Saturday, May 9, 2015


உத்தம வில்லன் - தெய்யம்.
+++++++++++++++++++++++++
மரண செய்திவந்த ஒரு நடிகன், சாகாவரம் பெற்ற கலைஞனாக நடிக்கிறான். இந்த முரண்பாட்டில் மையம் கொண்டிருக்கும் உத்தம வில்லன், மரணத்தை எதிர்நோக்கும்போது ஏற்படக்கூடிய உணர்ச்சிக் கொந்தளிப்புகளைப் பற்றிப் பேசுகிறது.
மல்யுத்தம் செய்பவன் மல்லன், வில்யுத்தம் செய்பவன் வில்லன். வில்லன் ஆங்கில வார்த்தையில்லை என்று சென்சாருக்கும் செய்திசொல்லியதிலிருந்து கமலின் புத்திசாலித்தனம் படத்தில் தெரிகிறது.
படத்தில் நாயகனின் நிஜ வாழ்க்கை கதையும், அதனுள்ளே இன்னொரு சினிமா கதையும் காண்பிக்கிறார்கள். உச்சபட்ச நட்சத்திர நடிகரின் கதையும், அவர் நடிக்கும் படத்தில் உள்ள உத்தமனின் கதையும் மாறி மாறி காட்டுகிறார்கள்.
அறுபத்தைந்து வயதிலும் கமலுக்கு முட்டி நடனத்திற்கும் முத்த நளினத்திற்கும் குறைவில்லை, இந்த ஈடுபாட்டை திரைக்கதையில் காட்டியிருக்கலாம் அதில் கோட்டை விட்டு விட்டார்கள் படம் தொடங்கியது முதல் ஒரே சத்தம் படத்திலும் தியேட்டரிலும் கமல் படமென்றாலே ஆட்டமும் முத்தமும் அவசியம் என நினைத்துக்கொண்டு இயக்குனர் படம் எடுத்துள்ளார். இந்த வயதில் தொப்பையுடன் குத்தாட்டம் எதற்கு
நாசர் மற்றும் அவரது மந்திரி கோஷ்ட்டிகளை வைத்து சிரிப்பே வாராத காமெடிகளை கோர்த்து கதை நகர்த்துகிறார் இயக்குனர் ரமேஷ் அரவிந்த்.
மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர், இந்த படத்தில் சில காட்சிகளே வந்தாலும் அற்புதமாக நடித்திருக்கிறார். அவரின் வசன உச்சரிப்பில் நாகேஷை ஞாபகப்படுத்துகிறார்.
தெய்யம்.
1500 ஆண்டுகளுக்கு முன்பாக தென்னிந்தியாவில் கேரள நடன வகைகளில் ஒன்றுதான் தெய்யம்.
போராளிகளும், ஆயுதங்களும்... இதுதான் தெய்யம் நடனத்தின் மையக்கரு. குடிவழி சார்ந்த போர் வீரர்களையும், அவர்கள் உபயோகித்த ஆயுதங்களையும் வணங்கி வழிபடுவதே தெய்யம் நடனம். தமிழிலும் சங்க இலக்கியத்தில் வேலன் வெறியாட்டல் என்ற பெயரிலும், வட இந்தியாவில் திரா என்ற பெயரிலும், கர்நாடகாவின் தெற்கு கனரா பகுதியிலும் பூட்டா அல்லது கோலா என்ற பெயரில் வழக்கில் இருந்த அவ்வகை நடனக்கலைகள் தற்போது சிறிதுசிறிதாக அழிந்துவருகின்றன.
குடிவழி வம்சங்களின் சிறுபான்மை இனத்தவர்களும் சமூகத்தின் அடிமட்டத்தில் இருந்தவர்களான வண்ணான், மாவிலன், வேட்டுவன், வேலன், மலையன் மற்றும் புலையன் போன்ற குடிமக்கள் தெய்யம் நடனத்தோடு நெருங்கிய தொடர்புடையவர்களாய் இருந்தனர். பிறகு தொடர்ந்த காலங்களில் கடவுள் வழிபாடு, மிருகவழிபாடு, வியாதிகள், நீத்தார் நினைவு கூறல், போர்வீரர்கள் முன்னோர்கள் வழிபாடு, சர்ப்ப வழிபாடு போன்றவற்றிற்காகவும் தெய்யம் நடனம் ஆடப்படுவது வழக்கமாகி விட்டது.
தெய்யம் நடனம் வழங்குதலில் தேட்டம் மற்றும் வேலாட்டம் என இரண்டு பகுதிகள் உள்ளன. ஆரம்பம் வழிபாடாக தொடங்கி இறுதியில் வீர விளையாட்டு போல் ஆக்ரோஷத்தோடு உச்ச நிலை அடைவதில் நடனம் முடிகிறது.

இந்து நாடு நேபாளத்தில் இருப்பது கல்லா அல்லது கடவுளா?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இந்து மதத்தில் மொத்தம் 33 கோடி கடவுள்
உள்ளதாக 1. வேதம், 2. உபநிஷத்துக்கள், 3. ஸ்ருதி, 
4. ஸ்மிருதி, 5. புராணங்கள், 6. இதிகாசங்கள்
கூறுகின்றன உலகத்தின் ஒரே இந்து நாடு நேபாளம் மட்டுமே
எல்லா கடவுளுக்கும் தனித்தனி தொகுதி
தனித்தனி வேலைகள் ஒதுக்கப்பட்டும்
நேபாளத்தை காக்க இத்தனை இந்து கடவுள்கள் இருந்தும்
ஒரு கடவுளுக்கு கூட காப்பாற்ற மனமில்லாமல் போனதே !!!
இமய மலையையே சிவனாக வணங்கும் சமூகத்தில்
சிவனே இந்த உயிர்பலிக்கெல்லாம் பொறுப்பு
(இதுவரை 5000 பேர்கள் இறந்ததாக தகவல்)
கணக்கில்லாமல் 25,000 என்கிறார்கள்
ஒன்று கடவுள் தப்பானவராக இருக்கவேண்டும்
அல்லது இறந்தவர்கள் தப்பானவராக இருக்கவேண்டும்
இந்த 25,000 பேர்களில் ஒருத்தன் கூட நல்லவன் இல்லையா ?
கடவுளின் அவதாரம் சாகசங்கள் சாதனை பராகிரமங்கள் பலம் எல்லாம்
பழங்கதைகளா ? பொய்யா?
ஏதாவது ஒரு சாமி பூமியில் இரு அடுக்குகள் நகராமல்
மக்கள் இல்லாத எத்தனையோ இடங்கள் உள்ளனவே
அங்கே நகர்த்தி நேபாளத்தை உலகின் ஒரே இந்து நாட்டை காத்திருக்கலாமே
இந்தியாவையும் இந்து நாடாக்க தலை கீழாக தொங்கிக்கொண்டிருகும்
இந்த மத வவ்வால்கள் என்ன சொல்லப்போகிறார்கள்

கல்லைக்காட்டி இது கல்லா அல்லது
கடவுளா என கேட்கிறீர்கள்
எனக்குப்புரியவில்லை
கல்லை ஏன் கடவுளாய் பார்க்கிறீர்கள்
கல்லை கல்லாகவும்
கலையை கலையாகவும்
கடவுளை கடவுளாகவும் பார்ப்பதில்
என்ன பிரச்சனை உங்களுக்கு
எல்லாவற்றிலும் கடவுலைத்தேடுவது அல்லது
எல்லாவற்றையும் கடவுலாக்க முயல்வது
தனது சிந்தனையை ஆசையை
அடுத்தவர்மீது திணிப்பது

உருவத்திலிருந்து அரூபத்தை காட்டுவதாக
கல் மூலமாக கடவுலை காட்டுகிறேன் என
கலைஞர்களின் சுய நலம்
சாமானியர்கள் இன்னும் கல்லோடுதான்
கட்டிபுரண்டுக்கிடக்கிறார்கள்
அரூபத்தில் பேயைத்தான் தேடுகிறார்கள்

பலரது பயமும் பலவீனமும்
முட்டால்தனமும் சிலருக்கு பிழைப்பாகிப்போனது

சுய நலமுள்ள சிந்தனையாளர்களால்
சிந்திக்க மறந்தவர்களுக்காக சிருஷ்டிக்கப்பட்டதுதான்
கடவுளெனும் கண்டுபிடிப்பு

பொது நலமுள்ள சிந்தனையாளர்களால்
சிந்திக்க முடியாதவர்களுக்காக சிருஷ்டிக்கப்பட்டதுதான்
அறிவியல் கண்டுபிடிப்புகள்

கடவுளும் கலிலியோவும்
+++++++++++++++++++++++
எல்லாவற்றையும் நம்பிக்கை சார்ந்து வாழ்வது
ஒரு சாரார் முட்டாளாக இருப்பினும்
ஆனந்தமாக இருப்பார்கள்

எல்லாவற்றையும் ஆராய்ந்து அறிவு சார்ந்து வாழ்வது
ஒரு சாரார் வெற்றிகள் அதிகமிருந்தாலும் தனி மனித வாழ்வில்
வெறுமையில் வாழ்வார்கள்

நம்பிகையையும் அறிவையும்
தேவைக்கேற்ப பயன்படுத்தி வாழ்பவர்கள்தான்
வாழ்வை முழுமையாக தூய்க்கிறார்கள்

காய்ச்சல் வந்தவன் கடவுளைத்தேடிய காலமுண்டு
இப்போது மருத்துவர் தீர்க்க இயலும் நோய்களுக்கு கடவுளை தேடுவதில்லை
தீர்வு கிடைக்காத திசைகளில் தேவனை தேடுகிறார்கள்

சொற்கம் தட்டையான பூமிக்கு மேலே உள்ளது என்ற பழைய ஏற்பாட்டு
மதவாதிகளிடையே பூமி தட்டையல்ல உருண்டை என்ற
கலிலியோவை மதம் கல்லால் அடித்தது
சிறையிலடைத்தது அறிவாளிகளை இல்லுமினேட்டர்ஸ்
என்ற முத்திரையில் மதம் அறிவாளிகளை கொலை செய்தது
இல்லுமினேட்டர்ஸின் புத்தகங்களை தீயிட்டு கொலுத்தினர்

காலம் உண்மைகளை தாமதமாகவே கண்டுபிடிக்கிறது
எனில் நமது நம்பிக்கைகள் அவ்வளவு ஆழமானது
பூமி உருண்டை என்பதை புதிய ஏற்பாட்டில்
மெளனமாய் மாற்றிக்கொண்டார்கள் மதவாதிகள்
ஆனால் சொற்கத்தைத்தான் இன்னும்
உரக்கத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்

ஆன்மீகம்தான் அறிவாளிகளை அழிக்கத்துடிக்கிறது
ஏனென்றால் அவர்களின் அடித்தளம் பயம்
ஒரு கடவுள் மற்றொரு கடவுளையும்
ஒரு மதம் மற்றொரு மதங்களோடும்
சண்டையிட்டுக்கொண்டுள்ளது

அறிவு முயற்சியின் மூலதனம்
தலைமுறையாய் இருந்த தவத்தின் பலன்
நம்பிக்கை ஓர் வரம்
முடமாகிப்போனால் அதுவே மூடநம்பிக்கை

கலீலியோ கலிலி ஜனவரி 8, 1642 இத்தாலியின் பைசா நகரில் இசைஞானி வின்சென்சோ கலிலி மற்றும் குயுலியா அம்மன்னடி ஆகியோருக்கு முதல் மகனாக பிறந்தார். இவர் ஒரு மருத்துவ மானவர் அதை துறந்து வானியல் ஆய்வுகளில் ஈடுபட்டார் தொலைநோக்கி மூலம் வெள்ளி, வியாழனின் நான்கு பெரிய நிலாக்களை கண்டறிந்தார் அதற்கு கலிலியன் நிலாக்கள் என்று அவர் பெருமையில் பெயரிட்டனர். மற்றும் கதிரவனில் காணப்படும் கரும்புள்ளியை ஆராய்தல் ஆகியவை வானியலுக்கு இவரளித்த பெரிய பங்களிப்புகள் ஆகும் "நவீன வானியல் ஆய்வுகளின் தந்தை" "நவீன இயற்பியலின் தந்தை", "அறிவியலின் தந்தை", மற்றும் "நவீன அறிவியலின் தந்தை என்று பெருமையாக அழைக்கப்படுகிறார்.

விண்ணோடு விளையாடிக்கொண்டிருந்தவனுக்கு மரினா என்ற பெண்ணோடு காதல் மலர்ந்தது 2 பெண் 1 ஆண்குழந்தைகள் பிறந்த பின்னும் இறுதிவரைதிருமணம் செய்துகொள்ளவில்லை. இந்த காட்டாறுக்கு கல்யாண கறைகள் தேவைப்படவில்லை காரணம் கலிலியோ அதிகம் காதலித்தது அறிவியலைத்தான் நல்ல கணவராகவோ தந்தையாகவோ கொள்வதுகடினமான ஒன்று.

பூமி எந்தவகையிலும் சுழல்வதோ அசைவதோ இல்லை. பூமி நிலையாக இருக்கின்றது. அத்துடன் பூமிதான் பிரபஞ்சத்தின் மையப்புள்ளி நாம் அறியும் சகல கிரகங்களுமே பூமியைபச்சுற்றித்தான் சுழல்கின்றன என பைபிளில் ஏற்றுக்கொண்டது

பைபிளுக்கு எதிராக கருத்துச்சொன்ன கலிலியோ மீது மதம் கல்லெறிந்தது. ஆயுள்தண்டனை வீட்டுச்சிறை அவரின் புத்தகங்களை விற்றல் வாங்குதல் மரணதண்டனைக்குரிய குற்றமாகக்கருதப்பட்டது. இறுதி நாளில் தொற்று நோயால் பாதிக்கபப்ட்டு தொலை நோக்கியை கண்டுபிடித்தவனுக்கு
பக்கத்தில் இருப்பதுகூட பார்க்கமுடியாமல் பார்வை போனது அப்போது கூட வைத்தியர் அனுமதிக்கப்படவில்லை மதம் கலிலியோவை முற்றாக அழிப்பதற்கு தன்னால் ஆனமுழுமுயற்சியையும் மேற்கொண்டு தோற்றது ஒருவேளை கலிலியோ கத்தோலிக்க திருச்சபைக்கு பயந்து அறிவியலைவிட்டு குடும்பத்தை கவனிக்கசென்றிருந்தால் மனித குலம் ஆயிரம் வருடங்கள் பின்னே இருந்திருப்போம் நல்லவேளையாக மதம் ஜெயிக்கவில்லை கலிலியோவின் மன உறுதி வென்றது அவர் இறந்தபின் அந்தமதம் மனம்மாறி அவரிடம் மன்னிப்பும் கேட்டது. மத நூலில் தவறுகளை மாற்றியும் கொண்டது.

இந்து மதமோ மாறமறுக்கும் இரும்பு இதயம் 2002 குஜராத்தில் நடந்த இனக்கலவரம் நாடே அறியும்., 1992 டிசம்பர் ஆறு அன்று பாபர்மசூதி இடிக்கப்பட்டு தாசப்தங்கள் கடந்து விட்டன. சாக்கிய சமணர்கள் 8,000 பேரை நிர்வாணமாக ஆக்கி - ஆசனத்திலே இட்டு, முனை தலைக்கு வருகிறார்போலக் கழுவேற்றினார்கள். மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா நிகழ்வுகளில் இக்கழுவேற்றம் நடத்திக் காட்டப்படுகிறது.
நாமும் வரலாறு மறந்து வணங்கி மகிழ்கிறோம்

வெற்றுக்கோப்பையோடு அனுகுங்கள்
அமுதம் வசப்படும்
++++++++++++++++

சிந்தனையற்ற நிலையில்தான்
ஆனந்தம் கிடைக்கும்
சுத்தமான மன நிலையோடு அனுகும்
எல்லா செயல்களிலும் அனுபவமும் ஆனந்தமும்
நிலைத்திருக்கும்

மூளையென்ற குப்பைத்தொட்டியை
வெளி மனமெனும் தெருநாய்
கிளரிக்கொண்டே இருப்பதால்
மனிதன் பிரச்சனைகளோடே அலைந்துகொண்டுள்ளான்

ஜென் குருவிடம் ஒரு சீடன் நான் பல நூல்களை கற்றுள்ளேன்
மேலும் கற்றுக்கொள்ள உங்களிடம் வந்துள்ளேன் என்றான்
ஜென் குரு அவனுக்கெதிரே தேனீர் நிறைந்த
கோப்பையை வைத்து அது நிறைய நிறைய
ஊற்றிக்கொண்டே இருந்தார்
சீடன் பதறி தேனீர் வீனாகிறது குருவே
நிறுத்துங்கள் என்றான்

ஏற்கனவே நீ படித்த அறிவு உன் மூளையில்
உள்ளவரை என் அறிவுறைகளும் இந்த தேனீரைப்போல்
வீனாகத்தான் போகும் என்றார்

அந்த மன நிலையோடுதான் நானும்
நண்பர் அழைத்த திருநெல்வேலி - தென்கலம்புதூர் மகாராஜா சுவாமி
ஹைகோர்ட் மகாராஜா கோயிலுக்கு அழைத்தபோது சென்றேன்
எனக்குள்ளிருந்த பெரியார், புத்தன், சைவம், வைனவம்
கிருஸ்த்தவம், இஸ்லாம் மற்ற எல்லா குப்பைகளிலிருந்தும்
மனதை சம நிலையில்வைத்துக்கொண்டு சென்றேன்
இங்குள்ள சுடலைமாட ஸ்வாமி கோயிலின் பூசாரி மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டது.
நிரபராதியான அவரை விடுவிக்க திருவுளம் கொண்ட சுடலைமாட ஸ்வாமி,
வழக்கை விசாரித்த நீதிபதியின் கனவில் உண்மையை உணர்த்தினார்.
அத்துடன், மறுநாள் விசாரணையின்போது அந்த பகுதிக்கே புதியவரான ஒருவர் வந்து சாட்சி சொல்ல,
பூசாரிக்கு விடுதலை கிடைத்தது. ஆனால், அதன் பிறகு அந்த புதியவரை எங்கு தேடியும் காணவில்லை.
எனவே, சாட்சி சொல்ல வந்தது சுடலைமாட ஸ்வாமியே என்று உறுதியாக நம்பிய மக்கள் அவருடைய கோயிலை,
ஹைகோர்ட் மகாராஜா கோயில் என்றே அழைக்க துவங்கினார்கள்.
இந்த கோயிலில் சத்தியவாக்கு கேட்கப்படுகின்றன

என்னோடு வந்தவர்கள் அனைவரையும்
அழைத்து வாக்கு சொன்னார்
என்னைமட்டும் அழைக்கவில்லை
நான் மட்டுமே எஞ்சியிருந்தேன் சரி கிளம்பிவிடலாம்
என எண்ணியபொழுது அழைத்தார்
கடந்த காலங்களைப்பற்றி நிறைய சொன்னார்
உண்மையில் எல்லாம் தவராகவே சொன்னார்
அவரிடம் நீங்கள் சொன்னது எதுவும் உண்மையில்லை என்றேன்
நீ எதற்காக என்ன கேட்க என்னிடம் வந்தாய் என்றார்
நண்பரோடு வந்தேன் எதையும் கேட்கவரவில்லை என்றேன்
ஒற்றை புண்ணையோடு சைகயில் கிளம்பச்சொன்னார்

ஆனால் அங்கு எதுவும் தவறுகள் நடைபெறவில்லை
காசு பணம் கேட்பதில்லை
கடவுள் பெயரால் வசூல் நடைபெறவில்லை
நிறைய நம்பிக்கை விதைக்கிறார்
என்னோடு வந்தவர்களுக்கெல்லாம் நிறைய உண்மையும்
நல்லதும் சொல்லியுள்ளார்

இளையராஜா தன் இரசிகர்ளுடன் உரையாடும்
ஒளிப்படம் ஓன்றை நண்பருடன் பார்த்துக்கொண்டிருந்தோம்
ஒரு பெண் தன் பெயர் கண்ணமா என்றும் அவர் வாயால்
ஒரு முறை அதை உச்சரிக்கச்சொல்லி
தொழுதார் ஆனால் அந்த ஞானி கடைசிவரை உச்சரிக்கவில்லை
நண்பர் கடுப்பாகி காட்சியை நிறுத்திவிட்டு
இந்த ஆளுக்கு திமிரு தலைகணம் என்றார்
மற்றொரு நபரோ அவரின் ஜாதியை சொல்லி
விமர்சனம் செய்தார் ஆனால் இருவரும் அவருடைய ரசிகர்கள்

உண்மையில் ஞானிகளையும், குழந்தைகளையும்
அனுகும்போது அவர்களுடைய நிலையுலேயே அனுகவேண்டும்
அவர்கள் வேறுஓர் தளத்தில் சிந்தனையில்
இயங்கிக்கொண்டிருப்பவர்கள் அவர்களை புரிந்து கொள்வது கடினம்தான்

ஒரு முறை ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம்
காத்திஜி பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன என்றார் ஓர் நிருபர்
அதர்க்கு ஜே. கே முட்டாள்கள்தான் அடுத்தவர்கள்மேல்
அபிப்பிராயம் வைத்திருப்பார்கள் என்றார்
இந்த பதில் மோலோட்டமாகப்பார்த்தால்
திமிராகத்தான் தோன்றும்
ஆனால் அபிப்பிராயம் உள்ள மனிதர்களால்
மற்ற மனிதர்க்ளையோ சூழ் நிலையையோ
முழுமையாக உணர முடியாமல் போய்விடும் என்பது உண்மை

அப்போது ஜே. கிருஷ்ணமூர்த்தியை ஜாதியை சொல்லி
விமர்சனம் செய்தார்களா என்று தெரியவில்லை
நன்கு படித்தவர்களும் தெளிவுள்ளவர்கள் என் நினைப்பவர்கள் கூட
ஒருவரின் தவறுகளை பிறப்பிலிருந்தே விமர்சனம் செய்கிறார்கள்
தாயை அசிங்கப்படுத்துவது அல்லது ஜாதி சொல்வது
ஐய்யர்னா இப்படி செட்டியார்னா இப்படி மலையாளத்தான் இப்படி
என்று எதையும் பொதுமை செய்துவிடமுடியாது
இப்போது எல்லா ஜாதிக்காரனும் எல்லா வேலைகளும் செய்கிறார்கள்
பணம் கிடைத்தால் போதும் ஐய்யர் தோல்கடை முதலாளியாகவும்
முதலியார் முடிதிருத்தும் முதலாளியாகவும் மாறிவிட்டார்கள்
எனவே குணங்களை ஜாதிகளாலும் பிறப்பாலும்
அலவிட முடியாது எல்லா ஜாதிகளிலும் நல்லவர்களும்
கெட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்
இராமனின் தந்தை 1000 மனைவியரோடு வாழ்ந்தவன்
இராமனின் வளர்ந்த இடம் வேறு அவன் ஒரு மனைவியோடு வாழ்ந்தான்
உலகுக்கெல்லாம் செருப்புத்தைத்து கொடுக்கும்
தாமஸ் பாட்டா செருப்புத்தைப்பவனுக்கு பிறந்தவனல்ல
செருப்புத்தைப்பவனுக்கு பிறந்த ஆப்ரஹாம் லிங்கன்
அமெரிக்காவின் ஜனாதிபதியானான்
வெற்றுக்கோப்பையோடு அனுகுங்கள் தேனீருக்காக
ஏங்கும் உங்களுக்கு அமுதம் கிட்டும்
வாழ்வு வசப்படும்

ஆனந்த்
+++++++
இந்த படத்தில் நண்பர் ஆனந்த் மட்டும்
நான் வீடு வாங்கும்போது என்னோடு தொடர்பில்லாதவர்
அவர் எப்படி இதில் (நண்பேன்டா) சேர்ந்தார் என சில நண்பர்கள் வினவினர்
நான் வீடு வாங்கிவுடன் வேலையை விட்டு விட்டேன்
சூழல் அப்படி (யாரையும் கைவிரல் சுட்டி காயப்படுத்த மனம்விருப்பமில்லை)
நான் எதற்கெல்லாம் பயந்தேனோ
அதெல்லாம் நடந்தது
பிரச்சனைகளின் போதுதான் மனிதர்களை
புரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது
வாழ்வில் துயரப்படாமல் வாழ்ந்ததால்
துயரம் எனக்கு நிறைய பாடம் நடத்திக்கொண்டிருந்தது
எனக்கு இது புதிதாகவும் சுகமாகவும் இருந்தது
நிறைய வாய்ப்புகள் வாசல் வந்தது
தட்டிக்கழித்தேன்
நிஜங்களை அனுபவிக்கத்துடித்தேன்
நிமிடங்களில் வாழ்ந்தேன்
துன்பம் சுகமாயிருந்தது
கல்லூரிகளிலும் கிடைக்காத பாடம்
காலம் சொல்லிக்கொடுத்தது
உளியின் வலி பொருத்தேன்
மனம் சிற்பமானது
கடிகாரமுள்ளோடு நொண்டியடித்த வாழ்கை
கரைகளில் அலையடித்தாலும்
ஆழ்கடலில் அமைதியாய்
அனுபவ முத்துக்களை சேகரித்தேன்
அனுபவத்தின் முடிவு அமைதி
அந்த அமைதி சென்னையில் கிடைக்காது
இது வாழ்விடமல்ல பிழைப்பிடம்
பொய்யும் புரட்டும்
வாழ்வாகி போனதால் கிராமத்தை நோக்கி பயணப்பட ஆயத்தமானேன்
அந்த அமைதி தேடலில் கிட்டியதுதான்
இந்த ஆனந்தம்

இயக்குனர் விக்ரமன் படங்களில் பார்ப்பது போல்
சென்னையில் ஓர் கூட்டுக்குடும்பம்
தொலைக்காட்சி தொடர்களைப்பார்த்து காலைவாரத்துடிக்கும்
உறவுகளுக்குமத்தியில்
கணவனின் கால்களில் மனைவி
விழுந்து வணங்குவதும் !
தாய் தந்தையின் கால்களில் பிள்ளையும், மருமகளும் !!
விழுந்து வணங்குவதும் !!!
அடுத்த தலைமுறையின் அதிசியங்கள்
அவரின் தந்தை ஓர் ஆச்சரியம்
அற்புதமான மனித தெய்வம் - ஆனால்
மகன் தான் தெய்வத்தை கோயில்களில் தேடித்திரிகிறார்
இவருக்கு மகனாக பிறக்கவில்லையே என
மனம் ஏங்குவதுண்டு

நண்பர் ஜாஹிர் ஓர் நாள் அழைத்தார்
என் முக நூளைப்படித்துவிட்டு நண்பர் ஆனந்த் சந்திக்க அழைப்பாதாக
சந்தித்தோம் பேசினோம் முடிவில்
சென்னையைவிட்டு போகவேண்டாம் என்றும்
வாரம் ஒர் நாள் சந்திப்பதாகவும்
ஓன்றாய் உணவருந்திவிட்டு திரைப்படம் செல்லவும்
நிறைய முக நூளில் எழுதவேண்டும் என்றும்
அதற்காக என் வீட்டுக்கடனை தானே அடைப்பதாகச்சொன்னார்

பாரதிக்கு ஓர் ஆனந்த் கிடைத்திருந்தால்
பாவம் அந்த ஏழைக்கவி யானையிடம் மிதிப்பட்டு செத்திருக்கமாட்டான்

ஊழலை ஓழிக்க ஓர் வழி
++++++++++++++++++++++
இந்தியாவில் ஊழல் ஒரு பெரும் பிரச்சினை. 
பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கின்றது. (Transparency International) நடத்திய 
ஆய்வின் படி 62 சதவிகிதத்திற்க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இலஞ்சம் கொடுப்பது, 
அல்லது செல்வாக்கு பயன்படுத்தி பொது அலுவலகங்களில் வெற்றிகரமாக
வேலைகளை முடித்துக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது

ஊழ் என்பதற்கு முறை, விதி, பழவினை என்று பலபொருளுண்டு.
ஊழ்+அல் = ஊழல். ஊழ்(முறை) அல்லாதவைகளே ஊழல் ஆகும்.
அதாவது, முறை தவறிய, விதி மீறிய செயல்களே ஊழல் எனக் கூறலாம்.

இலஞ்ச லாவண்யம்
இலஞ்சம் = ஒரு காரியம் ஆகவேண்டும் என்பதற்காக
முறைகேடாகப் பணம் அல்லது பொருள் அளிப்பதே இலஞ்சம்
லாவண்யம் என்றால் அழகு. லஞ்சத்தோடு லாவண்யத்தை ஏன் சேர்த்தார்கள் தமிழர்கள்

சாம தான பேத தண்டம் எதிரியைப் பணியவைக்க நான்கு வழிகள்
(சாணக்கியரால்) சொல்லப்பட்டுள்ளன.
மேல்கண்ட 3ல் நடக்காத காரியத்தை தானமாக (இலஞ்சம்தான்…சற்றே நாகரிகமாகத் தானம் என்கின்றனர்.)
அவர் விரும்பும் பொருளைக் கொடுத்து வசப்படுத்துவது.

ஊழல் தேனை எடுக்கும் பொழுது புறங்கையை நக்குவது ஊழல்; சட்டத்திற்கு அப்பாற்பட்ட வகையில் கமிஷன் அடிப்பது.
வஞ்சகமின்றி பரவியிருப்பது லஞ்சம்மட்டுமே
எல்லா ஆட்சியிலும் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.
இலஞ்ச லாவண்யங்கள் அதிகமாக உள்ள துறைகள்
ஆன்மீகத்தின் வழியாக ஆழ்மனதில் பதிந்ததனால்
பத்திர பதிவு துறை, பொது பணித்துறை 3. வட்டார போக்குவரத்து துறை
வருவாய் துறை, அரசு பொது மருத்துவ மனைகள்

அரசு வருமானம் இலஞ்சமாய்
அதிகாரவர்கத்து பாக்கெட்டுகளில் அடைக்கமாகிறது
கோயில்களுக்கு அர்ச்சகர்கள் போல்
அரசுக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள்
நீதிமன்றங்களில் நியாயாதிபதிக்கு தரகர்களாய் இருக்கும் வக்கீல்கள் யாரோ,
அவர்களிடமே அதிகம் மக்கள் செல்லுகின்றனர்.
கெட்டிக்காரர்களாகவும், யோக்கியமாகவுமுள்ள வக்கீல்களிடம் மக்கள் செல்லுவதில்லை.
தீர்ப்பை விலைக்கு வாங்குகின்றனர்
கடவுளுக்கே இலஞ்சம் கொடுத்தவிட்டதால்
இலஞ்சத்தை இழிவாய்க் கருதும் மனப்பான்மையும் மாறிவிட்டது.

லஞ்சம் வாங்காத அதிகாரிகள் முட்டாளாகவே கருதுகின்றனர்.
‘லஞ்சம் கொடுப்பவர் மீதும் லஞ்சம் வாங்குபவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக!’
என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் சாபத்திற்கு யாறும் பயப்பட்டதாக தெரியவில்லை

இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய முறைப்பாடுகளுக்கு 1954 ஐ அழையுங்கள்
இலஞ்சம் கேட்டல்,பெறுதல், கொடுத்தல் போன்ற குற்றத்திற்கான தண்டனைகளாக
07ஆண்டு சிறைத் தண்டனை, 5000 ரூபாய் வரை அபராதம் மற்றும் தண்டப்பணம் செலுத்த வேண்டும்.

சுவிஸ் வங்கிகளில் டிரில்லியன் கணக்கான டாலர்கள் இந்திய ஊழல்வாதிகளால்
மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று இந்திய ஊடகங்கள் பரவலாக குற்றச்சாட்டுக்களை வெளியிட்டுள்ளன.

அதிக கட்டுப்பாடுகள், சிக்கலான வரிகள் மற்றும் உரிமம் அமைப்புகள்,
பல்வேறு அரசு துறைகள் ஒவ்வொன்றிற்கும் ஒளிபுகா அதிகாரத்துவம்
மற்றும் விருப்ப அதிகாரங்கள், அரசாங்க கட்டுப்பாட்டு நிறுவனங்களுக்கு
சில பொருட்கள் மற்றும் சேவைகளின் மேல் தரும் தனியுரிமை,
வெளிப்படையான சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் இல்லாமை ஆகியவை
இந்தியாவில் ஊழல் வளர காரணங்களில் அடங்கும்.

பக்தனா இருக்கிறதைவிட, யோக்யனா இருக்கணும்
என்கிறார் காமராசர்

பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாற்றுப் பெயர் சொல்ல வேண்டுமானால்
பேராசை என்றுதான் சொல்ல வேண்டும். பேராசை என்றால் தகுதிக்குமேல்
விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது என்றார் பெரியார்

பல வருடம் பஞ்சமா பாதகம் செய்தாலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்
கும்பகோணம் மகா மகக் குளத்தில் ஒரு முழுக்குப் போட்டு விட்டால்,
எல்லாப் பாவங்களும் பஞ்சாய்ப் பறந்து விடும் என்றால் நாட்டில் ஒழுக்கம் எப்படி உயிர் வாழும்?

அறன் பொதுச்சிந்தனை ஊழல் சுயச்சிந்தனை
கடவுளையும் அதைத்தாங்கும் மதத்தையும் ஒழித்தால்
ஊழல் ஒழியும் என்னோடு படித்தவன் திடீர் தொடர்புகளால்
பன்னை வீடுகளும் பகட்டுகாருமாக வளம்வந்தான்
தான் திருப்பதி போனதாகவும் தன் வாழ்வில் திருப்பம் வந்ததாகவும்
என்னையும் கூட்டுக்கு அழைத்தான்
என்ன தொழில் செய்தாய் எப்படி திருப்பம் வந்தது என்றேன்
ரகசியம் என்றான் பரவாயில்லை சொல் பலருக்கு பயன்படட்டும் என்றேன்

முதலில் ஏழுமலையானை ஒரு பங்குதாரராக்கினேன்
இலாபத்தில் 50% அவருக்குத்தான்
அதைத்தான் உண்டியலில் போட்டுவிட்டு
மொட்டையடித்துவிட்டுவந்தேன் என்றான்

என்ன தொழில் செய்தாய் என்றேன்
ரகசியமாகச்சொன்னான் செம்மரக்கடத்தல் என்று?
செம்மரங்களை துண்டு துண்டாக வெட்டி
துறைமுக அதிகாரிகளின் துணையோடு
துணிகளை அனுப்புவதுபோல் அனுப்புகிறார்கள்
எத்தனை அவதாரம் எத்தனை அற்புதம் செய்த தெய்வம்
ஒரே ஒரு அற்புதம் செய்தால் ஊழல் ஒழியும்
தவறாய் சம்பாதித்த பணத்தை உண்டியலில் போடும்போதே
போடும் நிலையிலேயே ஒரே ஒருத்தனை சிலையாக்கினால் போதும்

ஏனோ ஏழுமலையானுக்கு இன்னும் விரும்பவில்லை போலும்
ஊழல் ஒழியவேண்டுமென்று
திருடர்களிடம் பங்குதாரராகவே தொடர்கிறார்
அவர் கடன் தீரும்வரை ஊழல் ஒழியாது
குபேரனை தீர்த்துகட்டிவிட்டால் ?||
ஏழுமலையான் இலஞ்சம் வாங்குவதை நிறுத்திவிடுவார்

"இளைதாக முள்மரம் கொல்க"

மகாவீரர் - நிர்வானத்தை நோக்கி தமிழகம்
++++++++++++++++++++++++++++++++++++++
ஜைனம் என்பது வெற்றி
அனைத்து துன்பங்களிலிருந்தும்
வாழ்வை வெற்றி பெரும் மார்க்கம்
சித்தார்த்தர், திரிசாலை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
யசோதை என்ற நங்கையை திருமணம் செய்து கொண்டு
அனோஜா என்ற பெண் மகவிற்கு தந்தையானார்.
மகாவீரர் புத்தரைப்போலவே
அரச வாழ்வை துறந்து தனது
30 வயதில் துறவு பூண்டவர்
அரசன் ஆண்டியான மகத்துவம்
இன்றோ ஆண்டிகள் அரச வாழ்வை அனுபவிக்கிறார்கள்
இந்து சமயம் மூடப்பழக்கத்தில் மூழ்கிக்கிடந்தன
கேள்வி எழும்போதெல்லாம் வேள்வி நடந்தன
உயிர்ப்பலியை திருப்பலியாய் செய்தார்கள்
சாதிப்பாகுபாடுகள் தாண்டவமாடின
எளிதில் பொருள் விளங்கா புலம்பல்கள் வேதமொழியாய் மாறின
இச்சீர்கேடுகளைக்களையும் பொருட்டே புத்த, சமண சமயங்கள் இந்தியாவில் தோன்றின.
ஜிம்பிரிப் என்னும் கிராமத்தில்
சாலா என்னும் மரத்தடியில் ஞான ஒளியைப் பெற்றார்.
மரங்களே மகான்களுக்கு ஞானத்தை தந்தருளியது
மனிதனை விட தெய்வங்கட்குச் சிறப்பு தரும்
வேதக் கொள்கைகளைக் கடுமையாக சாடுகிறார்.
உடமைகளைமட்டுமல்ல
உடைகளையும் துறந்து 12 ஆண்டுகள்
கடும் மெளன தவமிருந்தார்
பயன் கைவல்ய ஞானம் கிடைக்கப்பெற்றார்.
இன்ப துன்பங்களுக்கு நாமே பொறுப்பு.
நம் கருமங்கள் நம்முடைய முயற்சியினால் நாமே களையவேண்டும்.
அறவழி நடந்து மனத்தால் தூய்மை உடையோர்
அனைவரும் கடவுளர்களே என்பது மகாவீரரின் கருத்து.
துறவிகள் தங்கள் தலைமுடியை ஒவ்வொன்றாக முழுவதையும் பிய்த்து எடுத்துவிட வேண்டும்.
அடிக்கடி உண்ணா நோன்பிருந்து இறுதியில் முழுப்பட்டினி கிடந்தே உயிர் துறக்க வேண்டும்.
உடையேதும் அணியாமல் நிர்வாணமாகத் திரிதல் வேண்டும். நீராடல் கூடாது.
தரையிலேயே படுத்து உறங்குதல் வேண்டும். நின்றபடியே சாப்பிட வேண்டும்.
இவற்றைசமண முனிவர்கள் கடைபிடிக்க கட்டளையிடப்பட்டது.
வாய்கிழிய பேசும் நிகழ்கால துறவிகள்
அருள் தேடிவரும் அப்பாவி பெண்களின்
உடைகளைத்தான் துறக்கத்துணிந்தார்கள்
பிறவி, வாழ்வு, துன்பம் மற்றும்
மரணங்களிலிருந்து நிர்வானம்
அடைதலே இவர் நோக்கம்
அகிம்சை, சத்தியம், அஸ்த்தேய -
(அடுத்தவர் சொத்தை திருடவோ அபகரிக்கவோ கூடாது)
பிரம்மச்சரியம், அபரிக்கிர்ஹா -
(உற்றார் உறவுகள் வீடு மனைகளில் பற்றற்று இருக்கவேண்டும்)
வணங்குதல், வழிபடுதல் கூடாதென்றார்
படைத்தல், காத்தல், அழித்தல்
கடவுளின் வேலையில்லை என்றார்
மனிதர்களிடம் மட்டுமல்ல
அனைத்து உயிர்களிடத்தும்
அன்பு செழுத்த சொன்னார்
கிபி 82 ல் ஜைனம் இரண்டாய் பிரிந்து
நிர்வான துறவிகள் எல்லாம் திகம்பரர்கள் என்றும்
வெள்ளாடை துறவிகள் எல்லாம்
ஸ்வேதாம்பரர்களாகவும் பிரிந்தனர்

மாப்ள சீக்கிரம் வா நாளைக்கி சரக்கு கிடைக்காது கட லீவு
இன்னிக்கே வாங்கி ஸ்டாக் வக்கனும்
நாளைக்கி எதுக்கு லீவு உடுறானுங்க
எவனோ மகாவீரர்னு ஒரு சாமியார் பொறந்த நாளாம்
மகாவீரர்மேல் கடும் கோபம் அந்த குடிமகன்களுக்கு

அரசு ஒருபக்கம் மதுவிற்பனையை அதிகப்படுத்திவிட்டு
மறுபுரம் மகாவீரருக்காக விடுமுறை விடுவதால்
முழு போதையில் துணிகளை துறந்து நிர்வான நிலையில்
திகம்பரர்களாக பலர் வீதிகளில் விழுந்துக்கிடக்கிறார்கள்

மேல்தட்டு மக்கள் வெள்ளாடை கசங்காமல்
ஸ்வேதாம்பரர்களாக மயங்கித்திரிகிறார்கள்
மகாவீரரை மறந்த பலகுடிமகன்களுக்கு
அரசு விடுமுறைதந்து ஞாபகப்படுத்துகிறது

மழைத்துளி மறந்த
தரிசு நிலம்போல
முளைவிட மறந்த
விதைகளைபோல்
துளிர்க்க மறந்த
தளிர் போல
மண்ணுக்குள் உன்னையும்
மனதுக்குள் நினைவையும்
ஒற்றை துளியில்
இரண்டுமாய் தவிக்கின்றோம்

உன் இழப்பு
இப்போதும் எமக்கு
வல்லரசின் ராணுவ ரகசியம் போல்
மனம் நம்ப மறுக்கிறது

நஞ்சுடைய நாகம் போல்
நெஞ்சமெல்லாம் நெளிகிறது
உன் இறப்பு
எப்படி உயிர் பிரித்தாய்?

சாய்ந்து கொள்ள நீயில்லை
வழி காட்ட உன் அறிவில்லை
உன் ஞாபக வெள்ளம்
பின்னோக்கி இழுக்கிறது

இமைகளின் ஈரத்தில்
வறண்ட இதழில்
இருண்டு இதயத்தில்
காலப் பெருங்கடலில் வீசும் அலைகளில்
காணாமல் போகவில்லை நீ

எங்கள் நந்தவனங்களில்
ராஜ நடைபோடுகிறாய்
ஆண்டதும் மாண்டதும்
அழுததும் தொழுததும்
ஆகத்தீரவில்லை

நீ நின்ற பாதியில்
நீ சென்ற பாதையில்
எங்களின் பயணம் தொடர்கிறது...

தம்பி தீனா திடீரென மொட்டையுடன் வந்து நின்றது
ஆச்சரியாமாய் இருந்தது
தைப்பூசத்திற்கு மூன்று நாட்கள் கோயிலிலேயே தங்கி
விருதமிருந்து மொட்டைபோட்டு வந்துள்ளான்
சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் 
ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.
முருகப் பெருமானுக்கு கொண்டாடப் படும் விழாவாகும்.

அலகு குத்துதல் - நாக்கு, கன்னம், கை, உடம்பின் பிற பகுதிகளில்
சிறிய பெரிய வேல் வடிவமுடைய ஊசியால் குத்திக்கொண்டு
கோவிலுக்கு வருதல். சிலர் சின்ன ரதம் போன்ற வண்டியை
பக்தர்களின் முதுகில் கொக்கிகளால் இணைத்து இழுத்து வருகிறார்கள். சர்க்கரை காவடி - சர்க்கரை பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரபபடுகிறது.
பழனியில், ஈழத்தில்,மலேசியாவில் பத்து மலை முருகன் கோவில்
மலேசியாவின் பினாங்கு, சிங்கப்பூரில் தைப்பூசம்
சீனர்கள் கூட முருகனுக்கு வேண்டுதல்கள் செய்து
பூசத்தன்று நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்
மொரீஷியசில், ஆஸ்திரேலியாவில்
தமிழர்கள் உலகில் எங்கெல்லாம்
வாழ்கிறார்களோ அங்கெல்லாம்
இந்த கூத்து அரங்கேருகிறது

இந்திய ஜ்னாதிபதி, பிரதம மந்திரி,
தேர்தல் ஆணையர், அரசியல்வாதிகள்
அப்துல் கலாம் இந்திய வின்வெளித்துறை தலைவர்
மற்றும் உச்சத்தில் உள்ளவர்க்ள்
அனைவரும் அவரின் காலில்விழுந்து கழுவிக்குடித்தார்கள்

அந்த ஆன்மீகப்பெரியவனோ
மூன்று தலைமுறை நடிகைகளையும்
பல்வேறு வயதுடைய பெண்களுடனும்
காமவிளையாட்டு விளையாடி கழுவிக்குடித்தவன்
என்பதை ஆதரத்துடன் வெளியே சொன்ன
உதவியாளனை அடியாள்வைத்து கொலைசெய்த
ஆன்மீக உச்சம்
வசதி, அதிகாரமில்லாதவர்களுக்கும் மட்டும்தான்
இந்திய சட்டம் தண்டனை தரும்
இங்கு நடப்பது ஜன நாயக ஆட்ச்சியல்ல
அதிகாரமும் பண பலமும் கொண்டோரின் சர்வாதிகார ஆட்சி
அந்த பெரியமனிதன் இப்போது நிரபராதி
சரி அந்த கோயிலில் ஓர் தெய்வமுண்டே
அந்த தெய்வத்தையும் கொன்று புதைத்துவிட்டார்களா?
சக்தியில்லாத தெய்வங்கள் இருந்தென்ன இலாபம்
சங்கராச்சாரிகளின் கைகளில் ஓர் குச்சி உண்டு
அதன் பெயர் தண்டம் அதன் உச்சியில் துணி ஒன்று ஆடும்
அதன் பெயர் கெளபீனம் (கோவணம்)
அந்த மாற்றுத்துணிமட்டுமே அவர்களின் சொத்து
அப்படித்தான் வாழ்கிறார்களா
நம் சன்னியாசிகள் ????????????

என் ஆச்சரியத்திற்கு காரணம் தம்பி தீனா
ஓர் இளம் விஞ்ஞானி
எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்று
மனம்சார்ந்து வாழ்வது ஆன்மீகம்
அப்படியே நம்பாமல் கேள்விகளின் துணைகொண்டு அறிவால்
விடைதேடுவது அறிவியல்
ஆன்மீகம் போன தலைமுறையில் புதைத்த பொய் - (பிணம்)
அறிவு போன தலைமுறையின் அனுபவ நீட்சி - (கண்டுபிடிப்புகள்)
கிரகாம் பெல் தொலை பேசியை கண்டுபிடித்தவன்
Hello! என்பது அவரது மனைவி பெயரென்று
தவறாக சொல்கிறார்கள் அவரது மனைவி பெயர் Mabel Hubbard
காதலியின் பெயர்தான் Margaret Hello
அன்று உலகில் அதிகம் உச்சரிக்கப்படுக் சொல்
கடவுளாக இருந்தது இன்று Hello தான்
உலகில் அதிகம் உச்சரிக்கப்படுக் சொல்
ஆன்மீகத்தை அறிவியல் மிஞ்சமுடியாத
இடம் இறப்பும் பிறப்பும்தான் இப்போது
குழாய்களில் குழந்தை பிறக்கிறது
செயற்கை உறுப்புகள் செய்துகொண்டுள்ளனர்
சொர்க்கத்துக்கு செல்ல மனமில்லாத மனிதர்கள்
இறப்பைத்தள்ளிப்போட மருத்துவமனைகளில்
மனுகொடுத்துக்கொண்டிருகிறார்கள்

வெள்ளத்தனைய மலர் நீட்டம்
நீரில்லா குளத்தில்
தாமரையின் தள்ளாட்டமா
தனிபட்ட பிணக்குக்கு
தமிழோடு போராட்டமா
வானத்து நிலவு நீ
வரப்புகளில் தடுமாற்றமா
சுட்டது சட்டியென்று
படத்துக்குமட்டும்தான் பாட்டெழுத முடியுமா
வார்த்தைகளில் விளையாண்ட உன்னிடம்
வாழ்க்கையின் விளையாட்டு இது
ஊருக்கு வார்த்தை தேடியது போதும்
உன் வாழ்க்கைக்கு வழிதேடு
மெட்டுக்கும் துட்டுக்கும்
பழக்கப்பட்ட உன் இதயத்தின் தேடலா
கனவுகளில் போராளிகள்
நிஜங்களில் நீர்குமிழிகள்
இது கோடையின் துவக்கம்
நீரில்லா நிலைகளில்
தண்டின்றி தடுமாறுவதேன்
உன் இலையுதிர்
இதழுதிர் காத்திரு நீர்வரும்
மறுபடி மலர்வாய் தாமரையே

இலையுதிர்காலம்
+++++++++++++++
வாழ்வை தூய்த்தவர்களுக்கு மரணம் ஓர் வரம்
தொடங்காமல் முடிப்பவர்க்கும்
பயணத்தை பாதியில் முடிப்பவர்க்கும் பெரும் துயரம்
எங்கெங்கோ தேடிய அமைதிக்கும்
சமத்துவத்‌திற்கும் சுடுகாடுதான் தாயகம்

பேராசைக்காரனும் ஞானியும்
தர்மவாதியும் அதர்மகாரனும்
காவனின் தலைக்கு மேல் கொலைகாரனும்
நீதிபதியின் பக்கத்தில் குற்றாவாளியும்
பேதம் இல்லாத இடம் மயான பூமி

பட்டுத்துணியோடு சுற்றியவனின் உடல்
ஒட்டுத்துணியோடு ஊர்வளம் போகிறது

தொடர்ச்சியாக மரண செய்தி
மாதங்களில் நான் மார்கழி என்றானே
மரணங்களில் நான் மார்கழி எனலாம்
மூச்சித்தினரல் உள்ளவர்களுக்கெல்லாம்
மார்கழி மரணத்தை வழிகாட்டுகிறது

இஸ்லாமியர் நண்பர் வீட்டு மரணம்
சென்றிருந்தேன் ஆர்பாட்டமில்லாத சடங்குகள்
மரணம் நடந்ததே அவரின் பெண் அழும்போதுதான்
ஞாபகம் வருகிறது ஓர் பயணத்தின் ஏற்பாடாய்
காம்பிலிருந்து மலர் உதிர்வது போல் நடந்தேறியது

அயனாவரத்தில் ஓர் கிருஸ்தவ நண்பரின் மரணம்
சடலத்தை தேவாலயத்தில் வைத்திருந்தார்கள்
மதவாதிகள் ஜெபம் செய்துகொண்டிருந்தார்கள்
மகளும் மணைவியும் யாரோ செய்த மெழுகும்
மௌனமாய் அழுதுகொண்டிருதார்கள்

நண்பர் பாஸ்கரின் மாமனாரும் சகோதரி
ரேவதியின் தந்தையும் இறந்த செய்தி கேட்டு சென்றேன்
சென்னையில் பிறந்து வளர்ந்ததால் ஓர் தெளிவும்
நிதானமும் அந்த மரண வீட்டில் தெரிந்தது
யாரும் அழவில்லை சென்ற எங்களுக்கு
தேனீர் கொடுத்து உபசரித்தார்கள்
சென்னையில் இது வழக்கமோ ?
கிராமங்களில் சம்மந்திகள்தான்
மரண வீட்டில் உள்ளவர்களுக்கு
இதை செய்வார்கள் பாவம் இங்கு உறவுகள்
ஒதுங்கியே நின்றார்கள்
சடங்குக்கு தென்னை ஓலைதேடினார்கள்
நகரத்தில் மனதை குழி தோண்டி புதைத்து
மரம் வளர்த்த மனிதர்கள் மரணத்திற்கு
ஓலை தர மறுத்துவிட்டார்கள்
மரணமற்ற வரம் வாங்கிவந்தவர்கள்

கூடுகளில் குருவி தலை நீட்டுவதுபோல்
அடுக்குமாடி ஜன்னல்களிலிருந்து
வேடிக்கைபார்க்கும் தலைகள்
சடலத்தை நெருங்க நடுங்கும் நெஞ்சங்கள்
தங்களுக்கும் மரணம் நிஜமென்பதை
மறந்தவர்கள்
ஓர் ஓங்கார சத்தம் அப்பா அப்பா என்று
அதுவரை அடக்கிவைத்திருந்த அன்பு
அழுகையாய் வெடித்து வீரிட்டது ரேவதிக்கு
பெண்களை பெற்றவர்களே
பெருமையோடு இருங்கள் அழுவதற்காகவாவது ஆள் இருப்பதால்
சடலத்தை தூக்க ஓரிருவரை தவிர மற்றவர்கள்
ஒதிங்கிகொண்டார்கள் நண்பர் ஆனந்தோடு நாங்களே தூக்கினோம்
சுடுகாட்டில் எண்ணி 16 பேர்கள் அதில்
நாங்களே 7 பேர்

கிராமத்தில் ஓர் மரண செய்தி
ஆண்களைவிட பெண்கள் உணர்ச்சி மிக்கவர்கள்
அதனால் அவர்களை அறியாமல் அழுகை வந்துவிடுகின்றது
மொத்த பெண்களும் ஒப்பார் வைத்துக்கொண்டிருந்தனர்
ஊரே திரண்டிருந்தது
சடங்குகளின்போது சலசலப்பு
புதிய தலைமுறைக்கு தெரியாத ஓர் உண்மை
பானை உடைப்பதுபோல் உடைக்கப்பட்டது
அவரது முதல்மனைவியின் ஆர்பாட்டம்
30 வருடத்திற்கு முன் முறிந்த உறவின்
அங்கிகாரத்திற்காகவோ சொத்திற்காகவோ
சண்டையிட்டுகொண்டிருந்தார்கள்

வெள்யூர்காரர்களுக்கும் புதிய தலைமுறைகளும்
ஒன்றும் புரியாமல்; உறைந்துபோனார்கள் 30 வருட பிரிவு
அடக்கிவைத்திருந்த உணர்வுகளெல்லாம்
முதல்மனைவி கோபமாய் பிணத்தை அடித்து திட்டி
ஆர்பாட்டம் செய்தது முகம் சுளிக்கவைத்தது
ஒழுக்கமில்லாத வாழ்க்கை
மரணத்திற்கு பிறகும் அவப்பெயரை
பெற்றுக்கொடுத்துவிட்டது

இறந்த முகமதியருக்கு அது 3 வது மனைவி
இருந்தும் அங்கு ஒழுங்கு இருந்தது
மதப்பெரியவர்களின் கட்டுக்குள் எல்லாம் நடந்தது
இங்கோ 30வருடத்திற்கு முன் நடந்தது தெரிந்த பெரியவர்கள்
பலபேர் இப்போது உயிரோடு இல்லை
கிராமங்களை முன்புபோல் கட்டுக்குள் வைத்துக்கொள்ள
தலைவர்கள் இல்லை
சடங்குகள் செய்யாமலே சடத்தை தூக்கிவிட்டார்கள்
வழி தவறி வாழ்வோரே தவறுகளை சீர் செய்துகொள்ளுங்கள்
இல்லை எனில் மரணத்திற்குப்பிறகும்
அவமானப்படுவீர்கள்

“காதலர் தினத்தை” மேலை நாட்டுப் பண்பாடுகளை திணிக்கும் முயற்சி என்றும் காதலின் பெயரால் நினைவுப் பரிசுப் பொருட்களை விற்கும் வணிகமயமாக்கம் என்றும்
ஒரு சாராரால் குற்றம் சாட்டப்படுகிறது. இதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.

இங்கு எல்லாம் வியாபாரமாகிவிட்டது
தாய்பால் விலை பேசப்படுகிறது
தாம்பத்தியம் நீதிமன்ற படிகட்டுகளில் ஏலம் விடப்படுகிறது
நக்கித்தின்னும் நாய்கள்
காதல் என்றபெயரில் எல்லாம் முடிந்து
எச்சிலைகளாய் ஏமாற்றப்படுகின்றனர்
அடுத்த இலைக்காய் அந்த ஆண் நாய்
வேறு ஓர் குப்பைத்தொட்டியில்
நக்கித்திரிகிறது
பெற்றோரின் சாபம் நாயாய் அலைகிறார்கள்
விடுதலைவேண்டி நீதிமன்றங்களுக்கு
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் ரமன் சிங் தலைமையிலான பாஜக அரசு, காதலர் தினம் இனி பெற்றோர் தினமாக அனுசரிக்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கி.பி 270 ம் ஆண்டு ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் திருமணமானவர்கள் நல்ல போர்வீரர்களாக உருவாவதில்லை என்று நம்பியதன் காரணமாக
காதல் செய்வதையும் திருமணம் செய்வதையும், பெண்களை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது என்றும் தடை விதித்திருந்தார் ரோமப் பேரரசர் கிளாடியுஸ். காதல் செய்யும் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் நம்பிக்கை.
திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை அனுபவிக்க துடித்தவர்களுக்கு உதவி செய்து அவர்களுக்கு அரச கட்டளையை மீறி திருமணம் நடத்திவைத்தார் மத குரு வேலண்டைன்.

இந்த உதவிக்கு மன்னன் மரணதண்டனையை பரிசளித்தார்.
வேலண்டைன் கொல்லப்பட்ட நாள் பிப்ரவரி 14. வேலண்டைன்ஸ் டே (காதலர் தினமாக) கொண்டாடுகிறார்கள்

மதம் வளர்க்க வந்த மதவாதி
தன் உயிர் கொடுத்து
மனிதம் வளர்த்த நாள்
நம்மூர் மதவாதிகள்
மடம் வளர்க்கிறார்கள்
நெய்சோறும் பாலும் தின்று
தொப்பையை வளர்க்கிறார்கள்
ஆசிரமம்தோரும் கொலையும்
குற்றமும் வளர்க்கிறார்கள்
மனிதம் கொன்று
மதம் வளர்க்கிறார்கள்

காதல் என்பது மனநிலையிலும்,
உணர்வு நிலையிலும் ஏற்படுகிற ஆழமான ஈடுபாடு.
இந்த ஈடுபாட்டால் புதுவிதமான ஆனந்தத்தை மனிதன் உணர்கிறான்.
பருவம் பாராமல் பூப்பது காதல்
மார்க்ஸ் -ஜென்னியின் யூத காதல்
ஆண்டாள் - கண்ணனின் ஒரு தலை காதல்
கயஸ் (மஜ்னு) - லைலாவின் கல்லறை காதல்
ரோமியோ - ஜீலியட் ஜென்ம பகையில் வளர்ந்த காதல்
அனார்கலி - சலீமின் கலைக்காதல்
அம்பிகாபதி - அமராவதி மொழிக்காதல்

இரு மாறுபட்ட உண்மையான
உள்ளங்களின் சந்திப்பு
இரு மாறுபட்ட உடல் கூறுகளின்
ஆய்வின் ஆர்வம்
உடலால் வேறு பட்டாலும்
உள்ளத்தை ஒட்டவைக்கும் தேடலின் பயணம்
தேடலை உடலோடு நிறுத்திக்கொள்வது
தோல்வியில் முடிகிறது
மனதின் மான்பு தேடும் மந்திரமே
இறப்புவரை காதலை இழுத்துச்செல்கிறது
 — 

உங்களிடம் கையேந்தி வருவது
சிவனாகவோ புத்தனாகவோகூட இருக்கலாம்
+++++++++++++++++++++++++++++++++++++++
“ஈதல் இசைபட வாழ்தல், அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு” 
உயிருக்கே விலை வைக்கிறார் வள்ளுவர்

கீதையில் கிருஷ்ணர் தானத்தை சாத்விக தானம்,
ராஜஸ தானம், தாமஸ தானம் என மூன்றாகப் பிரித்துக் கூறுகிறார்.
தகுந்த இடத்தில், தகுந்த வேளையில், எதிர்பார்ப்பின்றி, தகுதியுள்ளவருக்கு முறையாக அளித்தல் சாத்விக தானம்.
பிரதிபலனை எதிர்பார்த்து சிரமத்துடன் கொடுக்கப்படுவது ராஜஸ தானம். தகுதியற்ற இடத்திலும், காலத்திலும், தகுதி அற்றவர்களுக்கு உபசரிப்பு இன்றியும், அவமரியாதையுடனும் கொடுக்கப்படுவது தாமஸ தானம்.

ஈத்துவக்கும் இன்பம்!
என் சில்லைரைகளையெல்லாம் பிள்ளைகளிடம் கொடுத்து
சேமிக்கச்சொல்வேன் அதனை வெளியே செல்லும்போது
எடுத்துவந்து இரயிலில் வரும் இயலாதோருக்கு
அவர்கள் கைகளால் கொடுக்கச்சொல்வேன்
ஈதலையும் சேமிப்பையும் நாம்தான்
பிள்ளைகள் மனதில் விதைக்கவேண்டும்

உலகம் சுருங்கிய உன்னதம்
செத்தவன் கையில் மட்டும்தன் செல்போன் இல்லை
பேசிக்கொண்டே வாழ்கிறார்கள்
தனியாக பேசுவனை போனதலைமுறைவரை
பைத்தியம் என்றது உலகம்
இன்று எல்லோறும் பைத்தியங்களாகிவிட்டார்கள்
ஓடும் இரயிலில் ஓடிக்கொண்டே பேசுகிறான்
நடக்கையில், படுக்கையில்
கழிவறை கல்விக்கூடம் என
சகல இடங்களையும் செல் போனோடு வாழ்க்கையை
மனிதன் வாழப்பழகிவிட்டான்
பேசா நிமிடங்களில் குறுஞ்செய்திகளும்
புதிதாக ஓர் விளையாட்டு (subway surfers )
ஓடி ஓடி பொருள் சேர்க்கும் விளையாட்டு
ஓருவன் ஓடிக்கொண்டே இருப்பான்
தவறினால் இரயிலில் அடிபட்டு செத்துவிடுவான்
விளையாட்டு முடிந்துவிடும்
திரும்பவும் புதிதாய் ஓடத்தொடுங்குவான்
நிஜத்திலும் விளையாட்டிலும்கூட
மனிதன் பணம்தேடி ஓடிக்கொண்டே இருக்கிறான்

டார்வினின் கணிப்புப்படி அடுத்த தலைமுறைக்கு
ஒட்டகத்தைப்போல் எல்லோரும் விரல் வளர்ந்தவர்களாக இருப்பர்
ஒரு திரு நங்கை அந்த பணம்தேடியை
தொட்டவுடன் சினம் கொள்கிறான்
அவனை தொட்டதற்காக சண்டையிடுகிறான்
கண்தெரியாதவர்களை கண்ணிருந்தும்
கவனிப்பதே இல்லை

ஓரே உடல் திறன்
ஒத்த உணர்வு கொண்டவர்கள்
மற்றவர்களை உந்திதள்ளி முன்னேற முடியாத
திறனின்றி சமூக அமைப்பும் சூழலும்
பின்னுக்குத்தள்ளிய இந்த விளிம்பு நிலை மனிதர்களை
கருணையோடு பாருங்கள்
உதவ மனமில்லை என்றாலும்
உதாசினப்படுத்தாதீர்கள்

திருடாமல் கையேந்துகிறார்களே
என்று பெருமைகொள்ளுங்கள்
இன்னும் சிலர் கையேந்தாமல்
வியாபாரம் செய்கிறார்கள் அவர்களை ஆதரியுங்கள்

கோடிஸ்வரர்கள் ஒரே இரவில் குஜராத்தில்
தெருவில் பிச்சைக்காரர்களானார்கள் பூகம்பத்தால்
காலம் கணக்கிட்டுகொண்டுள்ளது
கவனமாயிருங்கள்

பசித்தவனுகுத்தான் தெரியும் பசியின் கொடுமை
சூழ் நிலைக்காய் அல்லது சோதிப்பதற்க்காக
யாரிடமாவது கையேந்திப்பாருங்கள்
அப்போது தெரியும் அதன் கொடுமை

நான் என்ற அகந்தை அழிந்தவனால்மட்டுமே
கையேந்த முடியும்
நீ வணங்கும் சிவனும் புத்தனும்
பிச்சை எடுத்துதான் வாழ்ந்தவர்கள்
புத்தனின் சீடர்கள் இப்போதும்
பிச்சை எடுத்துதான் உன்கிறார்கள்

கோயில்களில் உண்டியளில் காணிக்கை
இடுவதைவிட நீங்கள் தேடும் கடவுள் உங்களைத்தேடி
கையேந்திவருகிறார்கள்
வசியாதியானவர்களே குளிர் சாதன வாகனங்களின்
வலம் வந்தது போதும் மாதத்தில் ஓர் நாள் மட்டுமாவது
புற நகர் இரயில்களில் பயணம் செய்துபாருங்கள்

யார் கண்டது உங்களிடம் கையேந்தி வருவது
சிவனாகவோ புத்தனாகவோகூட இருக்கலாம்

குறட்டை விடும்
தலைமைச்செயலகம்

மவுனத்தின் சாட்சியாக
மந்திரிமார்கள்
பதவி பயத்திலிருந்தவர்களுக்கு
தற்காலிக நிம்மதி
தலைவிக்கு தீர்ப்பு வரும் வரை
சந்தோசம் தினசரி

அரசு அலுவளகங்களில்
பாப்பையா இல்லாமல்
பட்டிமன்றம் வெட்டியாய் நடக்கிறது
பத்திரிக்கை வியாபாரம்
பரபரப்பாய் நடக்கிறது

அம்மையார் இருக்கும்வரை
அறிவிப்புகளாவது இருந்தது
உணவகங்களும் தண்ணீர் பாட்டில்களும்
ஓட்டுவாங்க போதும் என்ற
பொது கணக்கு

தீர்ப்புக்காக காத்திருக்கும்
அரசியல் கழுகுகள்
வழக்காடு மன்றங்களில்
வட்டமடிக்கின்றன
தீர்ப்புகளை திருத்தி எழுத

படித்தவர்களுக்கு வேலை இல்லை
விவசாயம் செய்ய ஆட்கள் இல்லை
வேலை செய்த பழைய மனிதரையெல்லாம்
குடிகாரனாக்கிவிட்டோம்
இளைய சமூகத்தின் முதுகெலும்பு
நிமிர மறுக்கிறது

பக்கத்து மாநிலத்தில்
மதுவிலக்கு அமலில் இருக்கிறது
தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்
அந்த சாராயத்தண்ணீர் ஆறாய் ஓடுகிறது
இந்த நதி நீர் பேச்சுவார்த்தையில்
அனைத்து அரசியல்வாதிகளும் உடன்பாடு

ஆண்மை குறைவும் குழந்தை இன்மையும்
அதிமாயிருப்பது நம் நாட்டில்தான்
குடி போதை விபத்துகளும்
மரணங்களும் தகப்பன் இல்லாத பிள்ளைகளும்
சமூக விரோதிகளும் கொண்ட
ஓர் எதிர்காலத்தை கட்டமைத்துக்கொண்டுள்ளனர்

ஓர் அரசியல் பெரியவர் ஆலோசனை சொல்கிறார்
குடியை தடைசெய்தால்
கல்லச்சாராயம் அதிகரிக்கும் அதனால் மரணங்கள்
அதிகரிக்கும் என்று
இந்த குடிகார நாய்கள் சாகட்டும்
அடுத்த தலைமுறையை காப்பாற்றுங்கள்

எழும்பு துண்டுகளுக்காக
வாலாட்டுவோர் இருக்கும்வரை
மதுக்குட்டைக்குள் மயங்கி கிடக்கும்
மரத்த தோல்கள் இருக்கும்வரை
நம்புங்கள் மந்திரிகளே
நீங்கள் படுத்துக்கொண்டே ஜெயிக்கலாம்
சிறையிலிருந்தும் ஜெயிக்கலாம்

சாமியே ...
சரணம் பொய்யப்பா ...
++++++++++++++++++++

ரம்பையின் வாரிசு மகிஷியை
வதம் செய்ய பெண்ணுரு கொண்ட விஷ்னு
சிவனை மயக்கி பெற்ற மகன்
ஹரிஹர சுதன்
அழகிய பெண்னென்றாள்
ஆண்டவனுக்கும் அறிவிழக்குமோ ?
இரு பிறைகளுக்கு
பிறந்த முழு நிலா

ஆணும், ஆணும் கூடி
சூதும் சூழ்ச்சியும் கைகோர்த்த
பெண் பித்தனுனுக்கு பிறந்தவன்
பெண்ணை வெறுத்தான்
மஞ்சள் மாதாவை
கன்னியாக்கி காடேறி விட்டவனை
காண வருகிறோம்
சாமியே ஐயப்பா

பாவமூட்டைச்சுமந்து வந்தோம்
சாமியே ஐய்யப்பா ...!
மறுபடியும் பாவம் செய்வோம்
சரணம் பொய்யப்பா ...

ஆண்டுக்காண்டு கூட்டம் பெருகுது
சாமியே ஐயப்பா.,.!!
நாட்டில் குற்றம் குறைகளும் குறையவேயில்லை
சரணம் பொய்யப்பா ...

விரதம் இருந்து மலையேறுகிறோம்
சாமியே ஐயப்பா ...!!!
இறங்கியதும் மதுக்கடை நிறையுது
சரணம் பொய்யப்பா ...

அன்னதானம் செய்து வந்தோம்
சாமியே ஐயப்பா ...!!!
நாட்டில் பசி பட்டினி தீரவில்லை
சரணம் பொய்யப்பா ...

தண்ணீர் பந்தல் திறந்து வைத்தோம்
சாமியே ஐயப்பா ...!
நதி நீர் பிரச்சனை தீரவே இல்லை
சரணம் பொய்யப்பா ...

ஜாதி மறந்து சரணம் சொன்னோம்
சாமியே ஐயப்பா ...!!
ஜாதி சண்டை உயிர்கள் தின்னுது
சரணம் பொய்யப்பா ...

தேவைகளை வேண்டி வந்தோம்
சாமியே ஐயப்பா ...!!!
தேவை தீர்ந்ததும் உனை மறந்தோம்
சரணம் பொய்யப்பா ...

ஆளும் வர்க்கம் எங்களுக்கு கும்பிடு போடுது
சாமியே ஐயப்பா ...!!!
இறங்கி வந்ததும் அடிமையானோம்
சரணம் பொய்யப்பா ...

தன்னையும் ஏமாற்றி, உன்னையும் ஏமாற்றி,
உலகையும் ஏமாற்ற
ஒரு கூட்டம் வருகுது சரணம் பொய்யப்பா ...
தன்னையுமறிய உன்னையுமறிய
நல்ல சில சாமிகள் வருகுது
சரணம் மெய்யப்பா ...

