Saturday, August 1, 2015



காக்கா முட்டை
++++++++++++++

கருப்பு துயரத்தின் வண்ணம்
அடிமையின் சின்னம்
ஆதரவற்றவர்களின் அபலைக்கொடி

காக்கையை நாம் அமாவாசைகளில்
மட்டுமே தேடுவோம்
காக்கை சகுணங்களின் அளவீடு

காக்கையை தன் ஜாதியில் சேர்த்தவன்
பாரதிமட்டுமே
தாழ் நிலை மக்களின்
வாழ்வியலை படம்பிடித்த
இயக்குனர் மணிகண்டனை வாழ்த்துவோம்
அவர்களின் ஏக்கங்களையும்
ஏமாற்றங்களையும் ஏற்றத்தாழ்வுகளையும்
நம் கண் முன்னே காட்டும்
படமல்ல இது ஓர் பாடம்
இதில் யாறும் நடித்ததாகத்தெரியவில்லை
வாழ்ந்திருக்கிறார்கள்

விழிம்பு நிலை மக்களை
திருடர்கள்போல் சித்தரித்தாலும்
சமூக ஏற்றத்தாழ்வு உள்ள நிலையில்
பழரச பாத்திரம் சொல்வதுபோல்
வசதியுள்ளவர்கள் கொடுக்காதபோது
தெரியாமல் எடுப்பது திருட்டல்ல
அது எடுப்பது

தமிழ் நாட்டின் திரைப்படத்திற்கு தேவையான கவர்ச்சி, பெரிய நட்சத்திரங்கள், குத்தாட்டம், பஞ்ச் வசனம் போன்ற எந்த தகுதிகளையும் பின் தொடராமல் வெற்றி பெற்றிருப்பது புதிய சிந்தனைகளுக்கு வழிவகுக்கும்

உலகமயமாக்கலின் உணவு அரசியல் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை எப்படி பாதிக்கிறது என்பதை
தெளிவாக காட்டுகிறது படம்
நடிகர்களே நீங்கள் காசுக்காக நடிக்கும் விளம்பர படங்களால் ஏற்படும் பின்விளைவுகளை எண்ணிப்பாருங்கள்
சமூகப்பொருப்போடு நடந்து கொல்லுங்கள்

கோடிகளில் புரளும் கோடீஸ்வரன்களாலும்
பெறமுடியாத சந்தோஷத்தை
கூவத்தில் பார்க்கமுடிகிறது
அந்த குழந்தைகள் முகத்தில்

இது காக்கா முட்டையல்ல
தனுசுக்கு இது தங்கமுட்டை
நல்ல திரைப்படத்தை தந்ததற்காக
பாராட்டுக்கள்

அந்த காக்கை முட்டைகளில்
எத்தனையோ அடைகாக்கப்படாமல்
தெருவொரம் திண்டாடிக்கொண்டுள்ளன
அவர்களின் திசைமாற்ற
உங்களின் இலாபத்தின் ஒரு பகுதியை
அந்த பகுதி மக்களுக்காக ஏதாவது
நல்லது செய்தால்
நிறைய காக்கை முட்டைகள்
குஞ்சுகளாக குரல் தரும்

No comments:

Post a Comment