Monday, February 17, 2014


ஏ செதுக்கத் தெரியாத சிற்பியேயே
+++++++++++++++++++++++++

எதற்காக ஓடுகிறீர்கள்
மனம் தொலைத்தவர்களே
பள்ளி மாணவர்கள் கூடிச்சிரிக்கிறார்கள்
அறம் சொல்ல மறந்த பள்ளிகள்

காவலர் மூவர் கையூட்டை
கணக்கிட்டுக்கொண்டுள்ளனர்
கடமை மறந்த நிற்வாகம்

ஆணும் பெண்ணுமாய் 50 பேர் இருப்பார்கள்
கண்ணியம் தப்பிய சமூகம்

எவறுக்குமே அந்த கணக்குத்தப்பிய
கண்தெரியாதவரின் குரல் கேட்கவில்லை
சாலை விளக்குகள் தனக்கு சாதகமானதும்
பாய்ந்து ஓடுகிறார்கள் - பாவிகளே
பறந்து செல்பவன் பள்ளத்திலிருப்பவனை
பார்க்கவேண்டாம்
பக்கத்திலிருப்பவனாவது கைத்தூக்கிவிடலாமே

அந்த கண்திறக்கப்படாத
கடவுளிடம் சென்றேன்
யாராவது என்னை சாலையை கடந்து செல்ல
உதவுமாறு கத்திக்கொண்டிருந்தார்
இந்த செவிட்டுலகிற்கு கேட்கவில்லை

கைபிடித்து சாலையைக்கடந்தோம்
மலைக்கு மாலையிட்ட சாமியொன்று
எங்களை மோதிவிட்டு சரணம் சொன்னது
கண்தெரியாதவர் கேட்டார்
ஒங்களுக்கு ஒன்னுமாகலையே !

ஏ செதுக்கத் தெரியாத சிற்பியே
உன் படைப்பை நிறுத்து
நிறையை படைக்கத்தெரியாதவரை நீ
இறையில்லை குறையே

No comments:

Post a Comment