இலையுதிர்காலம்
+++++++++++++++
வாழ்வை தூய்த்தவர்களுக்கு மரணம் ஓர் வரம்
தொடங்காமல் முடிப்பவர்க்கும்
பயணத்தை பாதியில் முடிப்பவர்க்கும் பெரும் துயரம்
எங்கெங்கோ தேடிய அமைதிக்கும்
சமத்துவத்திற்கும் சுடுகாடுதான் தாயகம்
பேராசைக்காரனும் ஞானியும்
தர்மவாதியும் அதர்மகாரனும்
காவனின் தலைக்கு மேல் கொலைகாரனும்
நீதிபதியின் பக்கத்தில் குற்றாவாளியும்
பேதம் இல்லாத இடம் மயான பூமி
பட்டுத்துணியோடு சுற்றியவனின் உடல்
ஒட்டுத்துணியோடு ஊர்வளம் போகிறது
தொடர்ச்சியாக மரண செய்தி
மாதங்களில் நான் மார்கழி என்றானே
மரணங்களில் நான் மார்கழி எனலாம்
மூச்சித்தினரல் உள்ளவர்களுக்கெல்லாம்
மார்கழி மரணத்தை வழிகாட்டுகிறது
இஸ்லாமியர் நண்பர் வீட்டு மரணம்
சென்றிருந்தேன் ஆர்பாட்டமில்லாத சடங்குகள்
மரணம் நடந்ததே அவரின் பெண் அழும்போதுதான்
ஞாபகம் வருகிறது ஓர் பயணத்தின் ஏற்பாடாய்
காம்பிலிருந்து மலர் உதிர்வது போல் நடந்தேறியது
அயனாவரத்தில் ஓர் கிருஸ்தவ நண்பரின் மரணம்
சடலத்தை தேவாலயத்தில் வைத்திருந்தார்கள்
மதவாதிகள் ஜெபம் செய்துகொண்டிருந்தார்கள்
மகளும் மணைவியும் யாரோ செய்த மெழுகும்
மௌனமாய் அழுதுகொண்டிருதார்கள்
நண்பர் பாஸ்கரின் மாமனாரும் சகோதரி
ரேவதியின் தந்தையும் இறந்த செய்தி கேட்டு சென்றேன்
சென்னையில் பிறந்து வளர்ந்ததால் ஓர் தெளிவும்
நிதானமும் அந்த மரண வீட்டில் தெரிந்தது
யாரும் அழவில்லை சென்ற எங்களுக்கு
தேனீர் கொடுத்து உபசரித்தார்கள்
சென்னையில் இது வழக்கமோ ?
கிராமங்களில் சம்மந்திகள்தான்
மரண வீட்டில் உள்ளவர்களுக்கு
இதை செய்வார்கள் பாவம் இங்கு உறவுகள்
ஒதுங்கியே நின்றார்கள்
சடங்குக்கு தென்னை ஓலைதேடினார்கள்
நகரத்தில் மனதை குழி தோண்டி புதைத்து
மரம் வளர்த்த மனிதர்கள் மரணத்திற்கு
ஓலை தர மறுத்துவிட்டார்கள்
மரணமற்ற வரம் வாங்கிவந்தவர்கள்
கூடுகளில் குருவி தலை நீட்டுவதுபோல்
அடுக்குமாடி ஜன்னல்களிலிருந்து
வேடிக்கைபார்க்கும் தலைகள்
சடலத்தை நெருங்க நடுங்கும் நெஞ்சங்கள்
தங்களுக்கும் மரணம் நிஜமென்பதை
மறந்தவர்கள்
ஓர் ஓங்கார சத்தம் அப்பா அப்பா என்று
அதுவரை அடக்கிவைத்திருந்த அன்பு
அழுகையாய் வெடித்து வீரிட்டது ரேவதிக்கு
பெண்களை பெற்றவர்களே
பெருமையோடு இருங்கள் அழுவதற்காகவாவது ஆள் இருப்பதால்
சடலத்தை தூக்க ஓரிருவரை தவிர மற்றவர்கள்
ஒதிங்கிகொண்டார்கள் நண்பர் ஆனந்தோடு நாங்களே தூக்கினோம்
சுடுகாட்டில் எண்ணி 16 பேர்கள் அதில்
நாங்களே 7 பேர்
கிராமத்தில் ஓர் மரண செய்தி
ஆண்களைவிட பெண்கள் உணர்ச்சி மிக்கவர்கள்
அதனால் அவர்களை அறியாமல் அழுகை வந்துவிடுகின்றது
மொத்த பெண்களும் ஒப்பார் வைத்துக்கொண்டிருந்தனர்
ஊரே திரண்டிருந்தது
சடங்குகளின்போது சலசலப்பு
புதிய தலைமுறைக்கு தெரியாத ஓர் உண்மை
பானை உடைப்பதுபோல் உடைக்கப்பட்டது
அவரது முதல்மனைவியின் ஆர்பாட்டம்
30 வருடத்திற்கு முன் முறிந்த உறவின்
அங்கிகாரத்திற்காகவோ சொத்திற்காகவோ
சண்டையிட்டுகொண்டிருந்தார்க
வெள்யூர்காரர்களுக்கும் புதிய தலைமுறைகளும்
ஒன்றும் புரியாமல்; உறைந்துபோனார்கள் 30 வருட பிரிவு
அடக்கிவைத்திருந்த உணர்வுகளெல்லாம்
முதல்மனைவி கோபமாய் பிணத்தை அடித்து திட்டி
ஆர்பாட்டம் செய்தது முகம் சுளிக்கவைத்தது
ஒழுக்கமில்லாத வாழ்க்கை
மரணத்திற்கு பிறகும் அவப்பெயரை
பெற்றுக்கொடுத்துவிட்டது
இறந்த முகமதியருக்கு அது 3 வது மனைவி
இருந்தும் அங்கு ஒழுங்கு இருந்தது
மதப்பெரியவர்களின் கட்டுக்குள் எல்லாம் நடந்தது
இங்கோ 30வருடத்திற்கு முன் நடந்தது தெரிந்த பெரியவர்கள்
பலபேர் இப்போது உயிரோடு இல்லை
கிராமங்களை முன்புபோல் கட்டுக்குள் வைத்துக்கொள்ள
தலைவர்கள் இல்லை
சடங்குகள் செய்யாமலே சடத்தை தூக்கிவிட்டார்கள்
வழி தவறி வாழ்வோரே தவறுகளை சீர் செய்துகொள்ளுங்கள்
இல்லை எனில் மரணத்திற்குப்பிறகும்
அவமானப்படுவீர்கள்

No comments:
Post a Comment