Saturday, May 9, 2015


சாமியே ...
சரணம் பொய்யப்பா ...
++++++++++++++++++++

ரம்பையின் வாரிசு மகிஷியை
வதம் செய்ய பெண்ணுரு கொண்ட விஷ்னு
சிவனை மயக்கி பெற்ற மகன்
ஹரிஹர சுதன்
அழகிய பெண்னென்றாள்
ஆண்டவனுக்கும் அறிவிழக்குமோ ?
இரு பிறைகளுக்கு
பிறந்த முழு நிலா

ஆணும், ஆணும் கூடி
சூதும் சூழ்ச்சியும் கைகோர்த்த
பெண் பித்தனுனுக்கு பிறந்தவன்
பெண்ணை வெறுத்தான்
மஞ்சள் மாதாவை
கன்னியாக்கி காடேறி விட்டவனை
காண வருகிறோம்
சாமியே ஐயப்பா

பாவமூட்டைச்சுமந்து வந்தோம்
சாமியே ஐய்யப்பா ...!
மறுபடியும் பாவம் செய்வோம்
சரணம் பொய்யப்பா ...

ஆண்டுக்காண்டு கூட்டம் பெருகுது
சாமியே ஐயப்பா.,.!!
நாட்டில் குற்றம் குறைகளும் குறையவேயில்லை
சரணம் பொய்யப்பா ...

விரதம் இருந்து மலையேறுகிறோம்
சாமியே ஐயப்பா ...!!!
இறங்கியதும் மதுக்கடை நிறையுது
சரணம் பொய்யப்பா ...

அன்னதானம் செய்து வந்தோம்
சாமியே ஐயப்பா ...!!!
நாட்டில் பசி பட்டினி தீரவில்லை
சரணம் பொய்யப்பா ...

தண்ணீர் பந்தல் திறந்து வைத்தோம்
சாமியே ஐயப்பா ...!
நதி நீர் பிரச்சனை தீரவே இல்லை
சரணம் பொய்யப்பா ...

ஜாதி மறந்து சரணம் சொன்னோம்
சாமியே ஐயப்பா ...!!
ஜாதி சண்டை உயிர்கள் தின்னுது
சரணம் பொய்யப்பா ...

தேவைகளை வேண்டி வந்தோம்
சாமியே ஐயப்பா ...!!!
தேவை தீர்ந்ததும் உனை மறந்தோம்
சரணம் பொய்யப்பா ...

ஆளும் வர்க்கம் எங்களுக்கு கும்பிடு போடுது
சாமியே ஐயப்பா ...!!!
இறங்கி வந்ததும் அடிமையானோம்
சரணம் பொய்யப்பா ...

தன்னையும் ஏமாற்றி, உன்னையும் ஏமாற்றி,
உலகையும் ஏமாற்ற
ஒரு கூட்டம் வருகுது சரணம் பொய்யப்பா ...
தன்னையுமறிய உன்னையுமறிய
நல்ல சில சாமிகள் வருகுது
சரணம் மெய்யப்பா ...

No comments:

Post a Comment