குறட்டை விடும்
தலைமைச்செயலகம்
மவுனத்தின் சாட்சியாக
மந்திரிமார்கள்
பதவி பயத்திலிருந்தவர்களுக்கு
தற்காலிக நிம்மதி
தலைவிக்கு தீர்ப்பு வரும் வரை
சந்தோசம் தினசரி
அரசு அலுவளகங்களில்
பாப்பையா இல்லாமல்
பட்டிமன்றம் வெட்டியாய் நடக்கிறது
பத்திரிக்கை வியாபாரம்
பரபரப்பாய் நடக்கிறது
அம்மையார் இருக்கும்வரை
அறிவிப்புகளாவது இருந்தது
உணவகங்களும் தண்ணீர் பாட்டில்களும்
ஓட்டுவாங்க போதும் என்ற
பொது கணக்கு
தீர்ப்புக்காக காத்திருக்கும்
அரசியல் கழுகுகள்
வழக்காடு மன்றங்களில்
வட்டமடிக்கின்றன
தீர்ப்புகளை திருத்தி எழுத
படித்தவர்களுக்கு வேலை இல்லை
விவசாயம் செய்ய ஆட்கள் இல்லை
வேலை செய்த பழைய மனிதரையெல்லாம்
குடிகாரனாக்கிவிட்டோம்
இளைய சமூகத்தின் முதுகெலும்பு
நிமிர மறுக்கிறது
பக்கத்து மாநிலத்தில்
மதுவிலக்கு அமலில் இருக்கிறது
தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்
அந்த சாராயத்தண்ணீர் ஆறாய் ஓடுகிறது
இந்த நதி நீர் பேச்சுவார்த்தையில்
அனைத்து அரசியல்வாதிகளும் உடன்பாடு
ஆண்மை குறைவும் குழந்தை இன்மையும்
அதிமாயிருப்பது நம் நாட்டில்தான்
குடி போதை விபத்துகளும்
மரணங்களும் தகப்பன் இல்லாத பிள்ளைகளும்
சமூக விரோதிகளும் கொண்ட
ஓர் எதிர்காலத்தை கட்டமைத்துக்கொண்டுள்ளனர்
ஓர் அரசியல் பெரியவர் ஆலோசனை சொல்கிறார்
குடியை தடைசெய்தால்
கல்லச்சாராயம் அதிகரிக்கும் அதனால் மரணங்கள்
அதிகரிக்கும் என்று
இந்த குடிகார நாய்கள் சாகட்டும்
அடுத்த தலைமுறையை காப்பாற்றுங்கள்
எழும்பு துண்டுகளுக்காக
வாலாட்டுவோர் இருக்கும்வரை
மதுக்குட்டைக்குள் மயங்கி கிடக்கும்
மரத்த தோல்கள் இருக்கும்வரை
நம்புங்கள் மந்திரிகளே
நீங்கள் படுத்துக்கொண்டே ஜெயிக்கலாம்
சிறையிலிருந்தும் ஜெயிக்கலாம்

No comments:
Post a Comment