ஒரு தூக்கப்பார்வை
++++++++++++++++++++++
மனமும் உடலும் ஆழ்கடலென
அமைதிகாணும்போது இமைகளின் கறைகளில்
உறக்க அலை ஓடி வருகிறது
கவலைகள் ஓய்வெடுக்கிறது
நெருங்கிய உறவுகளின் பிரிவினில்
தொலைந்திடும் உறக்கம்
உறக்கம் புதைத்தவனின்
வாழ்க்கையே நரகம்
தலையணை சொல்லிடும்
தவரிடும் தூக்கம்
நாளையை நினைத்தால்
தூக்கம் தூரமாகும்
நிமிடத்தில் வாழ்ந்தால்
வாழ்க்கை வரமாகும்
படைப்புள்ளம் உள்ளவர்களே தூங்குகிறார்கள்
தூங்குகிறவர்களே கனவு காண்கிறார்கள்
மூளையின் சுதந்திரம் கனவு காண்பது
கனவு நம் கட்டுப்பாட்டை கடந்து சென்றதால்தான்
பல கண்டுபிடிப்புகளும் கலைப்படைப்புகளும்
கனவு தந்த காலப்பரிசுகள்
கனவுகளில்மட்டும்
தன் நிலை மறக்கிறோம்
சிறகின்றி பறக்கிறோம்
நீரின்றி நனைகிறோம்
நதியினில் நடக்கிறோம்
லட்சியம் என்பது ஆசை
பேராசை உள்ளவனே தூக்கத்தை தொலைக்கிறான்
தூங்கவேண்டுமா தோழர்களே
படுக்கைக்கு போகும்முன் போதைகளை தவிர்க்கவும்
சூடாக ஒரு கப் பால் குடிப்பது நல்லது
திராட்சை அன்னாசி ஆப்பிள் மாதுளை சிறு துண்டுகளாக
தேனில் ஊற வைத்து எடுத்துக்கொண்டால்
உடலுக்கு தேவையான இரும்பு விட்டமின் சி சத்துக்கள் கிடைக்கின்றன.
இது உறக்கத்திற்கு நல்லது
வேப்பிலையை வறுத்து தலைக்குவைத்து தூங்கினாலும்
மருதாணிபூக்களை தலைக்குவைத்து தூங்கினாலும் உறக்கம்வரும்
அதிகாலையில் கொஞ்சம் வல்லாரைக்கீரையை மென்று தின்று அரை மணி
நேரத்திற்குபின் உணவு எடுத்துக்கொள்ளலாம்.
மனம் சார்ந்த நோய்களும் உறக்கப்பிரச்சனையும் சரியாகும்
மாம்பழச்சாறுடன் பால்கலந்து சக்கரையிடாமல் எடுத்துக்கொண்டால் உறக்கம்வரும்
தூக்கம் வராமைக்கு (Insomnia) மருந்து மது போதை எடுப்பவர்கள்
போதை இருக்கும்வரைதான், இது ஓர் நிரந்தர நிவாரணம் அல்ல
தக்காளி. காரமான உணவு செரிப்பதற்கு நேரமாவதால்
(Acid reflux) வாந்தி நெஞ்செரிச்சல் வரும்,
துரித உணவுகளில் (Monosodium glutamate) உள்ளதால்
மூளையை தூண்டிவிட்டு தூக்கத்தை கெடுக்கும் தொடர்ந்து
எடுத்துக்கொண்டால் தலைவலி ஒற்றைத்தலைவலி, வயிறுவலி ஏற்படும்
சர்க்கரை அதிகமாக எடுத்துக்கொண்டால் மூளையை தூண்டிவிட்டு
அதிகமாக வேலை செய்யும் (Cortisol) எனும் ஹார்மோனை தூண்டி
தூக்கத்தை கெடுக்கும் அதிக ஹார்போஹைட்ரேட் உணவுகளும்
எளிதில் சக்கரையாக மாறிவிடுவதால் சர்க்கரைக்கு ஏற்படும் பாதிப்பே இதற்கும்.
காபி, சாக்கலேட்டில் உள்ள (Caffeine) தூக்கத்தை கெடுக்கும்
காய்கறி பழங்கள் புரத உணவுகள் முழுதானியங்கள் ஆவியில்
வேகவைத்த உணவுகள் பால் மற்றும் வாழைப்பழம் தூக்கத்தை கொடுக்கும்
மெல்லிய ஓடையின் ஓசை
இதமான இசை
புத்தக வாசிப்பு
சிலருக்கு மாத்திரை மதுவின் துணை
இவர்கள் இயல்பாய் உறங்க உடல் பயிற்சியும்,
நடைபயிற்சியும் உதவும்.
