நிகழ்காலங்கள்
மதிக்கப்படுவதில்லை
===============
புத்தன், நபி, ஏசுவையும்
ஏளனம் செய்த
நிகழ்காலம்
இறந்த பிறகு இறைவனாக்கியது
இங்கு நிகழ்காலங்கள்
மதிக்கப்படுவதில்லை
இறந்தவன் கயவனானாலும்
மாலை மரியாதை செய்யும்
இறந்த காலம்
இதோ ஓர் நிகழ்காலம்
என் நெஞ்சில் நிறைந்தது
பணம் மட்டுமே தேடும்
பைத்தியங்கள் மத்தியில்
குணம் நாடும் குணசீலன்
கயவர்களாய் கண்ணுக்கு
தெரிந்த சென்னையைவிட்டு
நல்லவர்களைத்தேடி
கிராமத்துக்கே என் மனம்
பயணப்பட்டுக்கொண்டிருந்தது
25 ஆண்டுகால சென்னை தொடர்புகளை
துண்டிக்கமுடியாமல் சூழல் தடுத்தது
நம் தேடுதலை காலமே
கண்டுபிடித்து தரும் என்பார்கள்
2013 இன் முடிவில்
காலம் எனக்கு காட்டித்தந்தது இந்த
காலனை வென்றவனை

No comments:
Post a Comment