Saturday, May 9, 2015


உங்களிடம் கையேந்தி வருவது
சிவனாகவோ புத்தனாகவோகூட இருக்கலாம்
+++++++++++++++++++++++++++++++++++++++
“ஈதல் இசைபட வாழ்தல், அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு” 
உயிருக்கே விலை வைக்கிறார் வள்ளுவர்

கீதையில் கிருஷ்ணர் தானத்தை சாத்விக தானம்,
ராஜஸ தானம், தாமஸ தானம் என மூன்றாகப் பிரித்துக் கூறுகிறார்.
தகுந்த இடத்தில், தகுந்த வேளையில், எதிர்பார்ப்பின்றி, தகுதியுள்ளவருக்கு முறையாக அளித்தல் சாத்விக தானம்.
பிரதிபலனை எதிர்பார்த்து சிரமத்துடன் கொடுக்கப்படுவது ராஜஸ தானம். தகுதியற்ற இடத்திலும், காலத்திலும், தகுதி அற்றவர்களுக்கு உபசரிப்பு இன்றியும், அவமரியாதையுடனும் கொடுக்கப்படுவது தாமஸ தானம்.

ஈத்துவக்கும் இன்பம்!
என் சில்லைரைகளையெல்லாம் பிள்ளைகளிடம் கொடுத்து
சேமிக்கச்சொல்வேன் அதனை வெளியே செல்லும்போது
எடுத்துவந்து இரயிலில் வரும் இயலாதோருக்கு
அவர்கள் கைகளால் கொடுக்கச்சொல்வேன்
ஈதலையும் சேமிப்பையும் நாம்தான்
பிள்ளைகள் மனதில் விதைக்கவேண்டும்

உலகம் சுருங்கிய உன்னதம்
செத்தவன் கையில் மட்டும்தன் செல்போன் இல்லை
பேசிக்கொண்டே வாழ்கிறார்கள்
தனியாக பேசுவனை போனதலைமுறைவரை
பைத்தியம் என்றது உலகம்
இன்று எல்லோறும் பைத்தியங்களாகிவிட்டார்கள்
ஓடும் இரயிலில் ஓடிக்கொண்டே பேசுகிறான்
நடக்கையில், படுக்கையில்
கழிவறை கல்விக்கூடம் என
சகல இடங்களையும் செல் போனோடு வாழ்க்கையை
மனிதன் வாழப்பழகிவிட்டான்
பேசா நிமிடங்களில் குறுஞ்செய்திகளும்
புதிதாக ஓர் விளையாட்டு (subway surfers )
ஓடி ஓடி பொருள் சேர்க்கும் விளையாட்டு
ஓருவன் ஓடிக்கொண்டே இருப்பான்
தவறினால் இரயிலில் அடிபட்டு செத்துவிடுவான்
விளையாட்டு முடிந்துவிடும்
திரும்பவும் புதிதாய் ஓடத்தொடுங்குவான்
நிஜத்திலும் விளையாட்டிலும்கூட
மனிதன் பணம்தேடி ஓடிக்கொண்டே இருக்கிறான்

டார்வினின் கணிப்புப்படி அடுத்த தலைமுறைக்கு
ஒட்டகத்தைப்போல் எல்லோரும் விரல் வளர்ந்தவர்களாக இருப்பர்
ஒரு திரு நங்கை அந்த பணம்தேடியை
தொட்டவுடன் சினம் கொள்கிறான்
அவனை தொட்டதற்காக சண்டையிடுகிறான்
கண்தெரியாதவர்களை கண்ணிருந்தும்
கவனிப்பதே இல்லை

ஓரே உடல் திறன்
ஒத்த உணர்வு கொண்டவர்கள்
மற்றவர்களை உந்திதள்ளி முன்னேற முடியாத
திறனின்றி சமூக அமைப்பும் சூழலும்
பின்னுக்குத்தள்ளிய இந்த விளிம்பு நிலை மனிதர்களை
கருணையோடு பாருங்கள்
உதவ மனமில்லை என்றாலும்
உதாசினப்படுத்தாதீர்கள்

திருடாமல் கையேந்துகிறார்களே
என்று பெருமைகொள்ளுங்கள்
இன்னும் சிலர் கையேந்தாமல்
வியாபாரம் செய்கிறார்கள் அவர்களை ஆதரியுங்கள்

கோடிஸ்வரர்கள் ஒரே இரவில் குஜராத்தில்
தெருவில் பிச்சைக்காரர்களானார்கள் பூகம்பத்தால்
காலம் கணக்கிட்டுகொண்டுள்ளது
கவனமாயிருங்கள்

பசித்தவனுகுத்தான் தெரியும் பசியின் கொடுமை
சூழ் நிலைக்காய் அல்லது சோதிப்பதற்க்காக
யாரிடமாவது கையேந்திப்பாருங்கள்
அப்போது தெரியும் அதன் கொடுமை

நான் என்ற அகந்தை அழிந்தவனால்மட்டுமே
கையேந்த முடியும்
நீ வணங்கும் சிவனும் புத்தனும்
பிச்சை எடுத்துதான் வாழ்ந்தவர்கள்
புத்தனின் சீடர்கள் இப்போதும்
பிச்சை எடுத்துதான் உன்கிறார்கள்

கோயில்களில் உண்டியளில் காணிக்கை
இடுவதைவிட நீங்கள் தேடும் கடவுள் உங்களைத்தேடி
கையேந்திவருகிறார்கள்
வசியாதியானவர்களே குளிர் சாதன வாகனங்களின்
வலம் வந்தது போதும் மாதத்தில் ஓர் நாள் மட்டுமாவது
புற நகர் இரயில்களில் பயணம் செய்துபாருங்கள்

யார் கண்டது உங்களிடம் கையேந்தி வருவது
சிவனாகவோ புத்தனாகவோகூட இருக்கலாம்

No comments:

Post a Comment