Saturday, May 9, 2015


சரவணன்
++++++++
உதடுகளில் மாறாத புன்னகையும்
உள்ளத்தில் உறுதியுடன்
யாரையும் எதிர்க்கும் குணம்
நிர்வாகத்தில் நேர்மை
அமைச்சரிடம் பணிபுரிந்த அனுபவத்தால்
மேலிட தொடர்புகள் அதிகம்
அதைவிட கண்ணுக்குத்தெரியாத
விரோதிகள் அதிகம்

வயதில் என்னைவிட சிறியவர் என்றாலும்
தோற்றத்தில் அப்படியில்லை
ஒரு முறை காஞ்சி ஆட்சியர் அலுவலகம்
சென்றிருந்தோம் நிறையபேர்
வரிசையில் நின்றிருந்தனர் இவர் தோற்றத்தைக்கண்டு
எல்லோரும் வழிகொடுத்தனர்
அமர்ந்திருந்தவர் எழுந்து நின்றார்
சரவணன் தன் முகவரி அட்டையை கொடுத்தபின்
யாரோ பெரியாளுன்னு நினைத்த ஏமாற்றம்
அவர் வடிவிலும் வார்த்தையிலும் தெரிந்தது
சிலபேர் அவரை சபாரி சரவணன் என்பார்கள்
எப்போதும் மிடுக்குடன் காணப்படுவார்
அவர் முதல் வீடு வாங்கும்போது
என்னையும் நண்பர் பாலாவையும்
வற்புருத்தினார் வீடு வாங்க

கையில் சேமிப்பு இல்லாமல்
கடன் வாங்கி வீடுவாங்குவதில்
எனக்கு விருப்பமில்லை என்றேன்
சரவணனோ வரலாறு படித்தவர் என்பதால்
உலகத்தை உதாரணம் காட்டினார்
எவன் கையில காசவச்சிகிட்டு வீடுவாங்குறான்
உங்களில் தொழில் தகுதிக்கு வங்கி கடன் தருகிறது
பயன்படுத்திக்கொள்லலாம் என்றார்

கடன் வாங்கினால்
கண்ட கண்ட நாய்கிட்டயெல்லாம் போய் நிற்கணும்
கண்ட இடத்திலயும் கையெழுத்து போடனும்
நேரத்தில் கட்டமறந்தால்
கடன் கேட்டு வீட்டுக்கு வருவார்கள்
இதெல்லாம் நமக்கு சரிபட்டுவராது
என மறுத்துவிட்டேன்
5 ஆண்டில் பணம் சேர்த்து
சொந்த பணத்தில் வீடு வாங்குவோம்
என நானும் பாலாவும் சபதம் செய்தோம்

குயிலாய் வாழ்வோர்க்கு கூடேது
நாடேது சேமிக்கும் பழக்கம்
சிந்தையில் கிடையாது
4 ஆண்டு கழித்து சரவணன்
2 வது வீடு வாங்க ஆயத்தமானார்
எனக்கும் சேர்த்து எல் ஐ சி இல்
நண்பர் ஜான் மூலம்
முன் ஒதிக்கீடு கடிதம் பெற்றுத்தந்தார்

வேறுவழியில்லாமல் நான் கடனாளியாக
சம்மதித்தேன் நண்பர் பாலா மட்டும்
இன்னும் கொண்ட சபதத்தோடு குயிலாய் வாழ்கிறார்
நான் கடனாளியாக முதல் காரணம் நண்பர் சரவணன்தான்
இந்தமுறை என்னால் தட்டிக்கழிக்க
வார்த்தைகளின்றி செனனையில்
கடைசிவரை வாடகை வீட்டில் இருப்பதைவிட
சொந்தவீட்டில் மாதவாடகையை
வீட்டுக்கடனாக கட்டிவிடாம் என என் மனதை
மாற்றி வீடு வாங்கும் துணிவை தந்தவர்

தற்போது பச்சையப்பன் கல்லூரியில்
துணை பேராசிரியராய் பணியிலிருக்கிறார்
வரலாற்றுத்துறையில்
விரைவில் ஓர் ரமணாவை பச்சையப்பன் கல்லூரியில்
எதிர்பார்க்கலாம் மாணவர்களை
தயார் செய்து கொண்டுள்ளார்
நல்லது நடக்க வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment