ஆனந்த்
+++++++
இந்த படத்தில் நண்பர் ஆனந்த் மட்டும்
நான் வீடு வாங்கும்போது என்னோடு தொடர்பில்லாதவர்
அவர் எப்படி இதில் (நண்பேன்டா) சேர்ந்தார் என சில நண்பர்கள் வினவினர்
நான் வீடு வாங்கிவுடன் வேலையை விட்டு விட்டேன்
சூழல் அப்படி (யாரையும் கைவிரல் சுட்டி காயப்படுத்த மனம்விருப்பமில்லை)
நான் எதற்கெல்லாம் பயந்தேனோ
அதெல்லாம் நடந்தது
பிரச்சனைகளின் போதுதான் மனிதர்களை
புரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது
வாழ்வில் துயரப்படாமல் வாழ்ந்ததால்
துயரம் எனக்கு நிறைய பாடம் நடத்திக்கொண்டிருந்தது
எனக்கு இது புதிதாகவும் சுகமாகவும் இருந்தது
நிறைய வாய்ப்புகள் வாசல் வந்தது
தட்டிக்கழித்தேன்
நிஜங்களை அனுபவிக்கத்துடித்தேன்
நிமிடங்களில் வாழ்ந்தேன்
துன்பம் சுகமாயிருந்தது
கல்லூரிகளிலும் கிடைக்காத பாடம்
காலம் சொல்லிக்கொடுத்தது
உளியின் வலி பொருத்தேன்
மனம் சிற்பமானது
கடிகாரமுள்ளோடு நொண்டியடித்த வாழ்கை
கரைகளில் அலையடித்தாலும்
ஆழ்கடலில் அமைதியாய்
அனுபவ முத்துக்களை சேகரித்தேன்
அனுபவத்தின் முடிவு அமைதி
அந்த அமைதி சென்னையில் கிடைக்காது
இது வாழ்விடமல்ல பிழைப்பிடம்
பொய்யும் புரட்டும்
வாழ்வாகி போனதால் கிராமத்தை நோக்கி பயணப்பட ஆயத்தமானேன்
அந்த அமைதி தேடலில் கிட்டியதுதான்
இந்த ஆனந்தம்
இயக்குனர் விக்ரமன் படங்களில் பார்ப்பது போல்
சென்னையில் ஓர் கூட்டுக்குடும்பம்
தொலைக்காட்சி தொடர்களைப்பார்த்து காலைவாரத்துடிக்கும்
உறவுகளுக்குமத்தியில்
கணவனின் கால்களில் மனைவி
விழுந்து வணங்குவதும் !
தாய் தந்தையின் கால்களில் பிள்ளையும், மருமகளும் !!
விழுந்து வணங்குவதும் !!!
அடுத்த தலைமுறையின் அதிசியங்கள்
அவரின் தந்தை ஓர் ஆச்சரியம்
அற்புதமான மனித தெய்வம் - ஆனால்
மகன் தான் தெய்வத்தை கோயில்களில் தேடித்திரிகிறார்
இவருக்கு மகனாக பிறக்கவில்லையே என
மனம் ஏங்குவதுண்டு
நண்பர் ஜாஹிர் ஓர் நாள் அழைத்தார்
என் முக நூளைப்படித்துவிட்டு நண்பர் ஆனந்த் சந்திக்க அழைப்பாதாக
சந்தித்தோம் பேசினோம் முடிவில்
சென்னையைவிட்டு போகவேண்டாம் என்றும்
வாரம் ஒர் நாள் சந்திப்பதாகவும்
ஓன்றாய் உணவருந்திவிட்டு திரைப்படம் செல்லவும்
நிறைய முக நூளில் எழுதவேண்டும் என்றும்
அதற்காக என் வீட்டுக்கடனை தானே அடைப்பதாகச்சொன்னார்
பாரதிக்கு ஓர் ஆனந்த் கிடைத்திருந்தால்
பாவம் அந்த ஏழைக்கவி யானையிடம் மிதிப்பட்டு செத்திருக்கமாட்டான்

No comments:
Post a Comment