சுப்பு
++++
சென்னையின் முதல் நட்பு
தென் தமிழத்தில் பிறப்பெடுத்த
இந்த ஜீவ நதி டெல்லி வரை
பணி நிமர்த்தமாய் சென்றுவந்தாலும்
மாறாத மண்ணின் மனமும்
குன்றாத மனித குணமும் கொண்டது
என் முதல் இரு சக்கரவாகனம்
என் முதல் கணினி
என் முதல் வீடு
என் முதல் தொழில் எல்லாவற்றிலும்
சுப்புவுக்கு தொடர்புண்டு
25 பேருக்கு மாதிரி விளம்பரம்
செய்து தரவேண்டிய பொறுப்பு
எனக்கும் நண்பர் குலோ என்ற
குலோத்துங்கனுக்கும்
குலோ சட்டத்தை மீறமாட்டார்
அலுவலக நேரம் மாலை 6 தாண்டியும்
ஒரு நாளைய 20 என்ற எண்ணிக்கை மற்றும்
வரிசையை தாண்டியும் செய்துகொடுக்கமாட்டார்
வீட்ல அப்பா காவல் துறையா இருந்தாலும்
என்னால் விறைப்பாக இருக்க முடியாது
தெரியாது எனவே அவசர தேவைகளுக்கு
நண்பர்கள் என்னைத்தான் நாடுவார்கள்
என் எண்ணிக்கை 20யும் நேரத்தையும் தாண்டி
கணக்கில்லாமல் எல்லோருக்கும் செய்வது போல்தான்
சுப்புவுக்கும் செய்து கொடுத்தேன்
அந்த ஆண்டின் இந்திய அளவில்
சுப்பு முதலிடம் வந்தார் ஒரு பெரும் தொகை
பரிசாக கிடைத்தது அதில்
ஒரு புதிய இரு சக்கரவாகனம் வாங்கினார்
டெல்லியில் வாங்கிய அந்த ஸ்கூட்டரின் சாவியை
என்னிடம் கொடுத்து உன்னால் தான்
இந்த வெற்றியை அடையமுடிந்தது என
எனக்கு முதல்வாகனத்தை கொடுத்தது சுப்பு
உண்மையில் அது என்னால் அல்ல
நான் எல்லோறுக்கும் செய்வதுபோல்தான் செய்தேன்
இந்த வெற்றி அவரது உழைப்பு
யாரிடமும் வர்த்தகமுறையில்
பேசாமல் ஒரு குடும்ப உருப்பினர் போல்
இயல்பாக நலம் விசாரிப்பதோடு தொடங்கி
போன வேலையை முடித்து திரும்பும் திறன் உண்டு
தேனிக்களை சேதப்படுத்தாமல் நலம் விசாரித்துக்கொண்டே
தேன் எடுக்கத்தெரிந்தவன் தான்
நல்ல விற்பனையாளன் அந்த திறன் தான் சுப்புவுக்கு
இன்று தி ஹிண்டுவில் பொது மேலாளர்
பதவியை பெற்றுத்தந்துள்ளது
20 ஆண்டுகளுக்கு முன் கணினி ஒரு கனவு
வாங்க நினைத்து முயன்றேன் முடியவில்லை
சுப்புவுக்கும் தகவல் சொன்னேன்
விபரங்களை கேட்டுகொண்டு நான் கலந்தாய்வில் உள்ளேன்
மாலை அலுவலகம் வரச்சொன்னார்
கேள்வியே கேட்காமல் கணினி வாங்க
காசோலை தந்த உள்ளம்
வீடுவங்க முடிவெடுத்தவுடன்
சுப்புவிடம்தான் சொன்னேன்
எவ்வளவு பணம் வேண்டும் என்றார் எனக்கு
பணம் வேண்டாம் என் வீட்டின் முதல் பணமாக
உங்கள் பணம் ரூ.1 வது இருக்கவேண்டும் என்றேன்
உடனே அனுப்பிவைத்த அன்பு உள்ளம்
தொழில் தொடங்க சுழிபோட்டதும் சுப்புதான்
பொய்யும் புரட்டுமே வியாபார மொழியாகிபோனதில்
சத்தியங்கள் ஊமையாகிவிட்டன
அதில் என் வெற்றியும் தள்ளிப்போய்கொண்டுள்ளது
காரணமும் கதையும் சொல்ல விருப்பமில்லை சுப்பு
வெற்றியை மட்டும் விரைவில் சொல்கிறேன்
எல்லா புகழும் சுப்புவிற்கே

பொங்கலை போற்றுவோம் 
பூமியை காப்பாற்றுவோம்
++++++++++++++++++++++
ஆழ்துளை தோண்டி
மீத்தேன் தேடும் மனிதா உன்னால்
அடுப்பை எரிக்கும் நெருப்பைத்தோண்ட முடியும்
அரிசிகொடுக்க முடியுமா ?
பசியில் வயிறு எரிகிறதே
தீயை தின்பாயா ? இல்லை

நாளைய பசிக்காக சேமித்த
நாணயங்கள் தின்பாயா ?
அடுத்த தலைமுறைக்காய் டெல்டாவை அழித்து
பாலைவனமாய் பரிசளிப்பாயா ?

கானலில் மீன் பிடித்து
கனவுகளில் சமையல் செய்து
நினைவுகளில் பசியாற்றிக்கொள்வாயா ?
நாளைய தமிழகமே

எங்களின் தாக நாக்குகள் நீர் தேடி கர்னாடகாவுடனும்
கேரளாவுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறது இருக்கும்
அரசியல்வாதிகள் இறக்கும் வரை தாகம் தீராது
நம்புங்கள் தமிழர்களே

எவனுடைய கஜானாவையோ நிரப்ப
எங்களின் எதிகாலங்கள் களவாடப்படுகிறது
மாடுகள்மேய்த்தது போதுமென
ஒட்டகம் மேய்க்க ஒத்திகை நடக்கிறது

நீரையும் நெல்லையும் வேற்று கிரகத்திலிருந்து
இறக்குமதி செய்வார்கள் உழவர்களே
டெல்டாவை தீயிட்டு
தீபாவளி கொண்டாடுவார்கள் தமிழர்களே

வெட்கமே இல்லாமல்
வேட்டுவைத்து களித்திருப்போம்
நம் வீட்டு கூரைக்கு
நாமே தீ வைப்போம்

பூமி, கதிரவன், உழவுக்கு உதவிய கால்நடைகளுக்கு
நன்றி தெரிவிக்கும் நன்னாள்
உலகத்தில் நன்றி சொல்ல நாள் குறித்து
கொண்டாடியது நாம்மட்டும்தான் தமிழர்களே

வயிற்றை விற்க
வியாபாரம் நடக்கிறது தமிழா
நீயோ மதுக்கடைகளில் மயங்கி கிடக்கின்றாய்
இலவசங்களுக்கு ஏங்கி தவிக்கின்றாய்

சர்க்கரைப் பொங்கலும் கரும்பும்
படைத்து தமிழர்கள் வழிபட்டனர்
என்பதாய் ஆவனப்படம் எடுப்பார்கள்
வரலாறாய் மாற்றிவிடாதீர் பொங்கல் விழாவை

இந்திர விழாவாக பொங்கல் விழாவை
28 நாட்கள் காவிரி பூம்பட்டினத்தில்
கொண்டாடி மகிழ்ந்த தமிழா
நாட்கள் சுருங்கி நான்காகிப்போனதே

முதல் நாள் பண்டிகைதான் மார்கழியின் கடைசி நாள் அன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம். அக்காலதில் போகியன்று பல கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. அந்நாள்தான் புத்தர் இறந்த நாள்.

இரண்டாம் நாள் தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

மூன்றாம் நாள்மாட்டுப் பொங்கலன்று உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாள்.

காணும் பொங்கல் இந்நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். இது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காம் நாள் இடம்பெறும்.

பொங்கலை ஒத்த பிற விழாக்கள் வட மாநிலங்களில் இது மகர சங்கராந்தி எனவும் சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது.

2006-2011 வரையிருந்த திமுக தமிழக அரசு சனவரி 29, 2008 அன்று தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என அறிவித்தது.

ஆகத்து 23, 2011ல் அதிமுக தமிழக அரசு மீண்டும் சித்திரை ஒன்றை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்தது.
நடக்கட்டும் மாற்றங்கள்

பொங்கலை போற்றுவோம்
பூமியை காப்பாற்றுவோம்

கயல் விமர்சனம்
உலகின் விலைமதிப்பில்லா பொருளாக
தண்ணீர் மாறப்போகிறது
2025 ல் ஒரு லிட்டர் தண்ணீரின்
விலை தெரியுமா 
1000 ரூபாயென ஐனா அறிவித்திருகிறது

கயல் என்பது மீன்
நீரின் அழுக்கை தான் உண்டு நீரை சுத்தமாக்குவது மீன்கள்தான்
திமிங்கிலச்சுறா மீன் சுமார் 14 மெட்ரிக் டன் எடை கொண்டிருக்கும் (அதாவது இரண்டு யானையின் எடை இருக்கும்).
தான் வாழும் சூழ்நிலையின் வெப்பத்தைப் பொறுத்து தன்னை மாற்றிக்கொள்ளும். தனக்கென தனி வெப்பநிலை கொண்டிரா. எனவே மீன்களை சூழ் வெப்ப நிலை விலங்கு என்று சொல்வர்
சுமார் 22,000 வகை மீன் இனங்கள் உலகில் உள்ளன.

சினிமாகாரர்கள் பிச்சை வாங்கவேண்டும் கதைகளை மதங்களிலிருந்து
பைபில் அதிகாரம் 01 ல்
முதல் நாள் பூமியையும் 2 ஆம் நாள் நீரையும் 4 ஆம் நாள் மீனையும் கடவுள் படைத்ததாக கூறப்படுகிறது

இந்துக்களில் எதையும் விட்டுவைக்கவில்லை மீனும் கடவுள்தான் ஆனால் வறுத்து சாப்பிடுவோம்.

படைக்கும் தொழிலைச் செய்பவர் பிரம்மன். பிரம்மன் உறங்கும் காலமே உலகத்தின் பிரளய காலமாகும்.
மீண்டும் அவர் விழிக்கும்போது புது உலகம் சிருஷ்டிக்கப்படும்.
அவர் ஒரு சமயம் உறங்கிக்கொண்டிருக்கும்போது, அவர் வாயிலிருந்து வேதங்கள் கீழே விழுந்து விட்டன.

அதை ஹயக்கிரீவன் என்ற அசுரன் வேதங்களைக் கடலுக்குள் கொண்டுபோய்த் தன் வாயில் மறைத்து வைத்திருப்பதை அறிந்த மச்சமூர்த்தி, மச்சாவதாரம் ஹயக்கிரீவனோடு போரிட்டு அவனைக் கொன்று, வேதங்களை மீட்டு வந்து பிரம்மனிடம் கொடுத்தார்.

பிரம்மன் தூங்குவாரா ஒரு அசுரன் தன்னோட மனித உருவில் நீருக்குள் உயிவாழும்போது கடவுளால் அவதாரம்தான் எடுக்க முடிகிறது

பிரபு சாலமனின் கயலுக்கு வருவோம்
தத்துவ சிந்தனை கொண்ட இரண்டு இளைஞர்களின்அந்தந்தத் தருணங்களை ரசித்து வாழும் அனுபவமாகத் தொடங்குகிறது'
சொத்துச் சேர்ப்பதை விட்டுவிட்டு நல்லநினைவுகளைச் சேமிக்கவேண்டும் என்பது.

பலருக்கு இது பாடம் சாகும் வரை பணத்திற்காக வாழ்ந்துவிட்டு வாழ்வை அனுபவிக்காமலேயே இறந்துவிடுவார்கள்
இந்த அனுபவங்களினூடே ஊடுருவும் காதலும் அதன் தாக்கங்களும்தான் கயல். காதலும் அலைதலும் தொடங்கிய பிறகு படம் ஒரே வட்டத்தில் சுழல ஆரம்பிக்கிறது சுனாமியாக,

சாதிக் கட்டுமானத்தையும் அதன் தீவிரத்தையும் நுட்பமாகச் சொல்லும் இயக்குநர் பொருளாதாரம் சாதிக் கட்டுமானத்தை ஏற்றத்தாழ்வுகளையும் உடைத்துவிடும் என்பதே கயலில் மையக்கதை

இயற்கையின் அற்புதங்களை சாலமன் காட்சிப்படுத்தும் விதம் பாராட்ட வேண்டிய அம்சம். படம் கண்களுக்கு விருந்து. வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவு அற்புதம். குறிப்பாக ‘பறவையா பறக்குறோம்’ பாடல் படமாக்கப்பட்ட விதம் அழகு.

