Saturday, August 1, 2015



அப்துல் கலாம்
+++++++++++++
காலம் கால்களை மாற்றி போட்டதால்
கலாம் காலமானார்
ஓர் படகோட்டியின் மகன்
பாராண்ட அதிசயம்
கடல் மீன்களோடு விளையாடிவனின்
கனவு விண் மீன்களுக்கு
விண்களம் ஏவிக்கொண்டிருந்தது

செயற்கை கோள்களில் ஏவிய அறிவை
செயற்கை கால்களில் ஏவியவன்
அறிவு வானமளந்தாலும்
மனம் மண்ணைச்சுற்றியே வந்தது
மதம் பிடிகாத மத யானை நீ
மாளிகையில் உடலிருந்தாலும்
மனம் எளிய மக்களை சிந்தித்திருக்கும்
அரச மாளிகையில்
ஆண்டியாய் வாழ்ந்தவன்

தலைமுறையை கனவு காணச்சொன்னவன்
அடுத்த த்லைமுறைக்காய்
கனவு கண்டவன்
தரையில் தவழ்ந்த
இந்திய வினவெளியை
அக்னி சிறகுகளில் ஏற்றி
அகிலத்தை வளம் வந்து ஆயுதம் செய்து
அற்புதம் படைத்தவன்

மனித நேயத்தில் மகுடம் தொட்டவன்
நடிகர்ளோடு கண்ட கனவுகளை தூக்கத்தில் களைத்து
இளைஞகளுக்கு தூங்கமுடியாத கனவு தந்தவன்
நேருவைவிட குழந்தைகளை
அதிகம் நேசித்தவன் நீயே

நீ மணமுடித்திருந்தால் சுய நலத்தோடு
ஓன்றிரண்டு வாரிசு இருந்திருக்கும்
இன்றோ இந்தியாவே உன் வாரிசானது

பதவிகளுக்காக, நாற்காலிகளுக்காக நாய்களாய் அலையும் உலகில்
முதல் குடிமகன் ஆகும் வாய்ப்பு இரண்டாம் முறை கிடைத்தும்
ஏற்க மறுத்த ஏந்தலிவன்

மேகாலயாவின் ஐ.ஐ.எம் கல்லூரியில் மாணவர்களோடு
உரையாற்றிய போதே தன் இலட்சியத்துடன்
மண்விட்டு மறைந்த மகா உத்தமன்
ஷில்லாங்கின் பெதானி மருத்துவமனையில்
மாரடைப்பால் நீ மறையவில்லை
விதையாய் இளைஞரின் இதயத்தில்
விதைக்கபட்டிருக்கிறாய்

No comments:

Post a Comment