
மாஸ்
+++++
மாசிலாமணியின் சுருக்கமே மாஸ். மரணம் வரை சென்று தப்பித்த சூர்யாவின் கண்களுக்கு மட்டும் ப்ரேம்ஜி பேயும் 10 பேர் கொண்ட பேய் கூட்டமும் தெரிகிறது.
மாஸான பேய் கூட்டம் தமிழ் பெயர் வைப்பதற்காக தமிழோடு விளையாடி மாஸ், மாசி என்று பெயர் மாற்றி வெளியாகியுள்ளது நல்ல வேலை தலைப்புகளில் மட்டுமே தமிழை காப்பாற்றி கொண்டுள்ளோம் காசுக்காக.,
பேய்களை வைத்து பயமுறுத்தாமல் பேய்களின் நிறைவேறாத ஆசையை சூர்யா மூலம் நிறைவேற்ற முயற்சிக்கின்றனர். வித்தியாசமான முயற்சி ரொம்ப நல்ல பேய்கள்
பெரிய கதா நாயகர்கள் நடிக்கத்தயங்கும் பேய் படத்தில் அமர்களப்படுத்தியிருக்கிறார
ஈழத்தமிழனாக வரும் சூர்யா கதாபாத்திரம் மிக அழகாக உள்ளது. சூர்யா அப்படியே அந்த அழகு தமிழை பேசி நடித்துள்ளார்.
குணச்சித்திர கேரக்டரில் பார்த்த சமுத்திரக்கனியை வில்லன் வேடத்தில் பயத்தோடு பார்க்க முடியவில்லை. போலீஸாக பார்த்திபன் நக்கலுடன் நடிக்கவும் செய்திருக்கிறார். ரியாஸ்கான்,ஜெயப்பிரகாஷ், ஸ்ரீமன், கருணாஸ், நான் கடவுள் ராஜேந்திரன், மனோபாலா, சண்முக சுந்தரம், விஜய் வசந்த் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இவர்களை வைத்து பெரியளவில் செய்ய வேண்டிய காமெடி ட்ராக் மிஸ்ஸிங். கௌரவ தோற்றத்தில் ஜெய் வந்து கைத்தட்டல் பெறுகிறார்.
யுவனின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கும். பாடல், பேய் படம் என்றால் ட்ரெர் பின்னணி இசை கொடுத்து காதை கிழிக்காமல் நல்ல இசையை கொடுத்துள்ளார் யுவன். படமாக்கப்பட்ட காட்சிகளும் அருமை. ராஜசேகரின் ஒளிப்பதிவில் காட்சிகளும் கவிதை சொல்லும். வெங்கட் பிரபு அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார்.
குடும்பத்துடன் ரசிக்கும்படியாக படத்தை தந்திருக்கிறார். ஆனால் இறந்தவர்களுக்கு மனசு இருக்கிறது. ஆசை இருக்கிறது என்பதை காட்டியிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment