Thursday, March 10, 2016

விஜயகாந்த்

விஜயகாந்த்
+++++++++++
விஜயராஜ் ஒரு திரை விரும்பி
பத்தாம் வகுப்புக்குமேல் படிப்பதுபோல் நடிக்க முடியாதததால்
நடிப்பையே படிக்கத் தொடங்கினார்
1980 களில் இருந்து 2005 வரை தொடர்ந்து மூன்றாம்
இடத்தை தக்கவைத்துகொண்ட முதல் கதாநாயகன்
திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு இவர் ஓர் கலங்கரை விளக்கம்
நடிகர் சங்கத்தின் எல்லா கடன்களையும் அடைத்த பெருமை
பூந்தோட்ட காவல்காரனுக்கு சிறப்பாக இசை அமைத்ததற்காக
இளையராஜாவிற்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கிய உள்ளம்.
1978 ஆம் ஆண்டு
‘இனிக்கும் இளமை’ என்ற திரைப்படத்தில்
ஒரு கௌரவத் தோற்றத்தில் நடித்தார்.
இன்று தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினர்
மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற கௌரவம் கிடைத்திருகிறது
MGR பெயரில் புரட்சியையும், கருணாநிதியில் இருந்து கலைஞரையும்
சேர்த்து புரட்சி கலைஞர் என்ற பட்டம் சூட்டிக்கொண்டார்.
1993 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்
இவரது ரசிகர் மன்றத்தினர் சுயேச்சையாகப் போட்டியிட்டனர்.
அவர்களில் பலர் வெற்றிபெற்றனர் அவர்களின் வெற்றியே
2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் தொடங்க அவருக்கு தைரியம் தந்தது
2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம்
தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினரானார்.
இவர் கட்சியைச் சேர்ந்த மற்ற வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.
2011 இரிஷிவந்தியம் தொகுதியிலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இத்தேர்தலில் அவரது கட்சிக்கு எதிர்க்கட்சித் தகுதி கிடைத்தது.
1990 களில் தொண்டு செய்ய தொடங்கினார்
தனது சம்பளத்திலிருந்து சக சினிமாத் தொழிலாளர்களுக்கு சங்கங்கள் மூலமாக வழங்கி வருகிறார்
கார்கில் நிதி, ஒரிசா வெள்ள நிவாரண நிதி, குஜராத் பூகம்ப நிதி, பள்ளி தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் குடுமப்ங்களுக்கு நிதி, சுனாமி பேரழிவிற்கு நிதி, திருமண நிதி என பட்டியல் நீண்டது போல்
தன் கட்சிக்கென்று பெரிதாய் ஒன்றும் கொள்கை இல்லாததால்
இலாப கணக்கிட்டு கூட்டணி முடிவையும் நீண்டுகொண்டேயுள்ளார்
சினிமாவில் கதா நாயகனாய் வெற்றிபெற்றவரால்
அரசியலில் சிரிப்புக்கு பஞ்சமில்லை
தயவுசெய்து கூட்டங்களில் பேசா பொம்மையாய் இருந்தால் அவருக்கு நல்லது
அவரது மனைவியை பேசவைத்து பார்க்கட்டும் சகித்திருப்போம்
இல்லையேல் சிரித்திருப்போம்

கட்டுப்பாடு

கட்டுப்பாடு
--------------------
உடல் மற்றும் மனம் சார்ந்தே
செயல்கள் நிர்னயிக்கப்படுகிறது
மௌனம் மனதை நெறிபடுத்தும்
எல்லாமே ஒர் எல்லைக்குள் கட்டுப்பட்டால்தான் நிம்மதிகிட்டும்
எல்லைகடந்தால் தொல்லைதான் எட்டும்
கட்டுப்பாடு என்பது
ஓர் கண்கட்டுவித்தை
மனிதர்கள் சந்தர்ப்பத்திற்காக
காத்திருக்கிறார்கள்
சந்தர்ப்பம்
கிடைக்கும்போடது தவறிவிடுவார்கள்
இந்தியாவிலிருந்து பாகிஸ்தான்
பிரிவினையின் போது
முதல் நாள்வரை மசூதிகளிலும்
கோயில்களிலும் பிரார்த்தனை
செய்துகொண்டிருந்தார்கள்
பிரிவினை என்றதும்
அகப்பட்டதையெல்லாம் அபகரித்த கள்வர்கள்
கண்ணில் கண்ட பெண்களையெல்லாம் கற்பழித்தனர்
தேசத்தின் தெருக்களில்
கீதையும் குரானும்
காமம் செய்துகொண்டிருந்தது
சந்தர்ப்பம் கிடைத்தவுடன்
மனிதன் மிருகமாகிவிடுகிறான்
மதம் காவலாகிவிடுகிறது
படித்தவனே தனிமையில்
அதிகம் தவறுகிறான்
படிக்காதவன் கூட்டத்தில் நிறைய
தவறு செய்கிறான்
கூட்டம் தன்னை அடையாளம் காணாது
என்ற தைரியம்
தனக்குள் இருக்கும் மிருகத்தை
கட்டவிழ்த்துவிடுகிறான்
வன்முறை வளர்கிறது
காட்டாறுகளால் பயிர்களுக்கு என்றும் பயனில்லை
கடலை அடைந்துவிடும்
அடைக்கிவைக்கப்பட்ட அணை நீரே
பசி தீர்க்கும்

சனவரி 26

திருட்டுப் பழம் / சனவரி 26
----------------------------------------------
இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும் 26 சனவரி
1930ஆம் ஆண்டு இந்தியவின் பூர்ண விடுதலை அறைகூவலை காந்தி அறிவித்த நாளை நினைவுகூர
சனவரி 26 ஆம் நாள் காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
2 ஆண்டுகள், 11 மாதங்கள், 166 நாட்கள் பி ஆர் அம்பேத்கர் தலைமையில்
308 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில்
நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.
குடியரசு என்பதற்கு நேரடிப் பொருள் குடிமக்களின் அரசு.
மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் மூலம் தங்களுடைய தலைவனைத் தேர்ந்தெடுத்து அவர்கள்
ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசுநாடு.
நமது அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொண்ட நாள் 1950 ஜனவரி 26.
300 ஆண்டுகள் நடந்த அடிமை ஆட்சியிலிருந்து மக்களாட்சி பிறந்த நாள்
அன்னியத்துணியின் மோகம்
துணிவிக்க வந்தவனிடம் தேசத்தை விற்றுவிட்டோம்
போராட்டம், ஆட்சேபம், ஆத்திரமூட்டல் சவால் இல்லாமல்
தானாக கிடைப்பதால் சுவாரசியமும்
ரசிப்புத்தன்மையும் குறைகிறது
பணம்கொடுத்து வாங்கிய பழங்களைவிட
திருட்டு பழம் சுவையாகிறது
உலக அழகி மனைவியாயிருந்தாலும்
பக்கத்துவீட்டு குரங்குகளோடு மனம்
மரம் விட்டு மரம் தாவிக்கொண்டுள்ளது
மறைக்க மறைக்கத்தான்
திறக்கத்துடிக்கிறார்கள்
விக்டோரியா மகாராணி காலத்தில்
காலின் விரல்கள்கூட வெளியே தெரியாத அளவிற்கு
ஆடை அணியவேண்டுமாம்
கட்டைவிரல் திறந்தாலே காமம் வெடித்துவிடும்
என்றார்கள்
இப்போதோ பாதி நிர்வாணத்தில்
உலகம் நடமாடுகிறது
இருந்தும் காமம் கரைதாண்டவில்லை
யாறும் 1000 மனைவிகளோடோ
100 வைப்பாட்டிகளோடோ வாழ்வதில்லை
ஒற்றை மனைவியோடோ அல்லது பிரமச்சாரிகளாகவோதான் வாழ்கிறார்கள்
ஆங்கிலேயர்களை அப்புரப்படுத்த முடிந்த நம்மால்
அடிமைத்தனத்தை அப்புரப்படுத்த முடியவில்லை
துண்டு துண்டாய் இருந்த இந்தியாவை
வியாபாரம் செய்யவந்தவனிடம்
விலை போனார்கள் இந்தியர்கள்
வளத்திற்காய் நாட்டின் செல்வங்களையும்
மானத்திற்காய் நாட்டின் பெண்களையும்
களவாடினார்கள் மன்னர்கள்
பெண்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும்
கெளரவத்தின் அட்டையாளமாய் வைத்திருந்தனர் இப்போது
எதிரியை அவமானப்படுத்த பெண்களை கவர்வதில்லை
அவமானம் இங்கே தேசிய கீதமாகிவிட்டது
செல்வத்திற்காகவும் செல்வாக்கிற்காகவும்
வியாபார யுத்தம் நடக்கிறது
மறுபடியும் வியாபாரக்கைகள்
தேசத்தின் துகிலுரிக்க
தீயாய் துடித்திருக்க
அரசியல்வாதிகள் கற்பூரமாய் காத்திருக்கிறார்கள்
கா(கூ)ட்டிக்கொடுப்பதற்கு.

அறிவு

அறிவு
----------
சிந்தனையற்ற நிலைதான் பேரின்பம்
ஏசு சொல்கிறார்
ஈடன் தோட்டம் காத்துக்கிடக்கிறது
அறிவை துறந்தவர்களுக்காக
இறைவனின் இராஜ்யம் காத்துக்கிடக்கிறது
சிந்திப்பவர்களை ஈடன் தோட்டம்
ஏற்பதில்லை
அறிவு என்பது ஓர் கடன் வாங்கிய
செல்லாக்காசு
மனப்பாடம் செய்யப்பட்ட இறந்த காலத்திற்கு
சொந்தமானது
மனம் ஓர் குப்பைத்தொட்டி
நினைவாற்றல் என்பது குப்பைத்தொட்டியில்
குப்பையை கிளறும் ஓர் நாய்
ஞானம் உங்களுக்குள் மலர்ந்து
எழுந்து உங்களின் சொந்த மூலத்திலிருந்து
உருவானது
அறிவு நினைவாற்றல் மூலம் உருவானது
ஞானம் தியானத்தில் மலர்வது
அறிவாளி கேள்விக்கு பதில் தருவான்
ஞானி கேட்பவர்க்கு பதில் தருவான்
ஞானிகளின் கடமை அறிவிலிருந்து
ஞானத்தை காட்டுதலே
படித்துக்கொண்டே இருப்பவர்களால்
கேள்வி கேட்க முடியாது
மறுப்பதற்கும் சந்தேகம் கொள்வதர்கும்
ஓர் சிறப்பு நிலை வேண்டும்
கோழைகளால் சந்தேகமோ கேள்வியோ
கேட்கத்தெரியாது
அதற்கும் தைரியம் வேண்டும்
மதவாதிகளுக்கு வாழ்க்கையைவிட
வார்த்தைகளின் மேல் நம்பிக்கையுண்டு
எப்போதும் ஜபித்துக்கொண்டே இருப்பார்கள்
எதிரில் ஏசுவே வந்தாலும்
கண்டுகொள்ளமாட்டார்கள்
மூடர்கள் விளக்குகளைத்தான்
கைபற்ற நினைக்கிறார்கள்
ஓளியையல்ல

