
பொதுவுடைமை என்றவுடன் ஏதோ கம்யூனிஷ்டுகளுக்கு சொந்தமான சொல்லாகவே எண்ணியவர்கள் புறம்போக்கு என்றவுடன் தமக்கு நெருக்கமாகவே
நினைத்துவிட்டனர் திரையரங்கில் கூட்டம் கார் நுழையமுடியவில்லை திரையரங்கத்தொழிலாளி கேட்டார் எந்தப்படம் என்று அங்கு 4 திரையரங்குகள் உள்ளதால்., தம்பி புறம்போக்கு என்றான் என்ன தலைப்புவைக்கிறார்கள் என்னை திட்டுவதுபோல் உள்ளது என சிரித்தார்
பொதுவுடைமைத் தத்துவம், சர்வதேச அரசியல், போராளிகள் பக்க நியாயங்கள், தமிழ் தேசிய உணர்வையும் ஆங்காங்க குறியீடுகளாகக் காட்டியிருக்கிறார் எஸ்பி ஜனநாதன்
ஒரு அப்பாவி இளைஞனை 18 ஆண்டுகள் சிறையில் அடைத்து அவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்படுவதில் அந்த நிரபராதி கேட்கும் கேள்விகள் இந்த நாட்டு சட்ட நடைமுறை மீது விழும் சவுக்கடிகள்.
படம் தொடங்கும் போது அயல் நாட்டுக்கழிவுகளை பற்றிய பேசி அதர்க்கான பின்னணிக் காரணங்களை அழுத்தமாக தெரிவிக்கப்படாததால் பாதிப்பை ஏற்படுத்தத் தவறிவிடுகின்றன. போராளிக் குழுவுக்குரிய வழுவான பாத்திரங்களாக வெளிப்படவில்லை.
விஜய் சேதுபதியின் நடிப்பு விசேஷமான பாராட்டுக்கு உரியது. பாலு பாத்திரத்தில் ஒரு போராளியா கவே மாறியிருக்கிறார் ஆர்யா, கடமை தவறாத காவல் அதிகாரியாக ஷாம் கம்பீரமாக நடித்துள்ளார்.
கலை இயக்குநர் செல்வ குமார் நிஜமான சிறைச் சாலையைக் கண் முன் கொண்டுவந்துள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். இந்தப்படத்திற்கு பாடல்கள் தேவை இல்லை நெருடலாகவே உள்ளது
‘புறம்போக்கு என்கிற பொது உடைமை’ துனிச்சலான எஸ்பி ஜனநாதனின் புரட்சிகரமான படம்
No comments:
Post a Comment