வெற்றுக்கோப்பையோடு அனுகுங்கள்
அமுதம் வசப்படும்
++++++++++++++++
சிந்தனையற்ற நிலையில்தான்
ஆனந்தம் கிடைக்கும்
சுத்தமான மன நிலையோடு அனுகும்
எல்லா செயல்களிலும் அனுபவமும் ஆனந்தமும்
நிலைத்திருக்கும்
மூளையென்ற குப்பைத்தொட்டியை
வெளி மனமெனும் தெருநாய்
கிளரிக்கொண்டே இருப்பதால்
மனிதன் பிரச்சனைகளோடே அலைந்துகொண்டுள்ளான்
ஜென் குருவிடம் ஒரு சீடன் நான் பல நூல்களை கற்றுள்ளேன்
மேலும் கற்றுக்கொள்ள உங்களிடம் வந்துள்ளேன் என்றான்
ஜென் குரு அவனுக்கெதிரே தேனீர் நிறைந்த
கோப்பையை வைத்து அது நிறைய நிறைய
ஊற்றிக்கொண்டே இருந்தார்
சீடன் பதறி தேனீர் வீனாகிறது குருவே
நிறுத்துங்கள் என்றான்
ஏற்கனவே நீ படித்த அறிவு உன் மூளையில்
உள்ளவரை என் அறிவுறைகளும் இந்த தேனீரைப்போல்
வீனாகத்தான் போகும் என்றார்
அந்த மன நிலையோடுதான் நானும்
நண்பர் அழைத்த திருநெல்வேலி - தென்கலம்புதூர் மகாராஜா சுவாமி
ஹைகோர்ட் மகாராஜா கோயிலுக்கு அழைத்தபோது சென்றேன்
எனக்குள்ளிருந்த பெரியார், புத்தன், சைவம், வைனவம்
கிருஸ்த்தவம், இஸ்லாம் மற்ற எல்லா குப்பைகளிலிருந்தும்
மனதை சம நிலையில்வைத்துக்கொண்டு சென்றேன்
இங்குள்ள சுடலைமாட ஸ்வாமி கோயிலின் பூசாரி மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டது.
நிரபராதியான அவரை விடுவிக்க திருவுளம் கொண்ட சுடலைமாட ஸ்வாமி,
வழக்கை விசாரித்த நீதிபதியின் கனவில் உண்மையை உணர்த்தினார்.
அத்துடன், மறுநாள் விசாரணையின்போது அந்த பகுதிக்கே புதியவரான ஒருவர் வந்து சாட்சி சொல்ல,
பூசாரிக்கு விடுதலை கிடைத்தது. ஆனால், அதன் பிறகு அந்த புதியவரை எங்கு தேடியும் காணவில்லை.
எனவே, சாட்சி சொல்ல வந்தது சுடலைமாட ஸ்வாமியே என்று உறுதியாக நம்பிய மக்கள் அவருடைய கோயிலை,
ஹைகோர்ட் மகாராஜா கோயில் என்றே அழைக்க துவங்கினார்கள்.
