Saturday, August 1, 2015



திரு நாவுக்கரசர் - பெரியார் - ரமண மகரிஷி - ராம் சுரத்குமார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சகோதரியே உங்களின் முந்தைய கேள்விக்கான பதிலாக ...
என் நன்மைக்கோ அல்லது
கிண்டலாகவோ எச்சிரித்தீர்கள்
பெண்களின் உரிமைக்காக பெண்ணடிமைத் தனத்தை எதிர்த்து
தள்ளாத 93 வயதிலும் மூத்திரச்சட்டியோடு போராடிய முதியவரை
பின் தொடர்ந்து சமூகபணி செய்ய பெரும் தலைவர்கள் இல்லாமல் போனதே
அவரை பெண்களே விமர்சிக்க காரணமாகி போனது
உடல் நலம் என்பது அவரவர் பேனுவது
கடவுளை திட்டினாலும் 93 வயதுவரை ஓய்வெடுக்கவில்லை
உடல் நலிவு வந்தபோதும் யாரையும் குறைசொல்லவில்லை
எவ்வளவு எதிர்ப்புக்கு பிறகும் 93 வயதுவரை போராளியாக வாழ்வது கடிது
கொழுத்து தின்று கொழுப்பேரி திரியும் ஆன்மீக நவீன சாமியார்கள்
பழமையின் பல்லக்கில் பவனிவரும்
கோடிகளில் சொத்துக்களை வைத்து
சுகம் காணும் மடாதிபதிகளும்
சமூக பணி செய்யாமல்
சுய நலமாய் சுகம்தேடுகிறார்கள்

கடவுளை திட்டியவருக்கு மூத்திர கோளாறு என்றால்
சதா தெய்வ சிந்தனையுடன் நினைந்து
தொழுது தொண்டாற்றிய தூய தொண்டர்கள்
நோயால் அவதிப்பட்டனர்
ஆன்மீக அன்பர்கள் அதை சோதனை என்பார்கள்

தேவாரம் தே + ஆரம் = தேவாரம் = இறைவனுக்கு பாமாலை தந்த
திரு நாவுக்கரசருக்கு சூழை நோய் வந்த போது
என்னை ஏன் நோய் கொடுத்து வஞ்சித்தாய் என குறைபட்டுக்கொண்டார்

நெஞ்சில் உனக்கே இடமாக வைத்தேன்
நினையாது ஒருபோதும் இருந்த்றியேன்
வஞ்சம் இது ஒப்பது கண்டறியேன்

சலம் பூவோடு
தூபம்மறந்த்றியேன்
தமிழோடு இசை பாடல் மறந்து அறியேன்
நலம் நீங்கிலும் உன்னை மறந்து அறியேன்
உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன்
உலர்ந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாழப் மறந்து அறியேன்
உடல் உள் உறு சூழை தவிர்த்து அருள்வாய்

என குறைபட்டுக்கொண்டார்

ரமண மகரிஷி கேன்சர் வந்து துன்புரும்போது
விசிரி சாமியார் என அழைக்கப்படும் ராம் சுரத்குமார் சுவாமிகள்
குருவின் வேதனை கண்டு பொறுக்கமுடியாமல்
அண்ணாமலையாரை திட்டித்தீர்த்தார்
பின் ராம் சுரத்குமார் அந்திம காலத்தில் அவரும்
புற்று நோயால் அவதிப்பட்டு
சென்னையில் தீவிர சிகிச்சைக்குபின்
மருத்துவர் கண்காணிப்பில்
இறந்து போனார்

No comments:

Post a Comment