Monday, February 17, 2014


ஏன் என்னைக் கைவிட்டீர்
++++++++++++++++++++++
துயரத்தை தூய்மையாக்கியவனே உன்
இறப்பிற்கு பின்தான்
சிலுவையே புனிதமானது
மரங்கலெள்ளாம் சிலுவையாக
மறுபிறப்பெடுக்க
தவம் கிடக்கிறது
யுதனாய் பிறந்து
கிறிஸ்துவனாய் இறந்தாய்
கிமு வை கிபி ஆக்கிய
காலத்தின் கைகாட்டி
30 வயதில் ஞானம் பெற்றாய்
30 வெள்ளிக் காசுகளுக்கு
யூதாசால் காட்டிக் கொடுக்கப்பட்டாய்
3 மணி நேரம் சிலுவையில்
உயிரோடு தொங்கினாய்
3 நாள்கள் கழித்து சாவை வென்று
உயிர்பெற்றெழுந்தாய்

நீ பட்ட துயரைவிட
கன்னிப்பெண் கற்பமடைந்ததால்
பெத்லகேமே மரியாளை
படுத்திய பாட்டை
பாட மொழியில்லை
ஏசு இறை தூதராகும்வரை
ஏளனப்பட்டாள்

வருடா வருடம் பிறக்கின்றாய்
கொண்டாட்டங்களுக்கு
குறைவில்லை அன்று
ஒரே ஓர் சவுல் பவுலானான்
இன்றோ எங்கெங்கும்
சவுலின் சகோதரர்கள்

ஏசு இறக்கும்போது
கடைசியாய் சொன்னது
என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?
உங்களை மட்டுமல்ல
ஏசுவே...

No comments:

Post a Comment