை கிருஸ்த்துவ பாடல்கள் எட்டவே இல்லை. பின்னாலில் இளையராஜாவின் சொந்தக்குரலில் வந்தபாடல்கள் ஈர்த்தன என் நண்பர்கள் சொல்வார்கள் கழுத கத்துரமாதிரி இருக்கு அதபோயி ரசிக்கிரியடான்னு ஹனீஃபா குரலில் இசை தொடங்கியாதாலோ என்னவோ இந்தமாதிரி குரல்கள் எங்க்குப்பிடித்துப்போயின ஹனீஃபா குரலின் உயரம் வேறு யாராலும் தொட முடியாத தனித்துவம் கொண்டது. விஞ்ஞாத்தின் விஸ்வரூபம் ஒலிபெருக்கியே தேவை இல்லைமல் கேட்கும் அளவுக்கு கனத்த குரல் ஹனீஃபாவினுடையது. “கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்; கண்மணியாம் ஃபாத்திமாவின் சரிதம் கேளுங்கள்”, “ஃபாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா?” மற்றும் ”மக்கத்து மலரே மாணிக்கச் சுடரே யார சூலல்லாஹ்” எத்தனைமுறை கேட்டாலும் செவிகள் இனிக்கும்
ஹனீஃபா சினிமாவில் குலேபகாவலி, பாவ மன்னிப்பு, இளையராஜாவிடம் இரண்டு மூன்று படங்களில் தான் பாடினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரச்சார பீரங்கி கழகத்தின் தொடக்கத்திலிருந்து கொள்கைமாறாது அந்தக் கட்சியை மக்களிடம் கொண்டு சென்றதில் ஹனீஃபாவின் பங்கு மகத்தானது. ”கல்லக்குடி கொண்ட கருணாநிதியே” என்ற பாடலால் கருணாநிதி அவர்களின் புகளை செவியுள்ளவனையெல்லாம் கேட்க வைத்தவர்.
ஹனீஃபா தன்னுடைய பெரும்பான்மையான பாடல்களுக்குத் தானே இசை அமைத்தார். அவரை இசை உலகமும் தமிழகமும் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை அவரை ஓர் சார்புள்ளவராகவே பார்த்தார்கள் திறமைகளை மதிப்பதைவிட சாயம் பூசுவதிலேயே பலரது திறமைகள் மறைக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment