Sunday, August 14, 2016

வாழ வழி இல்லாதவர்களுக்கு மரணம் வரமா?

வாழ வழி இல்லாதவர்களுக்கு மரணம் வரமா?
+++++++++++++++++++++++++++++++++++++++++
திருப்பதி செல்பவர்கள் செம்மரத்திருடர்களா?
மரம் வெட்டுபவனுக்கு மரணதண்டனை
கொலைகாரர்களுக்கு கும்பாபிசேகம்
இது புதிய செய்தியல்ல
திருப்பதிசெல்லும் எல்லா பக்கதர்களுக்கும்
தெய்வதரிசனத்திற்கு முன் கிடைப்பது
சிறை தண்டனையே
8 முதல் 36 மணி நேரம் சிறைவைக்கப்படுகிறார்கள்
பாவப்பட்ட மக்கள் குழந்தை குட்டிகளோடு
தன் இயலாமை, துயரங்களோடு
எதை தின்றால் பித்தம் தெளியும் என்று திரிபவர்கள்
இந்த லட்டையும் தின்றுபார்க்க கூடும் கூட்டம் இது
பெத்த தாய்க்கு ரேசன் கடையில்
வரிசையில் நிக்காத
திரைப்படம் பார்க்க
வரிசையில் நிக்காத
பல மகன்களும் மகான்களும்
இங்கு வரிசையில் காத்துக்கிடக்கிறார்கள்
இருந்தும் இவ்வளவு கூட்டம் கூடுவது
காரணமில்லாமலா? சக்தியில்லாமலா?
என்ற கேள்விகளுக்கு கடந்த 20 ஆண்டுகளாய்
தொடர்ந்து சென்று வருபவர்களை சந்தித்தேன்
அவர்கள் சொன்னதிலிருந்து...
பெருமாளை அவ்வளவு எளிதில் பார்க்க போகமுடியாது
அவர் விரும்பினால்தான் ப்ராப்த்தம் இருந்தால்தான்
போகமுடியுமாம்
எனக்குத்தெரிந்த கோடீஸ்வரன்
உலகமகா திருடன் ஊரை ஏமாற்றுபவன்
நினைத்தால் காரை எடுத்துக்கொண்டு
டீக்கடைக்கு செல்வது போல் சென்று வருபவர்
அங்கு குறுக்குவழியில் வரிசையில் நில்லாது
தரிசனம் பார்த்துவருபவர்
அப்ப பெருமாளோட ப்ராப்த்தம்
இந்த உலகமகா திருடர்களுக்கு எப்படி கிடைக்கிறது?
பெருமாள் அந்த கோடீஸ்வரனுக்கு பங்குதாரர்
தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்கமாட்டார்
ஆனால் தவராமல் உண்டியலை நிறப்பிவிடுவார்
மற்றவர் நேர்மையானவர் நினைக்கும்போதெல்லாம்
அவரும்போகக்கூடியவர் தொழில் வளரவே இல்லை
தப்பு செய்பவனுக்கு அள்ளித்தருபனும்
நேர்மையாளனை ஏமாற்றுவதும் பெருமாள்தான் இருந்தும்
இருவரும் தொடர்ந்து திருமலைக்கு சென்றுவருகிறார்கள்
ஏன் என்றால் சிலருக்கு குடிப்பது புகைப்பது போல்
அவர்களுக்கு கோயிலுக்கு செல்வதும்
ஒரு பொழுபோக்கு
தெரிந்தே தன்னையும் ஏமாற்றி சுற்றியுள்ளவர்களையும்
ஏமாற்றிக்கொள்கிறார்கள் இவர்கள் மனம்
காரணம் தேடிக்கொண்டேயுள்ளது
நல்லது நடந்தால் பெருமாளோட கருணை எனவும்
தீயது நடந்தால் பெருமாளோட சோதனை எனவும்
பயணம் தொடர்கிறார்கள்
திருப்பதியில் ஓர் ஆன்மீக வியாபாரம் நடக்கிறது
செயற்கையான தடைகளும், காத்திருப்புகளும்
மிகப்பெரிய பிம்பம் கட்டமைக்கப்படுகிறது
எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகிறது
கருவரை தரிசனம் ஒரு நொடி கூட நிற்க அனுமதியில்லை
இதை நாம் பெருமையாக கருதுகிறோம்
தமிழ் நாட்டில் பல கடவுள்களை
பார்க்க ஆள் இல்லாமல் பூட்டிவைத்துள்ளனர்
திருப்பதியில் பார்க்கவருபவர்களை பூட்டி சிறை வைக்கிறார்கள்

