Saturday, May 9, 2015


“காதலர் தினத்தை” மேலை நாட்டுப் பண்பாடுகளை திணிக்கும் முயற்சி என்றும் காதலின் பெயரால் நினைவுப் பரிசுப் பொருட்களை விற்கும் வணிகமயமாக்கம் என்றும்
ஒரு சாராரால் குற்றம் சாட்டப்படுகிறது. இதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.

இங்கு எல்லாம் வியாபாரமாகிவிட்டது
தாய்பால் விலை பேசப்படுகிறது
தாம்பத்தியம் நீதிமன்ற படிகட்டுகளில் ஏலம் விடப்படுகிறது
நக்கித்தின்னும் நாய்கள்
காதல் என்றபெயரில் எல்லாம் முடிந்து
எச்சிலைகளாய் ஏமாற்றப்படுகின்றனர்
அடுத்த இலைக்காய் அந்த ஆண் நாய்
வேறு ஓர் குப்பைத்தொட்டியில்
நக்கித்திரிகிறது
பெற்றோரின் சாபம் நாயாய் அலைகிறார்கள்
விடுதலைவேண்டி நீதிமன்றங்களுக்கு
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் ரமன் சிங் தலைமையிலான பாஜக அரசு, காதலர் தினம் இனி பெற்றோர் தினமாக அனுசரிக்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கி.பி 270 ம் ஆண்டு ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் திருமணமானவர்கள் நல்ல போர்வீரர்களாக உருவாவதில்லை என்று நம்பியதன் காரணமாக
காதல் செய்வதையும் திருமணம் செய்வதையும், பெண்களை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது என்றும் தடை விதித்திருந்தார் ரோமப் பேரரசர் கிளாடியுஸ். காதல் செய்யும் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் நம்பிக்கை.
திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை அனுபவிக்க துடித்தவர்களுக்கு உதவி செய்து அவர்களுக்கு அரச கட்டளையை மீறி திருமணம் நடத்திவைத்தார் மத குரு வேலண்டைன்.

இந்த உதவிக்கு மன்னன் மரணதண்டனையை பரிசளித்தார்.
வேலண்டைன் கொல்லப்பட்ட நாள் பிப்ரவரி 14. வேலண்டைன்ஸ் டே (காதலர் தினமாக) கொண்டாடுகிறார்கள்

மதம் வளர்க்க வந்த மதவாதி
தன் உயிர் கொடுத்து
மனிதம் வளர்த்த நாள்
நம்மூர் மதவாதிகள்
மடம் வளர்க்கிறார்கள்
நெய்சோறும் பாலும் தின்று
தொப்பையை வளர்க்கிறார்கள்
ஆசிரமம்தோரும் கொலையும்
குற்றமும் வளர்க்கிறார்கள்
மனிதம் கொன்று
மதம் வளர்க்கிறார்கள்

காதல் என்பது மனநிலையிலும்,
உணர்வு நிலையிலும் ஏற்படுகிற ஆழமான ஈடுபாடு.
இந்த ஈடுபாட்டால் புதுவிதமான ஆனந்தத்தை மனிதன் உணர்கிறான்.
பருவம் பாராமல் பூப்பது காதல்
மார்க்ஸ் -ஜென்னியின் யூத காதல்
ஆண்டாள் - கண்ணனின் ஒரு தலை காதல்
கயஸ் (மஜ்னு) - லைலாவின் கல்லறை காதல்
ரோமியோ - ஜீலியட் ஜென்ம பகையில் வளர்ந்த காதல்
அனார்கலி - சலீமின் கலைக்காதல்
அம்பிகாபதி - அமராவதி மொழிக்காதல்

இரு மாறுபட்ட உண்மையான
உள்ளங்களின் சந்திப்பு
இரு மாறுபட்ட உடல் கூறுகளின்
ஆய்வின் ஆர்வம்
உடலால் வேறு பட்டாலும்
உள்ளத்தை ஒட்டவைக்கும் தேடலின் பயணம்
தேடலை உடலோடு நிறுத்திக்கொள்வது
தோல்வியில் முடிகிறது
மனதின் மான்பு தேடும் மந்திரமே
இறப்புவரை காதலை இழுத்துச்செல்கிறது
 — 

No comments:

Post a Comment