பொங்கல்

பொங்கல் நன்றி சொல்லும் திரு நாள்
ஓரறிவு முதல் தனக்கு உதவிய
எல்லா உயிர்களுக்கும் நன்றி சொல்லும் விழா
நன்றி மறந்தவர்களை ஒதுக்கிவிடுங்கள்
மாட்டை அவிழ்த்துவிட்டு மடி தேடும் மனது
கொம்பை சீவி விட்டு கை நீட்டும் வீரம்
வளர்த்து எடைபார்த்து விலை பேசும் அறிவு
வீரம் என்பது விலங்குகள்மேல் காட்டுவதல்ல என்கிறார்கள்
இது ஓர் சமூக வழக்கம்
எளியோர் பன்பாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல்
நாம் விழித்துக்கொள்ளவில்லை என்றால் இது தொடரும் ...
நம் உணவு, உடை, உறவு, படிப்பு,
விவசாயம், வேலை, திருமணம், கலை, பண்பாடு, சட்டம், ஆட்சி
என எல்லாவற்றிலும் ஆதிக்கச்சக்திகள்
எதை விரும்புகிறார்களோ அதுவே நிறுவப்படுகிறது
தன் விருப்பங்களுக்கு இடமில்லை
பொதுமையை நோக்கிய நகர்வு
இது சாத்தியமில்லை என்பதற்கு உலகில் பொதுவுடமை தோற்றதே உதாரணம்
ஒவ்வொரு உயிர்களும் வெவ்வேறாகவே தனித்தன்மையுடன் பிறக்கின்றது
ஒரே வீட்டுப்பிளைகள்கூட வேறு வேறு திறமைகள் உறுவங்களில்தான்
வேறு வேறு நிலைகளில்தான் இருக்கிறார்கள்
நம்மாள் முடிந்தது கல்விக்கூடங்களின் ஆடைகளில்மட்டும்
பொதுமைபடுத்தமுடியும் பள்ளி முடிந்ததும்
தனிமைத்தொடரும் தனித்துவமே சாதிக்கும்
அவரவர் வாழ்வை அவரவர் வாழட்டும்
அத்துமீறுதல் அபாயம்
எல்லோறும் சைவமாக மாறினாலும்
எல்லோறும் அசைவமாக மாறினாலும்
உலகில் உணவு பஞ்சம் வந்துவிடும்
இந்தியாவை உலகம் ஓர் சந்தையாக பார்க்கிறது
அவர்களின் பொருட்கள் விற்பனையாகவேண்டும்
அதற்கு நம்மூர் அரசியல் மற்றும் வியாபாரிகள்
விலைபோகிறார்கள்
போகி என்பது போக்கி என்பதாகும்
பழையதை போக்க வேண்டும் நம்மை புதுப்பித்துக்கொள்ள
பொருள்களை மட்டுமல்ல சிந்தனையிலும்
செயலிலும் புதுமைவேண்டும்
மனம் அறிவு சார்ந்த குப்பைகளை
கொலுத்தும் திரு நாள்
நம் அறிவுக்கு எது புதுமையோ
மனதுக்கு எது உண்மையோ
அவைகளுக்காக உயிர்ப்புடன் வாழலாம்
மாடு பிடித்தல் பழமை வீரமற்ற செயல் என்ற வாதமிருந்தாலும்
காளைகளையும் நம்மின மாடுகளையும்
காக்கும் கடமையும் அறிவும் எல்லோர்க்கும்
விழிப்புணர்வு தந்துள்ளது புதுமை
காளைகளை அடக்கமுடியாதது தோல்வியல்ல
அன்னியரிடமிருந்து நம் பன்பாட்டு விதைகளை
காப்பதில் தூங்கிய நம்மினம் விழிப்படைந்ததே நமது வெற்றி

மதம்

மதம்
+++++
வாழ்வதற்கான வழிகாட்டுதல் அல்ல
மரணத்திற்கு அப்பால் வழிகாட்டுகிறது
வாழ் நாளைவிட கல்லறைகளின்
புகழ் பாடி கை நீட்டி அழைக்கும்
மரணத்தின் ஊஞ்சல் மதம்
மரண பயத்தை மனிதனில் பழக்குவது மதம்
வயதனவர்களின் நம்பிக்கைகுறியதாய்
மரணத்தை எதிர்நோக்கி உள்ளவர்களும்
மரண பயத்தில் உள்ளவர்ளும் நிறைந்த
நம்பிகையிழந்த பிணங்களின் கூட்டமும்தான்
கோயில்களை தேடுகின்றனர்
கோரிக்கைகளுடன்
பொய்களின் மேல் கட்டப்பட்ட கோபுரங்கள்
மத அமைப்புகள்
மனிதனை அடிமைபடுத்தவேண்டிய
நோக்கோடு கோயில் மசூதி மடாலயம் தேவாலயங்கள்
கட்டமைக்கப்பட்டுள்ளன
இத்தனை குருமார்கள் துறவிகள் பக்தர்கள் இருந்தாலும் இந்த
உலகம் ஏன் இன்னும் தெய்வீகத்தன்மைபெறவில்லை
எல்லாம் சுய நலத்தின் சூது
பொது நலமின்மை அச்சம் அடிமைபடுத்துதல் போன்ற
மதங்களின் நோக்கமே
மனிதன் புதிய புதிய கடவுளையும்
மதத்தையும் தேடிக்கொண்டேயுள்ளான்
கிடைக்காதவன் மதுவில் மயங்கிக்கிடக்கிறான்
தற்காலிக நிவாரணங்களையே மதம்
செய்கின்றன நிறந்தரமான தீர்வுளை சொல்வதில்லை
பொய்யான நம்பிக்கை விதைகளை
பாறையில் விதைப்பது மதங்கள்
ஆசையின் போதையில் அழைத்துச்செல்கிறார்கள்
பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத்தேடி
பெண்கள் கோயில்களிலும்
ஆண்கள் மதுக்கடைகளிலும் விழுந்து கிடக்கிறார்கள்
மதங்கள்
வாழ்வியலை போதிக்காது
மரணத்தை மட்டுமே போதிக்கிறது

புலரட்டும் புத்தாண்டு

புலரட்டும் புத்தாண்டு
பொய்யும் புரட்டுமே
பிழைப்பாகி போன உலகில்
உண்மயும் அன்பும்
தப்பித் தழைக்கட்டும்
பாசமானவனை பைத்தியம் என்கிறார்கள்
காசுமானவனை கடவுள் என்கிறார்கள்
நாணமற்ற ஓர் சமூகத்தை
கட்டமைத்துக்கொண்டுள்ளோம்
லஞ்சம் வாங்குவது அதிகாரத்தின் அலுவலாகிப்போனது
சிறை செல்வது தியாகமாகிவிட்டது
ஜாதியில் பெருமை பேசுகிறார்கள்
மது அருந்துவது நாகரீகமாகிவிட்டது
உடல் தெரியாது ஆடை அணிவது அனாகரீகமாகிவிட்டது
உழைப்பே அவமானகிவிட்டது
எழுதிவைத்துக்கொள்ளுங்கள்
திருமணமாகாமலே குழந்தை பெருவது
நாகரீகமாகப்போகுது
திருமணமண்டபங்கள் விடுதியாகலாம்
எவற்றிக்கெல்லாம் வெட்கப்பட்டோமோ
அவைகளை வெட்கமேயில்லாமல் கொண்டாடிக்கொண்டுள்ளோம்
தனிமனித ஒழுக்கமெல்லாம்
தரம்கெட்டுப்போனதற்கு
சுய நலம் மட்டுமே காரணமானது
சுய நலம்பெற்றெடுத்த இரு பிள்ளைகள்
ஆன்மீகமும் அரசியலும்தான்
இரண்டிலும் மக்களுக்கு தெளிவில்லாதவரை
நமது விடிவெல்லாம் நாளும் இருளில்தான்
தன்னையறிதலுக்காய் ஆலயங்களுக்கு செல்பவர்கள்
அடுத்தவரின் மனம் சஞ்சலப்படுத்துவதாய் சலனப்படுத்துவதாய்
ஆடைகளின் கட்டுபாடுகளுக்காய்
சட்டம் போடுகிறார்கள்
ஆனால் அரை நிர்வாணமாய் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்
ஆடை மட்டுமா மனதை சஞ்சலப்படுத்துவதாய் சலனப்படுத்துவதாய் உள்ளது ?
ஆபரணங்களை என்ன செய்வது
கடவுளை தரிசிக்க கழுத்து நிறைய நகைகள் எதற்கு
முற்றும் துறந்த முனிகளுக்கும்
எல்லாம் கடந்த கடவுளுக்கும்
தங்கத்தால் ஆபரணம் எதற்கு
சிலை செய்யும்போதே ஆபரணமும் ஆடையுடனும்தான்
செய்கிறார்கள் சிற்பிகள் அதற்குமேல் தங்கத்தாலும் பட்டாலும்
சஞ்சலப்படுத்துவதும் சலனப்படுத்துவதும் எதற்கு
சட்டப்படி தடை செய்யப்பட்டால்
முதலில் தண்டிக்கப்படுவது சிலைகளைதான்
எளிமையின் உருவான இறைவனுக்கு
ஒரு நாள் குளியல் செலவு 1 லட்சம் ரூபாய்
திருமலையின் வரவு செலவு கணக்கைப்பார்த்தால்
இந்தியா ஏழை நாடென்று யாறும் நம்பமாட்டார்கள்
ஆனாலும் நாம் ஏழைகள்தான் நம் தலையை அடகுவைத்து
அரசியல்வாதிகள் கடன் வாங்கிவிட்டார்கள்
ஓர் இந்தியன் பிறப்பதற்கு முன்னே
கருவிலே கடன்காரணாகிறான்
ஈராக்கின் யுத்தத்திற்கு முன்
அமெரிக்காவின் இரானுவ தளவாட வியாபாரம் 30%
போர் நடந்து முடிந்தபின் 59% உலக இரானுவ தளவாட வியாபாரச்
சந்தையை அமெரிக்கா கைபற்றியது
முட்டாள் மூன்றாம் உலக நாடுகள்
ஆயுதம் வாங்கி குவித்தன
ஆயுதம் வாங்க கடனுதவியும் அமெரிக்காவே தந்தது
இரட்டை வருமானம் ஆயுதமும் விற்பது
வட்டிக்கும் பணம் கொடுப்பது இது இல்லாது
ஈராக்கின் எண்ணை கிணறுகளை தன்வசப்படுத்தல்
இது உலக அரசியல் உள்ளூர் அரசியல்
உங்களுக்கே தெரியும்
தெரியாவிட்டால் தேர்தல் வருகிறது
தெரிந்துவிடும்
ஆன்மீக அதிகாரமும் ஆன்மீக அடிமைத்தனமும்
அரசியல் அதிகாரமும் அரசியல் அடிமைத்தனமும்
நாணமற்ற நாகரீகத்தை புத்தாண்டுகளின்
தொடக்கத்தில் கையில் மதுபாட்டில்களுடன்
நிதானமில்லாமல்லாமல் கொண்டாடிக்கொண்டுள்ளனர்

மேய்ப்பனைத்தேடும்

யூத மண்ணிலே
ஏசுவின் விதைகள்
கல்லறைகளில் கிடந்த அவமானச் சிலுவையை
கழுத்தினில் தொங்கும் புனிதமாக்கினாய்
லாசரை மரணத்திலிருந்து உயிர்பித்தாய்
நீரை மதுவாக்கினாய்
குருடரை பார்க்கச்செய்தாய்
முடவனை நடக்கச்செய்தாய்
கடலின் அலைகளில் நடந்துகாட்டினாய்
பிதாவே உன் பிள்ளைக்குப்பிறகு
ஏவறும் அற்புதம் செய்ய வரவில்லை
பழங்கதை பேசியே மதவாதிகளால்
மதம் வளர்க்க முடியவில்லை
நீ வருவாய் என்ற நம்பிக்கையில்
உயிர் பிடித்து காத்திருக்கிறார்கள்
மேய்ப்பன் இல்லாத மந்தைகளாய்
உன் பிள்ளையின் இறப்பிற்குப்பிறகும் கன்னிமேரிகள்
காத்திருக்கிறார்கள் கற்பமடைவதற்கு
எந்த அதிசய விண்மீன்களும் இதுவரை வழிகாட்டவில்லை
எந்த அசிரிரியும் வாய்திறக்கவில்லை பூமியில்
கயவர்கள் நிறைந்ததால்
கடவுளே உனக்கு மனமில்லை
பூமிக்கு இன்னுமொரு பிள்ளையை அனுப்பிவைக்க
இப்போது சிலுவைகள் தேவையில்லை
கருவிலே கல்லறை கட்டிவிடுவார்கள் கயவர்கள்
இயேசு 13- 30 வயதுவரை இந்தியாவில் உலவியதாகவும்
இங்கிருந்தே ஞானமடைந்ததாகவும் கூறுகிரார்கள்
பின் தன் மக்களுக்காக தொண்டாற்ற
30 வயதில் இயேசு யோர்தான் ஆற்றில் யோவானிடம் ஞானஸ்நானம் பெற்றார்
பின் பாலைநிலம் சென்று 40 நாள் நோன்பிருந்தார்
அப்போது சாத்தானின் சோதனைகளில் மரணம் வென்றவர்
மானிட சூழ்ச்சியால் மரணம் தொட்டார்
இரவு உணவளித்து திருத்தூதர்கள் பன்னிருவரோடு
தன் காலடிகளையும் கழுவிய ஏசுவின்
காலை வாரிவிட்டவன் யூதாஸ்
முத்தத்தால் குற்றம் செய்தவன்
இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்துவிட்டான் 33 காசுக்காக
பிலாத்துவால் இயேசுவின்மீது குற்றம் காணமுடியவில்லை
ஆனால் யூத மதக்கும்பலுக்கு பயந்து இயேசுவை சிலுவையில் அறைய
தீர்ப்பு திருத்தப்படுகிறது
காசு வாங்கிய யூதாசுக்கு மனமிருந்தது வருந்தி செய்த தவறுக்காய்
தூக்குப் போட்டுக்கொண்டான்
பரலோக பிதாவே இங்கே பல யூதாசுகள்
காசுக்காக தனி நபரை மட்டுமல்ல
தேசத்தையே காட்டிக் கொடுக்கிறார்கள்
எளியோரும் இல்லாதோரும்தான் தூக்குப் போட்டுக்கொள்கிறார்கள்
காட்டிக்கொடுத்த காசால் சட்டத்தை விலைபேசிவிட்டார்கள்
மார்ச்சு 25ஆம் நாள் இயேசு மரியாவின் வயிற்றில் கருவானார்
டிசம்பர் 25ஆம் நாள் இயேசு மண்ணில் பிறந்தார்
தன்னால் இந்த உலகத்தில் அவமானப்பட்ட தாயின் மீது
அளவுகடந்த அன்புவைத்தவர் சிலுவையில் தொங்கும் போது
தாயைக் கவனித்துக்கொள்ளுமாறு சீடருக்குப் பணித்ததார்
இயேசு உயிர்பெற்றெழுந்து முதலில் காட்சியளித்தது
விலைமகள் மகதலா மரியாவிடம்தான்
உயிர்பெற்றெழுந்த இயேசுவை சீடர் தோமா
தம் கைகளால் தொட்டுப்பார்த்தாலொழிய நம்பப்போவதில்லை என்றார்
எட்டு நாள்களுக்குப் பின் இயேசு மீண்டும் தோன்றியபோது
தோமா இயேசுவைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" என்றார்
இயேசு அவரிடம் என்னைக் கண்டதால் நம்பினாய்.
காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்றார்
இயேசு இறுதி முறையாகத் தோன்றியது நாற்பதாம் நாள்
அன்றே அவர் விண்ணேகினார்
யூதம் இயேசுவை கடவுளாக, கடவுளிடம் மத்தியஸ்தம் செய்பவர்
மீட்பரின் இறைவாக்குகளை நிறைவேற்றவோ அல்லது
மீட்பருக்குரிய ஆளுமை தகமைகளைக் கொண்டிருக்கவோ இல்லை என வாதிடுகிறது
இசுலாம்
இயேசு மக்களை வழிநடத்த அனுப்பப்பட்ட கடவுளின் தூதராக,
மீட்பராக, இறை தூதராக, கடவுளின் செய்தியை பரப்ப வந்தவர் எனவும் வலியுறுத்துகிறது.
இயேசு கடவுளின் அவதாரமோ, கடவுளின் பிள்ளையோ இல்லை எனக் கருதுகிறது.
உலகில் ஓரே கடவுளும் அவருக்கு இணையாக துணையாக யாறும் இருப்பது உருவ வழிபாடாகக் கருதுகின்றது.
இயேசுவின்மீது நம்பிக்கை வைப்பது ஒரு முசுலிமாக இருக்கத் தேவையானது.
ஏனைய இறை தூதர்கள் போல் இயேசுவும் ஓர் முசுலிமாக கருதப்படுகிறார்.

பார்வை

பார்வை
++++++++
விழிகள் வேறானாலும்
பார்வை ஒன்றே
கடவுள் சிலைகள்
அழும் குழந்தைகளுக்கு ஆறுதல் பொம்மைகள்
இல்லாத உருவத்திற்கு உறுவகம் கொடுத்து
தர்க்கம், தத்துவம், காவியம், ஓவியம்
ஆடல் பாடல், ஆர்பாட்டம், திருவிழா
குதூகலம் கொண்டாட்டம், ஊர்வளம்
பல்லாக்கு, பவனி என போலியாய் கொண்டாடி
பொய்யாய் வாழ்கிறோம்
நிழலும் நிஜமும்
பொய்யும் உண்மையும்
கடந்து செல்லத்தான் பிறந்துவந்தாய்
உயிர்த்து வந்தது இறக்கத்தான்
எழுந்து வந்தது வீழத்தான்
நடந்து வந்தது படுக்கத்தான்
ஆட்சியடைந்தது இழக்கத்தான்
எதுவும் இல்லாது பிறந்து
எல்லாமும் அடைந்து
எதுவும் இல்லாது இறக்கின்றான்

காதல் கல்லறையில்

திருமண பந்தம் ஓர் நிர்பந்தம்
சம்மந்தபட்டவர்களை (இருவர்) தாண்டி ஒர்
சமூக அக்கரை உண்டு நிச்சயக்கப்பட்ட திருமணத்தில்
காதல் மணங்களில்
தவிப்பும் பரபரப்பும் இருக்கும்
சரியும் தவறும் கண்களுக்குத் தெரியாது
ஒரு வித மயக்கத்தில் இருப்பார்கள்
கனவும் தூரமும் அழகானது
அருகாமை கனவை கலைத்துவிடும்
கலைந்த கனவு பிரிவினைத்தேடும்
பணம் தேடும் வாழ்வில்
மனம் செத்துப்போகும்
காலத்தை தொலைத்தவன்
கடிகார முட்களை துரத்திக்கொண்டுள்ளான்
எண்களோடுதான் விளையாட்டு
திருமண ஊர்வலத்தில்
கல்லறையில் காதல்
அனாதையாய் குழந்தைகள்

பேய்கள் உண்மையா ?

பேய்கள் உண்மையா ?
+++++++++++++++++++
மனம் இடைவிடாது இயங்கிக்கொண்டேயுள்ளது
மனதை ஆட்கொள்ளத்தெரியாதவர்கள்
புகைக்கிறார்கள், குடிக்கிறார்கள்
இப்படி ஏதாவது ஒன்றிடம் சிறைபட்டு போகிறான்
பெண்கள் சமூக கட்டுபாட்டுக்கு பயந்து
வெற்றிலை போடுவது யாரிடமாவது சதா பேசிக்கொண்டே இருப்பது
ஆள் கிடைக்கவில்லை எனில்
கோயில் சிலைகளோடு பேசிக்கொண்டே இருப்பார்கள்
உடலும் மனமுமாகவே
மனிதனின் இயக்கம்
தன்னையே தள்ளி நின்று பார்ப்பது
வாட்ச்ஃபுல்னெஸ் (Watchfulness)
சாட்சியாக பார்ப்பது
விட்னெஸ் (Witness)
மனம் குழம்பிய நிலையில்
சிலைகள் தெய்வமாகவும்
நிழல்கள் பேயாகவும் தெரியும்
மனத்தெளிவுள்ளவன் பூசாரியிடமோ
மந்திரவாதியிடமோ செல்வதில்லை
பேய்கள் உண்மையா
1 : திடீரென்று நம் கண்களுக்கு தோன்றி மறையும் நிழல் உருவங்கள் போன்ற நிகழ்வுகள் நடக்க காரணம், நம் மூளையின் ஒரு வகையான மின்சார தூண்டல் தானாம் (Electric Stimulation Of The Brain)..!
2 : ஆவிகளுடன் நடத்தப்படும் உரையாடல்களின் போது நமக்கு கிடைக்கும் பதில்களுக்கு காரணம் பேய்களோ ஆவிகளோ இல்லை - இடியோமோட்டார் எஃபெக்ட் (Ideomotor Effect) தான் காரணம்..! தன்னை அறியாத நிலையில் ஏற்படும் உடல் அசைவுகள் சார்ந்த விளைவுகளை தான் இடியோமோட்டார் எஃபெக்ட் என்பர்..!
ஆவிகளுடன் தொடர்பு கொள்ள பெரிதளவில் பயன்படுத்தப்படும் ஓவ்ஜா போர்ட்டில் (Ouija board) நம் கைகள் தானாக நகர்வதற்கும் அசைவதற்கும் காரணம் இந்த விளைவு தானாம்..!
3 : தானாக ஒரு பொருள் அசைகிறது என்றால் அதற்கு காரணம் ஏதோ ஒரு ஆவியின் சக்தி என்று நினைத்து விடாதீர்கள், அதற்கு காரணம் - இன்ஃப்ரா சவுண்ட் (Infrasound)..! அதாவது மனித காதுகளால் 20,000 ஹெர்ட்ஸ் (Hertz) வரையிலான சப்தங்களை மட்டும் தான் கேட்க முடியும். அதற்கு கீழ் இருக்கும் ஒலிகளை நம்மால் கேட்க முடியாது. ஆனால் அதை அதிர்வுகளாய் உணர முடியும், அப்படியான அதிர்வுகளால் தான், சில பொருட்கள் தானாக அசைய காரணமாகும்..!
4 : உங்களுக்கு வரும் ஆவிகள், பேய்கள் சார்ந்த ஆழ்ந்த சிந்தனைகள் மற்றும் கனவுகளுக்கு காரணம் - ஆட்டோமட்டிஸம் (Automatism)..! அதீதமான தன்னை மறந்த நிலையில் கற்பனைகளும், எண்ணங்களும் வேறொரு வழியாக நம்மில் நுழையும் விளைவு தான் ஆட்டோமட்டிஸம் எனப்படும்..!
5 : குறிப்பிட்ட அறையின் இடம் மட்டும் குளிர்ச்சியாக இருக்க காரணம், அங்கு ஏதோ ஆத்மா இருக்கிறது, பேய் வல்லுநர்கள் சொல்லும் 'கோல்ட் ஸ்பாட்' (Cold spot) என்று நினைக்க வேண்டாம் அது - டிராஃப்ட் (Draft) ஆகும்..! அதாவது, அடைத்தே கிடக்கும் அறைக்குள் இருக்கும் ஒவ்வொரு பொருள்களுக்கும் தனிப்பட்ட உஷ்ணநிலை இருக்கும். ஏதாவது சிறு வழியாக சில்லென்ற காற்று நுழையும் போது சக உஷ்ண நிலையோடு இணையாத குறிப்பிட்ட அந்த இடம் மட்டும் குளிர்ச்சியாய் தோன்றுமாம்.!
6 : கேமிராக்குள் தூசி படிந்தால் எடுக்கும் புகைப்படங்களில் நிழல் உருவங்கள் அல்லது தெளிவற்ற உருவங்கள் தெரிவது சகஜம். அதை ஆவி, பேய் என்று நினைக்க கூடாது..
7 : பாழ் அடைந்த பங்களாவிற்குள் சென்றவர் ஒருவேளை மரணம் அடைந்தால் அல்லது மாபெரும் குழப்பததிற்கு ஆள் ஆனால் அதற்கு காரணம் ஆவிகளோ அல்லது பேய்களோ இல்லை - கார்பான் மோனாக்சைட் பாய்சனிங் (Carbon Monoxide Poisoning)..!
அதிக காலமாய் அடைக்கப்பட்டு கிடக்கும் இடத்தில் கார்பான் மோனாக்சைட் உருவாவது சகஜம்தான். அது சுவாசக் காற்றுக்கு பதில் உள் சென்றால் மயக்கம், குழப்ப நிலை, அதிக பட்சமாக மரணம் வரை கொண்டு செல்லும்.
8 : நிஜமாகவே உங்கள் கண்ணுக்கு ஒன்றுமே தெரியாது, ஆனால் பல பேர் சேர்ந்து பேய், ஆவி, ஆத்மா என்று சொல்லும் போது உங்களால் அதை உணர முடியும். அது நிஜமான ஆவி இல்லை அந்த விளைவின் பெயர் - மாஸ் ஹிஸ்ட்டிரியா (Mass Hysteria)..!
9 : சில குறிப்பிட்ட இடங்களில் நாம் பலவீனாமாக உணர்வோம். அதற்கு காரணம் அங்கே ஆவிகளின் சக்தி அதிகம் என்று அர்த்தமில்லை - அதற்கு காரணம் ஐயன்ஸ் (Ions)
ஐயன்கள் இயற்கையாகவே வானிலை மாற்றங்கள் மூலம் உருவாகும் ஒன்றாகும். நெகடிவ் ஐயன்கள் (Negative Ions) நமக்கு அமைதியையும், ஓய்வையும் தரும், பாசிடிவ் ஐயன்கள் (Positive Ions) தலைவலி மற்றும் உடல் பலவீனத்தை தரும்..!
10 : நாம் இறந்து விட்டதை போலவும், நம் உயிரற்ற உடலை நாமே பார்ப்பது போன்றும் நமக்கு 'நிஜம் போன்ற' கற்பனை எண்ணங்கள் வர காரணம் பேய் உலகம் சார்ந்த விடயமல்ல - அது மூளைக்குள் ஏற்படும் க்வான்ட்டம் மெக்கானிக்ஸ் விளைவாகும் (Quantum Mechanics)
மேலே உள்ள காரணங்கள் பேய்களுக்குமட்டுமல்ல தெய்வங்களுக்கும் பொருந்தும்
பேய்கள் உண்மையானால் தெய்வங்களும் உண்மையே

பெண் விடுதலை

விடுதலை பெறு
விண்ணைத் தொடு
+++++++++++
உதட்டுக்கு மட்டும்
பூட்டிட திண்டுக்கல் சென்றவளே
விழிகளில் வழியுதடி
உதடுகளில் பொய்யும்
விழிகளில் உண்மையுமாய்
பெண்டகனின் ரகசியம் போல்
காப்பாற்றியதை விக்கிலீக் விழிகளில் கசியுதடி
உதடுக்கிருந்த வலிமை
இமைக்கில்லையடி
கற்பென்பதை தப்பாய்
கர்பிதம் கொண்டாய்
தேச துரோகி போல் உன் முகம்
முக்காடிட்டுக்கொண்டுள்ள போதும்
உன் முந்தானைமட்டும்
தப்பு செய்த தலைவன் சிறைக்கு
செல்லும் போது சிரித்து கையாட்டுவது போல்
சந்தோசம் கொள்கிறது
தொண்டையில் சிக்கிய வார்த்தைகளுக்கு
பூச்சி மருந்து அடித்ததால்
வரண்ட இதழ் வாடிப்போனது
கொஞ்சம் நீர்பாச்சு
உயிரோடுஅன்பை
ஒளிக்கவே பார்க்கிறாய்
ஒற்றை உயிரோடு முடிவதில்லை
வாழ்வு
முடிவெடுத்த பின்னே
தயக்கம் கூட தண்டனைக்குரியதுதான்
மோனம் பல நேரங்களில் பலம்
சில நேரங்களில் பலவீனம்
வீணை ஏந்திய பின்
உன் விரல்கள் நடுங்குவதேன்
நதியென நடந்து வந்து
வற்றிய பாலைவனமே
வானவில்லை வரையபுரப்பட்டவளே
வண்ணங்கள் உன்வாசலில் காத்துக்கிடக்கிறது
கார்காலம் கடந்து போய் விடும்
தூரிகை எடு
இணைவது மட்டுமே
இன்பமில்லை
வாழ்க்கை சுமையானபோது
பிரிவதும் இன்பம்தான்
விடுதலை பெறு
விண்ணைத் தொடு

இளைய ராஜா

காற்றோடு கானம் சமைத்து
காதுகளுக்கெல்லாம்
இசையால் விருந்தளித்தவன்
தன் இசை சேரமுடியாத
செவி கேளாதவர்களின் வயிற்றுக்கும் 
உணவளித்த உன்னதம்
உரிமையும் இழந்து
உடைமையுமிழந்த இலங்கை அகதிகள்
நிவாரணமாய் நிதி உதவிய பேருள்ளம்
தன் உடல் விற்ற காசை
மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த பாலியல் தொழிலாளர்கள்
வெள்ள பாதிப்பிற்காக நிதி வழங்கிய தாயுள்ளம்
ஏ அதிகாரவர்க்கமே
அணைதிறக்க ஆணைக்காக காத்திருந்து
அப்பாவிகளின் உயிர் தின்றது போதுமா
செயல்படாது தூங்கிவிட்டு
செத்தவனுக்கு குழி தோண்டுகிறீர்கள்
உங்கள் இதயங்கள் என்ன நஞ்சா
பஞ்சாயிருந்தாலாவது ஈரம்பட்டிருக்குமே
ஊரே தண்ணீர் எங்களின் இமைகளில்தான் ஈரமில்லை
எதைச்சொல்லி அழுவது
சேமிப்பை எல்லாம் வெள்ளம் தின்றதையா
மானம் மறைத்த உடைகளோடு
உயிர் தப்பிய ஓடிவந்ததையா
முன்னரே சொல்லி இருந்தால்
முடிந்தவரை காத்திருப்போம்
இருந்த இரு கையில் உயிர்பிடித்து ஓடி வந்தோம்
இப்போது வற்றியது தண்ணீர்மட்டுமல்ல
எமது எதிர்காலமும்தான்
ஒரு நபர் ஆட்சியில் அமைச்சரும்
அதிகாரியும் சம்பள பொம்மைகள்
ஓடி ஒளிகிறார்கள் உண்மையை ஒளிக்கிறார்கள்
காரணம் சொல்ல எண்ணி கதைகள் புனைகிறார்கள்
தூறலோடு தொடங்கிய மழை காலம்
வாழ்வை தின்று
மரண யுத்தம் நடத்தி முடிவுக்கு வந்துள்ளது
இயற்கையின் பேரிடரை எதிர்கொள்வது மனிதம்
இது செயற்கையின் பேரிடர்
தவறு செய்தவர்களை சட்டத்திற்குமுன் நிறுத்துங்கள்
ஏ அரசியல் வாதிகளே
இப்போதும் அரசியல் செய்யாதீர்கள்
பாலியல் தொழிலாளி உடலைத்தான் விற்றாள்
உங்களை போல் உள்ளங்களையல்ல

ஓஷோ

ஓஷோ
+++++++
குச்சுவாடா மின்சாரம் பாயாத
குக்கிராமத்தில் இந்த ஞான சூரியன்
உதித்தை உலகம் பரவசத்தோடு பார்த்தது
11-12-1931 பிறந்தார்
1974 ல் பூனாவில் ஆசிரமம் அமைத்தார்
1981 ல் அமெரிக்காவில் ரஜ்னீஸ்புரம் அமைத்தார்
அன்பை கடவுள் என்றான் இயேசு
வாழ்வே கடவுள் என்றான் ஓஷோ
இந்த அறிவுக்கடலில் கடவுள் முதல் காமம் வரை
தொடராக அலை அடித்துக்கொண்டே இருந்தது
கடவுளின் பெயரால் கடவுளை
அழிக்கும் அமைப்பு மதம்
ஜான் பால் போப்பை பைபிள் பற்றி விவாதிக்க
ஒரே மேடையில் அழைப்பு விடுத்தார்
அதிகாரம் எப்போதும் ஆன்மீகத்தின் அடிமை
பயந்துபோன போப் அதிபர் ரீகனிடம் சொல்லி
பொய் வழக்கு புனைந்து
1985 ல் அமெரிக்கா ஜெயிலில் அடைத்து
தாளியம் எனும் மெள்ள கொல்லும் விஷம் கொடுத்தனர்
19-01-1990 நரம்பு வெடித்து இறந்தார்
இந்த வாழ்வு
தன்னையறிதலின் தவம்
அறிதலை பிறர்க்கு உணர்த்தல்
முரண்பட்ட மனிதனே
முழுமையானவன்
நேற்றைபற்றி பேசுபவன்
நினைவாற்றல் உள்ளவன்
நிகழ்காலத்தில் உயிர்ப்போடு
பேசுபவன் நிஜத்தில் வாழ்கிறான்
மனமற்ற நிலைகளில்தான்
கடவுள் வாழ்கிறார்
இங்கு எதுவும் புதிதுமில்லை புனிதமுமில்லை
இன்றைய புதிது
நாளை பழையதாகிறது
இன்றைய கடவுள் நாளைய சாத்தான்
அறிவின் வெல்லத்தில்
எல்லாம் அடித்துச்சென்றுவிடும்
சொற்கம், நரகம், பரமபிதா, சாத்தான்
என்ற இருள்பயத்தில் இனி மதம் நடத்தமுடியாது
அறிவின் பேரொளியில்
எல்லாம் விளங்கிவிடும்
கணத்துக்கு கணம் வாழ்தலே பூரணம்
பயமும், குற்ற உணர்வும் மதத்தின் அடித்தளம்
அவ நம்பிக்கையே பயத்திற்கு காரணம்
இரண்டையும் ஒழித்தால் மதம் தானே ஒழிந்துவிடும்
மன தைரியமும் சுயசிந்தனையும்
ஆசையற்ற நிலை சரணாகதிதான்
கடவுளை அடையும் வழி
கோயில்கள் ஓர் குறுக்குவழி
கடவுளை அடையமுடியாத முட்டுச்சந்து
சடங்குகளும் சம்பிரதாயங்களும்
புனித நூல்களும் குழப்பம் ஏற்படுத்தும்
குழாயடி சண்டைகளால் எந்த குடமும்
நிறம்பப்போவதில்லை
நீர் விஷமாகிவிடும் குடங்கள் உடைக்கப்பட்டுவிடும்
கோயில்கள் ஓர் பொய்யான
ஆறுதல் தரும் கூடம்
பாமரர்களை ஏமாற்றி
எத்தர்கள் பிழைப்பு நடத்தும்
நியாமற்ற வணிக மண்டபம்
நான் முடியை தருகிறேன் நீ வைரத்தைகொடு
நான் பாவத்திற்கு மன்னிப்பு கேட்கிறேன் நீ சொற்கத்தை நீட்டு
நான் சில்லறை தருகிறேன் நீ சிகரத்தை காட்டு
இது மக்களையும் கடவுளையும்
முட்டாளாக்கும் முயற்சி
வெற்று மனங்களில்தான் இறைவன் இருக்கிறான்
எண்ணக்குப்பைகளில் இறைவன் இருப்பதில்லை
காணிக்கையாக கடவுள் கேட்பது
பூ, பழம் பாலல்ல எண்ணக்குப்பைகளை
அறிவுத்திரியில் எரித்திடுங்கள் தியானம்
உங்களை கடவுளிடம் கைபிடித்து அழைத்துச்செல்லும்
மந்திரம், தந்திரம், தோத்திரம்
ஜபம் வழிபாடு எல்லாம் கடவுளை அடையும் வழியல்ல
மெளனமே கடவுளின் மொழி அதுவே அவனின் வழி
அடக்கப்பட்ட உணர்வுகள்
சந்தர்பங்களுக்காக காத்திருக்கின்றன
வாய்ப்பு வரும்போது தன்னிலை மறந்து
மிருகமாய் வெளிப்படுகிறது

