Monday, February 17, 2014


போதிமரம் உனக்காய்
தவமிருக்கிறது

சிலைகளுக்குள்ளே சிக்குண்டது போதும்
தற்பெருமைக்காய் கதை சொல்லி
மக்களின் கற்பனை தின்ற கயவர்கள்
அடுத்தவனுக்காய் சிந்திப்பது
அன்பின் வெளிப்பாடு
அடுத்தவனை சிந்திக்கவிடாது
செய்வது அயோக்கியத்தனம்
சுய நலத்திற்காய் கடவுளை படைத்து
ஆன்மீகத்தை அழித்த
பெரும்பங்கு கலைஞர்களுடையது

போதிமரம் தவமிருக்கிறது

படிக்கல்லாய் இருந்தாலாவது
பலர் முன்னேர படியாயிருந்திருப்பேன்
சிலையாய் வடித்து
சிறைக்குள் விட்டனரே
மூடர் கூட்டத்தின்
முதல்வனாக்கிவிட்டனர்
பாவமூட்டைகளை என்னோடு
பங்குபோடுகிறார்கள்
பிரார்த்தனைகளில் எல்லாம்
சுய நலமும், அண்டையர் அழிவும்தான்
நிறைந்திருக்கும்

எனக்கு சர்வ வள்ளமை இருந்திருந்தால்
உளி கொண்டு வலி கொடுத்தவனை
பலி கொண்டிருப்பேன்
பட்டினிப்பாயில் தேசம்
படுத்துறங்கும் போது
பாலும், பழமும்,
பன்னீரும் பனிவிடை எனக்கு குறைவில்லை

போதிமரம் தவமிருக்கிறது

கடவுள் யாரென்றால்
சிந்தனையின் தெளிவில் பதில் வரும்
எங்கும் நிறைந்தவனென்று
வணங்குவதற்கு மட்டும்
செயல் குழப்பத்தால் சிலை தேடுகிறோம்

நீயே கடவுள் நீயே புத்தன்
இல்லறத்துறவுக்கு தூய உள்ளம் போதும்
துறவி தூயவனாய்
இருப்பது எளிது
சம்சாரி தூயவனாய்
இருப்பதுதான் கடிது

போதிமரம் தவமிருக்கிறது

அடையாளங்களை அழித்துவிடு
சிலுவையும் திரு நீரும்
பிறையும் சிலைகளும்
உன்னை சிறைபடுத்தும்
சீனத்துச் சுவர்கள்

சூரியனோடு சுற்றுபவனுக்கு
இரவுவேதும் கிடையாது
தூயதாய் உள்ளமிருந்தால்
குறையேதும் இருக்காது

தரிசனம்வரை தவமிருப்பவன்
தவம்முடிந்ததும் தரிகெட்டு திரிவான்
சந்தனம் பூசி மலையேரி இறங்கியவுடன்
சாக்கடையில் வீழ்ந்துவிடும் இந்த
சந்தனப்பன்றிகள்

போதிமரம் தவமிருக்கிறது

இங்கு எல்லாம் வேசம்
எதுவும் வியாபாரம்
வேசதாரிகள் விலைபோகட்டும்
நிறைய சித்தார்தர்கள்
வரிசையிலிருக்கிறார்கள்
போதிமரம் தவமிருக்கிறது


நிகழ்காலங்கள்
மதிக்கப்படுவதில்லை
===============

புத்தன், நபி, ஏசுவையும்
ஏளனம் செய்த
நிகழ்காலம்
இறந்த பிறகு இறைவனாக்கியது
இங்கு நிகழ்காலங்கள்
மதிக்கப்படுவதில்லை

இறந்தவன் கயவனானாலும்
மாலை மரியாதை செய்யும்
இறந்த காலம்

இதோ ஓர் நிகழ்காலம்
என் நெஞ்சில் நிறைந்தது

பணம் மட்டுமே தேடும்
பைத்தியங்கள் மத்தியில்
குணம் நாடும் குணசீலன்

கயவர்களாய் கண்ணுக்கு
தெரிந்த சென்னையைவிட்டு

நல்லவர்களைத்தேடி
கிராமத்துக்கே என் மனம்
பயணப்பட்டுக்கொண்டிருந்தது

25 ஆண்டுகால சென்னை தொடர்புகளை
துண்டிக்கமுடியாமல் சூழல் தடுத்தது

நம் தேடுதலை காலமே
கண்டுபிடித்து தரும் என்பார்கள்
2013 இன் முடிவில்
காலம் எனக்கு காட்டித்தந்தது இந்த
காலனை வென்றவனை


ஏ செதுக்கத் தெரியாத சிற்பியேயே
+++++++++++++++++++++++++

எதற்காக ஓடுகிறீர்கள்
மனம் தொலைத்தவர்களே
பள்ளி மாணவர்கள் கூடிச்சிரிக்கிறார்கள்
அறம் சொல்ல மறந்த பள்ளிகள்