தியானம் உறக்கத்தின் திறவுகோள்
முடிந்தவரை உதவுங்கள் உழைத்து வாழுங்கள்
கால்சியம், மக்னீசியமும் தான் தூக்கத்திற்கு பெரிதும் உதவும்
கால்சியம்:- நரம்பு, எலும்பு மண்டலங்களை பலப்படுத்துகிறது
அது பால், சோயா, வெங்காயம், பாதாம்பருப்பு, ஆரஞ்சு, எழும்பிச்சையில் கிடைக்கிறது
மக்னீசியம்:- மூளையை சாந்தப்படுத்துகிறது - கரும்பச்சை நிற கீரவகைகள், மீன், முட்டை,
கொட்டைவகைகள், இரும்பு, விட்டமின் ஏ, பி, டி தூக்கத்திற்கு பெரிதும் உதவும்
தூக்கம் வரக் காரணம் மெலடோனின் என்கின்ற ஹார்மோன்தான்.
செர்ரிப் பழங்களிள் இது நிறைந்து கிடக்கிறது.
லாவெண்டர் மலர்களை நுகர்ந்தால் கண்கள் சொருகித்
தூக்கம் தானே வரும்.
யாருக்குத் தூக்கம் வராது என கருட புராணம் சொல்லுகிறது
வறுமையில் உழல்வோன்
உளவு வேலை செய்பவன்
மாற்றான் மனைவிக்கு ஏங்குவோர்
திருடன் (ஊழல் வாதிகள், திருட்டுத் தனமாக பணம், பொருள் வைத்திருப்போர்)
இதோ ஓர் தூக்கப்பார்வை
கும்பகர்ணனுக்கு 6 மாத தூக்கம்
அலெக்சாண்டருக்கு போருக்கிடையே குதிரையே தூங்குமிடம்
கண்டுபிடிப்பின் கடவுள் எடிசனுக்கு இரு கண்டுபிடுப்பிற்கு இடைப்பட்ட நேரமே தூக்கம்
காந்திக்கு இந்திய விடுதலைக்கு பின்தான் தூக்கம்
விடுதலைக்கு பின்னும் அம்பேத்கார் இனவிடுதலைக்காய் தூக்கத்தை தொலைத்தார்
பெரியார் இரு கூட்டங்களுக்கிடையே பயணங்களில் உறங்கினார்
நெருப்பாய் எரிந்த பாரதிக்கு தூக்கமே இல்லை குட்டி குட்டியாய் தூங்கியிருக்கிறான்
கர்மவீரர் காமராஜுக்கோ பள்ளிகள் இல்லாத தமிழ் நாட்டை காணும்வரை உறக்கமில்லை
அண்ணாவுக்கு இனமொழிக்கு உழைத்து படிக்கும் இரு புத்தக இடைவெளியில் உறங்கினார்
பெரியாரின் கனவுகளை நினைவாக்க கலைஞர் கருணாநீதியோ பகலில் ஒரு மணி நேரமும் இரவில் 2 மணி நேரமே தூங்கினார்
எம் ஜி ஆர் ஏழைகளின் இரைப்பை நிரம்புகையில் உறக்கத்தில் வென்றார்
செர்ஜியோ மர்ச்சியோனி-பியட்டின் முதன்மை செயல் அதிகாரி 4 மணி நேரமே தூக்கம்
மார்சா மேயர்-யாஹூவின் முதன்மை செயல் அதிகாரி 4-6 மணி நேரமே தூக்கம்
இந்திரா நோயல் - பெப்சியின் முதன்மை செயல் அதிகாரி 4 மணி நேரமே தூக்கம்
பராக் ஓபாமா - அமெரிக்கவின் முன்னால் அதிபர் 6 மணி நேரமே தூக்கம்
பில் கிலிண்டன் - அமெரிக்கவின் முன்னால் அதிபர் 6 மணி நேரமே தூக்கம்
டொனால்ட் ட்ரம்ப்-அமெரிக்கவின் இன்னால் அதிபர் 3-4 மணி நேரமே தூக்கம்
பில் கேட்ஸ் - மைக்ரோ சாஃப்ட் அதிபர் - 7 மணி நேரமே தூக்கம்
நரேந்திர மோடி - 4-5 மணி நேரமே தூக்கம்
கோலா கரடி 22 மணி நேரம் தூக்கம்
பழுப்பு நிற வவ்வால் 19 மணி நேரம் தூக்கம்.
புலி 16 மணி நேரம் தூக்கம்.
பசுக்களின் உறக்கம் 4 மணி நேரம் தூக்கம்.
ஒட்டக சிவிங்கி 2 மணி நேரம் தூக்கம்.
தேசிய தூக்க ஆணையம் 0-3 மாதம் வரை 14-17 மணி நேரம் உறங்க வேண்டும். 1-2 வயதுடையோர் 11-14 மணி நேரமும், 5 வயதுவரை 13 மணி நேரமும், 6-13 வயதுவரை 9-11 மணி நேரமும், 14-17 வயதுவரை 8-10 மணி நேரமும், 18-64 வயதுடையோர் 7-9 மணி நேரம் உறங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.