இராஜாஜி

இராஜாஜி
மெலிந்த தேகம் தெளிந்த சிந்தனை
தென்னகத்தின் பீஷ்மர்
மூதறிஞர், ராஜதந்திரி, தீர்க்கத்தரிசி
மகாத்மாவின் நெருங்கிய நண்பர்
பெரியார் தனக்கும் இராஜாஜிக்கும் உள்ள உறவை
கணவன் மனைவிக்கும் உள்ள உறவை போன்றது என்றார்
காந்தி இராஜாஜியை என் மனசாட்சியின் காவலர் என்றார்
இந்தியாவின் முதல் மற்றும் கடைசி
கவர்னர் ஜெனரல் இவர்தான்
நல்லான் சக்கரவர்த்திக்கும் சிங்காரம்மாளுக்கும் 10-12-1878 ல்
சேலம் மாவட்டத்தில் ஓசூர் வட்டத்தில் தொறப்பள்ளி கிராமத்தில் பிறந்தார்
தாயின் விருப்பப்படி அலர்மேலு மங்கையை 1898ல் மணந்து
தந்தையின் விருப்பப்படி சட்டம் படிக்க சென்னைவந்தார்
1900ல் சட்டம் முடித்து யாரிடமும் பயிற்சி மேற்கொள்ளாமல்
சேலத்தில் தலை சிறந்த வழக்கறிஞரானார்
1910ல் காந்தியை முதல் முதலாக சந்தித்தார்
காந்தியின் பெயரால் ஆசிரமம் அமைத்து
மதுவுக்கு எதிராக போராடினார்
சூரமங்களம் பங்கலா என்பது சேலத்தில்
பேய்வீடு என்று பேர் பெற்றவீடு
அதில்தான் குடிபுகுந்தார் இந்த அஞ்சா நெஞ்சன்
பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு மனைவி 1915 ல் இறக்க
தன் 5 குழந்தைகளுக்கும் தாயாகமாறி
மறுமண சிந்தனையின்றி குழந்தைகளை வளர்த்தார்
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிராய்
ஒத்துழையாமையை காந்தி அறிவித்தவுடன்
வழக்கறிஞர் தொழிலை புறக்கனித்து 1921ல் சிறை சென்றார்
1930 ல் உப்புச்சத்தியாகிரகத்திலும் பங்கெடுத்தார்
1933 ல் காந்தியின் மகன் தேவதாசுக்கு தன்
மகள் லெட்சுமியை மணமுடித்து
காந்தியின் சம்மந்தியானார்
மேற்கு வங்கம் கொந்தளித்த நிலையில்
எவறும் கவர்னர் பதவியை ஏற்க முன்வரவில்லை
ராஜாஜி கவர்னர் பதவி ஏற்று சரி செய்தார்
நேருவுக்கும் பட்டேலுக்கும் கருத்து வேறுபாடு
அதிகரிக்க அதை சரிகட்ட
இலாக்கா இல்லாத மந்திரியாக ராஜாஜி செயல்பட்டார்
பட்டேலின் மறைவிற்கு பிறகு
உள்துறை மந்திரியாக பதவியேற்றார் பின்
நேருவிடம் சொல்லிவிட்டு டில்லியைவிட்டு சென்னைக்கே வந்துவிட்டார்
இந்திய ஜனாதிபதி பதவியை துறந்து
தமிழத்தின் முதலமைச்சர் பதவி ஏற்றுக்கொண்டவர்
மதுவிலக்கு மசோதா, தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழையும் மசோதா
விவசாய கடன் மசோதாக்களை நிறைவேற்றினார்
உணவு பதுக்கலை தடுத்தார்
தீண்டாமை அகற்ற பாடுபட்டார்
ஆந்திராவிற்கு திருப்பதியை தந்துவிட்டு
சென்னையை தமிழ் நாட்டுக்குப் பெற்றுத்தந்தார்
பேச்சில் மிதவாதமும் செயலில் புரட்சியும் செய்தவர்
குலக் கல்வி கொண்டுவந்தது
அவரது தோழ்வியாக பார்க்கப்பட்டது
முஸ்லீம்கள் ஜின்னாவின் தலைமையில்
கொல்கத்தாவையும் பஞ்சாப்பையும் பிரித்து கேட்டு
வன்முறை பரவிய நேரம்
அதை முதலில் ஆதரித்தவர்
அதற்கான வரைவு திட்டத்தையும்
தீட்டிக்கொடுத்தவர் எல்லோராலும் முதலில் எதிர்க்கப்பட்டாலும்
பின்னாளில் காந்திஜியே ராஜாஜியின்
பாகிஸ்தான் திட்டத்தை ஏற்றுக்கொண்டார்
காங்கிரசிலிருந்து பிரிந்து சுதந்திரா கட்சியை
தொடங்கி திமுக வுடன் கூட்டு சேர்ந்து வென்று
தமிழகத்தில் காங்கிரசை வீழ்த்தி
அண்ணாவை முதலமைச்சராக்கினார்
25-12-1972 காலமானார்

மீண்டெழுவோம்

மீண்டெழுவோம்
++++++++++++++++
மேய்ப்பனை புறந்தள்ளி
ஏய்ப்பவனுக்கு ஓட்டளித்ததால்
மிதக்குது வெள்ளாடுகள் பாவம்
வெளுத்தது நரிகளின் சாயம்
அடுத்தவனின் அன்பளிப்பில்
ஆட்சியாளரின் முகமூடி
வெட்கமே இல்லாமல் ஓர்
விளம்பரத்தேடல்
மாற்றானின் பிள்ளைக்கு
மலடிகளின் முவரிகள்
நிவாரணத்தை நிர்வானமாக்கும்
நிர்வாக அடிமைகள்
தண்ணீர் ஏழை சென்னையில்
நீர் வீடு தேடி வந்தபோது
வீட்டைவிட்டே ஓடியதேன்
தார்போட்டு கார் ஓடிய சாலைகளில்
படகு பயணம் நடக்கிறது
மின்சாரம் தின்ற தண்ணீர்
வாய்பிளந்து நிற்கையில்
அறிவியல் தொலைந்துபோனதே
மொத்தமாய் திறந்தால்
சிங்காரச்சென்னை சீறழியும்
எனத்தெரிந்தே திறந்த நிர்வாகம் யார் பொருப்பு
செத்த உயிர்களுக்கு யார் பொருப்பு
காப்பாற்றுவார்கள் என நம்பியபோது
காணாமல் போனது ஓட்டு வாங்கிய கவுன்சிலர்கள்
மட்டுமல்ல உண்டியல் வசூலித்த கடவுளும்தான்
தெருவுக்கொரு திருக்கோயில்கள்
கடவுளெல்லாம் நீர் சமாதியில்
நீர் வடிந்தால் காப்பாற்ற மனித மடையர்கள் வருவார்கள் என்று
காத்திருக்கும் கற்சிலைகள்
கண்டுபிடிக்கப்பட்டது காப்பாற்றுவார்கள்
என்று நம்பி ஏமாற்றியவர்களையும்
செய்த செய்யாத குறைகளையும்
குடங்கள் தேடும் தண்ணீரையும் மட்டுமல்ல
கரைபுரண்டோடும் மனிதாபிமானத்தையும்தான்
நம்பிக்கையோடு மீண்டெழுவோம்

வித்யா சாகர்

தூசி புயலடித்து
சூரியன் கலங்காது
அணையா ஜோதியாக
அருட்பெரும் ஜோதியும்
அணையா விளக்காக
அண்ணா சமாதியும்
அணையா அடுப்பாக
சென்னை சிறைக்கு அடுத்ததாக
காசி நாடார் வீட்டு அடுப்புதான் எரிந்துகொண்டே இருக்கும்
சென்னைக்கு பிழைக்க வரும்
தென்னாட்டினரினருக்கு இவர்களின்
வீடுதான் புகலிடம்
பல தொழில் அதிபர்களுக்கு
முகவரி தந்தவீடு
தூசி புயலடித்து
சூரியன் கலங்காது
காசிப்புயல் காயங்களை
மருந்திடும் கரங்கள் உன்னது
வீழ்ந்துவிடும் மஞ்சு என
வீனர்கள் சொல்வதுண்டு
நெருங்கி நான் பார்த்ததுண்டு உன்
நிழல்கூட பயமறியாது என்று
நீயொறு நெருப்புப்பறவை
எல்லோறும் பிறந்து வியாபாரியாவார்கள்
நீ மட்டும்தான் வியாபாரியாவே பிறந்தாய்
ஒரு நிறுவனத்தை கட்டி எழுப்புவது
அவ்வளவு எளிதல்ல
24 மணி நேர சிந்தனையும்
தொழில் பற்றியே
உன் வியர்வையால் விளைனந்தது
இந்த மஞ்சு கோபுரம்
குறைகளும் குற்றங்களும்தான்
மனிதனின் உப பிறப்பு அதை
களைந்து வெள்வதுதான்
மானிட சிறப்பு
200 குடும்பங்களின் வாழ்க்கை
இருப்பது உன் பொருப்பு
நம்பிக்கை நிறைந்த நான்கு பேரை
உடன் வைத்துக்கொள்
ஊதியத்திற்காக மட்டுமல்லாது
உனக்காக பணிபுரிபவர்களாய் பார்த்துக்கொள்
உன் குறைகளை சொல்லச்சொல்
செவி கொடுத்து கேள்
கை தட்டும் காக்கைகள்
காணமல் போய்விடும்
மஞ்சுவை பற்றிய எதிர் நிலை
செய்திகள் வரும்போதெல்லாம்
நெஞ்சு நிம்மதி இழக்கும் அங்கு
6 வருடங்கள் பணிபுரிந்தது நான்
வீடுவாங்குவதற்கான தகுதியாக வங்கியில்
ஏற்றுக்கொள்ளப்பட்டது
மலரும் நினைவுகளாய் மறக்கமுடியவில்லை

பிரபாகரன்

பிரபாகரன்
++++++++++
நீ பிறந்த நாள்
குள்ள நரிகளின்
கொட்டமடங்கிய நன்னாள்
நம்மினம் காக்க
வரிப்புலி எழுந்து
வென்றதும் இன்னாள்
உன்னை புதைத்ததாய்
சொல்கிறார்கள்
நீ விதைக்கப்பட்டிருக்கின்றாய்
புத்தம் பூத்த பூமியில் இன்று
யுத்தம் பூத்தத் தாமரையா
தேயிலை கிள்ளி
செழிப்பாக்கிய நாட்டில்
சிங்கள நாய்கள் கிள்ளுக்கொழுந்தாய்
கிள்ளியெறிந்தனரே
வல்லரசுகளின் துணையோடு
வரிப்புலிகல் வீழ்ந்ததுவோ
நந்தவனத்தை நாசப்படுத்தி
வாய்க்கால் வரப்பெல்லாம்
மாமிச அறுவடை
பனிகளை சுமந்த
பூக்களும் புற்களும்
இரத்தத்துளிகள் சுமந்தன
வண்டு பறந்த
சோலைகலெல்லாம்
குண்டு பறந்து திரிந்தன
தென்றல் தழுவிய
தேசம் எங்கும்
மரண வாடை வீசின
மீன்கள் ஒதுங்கும் கரைகளில் எங்கும்
தமிழனின் பிணங்கள்
எங்களின் கார்காலம்
இரத்ததூரலோடு தொடங்கியதே
பட்டுப்போன மரங்களுக்கிடையே
நட்டுவைத்த எம்பிணங்கள்
சுள்ளிப்பொறுக்கிய காடுகளிளெல்லாம்
பிணங்களை பொறுக்குகிறோம்
கூறு கட்டி பிணங்களை
குழிக்குள் விதைக்கிறோம்
இனமும் மொழியும்
விடியலையெட்டும்
சுதந்திரம் பேசும்
குரலினிக்கட்டும்
வறண்ட உதடுகளில்
வெற்றிச்சிரிக்கட்டும்
சொந்தங்கள் பர்ர்த்து
நெஞ்சம் பனிக்கட்டும்
கடலின் பெருவெளியில்
கரைந்த எம் உயிர்த்துளிகள்
சுனாமிகளை சுமந்து வரும்

புத்தனின் முரண்

புத்தனின் முரண்
+++++++++++++++
ஏப்ரல் மாதத்தின் முதல் நாள் பெரும்பாலும்
நான் ஏமாறுவதில்லை ஆனால் இரண்டு ஆண்டுகளாய்
கார்த்திகையன்று ஏமாற்றப்படுகிறேன்
காலையில் நண்பர் ஆனந்திடமிருந்து
ஓர் இடம் பார்க்கவேண்டும் என அழைப்பு
இடம் காட்டுவது நண்பர் குருமூர்த்தி இவர்
கோடிகளில் மட்டுமே தொழில் செய்பவர்
சின்ன சின்னதாக இல்லாமல் ஒரே பரிவர்த்தனையில்
பல கோடிகளை குவிப்பதுதான் குறிக்கோள்
ஆனால் நண்பர் ஆனந்திடம் அவ்வளவு பணமும்
திட்டமும் இல்லையே என சந்தேகம் வந்தது
ஸ்ரீபெரும்புதூரைத்தாண்டி காஞ்சியை நோக்கி பயணிக்கும் போதுதான்
புரிந்தது இவர்கள் போவது திருவண்ணாமலை என்று
எனக்கு வறுத்தம்., உண்மையை சொல்லாமல் அழைத்துவந்ததால்
திட்டமிடாமல் ஒரு நாள் வீனாகிறதே என்று
அதற்கு நண்பர்கள் சொன்ன பதில் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை திருவண்ணாமலை தீபத்திற்கு என்று சொன்னால் வரமாட்டீர்கள் என்று
வாழ்வே அமுபவம் நிறைந்ததுதான்
என் பார்வையில் கோயில்களும் ஓர் சுற்றுலா தலமே
ஆனால் அமைதி, ஆனந்தம் தராத இடங்களுக்கு
திரும்பித்திரும்பி செல்வதில்லை
10 லட்சம் பேர் கூடிய கூட்டத்தில் இறை உணர்வோடு சென்று
இறையருள் பெற்றுவந்தவர்கள் எத்தனைபேர் என்று தெரியவில்லை
நான் பார்த்தவரை எல்லாம் வேடிக்கை பார்க்க வந்த விளையாட்டு மனிதர்கள் இங்கு வந்தால் புண்ணியம் வரும் பாவம் போகும் என்று
எதையோ எதிர்பார்த்து வந்தவர்கள்
கடளுளை தரிசிக்க வந்தவர்களின் கார்களில்
திரைப்பட பாடலும் திரைப்படமும் ஓடிக்கொண்டிருந்தது
வெட்டிப்பேச்சும் அரசியலும்
அடுத்த ஆட்சியை பிடிப்பது யார்
தமிழக கட்சியின் தலைமைக்கு வருவது நமிதாவா நக்மாவா இல்லை
குஷ்புவா என பட்டிமன்றம் நடக்கிறது
புத்தரிடம் ஒரு ஆன்மீகவாதி சென்று
கடவுள் உண்டா இல்லையா என்றான்
புத்தர் கடவுள் இல்லை என்றார்
அடுத்து ஓர் நாத்திகவாதி அதே கேள்வியை
கேட்டான் புத்தர் கடவுள் உண்டு என்றார்
ஓர் அறிவில் சிறந்த நிலையில் உள்ளவனின்
அதே கேள்விக்கு புத்தர் மெளனமாய் இருந்தார்
தலைமைச் சீடரான ஆனந்தருக்கு குழப்பம் வந்துவிட்டது
புத்தரிடம் கேட்டார் ஏன் குருவே
ஒவ்வொருவரிடமும் வேறு வேறு பதில் சொன்னீர்கள் என்று
கடவுளை பற்றி பல்வேறு நம்பிக்கைகள் உள்ளன
எனவே கடவுள் பற்றிய கவலை நமக்கேன்
மனிதனின் நம்பிக்கைதான் அவன் பலவீனம்
நம்பிக்கையை உடைத்துவிட்டால் தெளிவு வரும்
தெளிவு வந்தால் ஞானம் வரும்
மனிதனை ஞானம்பெறவைப்பதுதான் நம் நோக்கம் என்றார்
ஆன்மீகவாதி உண்டு என்கிறான்
நாத்திகவாதி இல்லை என்கிறான்
இவை இரண்டுமே அவனவன் பெற்ற அறிவு
அந்த அறிவினால் வந்த நம்பிக்கை
எனவே அறிவு ஞானம் தராது
வெறுமையே தெளிவையும் ஆனந்தத்தையும் ஞானத்தையும் தரும்

