
வா மகனே
கோடாரியோடு
+++++++++++++-
அன்புள்ள மகனே..
நகரத்து சூழலில்
நலமாய் வாழ்வாய் என
நம்புகின்றேன்
நானலாய் வளைந்து வளைந்து
வாழ்ந்தவள் நான்
என் முதுமை என்னால்
இனிமேலும் வளைய
முடியவில்லை மகனே ...
அடுத்தவர் மூலமாய்
அம்பெறிவதை
நிறுத்திவிடு
உன் கரமும்
என் மனமும்
ரணமாகிவிட்டது
கோடாரியோடு வா மகனே
கணவனை இழந்த இந்த
காட்டுமரம்
காத்திருக்கிறது உனக்காய் மனம்வீச
உன் தாகமும், பசியும்
தீர்க்க விறகாக
காத்திருக்கிறேன்
வா மகனே
கோடாரியோடு.
No comments:
Post a Comment