முன் முடிவுகளை எடுக்காதீர்கள்

15 ஆண்டுகளுக்கு முன் ஒரு மென்பொருள் நிறுவனத்தில்
உடன் வேலை செய்த ஓர் நண்பர் என் முக நூலில்
என் தொலைபேசி எண்ணைக்கேட்டு செய்தி அனுப்பியிருந்தார்
கொடுத்தேன் சந்தித்தோம்
பழைய புதிய கதைகள் பேசி தற்போது
தனியாக ஒரு மென்பொருள் நிறுவனத்தை நடத்திக்கொண்டுள்ளதாகவும்
அதில் என்னுடைய உதவி தேவை என்றார்.
என்னைபற்றிய விசாரிப்புகள் என் பணி
நிறுவனம் தற்போதைய நிலை எல்லாம் விவாதித்தோம்
இது கடமையான விசாரிப்புகளே என்னைப்பற்றி
எல்லா தகவல்களும் முக நூல் மூலம் அறிந்து வைத்திருந்தான்
நான் முக நூலில் எதையாவது எழுதிகொண்டிருப்பதை
தொடர்ந்து வாசிப்பதாகவும் ஆச்சிரியப்பட்டான்
(இதுவரை ஒரு விருப்பத்தை (லைக்) கூட போட்டது கிடையாது)
என் நிறுவன உரிமையாளர் பற்றி கேட்டான்
எந்த பகுதி ஆள் என்றான் நான் சொன்னேன்
பூந்தமல்லி பக்கத்தில் காட்டுபாக்கம் என்றேன்
வேறு எந்த தகலும் சொல்லவில்லை
நீ ஏன் இவர்க்ளோடு சேர்ந்திருக்கின்றாய்
அந்த பகுதியே வன்முறை கும்பல்
பூந்தமல்லி பக்கம் அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்றார்
நான் சொன்னேன் ஒரு ஆளை பார்க்காமலே
எப்படி ஒருவரை தவராக பேசுவது என்று
தான் ஒரு (psychology) நிபுனன் என்றும்
பார்த்த நிலையிலேயே ஒருவரைப்பற்றி கணிக்கமுடியும் என்றார்
நீ தான் அவரை பார்க்கவே இல்லையே என்றேன்
உன் முக நூலில் பார்த்திருக்கின்றேன் என்றார்
எனக்கு ஆச்சரியம் தோற்றத்தை வைத்து
அவர்களின் அனுபவத்தின் மூலமாக
சில விபரங்களை சொல்லலாம் அது கூட அனுமானம்தான்
உள் மனதையும் ஒருவருடை குணத்தையும் நடத்தையையும்
எவ்வாறு கூற முடியும்
இவரைப்போல் பலபேர்
தனக்கு எல்லாம் தெரியும் என்பதுபோல் தன் குறைந்த
அனுபவத்தை வைத்து மனிதர்களை எடைபோடும் முட்டாள்கள்
ஜோசியக்காரர்கள் போலத்தான்
தன் முன் அனுபங்களை வைத்து சிலவற்றை சொல்லலாம்
அது எப்போதாவது பலிக்கலாம் அது ஓர் சதுரங்க வேட்டை
நம்பிக்கை இழந்தவர்க்கு அது மூடநம்பிக்கையை தரலாம் கடவுளைப்போல்
கருப்பா இருப்பவன் இப்படித்தான் இருப்பான்
இந்தப்பகுதியை சேர்ந்தவன் அடிதடி செய்வான்
அந்த மாவட்டத்தைச்சேர்ந்தவன் அப்படித்தான் இருப்பான்
இந்த மானிலத்தைச்சேர்ந்தவன் இப்படித்தான் இருப்பான்
அந்த ஜாதிக்காரன் இந்த மொழிகாரன் இப்படிப்பட்டவன்
என்ற முன் அனுமானங்களால்
பல நல்ல மனிதர்களையும் நல்ல உறவுகளையும்
இழந்துவிடுவீர்கள்
கருப்பா இருப்பவன் கெட்டவன்
நிற அரசியல்
அழுக்கு சட்டை போட்டவன் தாழ்ந்தவன்
உடை அரசியல்
இதைத்தான் கபாலி படம் பேசுகிறது
ஒருவரோடு பழகாமல் ஆய்ந்து அறியாமல்
முன் முடிவுகளை எடுக்காதீர்கள்
நான் இதுவரை யாரோடும் சண்டையிட்டது கிடையாது
பிடிக்காதவர்களோடு ஒதுங்கிவிடுவேன்
நண்பனின் தொலைபேசி அலைப்பிற்கு என் எண்
தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டது
இனிமேல் அப்படித்தான்

ரஜினி எனும் மந்திரச்சொல் கபாலி

பணம் பத்தைமட்டுமல்ல பதினொன்றையும் செய்யும்
உலகம் வியாபாரிகள் கைகளில்தான் உள்ளது
என்பதற்கான உதாரணம்தான் கபாலி
நகரத்து ரசிகர்கள் ஓரங்கட்டப்பட்டு
பெரு நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் 
கொடுத்து ஊழியர்களுக்கு
டிக்கெட்டும் வழங்கி
கொண்டாடி தீர்த்துவிட்டனர்
ஏன் இந்த பரபரப்பு
மக்கள் கொண்டாட்ட விரும்பிகள்
இது விடுமுறையோ விழாவோ இல்லாத காலம்
ஆடியில் பெண்கள்மட்டுமே
கோயில் குளம் என்று வலம் வருவார்கள்
மற்றவர்கள் காத்திருந்து கபாலியை கொண்டாடிவிட்டனர்
அவர்களுக்கு கொண்டாட ஏதாவது
காரணம் தேவை
ரஜினி எனும் மந்திரச்சொல்
ஒரு தனிபட்ட நடிகனின் ஆளுமைதான்
வயது வித்தியாசம் மொழி
தேச எல்லைகளை கடந்து ஈர்த்துள்ளது
சமூக வலைதளங்களில் மற்ற ஊடகங்களிலும்
ஏதோ சுனாமி அலையடித்து ஓய்ந்துபோய்விட்டது
100 கோடிக்கு தயாரித்து படம் வெளியாவதற்கு
முன்பே 300 கோடி வசூல் செய்துவிட்டனர்
நூறு ரூபாய் டிக்கெட்டைக் கூட ஆயிரக்கணக்கில் பணம்
கொடுத்து வாங்க ரசிகர்கள் சிறிதும் யோசிக்கவில்லை.
ரஜினி இப்படித்தான் நடிக்கவேண்டும் என
காகித புலிகள் கதை எழுதிக்கொண்டுள்ளனர்
கிழட்டுவயதில் காதல் செய்யாது
பறந்து பறந்து சண்டையிடாது
வயதுக்கேத்த கதாபாத்திரம் மகிழ்ச்சி
ப்ஞ்ச் என்ற பெயரில் அட்வைஸ் செய்யாமல்
அவன் சொல்றான் இவன் செய்ரான்னு ஆன்மீகம் பேசாமல்
இப்ப வருவேன் அப்ப வருவேன்னு அரசியல் சொல்லாமல்
மலேசியாவின் பண்ணையடிமை தமிழர்களின்
வாழ் நிலையை தன்
நுட்பமான நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கும்
ரஜினி நடித்துள்ள இரஞ்சித்தின் படம் பார்ப்பது “மகிழ்ச்சி”.
வெற்றி தோழ்விகளையும்
கதைகளையும் பற்றி கவலையில்லை
அதை நிறையவே விமர்சித்துவிட்டார்கள்
பரபரப்பும் அதிக அளவு கட்டண வசூலும்தான் பிரச்சனை
கபாலியை மட்டுமே பார்க்கவேண்டிய கட்டாயம்
நாடெங்கும் ஒரே படம்
நன்றாக ஓடிய அப்பா படத்தையும்
தியேட்டரைவிட்டு தூக்கிவிட்ட அயோக்கியத்தனம்
குறுகிய காலத்தில் பணம்பார்த்துவிடும்
மனோபாவம் பெருகிவிட்டது
உயர்த்திவிட்ட ரசிகர்களை ஏமாற்றிவிட்டனர்
தியேட்டரின் வசதி நகரம், கிராமம் என்ற
எல்லைகளை வைத்தே கட்டணங்கள் வசூலிக்கப்படுவது
நடைமுறை ஆனால் நடிகளுக்கு தகுந்தார்போல்
டிக்கட் விலையை ஏற்றியது
மிகப்பெரிய அயோக்கியத்தனம்
தன் ரசிகர்கள் ஏமாற்றப்படுவதை நடிரும் தடுக்கவில்லை
தனக்கு வேண்டியவர்கள் படத்தை ரிலீஸ் செய்வதால்
அரசும் கண்டுகொள்ளவில்லை
திருட்டு விசிடியும் இணையதளங்களும்
செய்வது அயோக்கியத்தனம் என்றால்
50, 100 ரூபாய் டிக்கெட்டை 500க்கும் 1000 க்கும்
விற்ற அயோக்கியத்தனத்தை என்ன சொல்வது

அறம் செய்ய தவறு

அறம் செய்ய தவறு
ஆறுவது சினம்
++++++++++++++
அலுவலகத்தின் ஆல் இன் ஆல் கார்த்திக் விடுமுறை
என்பதால் தேனீருக்காய் டி கடை வந்தோம்
இந்த தேசத்திற்கு என்னதான் ஆச்சு
எங்கும் புகைமண்டலம்
டீ கடை புகையில் காணாமல் போயிருந்தது
வாய் கிளிந்து நுரையீரல் அழுகி
எத்தனை முகேஸ்கள் பேசினாலும்
புகைப்பவர்கள் நிறுத்துவதே இல்லை
விலையை ஏற்றினாலும் கடையை மாற்றினாலும்
புகைப்பதும், குடிப்பதும் குறைவதே இல்லை
அரசு விலை ஏற்றி பணம் பார்த்துவிடுகிறார்கள்
சாதா ரூபாய் 10 பஞ்சு வைத்தது 20
ஏழைகளின் ஒரு நாள் உணவுக்கான செலவு
இவர்களது ஒரு புகைப்பானின் விலை
இங்கு அறம் சொல்லவும், செய்யவும் ஆள் இல்லை
புகைத்த புகையை நம் முகத்தில் ஊதுகிறார்கள்
பாக்கு போட்டு தேசத்தை துப்பித்தொலைக்கிறார்கள்
சுத்தமாக இருக்கும் என்று
நாங்கள் ஃபோரம் மாலுக்கு சென்றோம்
எங்கள் இருக்கைக்கு எதிரில்
இரு இளசுகள் வந்தமர்ந்தனர்
பொதுவெளி என்பதை மறந்து
இளசுகள் அவர்களுடைய படுக்கையறைபோல்
சில்மிசங்களை தொடங்கின
நண்பர் ஆனந்த் சினம் கொண்டார்
நான் ஆறுவது சினம் என்று அவ்வையின்
மொழி சொல்லி அமைதிபடுத்தினேன்
3 பெண்களை பெற்றதாளும்
சுவாதி கொலைக்குப்பின் ஏற்பட்ட மன அலுத்தத்தாலும்
நண்பர் பொங்கிவிட்டார்
கையை உயர்த்தி அடிவாங்வதற்குள்
கிளம்பி விடுங்கள் என்றார்
ஆண் பையன் பயந்து கிளம்பிவிட்டான்
பெண் சிலிர்த்தெழுந்து சண்டைக்கு வந்துவிட்டாள்
பொதுவெளியில் சில்மிசம் செய்வது
அவர்கள் சுதந்திரமாம் ?!!
எது சுதந்திரம்? காந்தியத்தான் கேட்கணும்
வாங்கிகொடுத்தவனையேதான் நாம்
சுட்டுக்கொன்னுட்டோம்
சுவாதி கொலைக்குப்பின் பெண் பிள்ளைகள்
கொஞ்சம் பார்த்து நடக்கனும் என்று நினைப்பது
பெண்களை பெற்ற தகப்பனின் தவிப்பு
காம மயக்கத்திலிருக்கும் இளசுகளுக்கு புரியவில்லை
எத்தனை கொலை நடந்தாலும்
நடப்பது நடந்துகொண்டேதான் இருக்கும்
அவரவர் வலி அவரவர்க்கு
அடுத்தவன் வலியெல்லாம் வேடிக்கை பார்ப்பதற்கு
தனிமனித ஒழுக்கத்தை சொல்லிக்கொடுக்கத்தவரி
சிகரட் அட்டையிலும்
திரைப்படத்தின் இடைவெளிலும் போட்டால்
அதையும் பார்த்து ரசித்துவிட்டுத்தான் போகிறார்கள்
கடைகார பெண்வந்தாள் ஏன் சார் வந்திங்கன்னா
டீ குடிச்சிட்டு போகவேண்டியதுதானே
நீங்க சண்டை போட்டதால்
அவர்கள் அடுத்த கடைக்கு போய்விட்டார்கள் என்றாள்
இந்த கடைகளே இவர்களை போன்றவர்களை
நம்பித்தான் நடத்துகிறார்கள்
உணர்ச்சிவசப்பட்டு நாக்கை துருத்துபவனை
நாம் கோமாளியாக்கிவிட்டோம்
அறிவால் சிந்திப்பவர்கள் கண்டும் காணாமல் போய்விடுகின்றனர்
பல பேர் வந்தியா டீ குடிச்சியா
பொத்திக்கிட்டு போகவேண்டியதுதானே
இது உனக்கு தேவையா என்பது போல்தான் பார்க்கிறார்கள்
நாட்டில் அறிவாளிகல் அதிகமாகிவிட்டார்கள்
நாங்கள் டீ குடிச்சிட்டு வெளியே வந்தோம்
பக்கத்து கடையில் அந்த ஆண் குரங்கு
அந்த பெண் குரங்கை சுரண்டிக்கொண்டிருந்தது
நண்பர் இப்போது
அறம் செய்வதை விட்டு
ஆறுவது சினமாகிவிட்டார்