காவலர் மூவர் கையூட்டை
கணக்கிட்டுக்கொண்டுள்ளனர்
கடமை மறந்த நிற்வாகம்

ஆணும் பெண்ணுமாய் 50 பேர் இருப்பார்கள்
கண்ணியம் தப்பிய சமூகம்

எவறுக்குமே அந்த கணக்குத்தப்பிய
கண்தெரியாதவரின் குரல் கேட்கவில்லை
சாலை விளக்குகள் தனக்கு சாதகமானதும்
பாய்ந்து ஓடுகிறார்கள் - பாவிகளே
பறந்து செல்பவன் பள்ளத்திலிருப்பவனை
பார்க்கவேண்டாம்
பக்கத்திலிருப்பவனாவது கைத்தூக்கிவிடலாமே

அந்த கண்திறக்கப்படாத
கடவுளிடம் சென்றேன்
யாராவது என்னை சாலையை கடந்து செல்ல
உதவுமாறு கத்திக்கொண்டிருந்தார்
இந்த செவிட்டுலகிற்கு கேட்கவில்லை

கைபிடித்து சாலையைக்கடந்தோம்
மலைக்கு மாலையிட்ட சாமியொன்று
எங்களை மோதிவிட்டு சரணம் சொன்னது
கண்தெரியாதவர் கேட்டார்
ஒங்களுக்கு ஒன்னுமாகலையே !

ஏ செதுக்கத் தெரியாத சிற்பியே
உன் படைப்பை நிறுத்து
நிறையை படைக்கத்தெரியாதவரை நீ
இறையில்லை குறையே


நக்கிப்பிழைப்பவர்கள்
நாசமாய் போகட்டும்
+++++++++++++++
இலங்கை
தீரமிகு மீனவரின் திருக்கை
ஏற்றிடுமோ உன் விலங்கை
காந்தி நாட்டிலிருந்து
வெள்ளை வலைகளோடு வருகிறோம்
எங்கள் உயிரையும் தருகிறோம்
இந்த மானம்கெட்டவர்களின்
மனத்தோல் மரத்துவிட்டதா
மாற்றம் வரட்டும்
வலையேந்தும் கரங்களுக்கு
சுதந்திரம் வரட்டும்
துப்பாக்கிகளோடு செல்கிறோம்
வலைவிரிக்க
எல்லையில் வாலாட்டும் எலிகளை
இறையாக்கும் எம் கைகள்
இந்திய சிறைகளில்
இலங்கையை நிரப்புவோம்
மீனுக்கு வலைவிரித்த எம் கைகள்
எதிரி தலைகளுக்கு விலை வைப்போம்
எந்திரம் எடு எதிரியை சுடு
தேர்தல் வருகிறது நல்விதை நடு
முதுகெலும்பில்லாதவர்களும்
முடிவெடுக்கமுடியாதவர்களையும்
முளைக்க விடாதே
நக்கிப்பிழைப்பவர்கள்
நாசமாய் போகட்டும்


ஏன் என்னைக் கைவிட்டீர்
++++++++++++++++++++++
துயரத்தை தூய்மையாக்கியவனே உன்
இறப்பிற்கு பின்தான்
சிலுவையே புனிதமானது
மரங்கலெள்ளாம் சிலுவையாக
மறுபிறப்பெடுக்க
தவம் கிடக்கிறது
யுதனாய் பிறந்து
கிறிஸ்துவனாய் இறந்தாய்
கிமு வை கிபி ஆக்கிய
காலத்தின் கைகாட்டி
30 வயதில் ஞானம் பெற்றாய்
30 வெள்ளிக் காசுகளுக்கு
யூதாசால் காட்டிக் கொடுக்கப்பட்டாய்
3 மணி நேரம் சிலுவையில்
உயிரோடு தொங்கினாய்
3 நாள்கள் கழித்து சாவை வென்று
உயிர்பெற்றெழுந்தாய்

நீ பட்ட துயரைவிட
கன்னிப்பெண் கற்பமடைந்ததால்
பெத்லகேமே மரியாளை
படுத்திய பாட்டை
பாட மொழியில்லை
ஏசு இறை தூதராகும்வரை
ஏளனப்பட்டாள்

வருடா வருடம் பிறக்கின்றாய்
கொண்டாட்டங்களுக்கு
குறைவில்லை அன்று
ஒரே ஓர் சவுல் பவுலானான்
இன்றோ எங்கெங்கும்
சவுலின் சகோதரர்கள்

ஏசு இறக்கும்போது
கடைசியாய் சொன்னது
என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?
உங்களை மட்டுமல்ல
ஏசுவே...


எத்தனை இலட்சம்
இதயங்களுக்கு மருத்துவம்
பார்த்தவனின் இதயம் இன்று
மருத்துவமனையில்

வேற்றிசை தேடாது எங்கள்
காதுகளை கண்கானித்த
இதயம் இன்று
தீவிர கண்கானிப்பு பிரிவில்

இசையை விதைத்த
விருட்சத்தின் இதயம்
இசய மறுப்பதா


அர்த்தமற்ற
இந்த மதங்கள் ...
++++++++++++++++

விதைகள் விஷமானதால்
நஞ்சாய் விளைந்த நாட்டு மரங்கள்
விழுதுகளே விலங்காய்
தலைமுறைகள் பழுதாய்
அர்த்தமற்ற
இந்த மதங்கள் ...
தொடரும்
விதை மாற்றங்கள்
நானோ தொழில்நுட்பத்தில்
நாற்றங்காள்
தயார் செய்யுங்கள்