
அம்மாவுக்கு ...
யாருக்கு கிடைக்கும்
இந்த சிம்மாசனம்
கன்னடத்தில் நீ பிறந்தாலும்
தமிழகமே உன்னை
தலையில் வைத்து ஆடுகிறது
ஊழலில் சேர்த்த சொத்தை
யாருக்கு அனுபவிக்க கொடுக்கப்போகிறீர்கள் ?
உயிர் தர துடிக்கும்
உன் தொண்டனுக்கு நீங்கள் செய்யப்போவதென்ன ?
டாஸ்மார்க் போதுமென்று
நினைத்துவிட்டீர்களா !
நாடே உனக்கான பின்பு
மக்களின் மனதில் நன்மைகள் செய்து இடம் பிடி
நிலமாய் இடம் வாங்கி போடுவதில்
என்றும் நிம்மதி இல்லை
எத்தனை மன்னர்கள்
ஆண்ட பூமியிது
அள்ளியா சென்றார்கள்
கொள்ளிவைப்பதற்குள்
கொள்ளை போய்விடும்
தகுதியானவர்களை
உடன் வைத்துக்கொள்ளுங்கள்
நல்லது செய்தால் உன்
நாற்காலி நகர்த்த ஆள் இல்லை
ஆனவம் தூக்கியெறி
ஞாயப்படுத்திடாமல்
நடந்த தவறுகளுக்கு மனம் வறுந்துங்கள்
மக்கள் மன்னிக்கவும்
மறக்கவும் தயாராகவே உள்ளனர்
தெரிந்தோ தெரியாமலோ
உங்களை அம்மாவாக்கிவிட்டார்கள்
அன்பை ஆயுதமாக்கி
ஆக்கபூர்வமாய் மக்களுக்காய் உழைத்தால்
நீயே நிரந்தர முதல்வர்
No comments:
Post a Comment