திடீர் பயணங்களில்

திட்டமிடாத திடீர் பயணங்களில் பல மோசமான அனுபவங்களை சந்திக்க நேர்கிறது
திடீர் பயணங்களில் இரயிலில் இருக்கைகள் கிடைப்பதே இல்லை
நம் தேசத்தில் அதற்கான வாய்ப்புகளே இன்னும் 100 வருடங்களுக்கு இல்லை என்றே தோன்றுகிறது
எங்கள் பகுதியில் அகலபாதைக்காக நிறுத்திய கம்பன் எக்ஸ்பிரஸ் 20 ஆண்டுக்கு மேலாகியும்
இன்னும் தண்டவாலங்களை கூட போட்டுமுடிக்கவில்லை.
இத்தனைக்கும் அது முன்னால் முதல்வரின் தொகுதி
பகல் நேர பயணம் என்பதால் தனியார் பேருந்துகள் இல்லாததால்
தமிழக அரசு பேரூந்து ஒன்றில் ஏறி அமர்ந்தேன்
இருக்கையின் சாய்வு நிலை வேலை செய்யவே இல்லை
கை வைக்கும் கட்டையை எந்த எலிக்குப்பொறந்தவனோ சொரண்டி எடுத்திருந்தான்
வண்டி ஓடத்தொடங்கியதும் ஜன்னலொர கண்ணாடி ஆடிய சத்தம் காதில் யாரோ கொட்டடிப்பது போலிருந்தது
நகர எல்லையைத் தாண்டி வேகமெடுத்ததும் மொத்த பேரூந்தும் (வைபரேசன் மோடுக்கு) அதிர்வு நிலைக்கு மாறிவிட்டது.
காலை கீழே வைக்கமுடியவில்லை அதிர்வால் உடலே கூசியது கோபத்தில் நடத்துனரிடம் நிலைமையைச்சொன்னால்
சார் நாங்க மேலதிகாரிகளிடம் புகார் அழித்துவிட்டோம் அவர்கள் கண்டுகொள்வதே இல்லை என்றார்.
வடலூரைத்தாண்டியதும் மழை தொடங்கியது ஜன்னலொர கண்ணாடி மூடமுடியாததால்
பாவம் பக்கத்திலிருந்தவர் பாதி நனைந்துவிட்டார் பண்ருட்டி தாண்டும்போது என் தலைக்குமேல் நீர் சொட்டத்தொடங்கியது
தலையில் தண்ணீர் விழுந்தாலும் கோபத்தில் சூடு தலைக்கேறி நடத்துனரை நோக்கிசென்றேன்
என் நோக்கம் தெரிந்தவர்போல் என்ன ஒழுகுதா அங்கே பாருங்க என்றார்
பார்க்கவே பாவமாக இருந்தது ஓட்டுனரின் தலைக்குமேலும் நீர் சொட்டிக்கொண்டிருந்தது
எவ்வளவு மோசமான நிலையில் பணிசெய்கிறார்கள் என்று புரிந்தது
சரி அடுத்த நிறுத்தத்தில் இறங்கி வேறு பேருந்து பிடிக்க முடிவெடுத்தேன்
திண்டிவனத்திற்கு முன் வண்டி நின்றது ஒரு பெருங்கூட்டம் தட தடவென ஏறியது
பக்கத்தில் நின்றவர் முழுதும் நனைந்துவிட்டார் விபரம் கேட்டேன் அவர்கள் வந்த பேருந்தின் டயர் வெடித்துவிட்டதாம்
விசாரித்ததில் பாதி அரசு வண்டிக்கு மாற்று சக்கரமில்லையாம் (ஸ்டெப்னி)
சகிப்புத்தன்மையும் ஒப்பீடுகளிலும் தான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கின்றது பக்கத்தில் அமர்ந்திருப்பவர் பாதி நனைந்துவிட்டார்,
புதிதாய் ஏறி பக்கத்தில் நின்றவர் முழுதும் நனைந்துவிட்டார் என் கோபம் தனிந்துவிட்டது.
எண்ணமே வழ்க்கை மனமே உடல் இதுதான் வாழ்க்கை என்றாகி போனதால்
சூழலை மனம் ஏற்றுக்கொள்கிறது.
பக்கத்திலிருந்தவர் இன்னும் சூடு குறையவில்லை
இவங்களையெல்லாம் ரமணா விஜயகாந்த் பாணியில் தண்டிக்கவேண்டும் என்றார்
பக்கத்தில் நின்றவர் குலுங்கி குலுங்கி சிரித்துவிட்டு தொடர்ந்தார் அவரே பொண்டாட்டி பேச்சைகேட்டு
உருப்புடாம போயிட்டாரு என்றார் மற்றவர் சார் அந்தம்மாவே வை கோ பேச்சைத்தானே கேட்டது என்றார் அடுத்தவர்
என்ன சொல்றீங்க வை கோவே இன்னோரு அம்மா பேச்சை கேட்டுத்தானே செயல்பட்டார் என்றார்
எல்லாம் மறந்து அவர்கள் 1500 கோடி, 3 லாரி பணம் என அரசியல் மழையில் நனைந்துகொண்டிருந்தனர்
அரசியல்வாதிகளை மாற்ற 5 ஆண்டுக்கு ஒரு முறை வாய்ப்பு வருகிறது
58 வயது வரை பதிவியில் உள்ள இந்த அதிகாரிகளுக்கு ஏன் அக்கரை இல்லாமல் போனது
தொலைதூர பேரூந்துகளின் தரத்தையாவது மேம்படுத்துவார்களா?

தேவதைகளின் அவமதிப்புகள்

தேவதைகளின் அவமதிப்புகள்
தேவாங்குகளின் கொலைவெறிகள்
இதிகாசங்கள் இத்தனை இருந்தும்
பாஞ்சாலிகள் துகிலுரிக்கப்படுகிறார்கள்
துரியோதனன் அவமானப்படுகிறான்
துரோணர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்
அரசியல் தருமர்கள்
சுய நல சூதாடுகிறார்கள்
துரியோதனின் அவமதிப்பால்
மகாபாரதம் உறுவானது
சூர்ப்பனகையின் அவமதிப்பால்
ராமாயணம் உறுவானது
அவமானங்களை வளர்ச்சிக்கு
உரமாக்கியவன் புகழையடைகிறான்
அவமானங்களை பகையாக்கியவன்
புழலையடைகிறான்
வாழச் சொல்லிக்கொடுக்காமல்
பிழைக்கச்சொல்லித்தரும் நம் கல்வி முறை
இளைய தலைமுறையை
பணத்திற்குப்பின் ஓடச்சொல்லி
அதையே வாழ்கைமுறையாக்கி
வெற்றி வெற்றி என்கிறார்கள்
மனம் ஊனமாகி எல்லாம் பணமாகிபோய்விட்டது
அகிம்சை போதித்த தேசத்தில்
மகாத்மா மனங்களில் இன்றி
பணங்களில் மட்டுமே சிரிக்கின்றார்
தோழ்விகளை விரும்பாத
வெற்றிக்குப்பின் ஓடும் ஓர் சமூகம்
தோழ்விகளை எதிர்கொள்ளவும்
தோழ்விகளிலிருந்து மீண்டெழவும்
சொல்லிக்கொடுக்காத
வாழ்கைமுறைகளும் பல சமூக
துயரங்களுக்கு காரணமாகின்றது
உழைத்து மகிழ்வது மனித குணம்
அடித்து பிழைப்பது மிருக குணம்
மனிதா நீ உழைக்கப்போகிறாயா ?
அடித்து பிழைக்கப்போகிறாயா ?