வரமே சாபமாய்

வரமே சாபமாய்
+++++++++++++++
வரமே சாபமாய்
நீர்களின் வேர்களில்
காங்கிரீட் கம்பிகள்
நீர் வழிகள்
வாழ்விடங்களாய் மாறும்போது
வரமே சாபமாகிறது
சாலைகள் ஆறுகளாய்
வீடுகள் குளங்கலாய்
நிலப்பரப்புகள் கடல்களாய்
மன்னர்கள் காலத்து கரைகளும் பனைகளும்
வெட்டியழித்த
வியாபாரத்திருடர்களும்
அரசியல் அயோக்கியர்களும்
அதிகார நாய்களும்
நக்கித்தின்றதால்
நாசமாய் போனது நதிகளடா
மண்ணுக்குள் குழி தோண்டி
மரம் நட்டவர்கள்
கம்பிகள் நட்டு சிமெண்ட்டால் பால் ஊற்றுகிறார்
வீடுகளே நீர் சமாதிகளாய்
மரணத்தின் மலர் தூவிய
மழை நீர்கள்
நீர் என்ற
என் ஒற்றை வரமே உன்
பருவ தீண்டலில்
வெட்கத்தை வெள்ளமாக்கிவிட்டாய்
உன் வரவுக்காய் கழுதைகளுக்கு
கல்யாணம் செய்தவன்
கரை உயர்த்த மறந்துவிட்டான்
நீரின்றி அமையாது உலகு என்றான்
எம் வள்ளுவப்பாட்டன்
கங்கையின் நீரின் மிகையை
காவேரிக்கு இணைக்கச்சொன்னான் பாரதி
கர்நாடக அரசிடம் தண்ணீரருக்காய் கையேந்தினோம்.
ஒரு துளி தரவும் உறுதியாய் மறுத்தனர்
எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இந்தியர்களே
இந்த தலைமுறை அரசியல் திருடர்கள்
இருக்கும்வரை இது நடக்காது
வான் மழை வரத்தை
கடலில் கலக்காமல் அணையிலோ, குளத்திலோ,
கண்மாய்களிலோ, ஏரிகளிலோ முழுமையாக தேக்கியிருந்தால்
தமிழ்நாட்டில் ஈராண்டு நீர் பஞ்சம் எட்டிப்பாத்திருக்காது
4000 கோடியில் மழை நீர் வடிகால் திட்டம் 2014 ஆகஸ்ட் மாதம்
ஆட்சி அறிக்கை வாசித்ததோடு
அடக்கி வாசித்துவிட்டார்கள்
நீர் நிலைகளெல்லாம் தூர் வாராததால் இருக்க இடம்தேடி
மரங்களின் வேர் சாய்த்து
மனிதரின் இருப்பிடம் வந்த மழைகள்
இரண்டாம் நூற்றாண்டில் கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது
மக்களாட்சியில் காமராஜரைத்தவிர
நீர் மேலாண்மை பேனப்படவே இல்லை
சுதந்திர இந்தியாவில் 12456 ஏரிகள் காணாமல் போய்விட்டன
2700 ஆயிரம் குளங்கள், 7 ஆறுகளையும் அரசியல் ஆதாயம் பார்த்துவிட்டனர்
167 ஆயிரம் விவசாய நிலம் அழித்துவிட்டனர்
ஒரு நாளைக்கு 24 விவசாயிகள் செத்துக்கொண்டே உள்ளான்
இயற்கை விவசாயிகளை காய்ந்தும் பேய்ந்தும் கெடுக்கிறது
கரிகாலன் காலத்து நீர் மேலாண்மையை ஓர் இனம் காத்துவந்தது
மழை காலங்களில் நீரை சேமித்தல் விவசாயம் செய்தல்
மழை பொய்த்து போகும் காலங்களில் நிலத்தடி ஆற்று மற்றும் ஊற்று நீரை சேகரித்தல்,
நீர் ஆவி ஆகாத அளவுக்கு கிணறு வெட்டி
அதை தினசரி உபயோகத்துக்கும், விவசாயத்தை நெறி படுத்தி பயன்படுத்துதல்.
பள்ளர் சமூகத்தின் நீர் மேலாண்மை கடமை அந்த கலையும், தொழிற் நுட்பமும்
சமூகக்கொடுமையால் அழித்தொழித்தனர்
விவசாயம் செய்தவனையும் நீர் சேர்த்தவனை நீசன் என்றனர்
மரங்களே நீர் வளத்தை காக்கும் கரங்கள்
அத்தகைய மரங்களில் ஒன்றுதான் பனை மரம்.
ஆறு, ஏரி, குளக்கரைகளில் ஆயிரக்கணக்கில் பனை மரங்களை வளர்த்தனர். எல்லா மரங்களும் அதன் வேர்களை நீர் தேடி பக்கவாட்டில் மட்டுமே படைஎடுக்கும்.பனை மரம் மட்டுமே செங்குத்தாக நிலத்தடி நீர் செல்லும் வழிப்பாதையை தேடி துப்பறியும் வேரை ஆழ்துளை குழாய் போல மாற்றி ஆழ்தரை நீரை மேல்தரைக்கு கொண்டு வரும். நிலத்தில் நீர்வளம் காப்பது பனை மரங்கள்.
நீர்வளம் காத்த பள்ளரும் பனை மரமும் தீண்டாதவர்களாகிவிட்டனர்
மழை வகுப்பெடுத்து சென்றுள்ளது மனிதா
செவியுள்ளவன் கேட்கக்கடவான்
இனியும் இலவசங்களுக்காய் இளிக்காதே
தனக்காய் யோசிக்காமல்
தலைமுறைக்காய் சிந்திப்பவர்களை
தலைமைக்கு தேர்ந்தெடுக்காதவரை
தள்ளாடுவதற்குமட்டும் தண்ணீர் இங்கு தாராளம்

தீர்ந்ததா தீபாவளி ?

தீர்ந்ததா தீபாவளி ?
+++++++++++++++++
கதையில் செத்தவனுக்காய் நிஜத்தில் காரியம் செய்தது போதுமா
காற்றை நஞ்சாக்கி கந்தகம் கலந்தது போதுமா
ஊர் பறவைகள் ஓடி மறைந்தது போதுமா
தெருக்காவலாய் நின்ற நாய்கள் ஓடி ஒழிந்தது போதுமா
மூத்த நம் பெரியவர்கள் மூச்சிவிடமுடியாமல் முடங்கி போனது போதுமா
காதை செவிடாக்கி காசை கரியாக்கி
கால் வயிற்றுக் கஞ்சிக்கு வகையற்று அலைவோர் பற்றிய கவலை வேண்டாமா?
புராணப் புரட்டை நம்பி புத்தாடை வாங்குவதும்
சேர்த்த செல்வத்தை சூதிலும், குடியிலும் செலவழித்து
பட்டாசு வெடிக்க சொல்லிக்கொடுத்தது யார்
தீப + ஆவளி என்ற பண்டிகை சமணர் பண்டிகையாகும்.
அதைத் தனதாக்கிக் கொண்டது இந்துமதம்
24ஆம் தீர்த்தங்கரர் இறந்தபோது வரிசையாய் விளக்கேற்றி சமணர் வழிபட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் விளக்கு வரிசை வைத்து வணங்கிக் கொண்டாடினர். அதுவே தீபாவளி ஆனது.
மூடசிகாமணிகளே விளக்கு வரிசை ஏற்றுவதை விட்டு விட்டு
வியாபாரி விரித்த வலையில் பட்டாசு கொளித்திக்கொண்டுள்ளாய்
பட்டாசு விற்றவன் பணம் எண்ணிக்கொண்டுள்ளான்
துணி விற்றவன் துட்டு பார்த்துவிட்டான்
போக்குவரத்து துறை இரு நாளில் தன் இலாபத்தை ஈட்டிவிட்டது
டாஸ் மார்க் மது விற்பனையில் கோடிகளை பார்த்துவிட்டது
திரைப்பட அரங்குகள் நிரம்பி வழிகின்றது
நம் செல்வங்களை திருட எவனோ திட்டம் போடுகிறான்
ஒரு நாள் கூத்திற்காக வருடம் முழுவதும்
நீ உழைக்கவேண்டும்
உன் இரண்டு தலைமுறை தாத்தாவை
உன்னால் நினைவில் கொள்ள முடியவில்லை
அவருக்காக அகல் ஏற்ற மனமில்லாத நீ
எவனோ கதை சொன்னவனுக்காக எல்லாம் இழக்க தயாராகிறாய்
தன் தாயைத் தவிரத் தனக்கு வேறு யாராலும் மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் பெற்றான் நரகாசுரன்.
கிருஷ்ணனின் சூழ்ச்சியால் சத்தியபாமா நரகாசுரன் தன் மகன் என்று தெரியாது தாயின் கையால் கொன்று வீழ்த்தப்படுகிறான்
அந்த நாளைத்தான்
காற்று மாசுபட, ஒலி மாசுபட, நீர் மாசுபட, நில மாசுபட
வயதானவர்களின் காதை செவிடாக்கி, மூளைப் பாதிப்பு, மன அதிர்வு, இரத்த அழுத்தம் போன்றவற்றை உருவாக்கி,
அடங்காத ஆனந்தத்துடன் கொண்டாடிக்கொண்டுள்ளாய்
ஓயாது வெடித்துகொண்டிருந்த எதிவீட்டு அப்துல் கலாமை கேட்டேன்
ஏன் வெடிக்கின்றாய் என்று
எல்லோறும் வெடிக்கிறார்கள் நானும் வெடிக்கிறேன் என்றான் மகிழ்ச்சியாக மகிழ்ச்சிக்கு மதம் கிடையாது
சுய நலனுக்குத்தான் மதமோ
பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்கு ஓசையில்லா வெடிகளையாவது
வாங்கிக்கொடுங்கள்