இந்த கோயிலில் சத்தியவாக்கு கேட்கப்படுகின்றன
என்னோடு வந்தவர்கள் அனைவரையும்
அழைத்து வாக்கு சொன்னார்
என்னைமட்டும் அழைக்கவில்லை
நான் மட்டுமே எஞ்சியிருந்தேன் சரி கிளம்பிவிடலாம்
என எண்ணியபொழுது அழைத்தார்
கடந்த காலங்களைப்பற்றி நிறைய சொன்னார்
உண்மையில் எல்லாம் தவராகவே சொன்னார்
அவரிடம் நீங்கள் சொன்னது எதுவும் உண்மையில்லை என்றேன்
நீ எதற்காக என்ன கேட்க என்னிடம் வந்தாய் என்றார்
நண்பரோடு வந்தேன் எதையும் கேட்கவரவில்லை என்றேன்
ஒற்றை புண்ணையோடு சைகயில் கிளம்பச்சொன்னார்
ஆனால் அங்கு எதுவும் தவறுகள் நடைபெறவில்லை
காசு பணம் கேட்பதில்லை
கடவுள் பெயரால் வசூல் நடைபெறவில்லை
நிறைய நம்பிக்கை விதைக்கிறார்
என்னோடு வந்தவர்களுக்கெல்லாம் நிறைய உண்மையும்
நல்லதும் சொல்லியுள்ளார்
இளையராஜா தன் இரசிகர்ளுடன் உரையாடும்
ஒளிப்படம் ஓன்றை நண்பருடன் பார்த்துக்கொண்டிருந்தோம்
ஒரு பெண் தன் பெயர் கண்ணமா என்றும் அவர் வாயால்
ஒரு முறை அதை உச்சரிக்கச்சொல்லி
தொழுதார் ஆனால் அந்த ஞானி கடைசிவரை உச்சரிக்கவில்லை
நண்பர் கடுப்பாகி காட்சியை நிறுத்திவிட்டு
இந்த ஆளுக்கு திமிரு தலைகணம் என்றார்
மற்றொரு நபரோ அவரின் ஜாதியை சொல்லி
விமர்சனம் செய்தார் ஆனால் இருவரும் அவருடைய ரசிகர்கள்
உண்மையில் ஞானிகளையும், குழந்தைகளையும்
அனுகும்போது அவர்களுடைய நிலையுலேயே அனுகவேண்டும்
அவர்கள் வேறுஓர் தளத்தில் சிந்தனையில்
இயங்கிக்கொண்டிருப்பவர்கள் அவர்களை புரிந்து கொள்வது கடினம்தான்
ஒரு முறை ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம்
காத்திஜி பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன என்றார் ஓர் நிருபர்
அதர்க்கு ஜே. கே முட்டாள்கள்தான் அடுத்தவர்கள்மேல்
அபிப்பிராயம் வைத்திருப்பார்கள் என்றார்
இந்த பதில் மோலோட்டமாகப்பார்த்தால்
திமிராகத்தான் தோன்றும்
ஆனால் அபிப்பிராயம் உள்ள மனிதர்களால்
மற்ற மனிதர்க்ளையோ சூழ் நிலையையோ
முழுமையாக உணர முடியாமல் போய்விடும் என்பது உண்மை
அப்போது ஜே. கிருஷ்ணமூர்த்தியை ஜாதியை சொல்லி
விமர்சனம் செய்தார்களா என்று தெரியவில்லை
நன்கு படித்தவர்களும் தெளிவுள்ளவர்கள் என் நினைப்பவர்கள் கூட
ஒருவரின் தவறுகளை பிறப்பிலிருந்தே விமர்சனம் செய்கிறார்கள்
தாயை அசிங்கப்படுத்துவது அல்லது ஜாதி சொல்வது
ஐய்யர்னா இப்படி செட்டியார்னா இப்படி மலையாளத்தான் இப்படி
என்று எதையும் பொதுமை செய்துவிடமுடியாது
இப்போது எல்லா ஜாதிக்காரனும் எல்லா வேலைகளும் செய்கிறார்கள்
பணம் கிடைத்தால் போதும் ஐய்யர் தோல்கடை முதலாளியாகவும்
முதலியார் முடிதிருத்தும் முதலாளியாகவும் மாறிவிட்டார்கள்
எனவே குணங்களை ஜாதிகளாலும் பிறப்பாலும்
அலவிட முடியாது எல்லா ஜாதிகளிலும் நல்லவர்களும்
கெட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்
இராமனின் தந்தை 1000 மனைவியரோடு வாழ்ந்தவன்
இராமனின் வளர்ந்த இடம் வேறு அவன் ஒரு மனைவியோடு வாழ்ந்தான்
உலகுக்கெல்லாம் செருப்புத்தைத்து கொடுக்கும்
தாமஸ் பாட்டா செருப்புத்தைப்பவனுக்கு பிறந்தவனல்ல
செருப்புத்தைப்பவனுக்கு பிறந்த ஆப்ரஹாம் லிங்கன்
அமெரிக்காவின் ஜனாதிபதியானான்
வெற்றுக்கோப்பையோடு அனுகுங்கள் தேனீருக்காக
ஏங்கும் உங்களுக்கு அமுதம் கிட்டும்
வாழ்வு வசப்படும்

No comments:
Post a Comment