Saturday, May 9, 2015


உழைப்பைப்போற்றுவோம்
++++++++++++++++++++++++
பஜனைப் பாடல்களும்
மார்கழி குளிரும்
வரவேற்கும் வாசலின் வண்ணக்கோலமும்
கதைகளில் மட்டுமே
சென்னை நகரில் மார்கழி
இழுத்துப் போர்த்தி உறங்கிக்கொண்டுள்ளது
மார்கழி குளிர்
மிதமான மழை
என் ஜன்னலைத்தவிர
பேரூந்தின் அனைத்து ஜன்னல்களும்
இருக மூடிவிட்டார்கள்
என் அருகில் பயணிப்பவர் நான் ஏறுவதற்கு முன்னே
ஏறியமர்ந்து உறக்கத்திலிருந்தார்
சென்னை காரைக்குடி கம்பன் தொடர்வண்டி
மீட்டர் கேஜ் 3 ft 3 3⁄8 in இரயில் பாதை
அகலப்பாதையாக 5 ft 6 in மாற்றத்தொடங்கி
15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது
இந்த வழிதடங்கள் எல்லாம் இப்போது
பேரூந்து பயணம் மட்டுமே
பல தனியார் பேரூந்துகள்
கொள்ளை இலாபம் அடைகிறார்கள்
முத்துபேட்டையில் 10 பேரோடு கிளம்பிய
பேரூந்து திருவாரூரில் நிறைந்துவிட்டது
மழைச்சாரளும் மார்கழி பனியும்
மூஞ்சில் அடித்தது
ஜன்னல் ஓரத்தில் இருந்தவர் விழித்திருந்தார்
உங்களுக்கு குளூரவில்லையா என்றேன்
அவர் பதில்சொல்லவில்லை
சரி என்று ஜன்னலை மூடினேன்
சண்டைக்கு வந்துவிட்டார்
அப்போதுதான் தெரிந்தது அவர்
நிறைய குடித்திருந்தார்
நான் ரூ.450 கொடுத்து பயணப்படுகிறேன்
உங்களுக்கு வேண்டுமெனில்
காரில் போகவேண்டியதுதானே என்றார்
என் பின் சீட்டில் இருந்தவர்
குளிரால் பாதிக்கப்பட்டவர் மிகவும்
கோபமுற்று அவருடன் ஓரே சண்டை
கடைசியில் குடிமகன் பெரிய மனதுசெய்து
கொஞ்சம் மட்டுமே மூடினார்
பயணத்தின் போதே குளிர்பாணம்போல் கொண்டுவந்து குடிப்பது
குடித்துவிட்டே ஏறுவது
பற்றாக்குறைக்கு குறட்டைவேறு
கெட்ட நாற்றம்
பாவம் இவர்களோடு குடும்பம் நடத்தும்
குத்துவிளக்குகள்
இந்த மார்கழி பனியாலும் மழையாலும்
முகவாத நோய் (Bell's palsy) தாக்க வாய்ப்பு உண்டு.
உட்புறக் காது வழியாக மூளைக்குச் செல்லும் ஏழாவது நரம்பு,
பனிக் காற்றால் தாக்கப்படும்போது, முகவாதம் ஏற்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகுபவர்கள் முகம் கோணலாகி, உதடுகள் கோணி,
நாக்கு உணர்விழந்து, கண் இமை மூட மறுத்து, உமிழ் நீர் முழுங்க முடியாமல் போகும்.
பாவம் இதெல்லாம் அவருக்கு நான்விடும் சாபமல்ல இது
நடக்கக்கூடாது ஆனால் உள்ளே இருக்கும் நெப்போலியன்
மறுபடியும் ஜன்னலை முழுதாக திறந்துவிட்டான்
நான் நடத்துனரிடம் சொல்லி
ஓட்டுனருக்கு பின் அமர்ந்தேன்
அற்புதம் அன்றிறவு உறக்கமில்லை
நானே ஓட்டுனராக உனர்ந்தேன்
அனைவரும் அமைதியாய் உறங்க
ஒரு ஜீவன் மட்டும் விழிப்போடு இருப்பதும்
தூக்கதை தவிர்க்க பாடல் கேட்பது
பாக்கு போடுவது ஊர் மற்றும் உலகக்கதை
பேசுவதும் அவர்களின் வாழ்வும் கடினம்தான்
புத்தாண்டில் 200 கோடிக்கு மது விற்பனை
சென்னையில் மட்டும் 85 விபத்துக்கள்
65 சண்டைகள்
3 இறப்பு இவை யாவும் ஒரு நாள்
சென்னை குடிகாரர்களின் கூத்து
200 கோடி ஒரு நாள் விற்பனை
செய்யும் அரசு போக்குவரத்து
தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க
மறுக்கிறது சொகுசு பேரூந்து ஓட்டுபருக்கே
இவ்வளவு சிரமம்
ஓட்டை அரசாங்க பேரூந்துகளை ஓட்டுபவர்களின்
நிலை படு மோசம்
பயணிகளின் உயிரைக்காக்க தன்
உயிரைப்பனயம் வைக்கும் உயர்ந்தவர்களின்
உழைப்பைப்போற்றுவோம்

No comments:

Post a Comment