வள்ளலார்

வள்ளலார்
+++++++++
ஆன்மீக விடிவெள்ளி
அறியாமையிலிருந்து ஆன்மீகத்தை மீட்டவன்
ஆன்மீகப்பெரியார்
மதம் கண்ட சுனாமி
மனித நேயத் தென்றல்
மனம் வென்ற வள்ளல்
மொனம் தின்று பல மதங்களை வென்று
சன்மார்க்கம் கண்ட பேரொளி
ஆன்மீக மாடுகளை மனிதனாக்கும் முயற்சி
பல மதங்களின் முடிச்சுகளை
தன் மார்க்கம் கொண்டு அவிழ்த்தவன்
கால விருட்சத்தில் மலர்ந்து மலர்ந்து கனியாக்கி
மனித வளத்திற்காக மார்க்கமாக்கினாய்
சன் மார்க்க ஜோதிக்கு தன்னுயிரை நெய்யாக்கினாய்
சமத்துவமும் சகோதரத்துவம்
பேனிய சன்மார்க்கச் சூரியன்
1823 ஆம் ஆண்டு அக்டோபர் 5ம் நாள் தமிழ்நாட்டிலே
சிதம்பரத்துக்கு அருகாமையில் மருதூர் என்னும் சிற்றூரிலே உதித்தது
கணக்கரான இவரது தந்தையார் இராமலிங்கம்
ஆறு மாதமிருக்கையில் தந்தையை இழந்தார்.
வறுமை, பசி, பலவீனங்களும்தான் பல
தீராத தேடுதலுக்கு பயன் தருகின்றன
தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார்.
குடும்பம் ஏழ்மையின் நிழலில் படுத்துறங்கியது
பள்ளியில் கற்றால் அறிவிழந்துவிடுவோம் என
பட்டறிவால் பாறையில் வேர்விட்ட அருட்சோதி
ஏட்டுக் கல்வியில் ஈடுபாடு கொள்ளாது
ஆன்மீக சிந்தனையில் ஆய்வு செய்தவன்
எல்லா உருவங்களிலும் தெய்வத்தை தேடி கடைசியில்
உருவ வழிபாட்டை தவறென்றறிந்தவர்
ஆண்டவரை ஒளி உருவில் கண்டார் அதை
அன்பின் மேலீட்டால் புருவமத்தியிலும், உள்ளத்திலும்
காண சகலரும் சேர்ந்தது தான் சன்மார்க்கம்!
ஆன்மீகத்தடைகளாய் சாதி, மதம், சமயம், குலம், கோத்திரமும்
மதப்பேய்களாய் வருணம், ஆச்சிரமம், ஆச்சாரமும்
ஒற்றுமைக்கும், உண்மைக்கும் புறம்பான வேதங்கள், புராணங்கள், இதிகாசங்களை
நம்பத் தேவையில்லை என்கிறார்
தெய்வத்தைகாண பூஜைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள்
மொட்டையடித்தல், காதுகுத்துதல், காவடி எடுத்தல், தீ மிதித்தல், தேர் இழுத்தல்,
போன்ற முட்டாள்தனமான, பகுத்தறிவற்ற, நாகரீகமற்ற செயல்களை
வள்ளலார் துணிந்து சாடினார்.
செத்தவர்களுக்கு கருமாதி, திதியை மூடத்தனம் என்றார்
இறந்தவர்க்காய் ஏழைகளுக்கும் பசித்தவர்களுக்கும் பசிதீர்க்க சொன்னார்.
அனைத்து உயிர்களிடமும் காட்டும் ஜீவகாருண்யமே
கடவுளை அடைய எளியவழி என்கிறார்.
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள்
பசிக்காக யாறும் எதையும் பறக்கவிடக்கூடாது என
ஒரு 80 காணி நிலத்தில் 1867 ஆம் ஆண்டில் பிறர்க்கு பசியாற்றும் கடவுள் தொண்டையும் செய்தற்கு
தருமச்சாலையினை வடலூரில் ஏற்படுத்தியவர்
காமம், வெறி, கோபம், மோகம், மதம், மாற்சரியம், கொலை முதலான எழுவகை
கூடாப் பண்புகளான, மன மாசுகளை ஒவ்வொன்றாக அகற்றினால் உள்ளத்தில்
அருட்பெருஞ்சோதி அனுபவத்தில் புலப்படும் என்கிறார்.
“அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!!
தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!”
என்பது வள்ளலார் நமக்கு வழங்கியுள்ள மகா மந்திரம்.
தாம் 51 ஆவது வயதில் மறைவதற்கு 3 மாதங்களுக்கு முன்பிருந்தே
சாப்பிடும் உணவின் அளவைப் படிப்படியாக குறைக்கலானார்.
முடிவில் தேன் மட்டும் அருந்தினார்.
இந்த வெள்ளாடை சூரியன் 1874 ஜனவரி 30… அது, நள்ளிரவில் நிகழ்த்திய சொற்பொழிவில்,
“அன்பர்களே! அருட்பெருஞ்சோதி எப்போதும் எரியும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.
உலக வாழ்வை விட்டு இறைஜோதியுடன் ஐக்கியமாகப் போகிறேன் என அறிவித்தார்.
அறைக்குள் புகுந்து கதவை உட்புறமாகப் பூட்டிக் கொண்டார்.
ஒரு ஜீவ காருண்ய மரத்தின் ஆணி வேர்களை
விமர்சன சருகுகளால் சாய்க்கமுடியவில்லை
அறையைத் திறந்தனர் தானே ஒளியான பெருங்கருணை
உள்ளே அவர் இல்லை. மாயமாக மறைந்திருந்தார்.

காக்கா படிப்போம்

காக்கா படிப்போம்
++++++++++++++++
காக்கைகளின் ஒற்றுமையை
ஓதுபவர்களே
உழைக்காத காக்கைகள்
ஓன்றுகூடுவதில் நியாயமில்லை
முன்னோர்களின் நிழலாய்
அமாவாசைகளில் மட்டும்
உணவுக்கு அடித்துக் கொள்ளாத
காக்கைகள் குறித்து.
உயிரோடு இருக்கும்வரை
உணவுகொடுக்காத மகனும் மருமகளும்
காக்காவை கூப்பிட்டே களைத்துவிடுகிறார்கள்
அமாவாசைகளில்
ஒரே நாளில் எல்லோறும்
விருந்துவைத்தால் காக்கைகள் என்ன செய்யும்
29 நாட்கள் அசைவம் திண்ற காக்கைகள் அமாவாசை அன்றும்
மீன் கடைகளில் காத்திருக்கின்றன
கண்ணிமைக்கும் நேரத்தில்
கைவரிசையை காட்டும்
காக்கைகள் உணராது
வடை விற்கும் பாட்டியின் சோகம்?
காக்கைகளைக் கூட பரவாயில்லை 5 அறிவு
காலில் விழந்து 'காக்கா' பிடிக்கும், முகஸ்துதி பாடும்
கூட்டம் காரியம் சாதிப்பதை
என்ன சொல்வது ?
----------------------
காக்கை பழமொழிகள்
காகம் இல்லாத ஊர் பாவி இல்லாத ஊர்
அடப்பாவிகளா மேலை நாடுகளில் காகங்கள்
இல்லை அதனால் அவர்கள் எல்லாம் யோக்கியர்களா
காகம் ஏறி பனம் காய் உதிருமா?
சந்தர்ப்பங்களுக்காய் காத்திருந்தால்
பனங்காய் இல்லை பெரும்
பாறைகளே விழுந்துவிடும்
காகம் வலமானால் ஆயுசு விருத்தியாகும்
பொய் சொல்ல அலவே இல்லை
எல்லா மருத்துவமும் காக்கையையல்லவா
வலம் வந்திருக்கும்
-----------------------------
பறவைகளோடு பாடித்திரிந்த
பாட்டுக்கவி பாரதியை அதிகம் பாதித்தது காக்கைகள்தான்
“எத்தித் திருடும் அந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா”
காக்கைகளுகாக இரக்கப் படச்சொன்னவன்
“காக்கை குருவி எங்கள் ஜாதி”
ஐந்து அறிவை ஆறாக்கும் முயற்சி
“காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா
கங்கை நதியில் நீ காணும் தெய்வீகத்தைச்
சாக்கடை நீரிலும் நீ காணும் நிலை சாத்தியம் ஆகாத வரை ஞானம் கிட்டாது
- விவேகானந்தருக்கு இப்படி அருளுரை வழங்கினார்.
பரத்தையின் வடிவிலும் பரம்பொருளையே
பார்த்த பரமஹம்சர் என்னும் ஆன்மிக அன்னம்.
எல்லா உயிர்களிலும் உன்னதம் தேடும் பயிற்சி
கறுமை என்பது கருவரை இருள்.
விளங்காத புதிர்.
அறியாமையின் ஆதி நிலை
எதிர்பார்ப்பின் எச்சம்
தேடலின் தேர்வு மையம்
காக்கைகள் எடுப்பதை
திருடென்றால் உனை
என்ன சொல்வது மனிதா
எத்திப் பிழைக்க காத்திருப்பது
காக்கைகள் மட்டுமல்ல
கண்ணசரும் வேளையில்
கழுத்தருப்பதும் நீ தானடா
இரைக்கு அடித்துக்கொள்ளும்
காக்கைகள் மட்டுமல்ல
எல்லா உயிர்களும்தான்
ஏமாற்றிப்பிழைக்கிறது
மேலறிவு உள்ளது
கீழறிவை ஏய்க்கிறது
காக்கைகள் மட்டுமே தன்னைவிட
மேலறிவு உள்ள மனிதை ஏய்க்கிறது
உழைக்காது சுற்றிவது காக்கைகள்
மட்டுமல்ல வீட்டுக்கொரு ஊதாரி உண்டு
அடுத்தவன் உழைப்பில் வாழும்
அண்டங்காக்கைகள்
பிணங்களை பங்கிட்டுக்கொள்வது
காக்கைகள் மட்டுமல்ல
பணங்களை கண்டுவிட்டால்
காசுக்காக கூடும் நீ யாரடா
பள்ளிக்கூடம் வரைதான்
பாட்டியின் சோகம்
படிக்க படிக்க நாட்டில்
வடைதிருடிகளே இந்த படிப்பாளிகள்தானடா
வடகம் திருடும் காக்கையை
திருடன் என்கிறாயே
வாழ்க்கையைத்திருடும் உன்னை
என்ன சொல்வது மனிதா

