மகாவீரர் - நிர்வானத்தை நோக்கி தமிழகம்
++++++++++++++++++++++++++
ஜைனம் என்பது வெற்றி
அனைத்து துன்பங்களிலிருந்தும்
வாழ்வை வெற்றி பெரும் மார்க்கம்
சித்தார்த்தர், திரிசாலை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
யசோதை என்ற நங்கையை திருமணம் செய்து கொண்டு
அனோஜா என்ற பெண் மகவிற்கு தந்தையானார்.
மகாவீரர் புத்தரைப்போலவே
அரச வாழ்வை துறந்து தனது
30 வயதில் துறவு பூண்டவர்
அரசன் ஆண்டியான மகத்துவம்
இன்றோ ஆண்டிகள் அரச வாழ்வை அனுபவிக்கிறார்கள்
இந்து சமயம் மூடப்பழக்கத்தில் மூழ்கிக்கிடந்தன
கேள்வி எழும்போதெல்லாம் வேள்வி நடந்தன
உயிர்ப்பலியை திருப்பலியாய் செய்தார்கள்
சாதிப்பாகுபாடுகள் தாண்டவமாடின
எளிதில் பொருள் விளங்கா புலம்பல்கள் வேதமொழியாய் மாறின
இச்சீர்கேடுகளைக்களையும் பொருட்டே புத்த, சமண சமயங்கள் இந்தியாவில் தோன்றின.
ஜிம்பிரிப் என்னும் கிராமத்தில்
சாலா என்னும் மரத்தடியில் ஞான ஒளியைப் பெற்றார்.
மரங்களே மகான்களுக்கு ஞானத்தை தந்தருளியது
மனிதனை விட தெய்வங்கட்குச் சிறப்பு தரும்
வேதக் கொள்கைகளைக் கடுமையாக சாடுகிறார்.
உடமைகளைமட்டுமல்ல
உடைகளையும் துறந்து 12 ஆண்டுகள்
கடும் மெளன தவமிருந்தார்
பயன் கைவல்ய ஞானம் கிடைக்கப்பெற்றார்.
இன்ப துன்பங்களுக்கு நாமே பொறுப்பு.
நம் கருமங்கள் நம்முடைய முயற்சியினால் நாமே களையவேண்டும்.
அறவழி நடந்து மனத்தால் தூய்மை உடையோர்
அனைவரும் கடவுளர்களே என்பது மகாவீரரின் கருத்து.
துறவிகள் தங்கள் தலைமுடியை ஒவ்வொன்றாக முழுவதையும் பிய்த்து எடுத்துவிட வேண்டும்.
அடிக்கடி உண்ணா நோன்பிருந்து இறுதியில் முழுப்பட்டினி கிடந்தே உயிர் துறக்க வேண்டும்.
உடையேதும் அணியாமல் நிர்வாணமாகத் திரிதல் வேண்டும். நீராடல் கூடாது.
தரையிலேயே படுத்து உறங்குதல் வேண்டும். நின்றபடியே சாப்பிட வேண்டும்.
இவற்றைசமண முனிவர்கள் கடைபிடிக்க கட்டளையிடப்பட்டது.
வாய்கிழிய பேசும் நிகழ்கால துறவிகள்
அருள் தேடிவரும் அப்பாவி பெண்களின்
உடைகளைத்தான் துறக்கத்துணிந்தார்கள்
பிறவி, வாழ்வு, துன்பம் மற்றும்
மரணங்களிலிருந்து நிர்வானம்
அடைதலே இவர் நோக்கம்
அகிம்சை, சத்தியம், அஸ்த்தேய -
(அடுத்தவர் சொத்தை திருடவோ அபகரிக்கவோ கூடாது)
பிரம்மச்சரியம், அபரிக்கிர்ஹா -
(உற்றார் உறவுகள் வீடு மனைகளில் பற்றற்று இருக்கவேண்டும்)
வணங்குதல், வழிபடுதல் கூடாதென்றார்
படைத்தல், காத்தல், அழித்தல்
கடவுளின் வேலையில்லை என்றார்
மனிதர்களிடம் மட்டுமல்ல
அனைத்து உயிர்களிடத்தும்
அன்பு செழுத்த சொன்னார்
கிபி 82 ல் ஜைனம் இரண்டாய் பிரிந்து
நிர்வான துறவிகள் எல்லாம் திகம்பரர்கள் என்றும்
வெள்ளாடை துறவிகள் எல்லாம்
ஸ்வேதாம்பரர்களாகவும் பிரிந்தனர்
மாப்ள சீக்கிரம் வா நாளைக்கி சரக்கு கிடைக்காது கட லீவு
இன்னிக்கே வாங்கி ஸ்டாக் வக்கனும்
நாளைக்கி எதுக்கு லீவு உடுறானுங்க
எவனோ மகாவீரர்னு ஒரு சாமியார் பொறந்த நாளாம்
மகாவீரர்மேல் கடும் கோபம் அந்த குடிமகன்களுக்கு
அரசு ஒருபக்கம் மதுவிற்பனையை அதிகப்படுத்திவிட்டு
மறுபுரம் மகாவீரருக்காக விடுமுறை விடுவதால்
முழு போதையில் துணிகளை துறந்து நிர்வான நிலையில்
திகம்பரர்களாக பலர் வீதிகளில் விழுந்துக்கிடக்கிறார்கள்
மேல்தட்டு மக்கள் வெள்ளாடை கசங்காமல்
ஸ்வேதாம்பரர்களாக மயங்கித்திரிகிறார்கள்
மகாவீரரை மறந்த பலகுடிமகன்களுக்கு
அரசு விடுமுறைதந்து ஞாபகப்படுத்துகிறது

No comments:
Post a Comment