கம்யூனிஸ்ட்

கம்யூனிஸ்ட்
---------------------
1848 வரை ஐரோப்பாவில்
கம்யூனிஸ்ட் லீக்காக இருந்த சங்கம்
ரகசியமாய் இயங்கியது 
பின் உலகமெல்லாம் பரவியது
1848 ல் மார்க்சும் ஏங்கல்சும்
எங்கெல்லாம் முதலாளி வர்க்கம்
பாட்டாளி வர்க்கத்தை சுரண்டி ஒடுக்குமுறை செய்து
வர்க்க பாகுபாடு ஆதிக்கத்திலிருந்து
விடுபட முயற்சியை தொடங்கினார்கள்
முதலாளித்துவ குடும்பமுறை ஒழித்தால்
மூலதன முறை ஒழியும்
ஏற்ற தாழ்வு கல்வி நிலை மாறும்
முதலாளிவர்க்கம் மனைவிகளையும்
ஓர் உற்பத்தி கருவியாக பார்ப்பதால்
கம்யூனிஸ்ட்டுகள் தன் வீட்டு பெண்களையும்
பொதுவாக்கிவிடுவார்கள் என அஞ்சினர்
விளம்பரம் செய்தனர்
தனிமனித சுரண்டல்
தேசங்களுக்கிடையே சுரண்டல்
எங்கே வர்க்கங்களுக்கிடையே பகைமை
மறைகிறதோ அங்கே தேசங்களுக்கிடையே
பகைமை விளகும்
சமயம், மதம் கடவுள் இறையுணர்வு உள்ள
வீராவேசம் கற்பனை, பண்பாடு, கலைகள்
எல்லாம் பரவச நிலைகளே இவைகள்
தற்பெருமை கொள்ளச்செய்வது
மதிப்புமிக்க தொழில்களை
மருத்துவம், சட்டம், மத போதகம்
கலைஞர் அறிவியலர் எல்லாம்
முதலாளி வர்க்கத்தின் கூட்டாளிகளாக மாறிவிட்டன
குடும்ப உறவுளை சிதைத்து
உலகம் பணத்திற்காகவே
சுழலச்செய்தது
முதலாளிகள் தன் சந்தை பொருள்களை விற்க
நாடு தேடினார்கள் தன் அதிகாரத்தை
விரிவுபடுத்தினார்கள்
உள்ளூர் திறமைகள் கலை, பண்பாடு
கலாச்சாரம் அழிக்கப்பட்டன
உலகமயமாக்கப்பட்டன
மாடுகளை டிராக்டராக்கினார்கள்
கூத்தும் கலையும் இப்போது
திரைப்படமாகிவிட்டது
மருத்துவர்கள் பெரிய மருத்துவமனைகளில்
கூலிகளாக்கப்பட்டனர்
உலகம் முழுதும் சுவையும் உணவும்
ஓன்றாகிபோனது
நம்மூர் தண்ணீரில் அயல் நாட்டு குளிர்பானம்
நம்மூரில் இலவசமாய் நீர் எடுத்து இருபது ரூபாய்க்கு
நமக்கே விற்கிறான்
போக்குவரத்தும் தொலை தொடர்பும்
அனாகரீக உலகத்திலிருந்து
நாகரீக உலகத்திற்கு இழுத்துவரப்பட்டது
உள் நாட்டு உற்பத்திகள்
நலிவடைந்துபோனது
மக்களை மலிவை காட்டி
மயக்கிவிட்டார்கள்
உலக முதலாளிகள் தீர்மானித்ததைதான்
உலகம் பசியாறிக்கொண்டுள்ளது
கிராமங்களில் வயதானவர்களும்
வழி இல்லாதவர்களும்தான் உள்ளார்கள்
மற்றவர்கள் காசுக்காக நகரம்
தேசம் உறவு எல்லைகளையேல்லாம் தாண்டிவிட்டார்கள்
நம்மூர் கம்யூனிஸ்ட்கள் உண்டியலுக்கான
டப்பாக்களை தேடிக்கொண்டுள்ளனர்

மனிதம் வளரும்

தலைவர்கள்
மதங்கள் அழிந்தால்தான் மனிதம் வளரும்
++++++++++++++++++++++++++++++++++++++++
ஹரித்வார்: மகாராஷ்டிரா மாநிலம் அஹமத்நகரில் உள்ள சனி பகவான் கோவிலில்,
ஆண்களை போல பெண்களுக்கும் வழிபட சம உரிமை உண்டு. இது பெண்களின் அடிப்படை உரிமை. 
இதனை, அரசு நிலை நாட்ட வேண்டும். பெண்களை தடுப்பவர்களை, அரசு கைது செய்ய வேண்டும்'
என, ஐகோர்ட், ஏப்ரல் 1ல் உத்தரவிட்டது. அதன்படி
பெண்கள் உள்ளே நுழைந்தது கோவிலில் கற்பழிப்பு அதிகமாகும்
என்ற துவாரகா சங்கராச்சார்யார் கருத்து
பிற்போக்கானதும் ஆணாதிக்க சுய நலம்கொண்ட
உடலெல்லாம் கொழுப்பு தேங்கியவர்களின்
ஆதிக்கக்குரல்
ஆன்மீகம் மிக ஆழமானது. அதை, மேலோட்டமாக விமர்சனம் செய்வது
ஆன்மீக போலிகள்
சக்திக்கு சரி பாதி கொடுத்தவன் சிவன்
பெண்களை தெய்வமாகவும் நதிகளாகவும் புனதமாகவும் வழிபடும் நம்மினம்,
பெண்களை கோவிலுக்குள் நுழைய மறுப்பது சுய நலம்
யாறும் முழுமையான பெண்ணும் இல்லை ஆணும் இல்லை
அதுவே அர்த்தநாரீஸ்வரர் என்ற நிலை
ஆண்-பெண் அடையாளங்கள் உடல் சார்ந்த பிரிவுகள்
ஆனால் ஆன்மீகம் என்பது அடையாளங்களைக் கடந்து செல்லவேண்டிய ஓர் ஏற்பாடு
அதை அடையவிடாமல் தடுப்பது
இது போன்ற ஆன்மீக போலிகளின் புறப்பாடு
குழுக்களும் மதங்களும் மனிதனை புனிதாக்க புறப்பட்டவைகள்
ஆனால் சுய நலத்தின் சூது
மனிதனை மனிதாகக்கூட அல்ல
விலங்குகளாக மாற்றிவிட்டன
மதங்களுக்காக மனிதன் அடித்துக்கொண்டு சாகிறான்
விலங்குகள் உணவுக்காகமட்டுமே உயிர் கொல்லும்
மனிதன் மட்டுமே கருத்துக்காக உயிர் எடுக்கிறான்
தனிமனிதன் அன்போடும் அறிவோடும்தான் இருக்கின்றான்
ஓர் குழுவோடும் மதத்தோடும் தன்னை இணைத்துக்கொண்ட பின்
தான் சிந்திப்பதை மறக்கிறான் இரவல் சிந்தனைக்கு செவிசாய்க்கிறான்
சுயமாய் சிந்திப்பதை மறந்துவிடுகிறான்
சிந்திக்காதவரை தான் மதங்கள்
தொண்டர்கள் உள்ளவரைதான் தலைவர்கள்
மதங்கள் அழிந்தால்தான் மனிதம் வளரும்
தலைவர்கள் ஒழிந்தால்தான் தனிமனிதன் வாழ்வான்
துவாரகா சங்கராச்சார்யார் கருத்தில்
நியாம் இருப்பதாய் கருதினால் உண்மையில் அவர்
பெண்களின் கற்பைபற்றிய கவலை கொண்டவராய் இருந்தால்
முதலில் இது போன்ற குருக்கள் மற்றும் மடாதிபதிகளின்
ஆண்மையை நீக்கி அறுவை சிகிச்சை செய்யவேண்டும்
வருடம்தோறும் அந்த பகுதி பெண்களிடம்
குறைந்தது 100 பேரிடம் தான் ஒழுக்கமானவன் என
தகுதி சான்றிதழ் பெறவேண்டும்

