Saturday, May 9, 2015


மழைத்துளி மறந்த
தரிசு நிலம்போல
முளைவிட மறந்த
விதைகளைபோல்
துளிர்க்க மறந்த
தளிர் போல
மண்ணுக்குள் உன்னையும்
மனதுக்குள் நினைவையும்
ஒற்றை துளியில்
இரண்டுமாய் தவிக்கின்றோம்

உன் இழப்பு
இப்போதும் எமக்கு
வல்லரசின் ராணுவ ரகசியம் போல்
மனம் நம்ப மறுக்கிறது

நஞ்சுடைய நாகம் போல்
நெஞ்சமெல்லாம் நெளிகிறது
உன் இறப்பு
எப்படி உயிர் பிரித்தாய்?

சாய்ந்து கொள்ள நீயில்லை
வழி காட்ட உன் அறிவில்லை
உன் ஞாபக வெள்ளம்
பின்னோக்கி இழுக்கிறது

இமைகளின் ஈரத்தில்
வறண்ட இதழில்
இருண்டு இதயத்தில்
காலப் பெருங்கடலில் வீசும் அலைகளில்
காணாமல் போகவில்லை நீ

எங்கள் நந்தவனங்களில்
ராஜ நடைபோடுகிறாய்
ஆண்டதும் மாண்டதும்
அழுததும் தொழுததும்
ஆகத்தீரவில்லை

நீ நின்ற பாதியில்
நீ சென்ற பாதையில்
எங்களின் பயணம் தொடர்கிறது...

No comments:

Post a Comment