இமான் இசை ‘மைனா’, ‘கும்கி’ போல மனதில் தொடர்ந்து ரீங்கரிக்கும் பாடல் எதுவும் இல்லை. பின்னணி இசை படத்துக்கு வலுவூட்டுகிறது.

புதுமுகங்கள் நுட்பமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்.

நாயகியின் முதலாளிகளாக நடித்திருக்கும் பெரைரா, தேவராஜ்,
சின்னஜமீன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் பெரியவர்
(இவர் அடிக்கும் கூத்து திரையரங்கு முழுக்க சிரிப்பலைகளை ஏற்படுத்துகிறது)

முந்தைய இரண்டு படங்களைப் போல் இல்லாமல் இதில் சுபமான முடிவு அமையவேண்டும். என்பதில் இயக்குனர் உறுதியாக இருந்திருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது .

‘கயல்’- தொடர்ந்து வெற்றிகளை பெற்றுவரும் இயக்குனர் பிரபு சாலமனுக்கு ஹாட்ரிக்!

உழைப்பைப்போற்றுவோம்
++++++++++++++++++++++++
பஜனைப் பாடல்களும்
மார்கழி குளிரும்
வரவேற்கும் வாசலின் வண்ணக்கோலமும்
கதைகளில் மட்டுமே
சென்னை நகரில் மார்கழி
இழுத்துப் போர்த்தி உறங்கிக்கொண்டுள்ளது
மார்கழி குளிர்
மிதமான மழை
என் ஜன்னலைத்தவிர
பேரூந்தின் அனைத்து ஜன்னல்களும்
இருக மூடிவிட்டார்கள்
என் அருகில் பயணிப்பவர் நான் ஏறுவதற்கு முன்னே
ஏறியமர்ந்து உறக்கத்திலிருந்தார்
சென்னை காரைக்குடி கம்பன் தொடர்வண்டி
மீட்டர் கேஜ் 3 ft 3 3⁄8 in இரயில் பாதை
அகலப்பாதையாக 5 ft 6 in மாற்றத்தொடங்கி
15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது
இந்த வழிதடங்கள் எல்லாம் இப்போது
பேரூந்து பயணம் மட்டுமே
பல தனியார் பேரூந்துகள்
கொள்ளை இலாபம் அடைகிறார்கள்
முத்துபேட்டையில் 10 பேரோடு கிளம்பிய
பேரூந்து திருவாரூரில் நிறைந்துவிட்டது
மழைச்சாரளும் மார்கழி பனியும்
மூஞ்சில் அடித்தது
ஜன்னல் ஓரத்தில் இருந்தவர் விழித்திருந்தார்
உங்களுக்கு குளூரவில்லையா என்றேன்
அவர் பதில்சொல்லவில்லை
சரி என்று ஜன்னலை மூடினேன்
சண்டைக்கு வந்துவிட்டார்
அப்போதுதான் தெரிந்தது அவர்
நிறைய குடித்திருந்தார்
நான் ரூ.450 கொடுத்து பயணப்படுகிறேன்
உங்களுக்கு வேண்டுமெனில்
காரில் போகவேண்டியதுதானே என்றார்
என் பின் சீட்டில் இருந்தவர்
குளிரால் பாதிக்கப்பட்டவர் மிகவும்
கோபமுற்று அவருடன் ஓரே சண்டை
கடைசியில் குடிமகன் பெரிய மனதுசெய்து
கொஞ்சம் மட்டுமே மூடினார்
பயணத்தின் போதே குளிர்பாணம்போல் கொண்டுவந்து குடிப்பது
குடித்துவிட்டே ஏறுவது
பற்றாக்குறைக்கு குறட்டைவேறு
கெட்ட நாற்றம்
பாவம் இவர்களோடு குடும்பம் நடத்தும்
குத்துவிளக்குகள்
இந்த மார்கழி பனியாலும் மழையாலும்
முகவாத நோய் (Bell's palsy) தாக்க வாய்ப்பு உண்டு.
உட்புறக் காது வழியாக மூளைக்குச் செல்லும் ஏழாவது நரம்பு,
பனிக் காற்றால் தாக்கப்படும்போது, முகவாதம் ஏற்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகுபவர்கள் முகம் கோணலாகி, உதடுகள் கோணி,
நாக்கு உணர்விழந்து, கண் இமை மூட மறுத்து, உமிழ் நீர் முழுங்க முடியாமல் போகும்.
பாவம் இதெல்லாம் அவருக்கு நான்விடும் சாபமல்ல இது
நடக்கக்கூடாது ஆனால் உள்ளே இருக்கும் நெப்போலியன்
மறுபடியும் ஜன்னலை முழுதாக திறந்துவிட்டான்
நான் நடத்துனரிடம் சொல்லி
ஓட்டுனருக்கு பின் அமர்ந்தேன்
அற்புதம் அன்றிறவு உறக்கமில்லை
நானே ஓட்டுனராக உனர்ந்தேன்
அனைவரும் அமைதியாய் உறங்க
ஒரு ஜீவன் மட்டும் விழிப்போடு இருப்பதும்
தூக்கதை தவிர்க்க பாடல் கேட்பது
பாக்கு போடுவது ஊர் மற்றும் உலகக்கதை
பேசுவதும் அவர்களின் வாழ்வும் கடினம்தான்
புத்தாண்டில் 200 கோடிக்கு மது விற்பனை
சென்னையில் மட்டும் 85 விபத்துக்கள்
65 சண்டைகள்
3 இறப்பு இவை யாவும் ஒரு நாள்
சென்னை குடிகாரர்களின் கூத்து
200 கோடி ஒரு நாள் விற்பனை
செய்யும் அரசு போக்குவரத்து
தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க
மறுக்கிறது சொகுசு பேரூந்து ஓட்டுபருக்கே
இவ்வளவு சிரமம்
ஓட்டை அரசாங்க பேரூந்துகளை ஓட்டுபவர்களின்
நிலை படு மோசம்
பயணிகளின் உயிரைக்காக்க தன்
உயிரைப்பனயம் வைக்கும் உயர்ந்தவர்களின்
உழைப்பைப்போற்றுவோம்

தீயாய் விழுந்து திரியில் சாகலாம் வா


தீயாய் விழுந்து
திரியில் சாகலாம் வா
******************************
சருகாய் விரகாய்
காட்டுத்தீயாய் கரைவதில் இலாபமென்ன
தனக்காய் வாழ்ந்த பிணம்
எத்தனை எரிகிறது ஊருக்கு தெரிகிறதா?
ஊருக்காய் வாழ்ந்தவர்கள்
இறந்தும் வாழ்வது உனக்கு புரிகிறதா

எழுந்திரு இளைஞனே
இருள் ஓடும் உன் விழி கண்டு
திசை மாறும் காற்று
உன் வழி கண்டு
பயிர் தேடும் நதியாய்
உயிர் தேடும் காற்றாய்
திசைமாறு

நான்கு திசைகளும் சூரியனாய்!
காற்றின் கயிற்றைக் கையில் பிடிப்பாய்
நம்பிக்கை என்பது உன்வசமே!
அனுபவச் சிப்பி ஆசையில் திறந்திடும்
ஆயிரம் முத்துக்கள் உன்னிடமே!

போன பொழுதுகள் போகட்டும்
இருக்கும் பொழுதை இனிதாக்கிடு
சாதித்தவர்கள் இன்னும் சாகவில்லை !
உண்டு உறங்கி சாவதா வாழ்க்கை !
கண்டு இறங்கி ஊருக்காய் வாழ்ந்திடு !

பாயில் கிடந்து
நோயில் வாழ்வதைவிட
தீயாய் விழுந்து
திரியில் சாகலாம் வா

சரவணன்
++++++++
உதடுகளில் மாறாத புன்னகையும்
உள்ளத்தில் உறுதியுடன்
யாரையும் எதிர்க்கும் குணம்
நிர்வாகத்தில் நேர்மை
அமைச்சரிடம் பணிபுரிந்த அனுபவத்தால்
மேலிட தொடர்புகள் அதிகம்
அதைவிட கண்ணுக்குத்தெரியாத
விரோதிகள் அதிகம்

வயதில் என்னைவிட சிறியவர் என்றாலும்
தோற்றத்தில் அப்படியில்லை
ஒரு முறை காஞ்சி ஆட்சியர் அலுவலகம்
சென்றிருந்தோம் நிறையபேர்
வரிசையில் நின்றிருந்தனர் இவர் தோற்றத்தைக்கண்டு
எல்லோரும் வழிகொடுத்தனர்
அமர்ந்திருந்தவர் எழுந்து நின்றார்
சரவணன் தன் முகவரி அட்டையை கொடுத்தபின்
யாரோ பெரியாளுன்னு நினைத்த ஏமாற்றம்
அவர் வடிவிலும் வார்த்தையிலும் தெரிந்தது
சிலபேர் அவரை சபாரி சரவணன் என்பார்கள்
எப்போதும் மிடுக்குடன் காணப்படுவார்
அவர் முதல் வீடு வாங்கும்போது
என்னையும் நண்பர் பாலாவையும்
வற்புருத்தினார் வீடு வாங்க

கையில் சேமிப்பு இல்லாமல்
கடன் வாங்கி வீடுவாங்குவதில்
எனக்கு விருப்பமில்லை என்றேன்
சரவணனோ வரலாறு படித்தவர் என்பதால்
உலகத்தை உதாரணம் காட்டினார்
எவன் கையில காசவச்சிகிட்டு வீடுவாங்குறான்
உங்களில் தொழில் தகுதிக்கு வங்கி கடன் தருகிறது
பயன்படுத்திக்கொள்லலாம் என்றார்

கடன் வாங்கினால்
கண்ட கண்ட நாய்கிட்டயெல்லாம் போய் நிற்கணும்
கண்ட இடத்திலயும் கையெழுத்து போடனும்
நேரத்தில் கட்டமறந்தால்
கடன் கேட்டு வீட்டுக்கு வருவார்கள்
இதெல்லாம் நமக்கு சரிபட்டுவராது
என மறுத்துவிட்டேன்
5 ஆண்டில் பணம் சேர்த்து
சொந்த பணத்தில் வீடு வாங்குவோம்
என நானும் பாலாவும் சபதம் செய்தோம்

குயிலாய் வாழ்வோர்க்கு கூடேது
நாடேது சேமிக்கும் பழக்கம்
சிந்தையில் கிடையாது
4 ஆண்டு கழித்து சரவணன்
2 வது வீடு வாங்க ஆயத்தமானார்
எனக்கும் சேர்த்து எல் ஐ சி இல்
நண்பர் ஜான் மூலம்
முன் ஒதிக்கீடு கடிதம் பெற்றுத்தந்தார்

வேறுவழியில்லாமல் நான் கடனாளியாக
சம்மதித்தேன் நண்பர் பாலா மட்டும்
இன்னும் கொண்ட சபதத்தோடு குயிலாய் வாழ்கிறார்
நான் கடனாளியாக முதல் காரணம் நண்பர் சரவணன்தான்
இந்தமுறை என்னால் தட்டிக்கழிக்க
வார்த்தைகளின்றி செனனையில்
கடைசிவரை வாடகை வீட்டில் இருப்பதைவிட
சொந்தவீட்டில் மாதவாடகையை
வீட்டுக்கடனாக கட்டிவிடாம் என என் மனதை
மாற்றி வீடு வாங்கும் துணிவை தந்தவர்

தற்போது பச்சையப்பன் கல்லூரியில்
துணை பேராசிரியராய் பணியிலிருக்கிறார்
வரலாற்றுத்துறையில்
விரைவில் ஓர் ரமணாவை பச்சையப்பன் கல்லூரியில்
எதிர்பார்க்கலாம் மாணவர்களை
தயார் செய்து கொண்டுள்ளார்
நல்லது நடக்க வாழ்த்துக்கள்