
கலாம் பற்றிய விமர்சனம்
+++++++++++++++++++++++
தகுதியின் மையில் கல்லானாய்
வாழும் தலைவர்களின்
தகுதிகளை மறுபரிசீலனை
செய்யவைத்துவிட்டாய்
தலைவர்களுக்கெள்ளாம்
தர்மசங்கடம்
தன்னை மாற்றிக்கொள்ள
ஓர் அறிய வாய்ப்பு
எந்த தலைவனுக்கும்
இத்தனை விழிகள்
கண்ணீர் சிந்தியதில்லை
சிந்தப்போவதுமில்லை
மக்கள் நல்ல தலைமையை
தேடும் அடையாளத்தின் எழுச்சி இது
தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம்
மக்களின் மனங்களை வென்றிட
சுய நலமறந்த பொது நலத்துடன்
காந்தி, காமராஜ், பெரியார்
இப்போது கலாமை பின்தொடருங்கள்
கலாம் பற்றிய விமர்சனம்
1. கலாம் அறிவியலாளர் அல்ல. பொறியியலாளர். அவர் பெரிதாக எதையும் கண்டுபிடிக்கவில்லை. அவருக்கு உலக அறிவியலாளர்கள் நடுவே பெரிய இடம் இல்லை.
2 கலாம் அரசியல்- சமூகப்பிரச்சினைகளில் கருத்துச் சொல்லவில்லை. அரசு சார்பாளராகவே இருந்தார்.
3 கலாம் கல்வியை தனியார்மயமாக்குவது போன்றவற்றில் எதிர்க்கருத்து கொண்டிருக்கவில்லை. கல்விவணிகர்களின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்
4 கலாம் இலக்கிய அறிவோ நுண்ணுணர்வோ கொண்டவராக இருக்கவில்லை. இலக்கியம், கலைகள், தத்துவசிந்தனை ஆகியவை பற்றி தட்டையான பார்வை கொண்டிருந்தார்.
5 கலாம் இந்தியாவை ராணுவமயமாக்குவதில் ஈடுபட்டிருந்தார். ராக்கெட் தொழில்நுட்பம் பயனற்ற போர்வெறியை உண்டுபண்ணுவது. அவரது அறிவு அமைதிப்பணிகளில் பயன்படவில்லை. ராக்கெட் தொழில்நுட்பத்துக்குச் செலவிட்ட தொகைக்கு ரோடு போட்டிருக்கலாம்
6 கலாம் இஸ்லாமியராக இஸ்லாமிய அடையாளத்துடன் இஸ்லாமைப் பிரச்சாரம் செய்யவில்லை. இந்துச்சடங்குகளில் கலந்துகொண்டார். இந்துத் துறவிகளை மதித்தார். ஆகவே அவர் இஸ்லாமியப்பெயர்தாங்கி மட்டுமே.
இந்த விமர்சனம் எளிய மக்களுக்கு புரியாது
சுய நலம் கொண்ட அரசியல்வாதிகளை பார்த்து பார்த்து
சுய நலமில்லாத ஓர் நல்லவனை உயரத்தில் பார்த்ததன் பரவசம்
மனிதனாகப் பிறந்த ஒருவரின் அடிப்படைப் பண்பு நல்லவராய் இருப்பது அது அருகி விட்டது
தான் எதை நம்பினாரோ அதையே அவர் முன்வைத்தவர்.
அவர் தனக்கென வாழவில்லை. இந்த நாட்டை அவர் விரும்பினார். இதன் மக்கள் சுபிட்சமாக வாழவேண்டுமென கனவுகண்டார். அதற்காக தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். தனக்கென எதையும் சேர்க்கவில்லை. அத்தகைய மகத்தான முன்னுதாரணங்கள் நம் முன் இன்று குறைவே.
இதை முழுமூச்சுடன் ஊடகவாதிகள் வெளிச்சம்போட்டதின் விளைவே.





















