Saturday, May 9, 2015

தீயாய் விழுந்து திரியில் சாகலாம் வா


தீயாய் விழுந்து
திரியில் சாகலாம் வா
******************************
சருகாய் விரகாய்
காட்டுத்தீயாய் கரைவதில் இலாபமென்ன
தனக்காய் வாழ்ந்த பிணம்
எத்தனை எரிகிறது ஊருக்கு தெரிகிறதா?
ஊருக்காய் வாழ்ந்தவர்கள்
இறந்தும் வாழ்வது உனக்கு புரிகிறதா

எழுந்திரு இளைஞனே
இருள் ஓடும் உன் விழி கண்டு
திசை மாறும் காற்று
உன் வழி கண்டு
பயிர் தேடும் நதியாய்
உயிர் தேடும் காற்றாய்
திசைமாறு

நான்கு திசைகளும் சூரியனாய்!
காற்றின் கயிற்றைக் கையில் பிடிப்பாய்
நம்பிக்கை என்பது உன்வசமே!
அனுபவச் சிப்பி ஆசையில் திறந்திடும்
ஆயிரம் முத்துக்கள் உன்னிடமே!

போன பொழுதுகள் போகட்டும்
இருக்கும் பொழுதை இனிதாக்கிடு
சாதித்தவர்கள் இன்னும் சாகவில்லை !
உண்டு உறங்கி சாவதா வாழ்க்கை !
கண்டு இறங்கி ஊருக்காய் வாழ்ந்திடு !

பாயில் கிடந்து
நோயில் வாழ்வதைவிட
தீயாய் விழுந்து
திரியில் சாகலாம் வா

No comments:

Post a Comment