ஏகலைவனும் கெளரவ கொலைகளும்

ஏகலைவனும் கெளரவ கொலைகளும்
---------------------------------------------------------
மகாபாரதம் முழுதும் வர்ணாஸ்ரமத்தை காப்பாற்ற துடித்த
கிருஷ்ண்னின் லீலைகள்தான்
காட்டுமிராண்டி காலத்து கதைகளுக்கு
இப்போதும் உயிகொடுத்துகொண்டிருக்கிறார்கள்
கெளரவர்கள் கெளரவ கொலைகளாய்
சுய நலத்தின் சூது துரோணர்
அவரின் சீடன் அர்ஜீனன் ஒரு மாபெரும் வில்வித்தை வீரன்
ராஜ குடும்பத்தை சேர்ந்தவன்
துரோணர் ஓர் பிராமனர்
அப்போதும் இப்போதும் பிராமனர்களைவிட
வர்ணாஸ்ரமத்தை காப்பாற்றத்துடிப்பது
மற்றவர்கள்தான்
ஏகலைவன் வேடுவ இனம்தான் என்றாலும்
அவன் மகத நாட்டைச் சேர்ந்த ஒரு காட்டுக்குத் தலைவன்.
தன்னை துரோணரிடம் சீடராக்கச்சொன்னான்
ஒரு சூத்திரனை தீண்டதகாதவனை
லட்சக்கணக்கான மனிதர்களை இந்து
மதம் மனிதராகவே ஏற்றுக்கொள்ளாததால்தான்
பலர் மதமாறிவிட்டார்கள்
சூத்திரனின் நிழல் பட்டாலும் குளிப்பதை
வழக்காமாக கொண்ட துரோணர்
“வர்ணாஸ்ரம தர்மப்படி கல்வி என்கின்ற அந்த வில்வித்தையை
சூத்திரனான நீ கற்றுக்கொள்ள உரிமை கிடையாது
என மறுத்து அனுப்பிவிடுகிறார்.
தன் சீடன் அர்ஜீனன் அரசனாகப்போகிறவன்
அவன் மூலம் ராஜ குருவாக மாற வாய்ப்பு இருப்பதாய்
அரசியல் கணக்கிடுகிறான்
திறமை இருப்பவனை கண்டெடுத்து
வளர்த்தெடுப்பவனே உண்மையான குரு
குரு என்பவன் யாரையும் மறுத்தல் கூடாது
மறுத்ததால் இவர் ஓர் அரசியல் தரகரானார்
ஆர்வம் உள்ளவர்களுக்கு ஆசிரியன் தேவையில்லை
என நிறுபித்தவன் ஏகலைவன்
குரைக்கின்ற நாயின் ஒலியை வைத்தே அம்பினால்
நாயின் வாயை இரண்டாகப் பிளந்து விடுகிறான் ஏகலைவன்
ஒலியை வைத்து துல்லியமாக அம்பெய்துபவன் அர்ஜூனன் மட்டும்தானே
இது யார் என வியக்கிறார் துரோணாச்சாரி.
ஒரு வேடன் வந்து அவர் காலிலே விழுந்து வணங்கி, “குருதேவா!
அந்த அம்பை எய்தியது நானே என்றான்
அர்ஜூனனுக்கு மட்டும் தெரிந்த வித்தை நீ எப்படி அறிந்தாய்
“யார் உனக்கு குரு? என்று கேட்கிறார்.,
மிகுந்த அடக்கத்தோடு ஏகலைவன் நீங்கள்தான் என சொல்லுகிறான்
நீ அல்லவா என்னுடைய தலைசிறந்த மாணாக்கன்” என்று
தட்டிக் கொடுத்திருக்க வேண்டிய துரோணர்
தன் சிலையை வைத்தே வில்வித்தை
கற்றதால் இனி வில் தொடக்கூடாது என
ஏகலைவனின் கட்டைவிரலை காணிக்கையாக
பெற்ற குரு துரோகி
வெட்டி வீழ்த்துகிறார் அன்று அந்த சூத்திரனின் வீரத்தை
தன் குருவுக்காக எதையும் தர
தயாராயிருந்தான் ஏகலைவன்
கட்டைவிரலை காணிக்கையாகப்பெற்றபின்னும்
இருளில் வில்லெய்தும் திறன் கண்டு அர்ச்சுனனும் துரோணரும் ஏகலைவனை விசாரிக்கிறார்கள்
ஏகலைவன் இடக்கைக் பழக்கமுல்லவன் உங்கள் நோக்கம் தெரிந்து
என் இடக்கை விரலை அப்போதே காணிக்கையாக தந்திருக்கவேண்டும் குருவே ஆனால்
நான் வேட்டுவன்தானே, அரசாளும் சத்தியர்களுக்கும் அவ்ர்கள் பேணும் அந்தணர்களுக்கும் உள்ள
சாமர்த்திய புத்தி எனக்கில்லையல்லவா? இப்போதும்
என் இடக்கைக் கட்டை விரலை காணிக்கை தரத் தயார் என்கிறான்
விரல்களை வெட்டிக் கொள்ளாமலேயே நினைத்ததை நிறைவேற்றும் வழியில்
இனி அர்ச்சுனனே உங்களின் தலை சிறந்த சீடனாக விளங்குவான்.
இக்கணம் முதல் நான் வில்லைத் தொடமாட்டேன் என சத்தியம் செய்கிறான்
சீடனில் சிறந்த சீடனாக சத்திரியர்களையும், அந்தணர்களையும்
அன்று வெட்கப்படச் செய்துவிட்ட வேட்டுவ வீரனே
இன்று வெட்கப்பட மறந்த நாணமற்ற நாகரீக சமூகம்
தலையை வெட்டித்திரிகிறது
பெரியாரின் இடத்தை திராவிட கட்சிகள் நிரப்ப முடியாது போனதின்
வெற்றிடத்தின் விளைவே இந்த கெளரவ கொலைகள்
கூட்டணிக்காக கணக்கிட்டுகொண்டுள்ள தலைவர்களே
பூக்களுக்கு வண்ணமடித்தது போதும்
வேர்கள் இங்கே பழுதாகிவிட்டதை கொஞ்சம் பாருங்கள்
ஆதிக்க மனம் எழுதிய பழைய ஏற்பாடுகளின் சில துளிகள்
இப்படியெல்லாம் இவர்களால் எப்படி யோசிக்க முடிந்தது
இதை இன்றும் புனிதம் என்கிறார்கள்
சூத்திரனின் தொழில் எது தெரியுமா?
வேதமறிந்த பிராமணர்க்குப் பணிவிடை செய்வதே சூத்திரர் தர்மம். சூத்திரர்க்கு அதுவே மோட்சப் பாதை.
(மனு தர்மம் 10:276)
சூத்திரனின் பெயர் எப்படி வைக்கவேண்டும் தெரியுமா?
பிராமணனுக்கு மங்களம், சத்திரியனுக்கு பலம், வைசியனுக்குச் செல்வம்,
சூத்திரனுக்கு அவனது அடிமை நிலை தோன்றும்படியான பெயர்களைச் சூட்ட வேண்டும்.
(மனு தர்மம் 3:23)

