Saturday, May 9, 2015


பொங்கலை போற்றுவோம் 
பூமியை காப்பாற்றுவோம்
++++++++++++++++++++++
ஆழ்துளை தோண்டி
மீத்தேன் தேடும் மனிதா உன்னால்
அடுப்பை எரிக்கும் நெருப்பைத்தோண்ட முடியும்
அரிசிகொடுக்க முடியுமா ?
பசியில் வயிறு எரிகிறதே
தீயை தின்பாயா ? இல்லை

நாளைய பசிக்காக சேமித்த
நாணயங்கள் தின்பாயா ?
அடுத்த தலைமுறைக்காய் டெல்டாவை அழித்து
பாலைவனமாய் பரிசளிப்பாயா ?

கானலில் மீன் பிடித்து
கனவுகளில் சமையல் செய்து
நினைவுகளில் பசியாற்றிக்கொள்வாயா ?
நாளைய தமிழகமே

எங்களின் தாக நாக்குகள் நீர் தேடி கர்னாடகாவுடனும்
கேரளாவுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறது இருக்கும்
அரசியல்வாதிகள் இறக்கும் வரை தாகம் தீராது
நம்புங்கள் தமிழர்களே

எவனுடைய கஜானாவையோ நிரப்ப
எங்களின் எதிகாலங்கள் களவாடப்படுகிறது
மாடுகள்மேய்த்தது போதுமென
ஒட்டகம் மேய்க்க ஒத்திகை நடக்கிறது

நீரையும் நெல்லையும் வேற்று கிரகத்திலிருந்து
இறக்குமதி செய்வார்கள் உழவர்களே
டெல்டாவை தீயிட்டு
தீபாவளி கொண்டாடுவார்கள் தமிழர்களே

வெட்கமே இல்லாமல்
வேட்டுவைத்து களித்திருப்போம்
நம் வீட்டு கூரைக்கு
நாமே தீ வைப்போம்

பூமி, கதிரவன், உழவுக்கு உதவிய கால்நடைகளுக்கு
நன்றி தெரிவிக்கும் நன்னாள்
உலகத்தில் நன்றி சொல்ல நாள் குறித்து
கொண்டாடியது நாம்மட்டும்தான் தமிழர்களே

வயிற்றை விற்க
வியாபாரம் நடக்கிறது தமிழா
நீயோ மதுக்கடைகளில் மயங்கி கிடக்கின்றாய்
இலவசங்களுக்கு ஏங்கி தவிக்கின்றாய்

சர்க்கரைப் பொங்கலும் கரும்பும்
படைத்து தமிழர்கள் வழிபட்டனர்
என்பதாய் ஆவனப்படம் எடுப்பார்கள்
வரலாறாய் மாற்றிவிடாதீர் பொங்கல் விழாவை

இந்திர விழாவாக பொங்கல் விழாவை
28 நாட்கள் காவிரி பூம்பட்டினத்தில்
கொண்டாடி மகிழ்ந்த தமிழா
நாட்கள் சுருங்கி நான்காகிப்போனதே

முதல் நாள் பண்டிகைதான் மார்கழியின் கடைசி நாள் அன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம். அக்காலதில் போகியன்று பல கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. அந்நாள்தான் புத்தர் இறந்த நாள்.

இரண்டாம் நாள் தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

மூன்றாம் நாள்மாட்டுப் பொங்கலன்று உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாள்.

காணும் பொங்கல் இந்நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். இது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காம் நாள் இடம்பெறும்.

பொங்கலை ஒத்த பிற விழாக்கள் வட மாநிலங்களில் இது மகர சங்கராந்தி எனவும் சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது.

2006-2011 வரையிருந்த திமுக தமிழக அரசு சனவரி 29, 2008 அன்று தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என அறிவித்தது.

ஆகத்து 23, 2011ல் அதிமுக தமிழக அரசு மீண்டும் சித்திரை ஒன்றை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்தது.
நடக்கட்டும் மாற்றங்கள்

பொங்கலை போற்றுவோம்
பூமியை காப்பாற்றுவோம்

No comments:

Post a Comment