Saturday, August 1, 2015



நுங்கு
+++++
ஊர் கோயிலுக்கு அருகில் ஓர் ஈச்சைமரம்
எங்கள் கோயிலுக்கு அருகில் இரட்டை பனைமரங்கள்
ஒவ்வொறு கோடையிலும் பனைமர பஞ்சாயத்து நடக்கும்
யாராவது ஒருவர் நுங்கையெல்லாம் வெட்டி தின்றுவிட
பங்காளிகள் பஞ்சாயத்தை கூட்டிவிடுவார்கள்
என் அப்பா தீர்ப்பெழுதினார்
வெட்டியவனை விட்டு விட்டு விளைந்த இரட்டை மரங்களுக்கு மரன தண்டனை,. காலையில் சாய்ந்த இரட்டை கோபுரங்களாய் சரிந்து கிடந்தன, வெட்டிய மரங்களுக்கு கீழ் முளைத்திருந்த பனைகன்றுகளை வேறு இடத்தில் பத்தியப்படுத்தினேன் நீர் ஊற்றி வளர்த்தேன் இரண்டு மட்டுமே மரமானது ஒன்று ஆண் மரம்
ஆந்த ஒற்றை பெண் மரத்தில் நுங்கை வெட்ட ஆட்களோடு
இந்த விடுமுறையில் சென்றேன் யாரோ நாங்கள் சென்னையிலிருந்து வருவது தெரிந்து வெட்டிவிட்டார்கள் பனைமரத்தை சுற்றி நான் நீர் ஊற்றாத அரசும் வேப்பமரமும் வளர்ந்து இருந்தது
அதை வெட்டச்சொன்னேன் ஏதாவது ஒன்று நல்லா வளரும் என்று வெட்டவந்தவரோ அது சாமி என்று வெட்ட மறுத்தார்
அவரது நம்பிக்கைக்காக கடவுள் காப்பாற்றப்பட்டார்.

நுங்கு சீதபேதி போக்கும், தேகம் குளிர்ச்சியடையும், விக்கல் நிற்கும்...
இளம் நுங்கின் சாற்றை எடுத்து, முகத்திலும், உடம்பிலும் தேய்த்து வந்தால், வேர்க்குரு, அம்மை நோய்கள் வராது. நுங்கு, பசியை துாண்டும், மலச்சிக்கலை தடுக்கும்,
முற்றிய நுங்கு வாயு செய்வதுடன் பசி மந்தமும், வயிற்று வலியுமுண்டாக்கும்...ஆகவே உண்ணாதிருப்பது நலம்
நுங்கில் வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மெக்னீசியம், பொட்டாசியம், தயாமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.

லிபர்ட்டி பேரூந்து நிறுத்தத்தில் கடும் கத்திரி வெயிலில்
ஒருவர் நுங்கு விற்றுக்கொண்டிருந்தார் அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது
நுங்கை நோண்டி தின்பதில்தான் சுகம் சென்னையில்
சோம்பேறிகள் என்று சுளையாக விற்கிறார்கள்போலும்
50 ரூபாய் கொடுத்து 30ரூபாய்க்கு நுங்கு கேட்டேன்
அதற்குள் காரில் வந்திரங்கியவர் 100 ரூபாய் கொடுத்து
100 ரூபாய்க்கும் நுங்கு கேட்டார் நுங்கு விற்பவர் கார்காரனுக்கு முதல்மரியாதைக்கொடுத்தார்

உலகம் ஆடம்பரத்திற்குத்தான் அங்கிகாரம் கொடுக்கிறது
பொய்களுக்குத்தான் பூஜைகள் நடக்கிறது
நுங்கை வாங்கிக்கொண்டு கொசுருவாக ஒரு நுங்குக்காக சண்டையிட்டுக்கொண்டிருந்தார் அவர் கொடுக்காமல் இரு நுங்கு அதிகமாகவே போட்டுள்ளேன் என எனக்கு 30 ரூபாய்க்கு நுங்கு கொடுத்துவிட்டு மீதி 70 ரூபாய் தந்தார் கஷ்டப்பட்டு சம்பாதித்து கவணக்குறைவாயிருந்தால் இலாபம் எப்படி வரும் என்றேன்
கார்காரன் என்னிடம் வந்து இந்த நாயிகிட்ட எதுக்கு சார் காசை திருப்பிக்கொடுத்திங்க கொடுத்திருக்கக்கூடாது சார் என்றார் ஒரு நுங்கு கூட தரமறுக்குறான் என்றான்

அடப்பாவி வெயில்ல வந்தவாசியில இருந்து இங்கு பிழைக்கும்
ஏழை விவசாயியை ஏமாத்த நினைக்கும் இந்த நாய்கள்
வெளி நாட்டு குளிர்பான நிறுவனங்களிடமும் மதுபானக்கடைகளிலும்
சூப்பர் ஹைப்பர் மால்களிலும் சொல்லும் விலைகொடுத்து வாங்குபவர்கள்
ஏழைகளைமட்டுமே ஏமாற்ற நினைக்கிறார்கள்

No comments:

Post a Comment