வெள்ளத்தனைய மலர் நீட்டம்
நீரில்லா குளத்தில்
தாமரையின் தள்ளாட்டமா
தனிபட்ட பிணக்குக்கு
தமிழோடு போராட்டமா
வானத்து நிலவு நீ
வரப்புகளில் தடுமாற்றமா
சுட்டது சட்டியென்று
படத்துக்குமட்டும்தான் பாட்டெழுத முடியுமா
வார்த்தைகளில் விளையாண்ட உன்னிடம்
வாழ்க்கையின் விளையாட்டு இது
ஊருக்கு வார்த்தை தேடியது போதும்
உன் வாழ்க்கைக்கு வழிதேடு
மெட்டுக்கும் துட்டுக்கும்
பழக்கப்பட்ட உன் இதயத்தின் தேடலா
கனவுகளில் போராளிகள்
நிஜங்களில் நீர்குமிழிகள்
இது கோடையின் துவக்கம்
நீரில்லா நிலைகளில்
தண்டின்றி தடுமாறுவதேன்
உன் இலையுதிர்
இதழுதிர் காத்திரு நீர்வரும்
மறுபடி மலர்வாய் தாமரையே

No comments:
Post a Comment