
மதுக்கடை மற்றும் மதக்கடை
+++++++++++++++++++++++++
தமிழகம்
மத சகிப்புத்தன்மையின் இமயம்
இது பெரியார் விதைத்த விதை அந்த
ஆலமரத்தின் விழுதுகள்
அரசியல் ஆதாயம் தேடிகளாகிவிட்டனர்
வளரும்போது சமூக சிந்தனையும்
வளர்ந்தபின் சுய சிந்தனையிலும்
சிக்கிவிட்டார்கள்
சாலையின் நடுவே மேடையிட்டு
ஒரு வாரமாக ஆடிக்கூத்து அரங்கேருகிறது
பக்கத்தில் பயன்படுத்த இடம் இருந்தும்
காவல் துறை எப்படி அனுமதி
அளித்தார்கள் என்று தெரியவில்லை
இது ஓரிடத்தில் மட்டுமல்ல
தமிழ் நாடே இப்படித்தான் இருக்கிறது
கூத்தையும் கும்மாளத்தையும்
ஆட்டமும் ஆடுவோர் இடுப்பையும்
காட்ட சாலையின் நடுவில்தான்
நடக்கவேண்டுமா
பேரூந்து, ஆட்டோ, இருசக்கர வாகனம் மற்ற
அனைத்து போக்குவரத்தும் தேங்கி
கிடக்கிறது
மாற்று மதத்தவர்களைப்பற்றிய
கவலையே கிடையாது
ஆடி மாதத்தில் விடியற்காலை முதல்
இரவு வரை இடைவிடாத கச்சேரிதான்
இதில் கொடுமை எதுவென்றால்
பாடல்கள் யாவும் குத்துப்பாடல்கள்
தொடக்கத்தில் வினாயகர் பாடலோடு
துவங்குவதோடு சரி
ஏற்கனவே வழிபாட்டுத்தளங்கள்
பெரும்பாலும் சாலைகளின் நடுவில்தான் உள்ளன
இவைகளை தடுக்க
ஒன்று கூத்து நடத்துபவர்கள்
பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத
இடங்களில் நடத்த வேண்டும்
அல்லது மதுக்கடைகளை போல்
வழிபாட்டுத்தளங்களையும்
இடையூறு இல்லாத இடங்களில்
மாற்றி அமைக்க வேண்டும்
பழமையான வழிபாட்டுத்தளங்களை பாதுகாத்து
புதுப்புது வழிபாட்டுத்தளங்களுக்கு
தடை விதிக்கவேண்டும்
குரு, சாமியார்களுக்கு கட்டுப்பாடும்
குறைந்தபச்ச தகுதியும் ஏற்படுத்த வேண்டும்
பாலியல் குற்றங்களை குறைக்க
அவர்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு
செய்திடவேண்டும்
ஒரு வேளை உணவு
உண்டியல் முதல் அனைத்து வருமானமும்
அரசு கண்கானிக்கவேண்டும்
தின்று கொழுத்த மடங்களின்
கோடி கணக்கான சொத்துக்களை
கையகப்படுத்தி சமூக சேவையில்
ஈடுபடுத்தவேண்டும்
ஆண்மையுள்ள ஓர் அரசு அமையவேண்டும்
சாலைகளில் உள்ள மதுக்கடை மற்றும்
இந்த மதக்கடைகளையும் உடனடியாக இடித்துத்தள்ளவேண்டும்
நடக்குமா ?
No comments:
Post a Comment