குழந்தை

குழந்தை
-----------------
புத்தகம் தூக்கும்
கல்விக்கழுதைகளாய்
மனப்பாட எந்திரங்களாய்
பணம் பூக்கும் மரங்களாய்
வளர்த்தது போதும்
வாழ்க்கையைச் சொல்லிகொடுங்கள்
மனித நேயத்தை மலரவிடுங்கள்
கல்லாய் நில்லாமல்
உங்கள் மரன நேரத்தில்
அவன் கண்களில் கண்ணீர் பூக்கட்டும்
ஒரு மனிதன்
தன் முன்னே நிற்கும் இருவரிடம்
ஒருவரிடம் அன்பாகவும் அடுத்தவரிடம்
கோபமாகவும் இருக்கமுடியும் என்பது
அவருக்கு நடிக்கத்தெரியும் என்பதுதான் உண்மையே
ஒரு அன்பானவரிடம் அன்பே வெளிப்படும்
அன்பில்லாதவனிடம் வெறுப்பே வெளிப்படும்
நெருப்பிலிருந்து நீர் வருகிறது என்றால்
அது நீராவியாகும்வரை காத்திருக்கவேண்டும்
நீரிலிருந்து நெருப்பெடுக்க அது எரிபொருளாகும்வரை
காத்திருக்கவேண்டும்
ஆனால் மனிதன் மட்டுமே
நீரிலிருந்து நெருப்பாகவும்
நெருப்பிலிருந்து நீராகவும் மாறும்
ரசவாதம் கற்றவன்
குழந்தைகளுக்கு நடிக்கவே கற்றுக்கொடுக்கிறோம்
பெரியவர்களை மதிக்க
அன்பு செலுத்த பழக்கவில்லை எனில்
அவன் கற்ற கல்வி
பண்பாட்டின் பரமபதத்தில் பாம்பிடம் மாட்டிய பாமரனாவான்
உங்களுக்கு வயதான பின்பு அன்பு கிடைக்காது
நீங்கள் காசை செலவழித்து கற்ற கல்வியால்
சம்பாதித்த பணத்தில் நல்ல வசதியுடைய நவீன
முதியோர் இல்லங்கள் உங்களுக்காய்
காத்திருக்கின்றன கவணமாயிருங்கள்
அயல் நாட்டுக்கு அனுப்பிய மகன்
வராமலே
அழுவதற்குக்கூட ஆள் இன்றி
அனாதையாய் சாவீர்கள்