தன்னையறியும் தவக்கோல் தியானம்


தன்னையறியும் தவக்கோல் தியானம்
+++++++++++++++++++++++++++++++++++
ஒரு நாய் நாயாகவே குறைக்கிறது
ஒரு பறவை அதுவாகவே பறக்கிறது
மனிதன் மட்டுமே குறையுடன் பிறக்கிறான்
மிருகமாய் பிறந்து சிலர் மனிதாக முயற்சிக்கின்றனர்
பலர் மிருகமாகவே வாழ்ந்து இறக்கின்றனர்
எவரோ சிலரே புனிதராகின்றனர்
இந்த முழுமையற்ற நிலைதான்
எல்லா நோய் மற்றும் துன்பங்களுக்கும் காரணமாகின்றது
முழுமையைத்தேடும் முயற்சிதான் வாழ்க்கை
துன்பங்களுக்கு காரணமிருந்தால் கடந்துவிடலாம்
காரணமில்லாத துயரங்களுக்கு தீர்வுகள் இல்லை
மனித இனம் காரணம், காரணமில்லாத துயரங்களில்
கட்டமைக்கப்படுகிறது
இந்தியாவின் 24 தீர்த்தங்கரர்களும் அரச குமாரர்கள்
புத்தனும், ராமனும், கிருஷ்ணனும்
தரும சகோதரர்களும் அரச குமாரர்கள்
காரணமிருந்ததால் கடந்தவர்கள்
வலி, பசி, துன்பம் இருக்கும் வரைதான்
மருத்துவர்கள், குருமார்கள், கடவுளுக்கும் மதிப்பிருக்கும்
மூச்சு விடுவது மட்டும் வாழ்தல் கிடையாது
மேலை நாடுகளில் சாகிற உரிமை கேட்டு
இயக்கம் நடத்துகிறார்கள்
மரணம் ஓர் மாயை
உடை மாற்றுவது போல் வீடு மாற்றுவது போல்
இது உடல் மாற்றவந்த உலகம்
உனக்குள்ளிருகும் அத்தனை அறிவையும்
தகவல்களையும் சுத்தப்படுத்து
எளிமையாய் மறுபடியும்
குழந்தையாய் மறுபிறப்பெடு
தியானத்தின் உதவியோடு
வாழ்வின் ஒவ்வொறு தருனத்தையும்
அழகாக அன்பாக மகிழ்ச்சியாக மாற்றிட
மரணம்கூட அவர் வாழ்வில் நிறைவாய் அமையும்
நீ முடிவில்லாதவன் பல பெயர்களில்
பல வடிவுகளில் நிலைத்து நிற்பாய்
அழிவில்லாதவன் நீ இதை அறியும் போது
உன்மரண பயம் நீங்கும்
பயமற்ற நிலையில் அன்பு தோன்றும்
அன்பு நிறைந்த இடத்தில் தன்னலமற்ற
ஜீவ நதி பாய்ந்தோடும்
உலகம் தரக்கூடிய எல்லாவற்றையும்
தியானம் உன்னிடம் வழங்கும்
அமைதி, தெளிவு, மொளனம் பரவசம் இல்லையென்றால்
வெளியே பணக்காரன் உள்ளே நீ ஏழை
உன்னையறியாது உள்ளே உணராது
வெளித்தேவைகள் மட்டுமே பூர்த்தியானால்
தற்கொலைதான் இங்கு தீர்வாகும்
தலைவலி ஓர் நோயல்ல
அது தகவல் சொல்லும் நண்பன்
மருந்து நோயை தீர்க்காது
அந்த தகவல் மணியாய் மட்டுமே அணைத்துவிடுகிறது
நோய் அப்படியேதான் இருக்கிறது
அது வேறு ஒரு நோயாக வீரியமெடுத்துவிடுகிறது
வலி வரும்போது தியானத்தின் மூலம்
அதை கவணித்தால் நோயின் காரணத்தை கண்டுனரலாம்
தியானத்தில் நீங்கள் ஓர் மொளன சாட்சியாய் இருங்கள்
தொலைந்து போய்விடாதீர்கள்
ஆரோக்கியமென்பது நோயற்ற வாழ்வே என்பார்கள்
நோய் ஒரு விருந்தாளி
விருந்தும் மருந்தும் 4 நாட்கள்தான்
அதை தாண்டினால்
நோயால் உடலும் விருந்தால் உறவும் அழிந்துவிடும்
ஹிப்னாட்டிசமும் வசியக்கலையும் கிருஸ்துவர்களால்
தடை செய்யப்பட்டது
எனில் இதனால் பல பெண்களின் மன நோய் குணமடைந்தது
அவர்கள் தேவாலயங்களுக்கு போவதை நிறுத்திவிட்டனர் எனவே
மதவாதிகளும் குருமார்களும் இப்படியே போனால் தங்களுக்கு வேலையில்லை
மதம் அழிந்துவிடும் என்றெண்ணி
இது சாத்தானால் உறுவாக்கப்பட்டது என்று
பல இலட்சம் தியானம் இருந்த பெண்களை எரித்து கொன்றனர்
தியானத்தை கண்டு பயந்தவர்கள் கிருஸ்துவ குருமார்கள்
அவர்கள் தியானம் தெரியாதவர்கள்
தியானம் தெரிந்தவர்களுக்கு
மதமும் ஆலயங்களும் தேவைப்படாது
தன்னையறியும் தவக்கோல் தியானம்

நண்பா


நண்பா
++++++
வெற்றிக்காக ஓடிக்கொண்டிருப்பது என் கால்கள் மட்டும்தான்
நினைவெல்லாம் நீதான் நண்பா
நேரம் போதவில்லை நண்பா
உனை சந்திப்பதற்கு - ஆனால்
நெஞ்சிற்கு நேரமில்லை உனை மறப்பதற்கு
துயரங்கள் பொறுத்திடு சிரிக்கலாம்
தூரங்கள் மறந்திடு பறக்கலாம்
கைத்தொடும் தொலைவில் இல்லை இன்பம்
சரித்திரங்கள் நம் பெயர் சொல்வதே பேரின்பம்
உறவு முறைகளில் உயர்ந்தது நட்புதான்..
தாகத்தில் தண்ணீர் தருவது நட்பு
கருத்து முரண்படும் போதெல்லாம் முகம்மாற்றம் கண்டு
கருத்தை காற்றில்விட்டு கைகுலுக்கிச்சிரிப்பாயே
இடர்வரும் போதெல்லாம் நம்பிக்கையாய் நீ இருப்பாயே
மனதில் மிச்சமில்லாமல் பேசி சிரித்தது உன்னிடம் மட்டும்தான்
சித்திரை திருவிழாவா? நித்திரை விளையாட்டா ?
நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்கிறது
எத்தனை தலைப்புகள் தவம்கிடக்கின்றன
உன்னோடு விவாதிப்பதற்கு
எத்தனை ஏகாந்தம் காத்திருக்கிறது
உனை நெருங்குவதற்கு
வெற்றிக்காக ஓடிக்கொண்டிருப்பது என் கால்கள் மட்டும்தான்
நினைவெல்லாம் நீதான் நண்பா
விடியலின் முன்பனி தேனீர் பயணத்தில்
கடற்கரை காற்றில் கைவீசி நடந்தது
பழங்கதை பேசி கலையும் அரசியலும்
நட்பும் சூழவந்து அன்றைய வெளியீடு
திரைப்படம் பார்த்து
வெளியே வந்த போது சூரியன்
சொல்லாமல் தூங்கச்சென்றிருந்தது
விடைபெறும் பொழுதில்
மறுபடி மனம் விடியலைத்தேடும்
எப்போதும் சந்திப்பது இன்பம்
எப்போதாவது சந்திப்பது பேரின்பம்
தள்ளி தள்ளி வைத்தால் தாளம்பூ
வாசம் போகுமா
சந்திக்காமல் போனால் உன் மீதுள்ள பாசம் போகுமா
வெற்றிக்காக ஓடிக்கொண்டிருப்பது என் கால்கள் மட்டும்தான்
நினைவெல்லாம் நீதான் நண்பா

போதை (ரிக் வேதம்)


போதை (ரிக் வேதம்)
+++++++++++++++++++

போதை (ரிக் வேதம்)
உலகின் பழமையான நூள்
நூள் முழுவதும் மதுவை
பயன்படுத்துவது பற்றிய செய்திகள்தான்
சோம பானம் பற்றிய செய்திகள்
வேத காலத்திலிருந்தே மனிதன் குடித்துக் களித்துள்ளான்.
காலகாலமாக குடித்த மரபனுக்கல்
வாய்ப்புக்காக காத்துகிடக்கிறது
வசதியுல்லவன் சீமை சரக்கை சுவைத்தான்
வசதியற்றவன் நாட்டுச்சாராயம் குடித்தான்
இப்போது சீமை சரக்கு எளிதில் கிடைப்பதால்
குடித்து கொண்டாடுகிறார்கள்
மது தொண்டையைத்தாண்டி இரைப்பையை அடைந்த நொடியில்
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சடாரென்று உயர்த்துகிறது.
மூளை தன் கட்டுப்படுத்தும் திறனை தற்காலிகமாக இழக்கும் அதே நேரம்,
இன்னொரு பக்கம் நரம்பு மண்டலத்தைத் தாக்கி
மூளையின் தர்க்கப்பூர்வமாக சிந்திக்கும் ஆற்றலைக் குலைத்து
நிதானத்தை தவற வைக்கிறது
தன் மன இருக்கங்களை போக்க வழி தெரியாதவர்கள்தான்
போதைக்கு அடிமையாகுகிறார்கள்
புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்கள்
கேளிக்கையில் நாட்டம் இல்லாதவர்கள்
திரைப்படம் இசை மற்றும் கலைகளில்
நாட்டமில்லாதவர்கள்தான் பெரும்பாலும்
போதைக்கு அடிமையாகுகிறார்கள்
சமூக கட்டுப்பாடுகளால் பெண்கள்
குடிக்க வாய்ப்பில்லாத நிலையில்
ஓயாது பேசிக்கொண்டே இருப்பார்கள்
வெற்றிலை போடுதல்
கோயிலுக்கு சென்று கடவுலென்று
கல்லோடு பேசுதல்
தற்போது வாய்ப்புகளை அரசே எளிதாக்கியதால்
பெண்களும் இளைஞர்களும்
அதிகமாக குடிக்கு அடிமையாகிறார்கள்
குடிகாரர்கள் குற்றவாளிகள் இல்லை
குடியால் பாதிக்கப்பட்டவர்கள்
போதைக்கு அடிமையானவர்களுக்கு
சிகிச்சை தேவை தண்டனையில்லை
குடும்பத்தாரே அன்பை விதையுங்கள் தியானம் வளருங்கள்
மெல்ல மெல்ல மனதை சம நிலைக்கு கொண்டுவரலாம்
மனம் சம நிலை தவறும்போது
மனிதன் மகிழ்ச்சியடைகிறான்
நிகழ்கால நிஜங்களின் துயரங்களுக்கு தீர்வு தேடாமல்
மதுவின் முகமூடி தரித்து தப்பிக்கத்துடிக்கிறான்
உடல் எனும் எஜமானை
அடிமையாக்கும் மனத்தந்திரம் மது
மது எஜமானான உங்களை
ஏவலாளியாய் மாற்றுகிறது
மதுவோடு உங்களின் தொடக்கம் எளிது
பேரரசாக மதுவோடு தொடங்கு உன் வாழ்வு
அடிமைகளாய் முடிக்கத்தெரியாமல்
முடிவும் தெரியாமல்
மதுவின் சிறையில் மயங்கிக்கிடக்கிறான்


மின்சாரக்கடவுள்
+++++++++++++++
தாயின் கற்பத்திலிருந்து
கோயிலின் கற்பகிரகம் வரை
மனிதனும் இறைவனும் 
இருக்கிறார்களா என உணர்பவர்களுக்கல்ல
ஊருக்கு சொல்லிக்கொடுப்பவன்
ஊர் குருவிகளுக்கு ஊஞ்சல் கட்டுபவன்
எப்போதும் தயாராயிருக்கும்
சிலுவை பாதைகள்
இவனன்றி ஒர் அணுவும் அசையாது
கோயில் இல்லாத ஊர்களிலும்
உயர்ந்து நிற்பவன்
கோயில் இல்லை என்று
கவலை படாதவர்கள்கூட மின்சாரம் வேண்டி
மனு கொடுக்கிறார்கள்
அறிவியலின் அசுர வளர்ச்சி
வேலை வெறிபிடித்த சமூகம்
வெட்டியானோடு வெட்டியாய்
காத்திருக்க முடியாமல் சுட்டும் நேரத்தில்
சுடுகாட்டிலும் சாம்பல் தருகிறேன்
பல அரசுகளை காப்பாற்றவும்
கவிழ்த்துவிடவும் நானே காரணம்
ஊருக்கு ஒளி கொடுக்க
தவமிருக்கும் ஒற்றைக்கால்
மின் கொக்குகள்
உலகின் இயக்கம் முழுவதும் நானே
பயன்பாடுகள் பலவிதம்
பலாபலன்களின் மேல் எனக்கு பொருப்பில்லை
நான் ஓடும்வரை உலகின் இயக்கம்
நான் ஓய்ந்துவிட்டால் உலகம் உங்களுக்கு நரகம்
அணுவில் இருக்கிறேன்
சுழலும் ஆற்றலில் பிறக்கிறேன்
சூரினாய் சிரிக்கின்றேன்
காற்றாலையில் கைகாட்டி வருகிறேன்
நீரிலும் அலையிலும்
நானே பிறக்கிறேன்
இவையெல்லாம் வெளியுலகிற்கு
மனிதா உனக்குள்ளேயும் ஓடிக்கொண்டேயுள்ளேன்
உடலும் பொருளும் மாறலாம்
என் இயக்கம் மாறாதது
நான் ஓடும்வரைதான்
உன் உயிர்வாழும் தினம்
ஓய்ந்துவிட்டால் நீயோ பிணம்
நானே கடவுள் என்று காதோரம்
ரகசியம் சொன்னது மின்சாரம்

உத்தரபிரதேச மாநிலத்தில் இடம் பெற்றிருந்தாலும் தலை நகர் டெல்லியில் இருந்து கூப்பிடுதூரத்தில் இருக்கும் தாத்ரியில்தான் இக்லாக் என்ற இஸ்லாமிய முதியவர், மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கிளம்பிய வதந்தியை நம்பி இக்லாக்கின் வீட்டின் முன் திரண்ட 200க்கும் மேற்பட்டோர், அவரையும், அவரது 20 வயது மகன் தானீஷையும் கடுமையாகத் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி ஒரு சிறு கருத்தையும் கூட தெரிவிக்கவில்லை. சமூக வலைதளங்களை முழுமையாக பயன்படுத்துகிறவர் என பெயரெடுத்த பிரதமர் மோடி ஆகக் குறைந்தபட்சம் இச்சம்பவத்துக்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்காமல் கனத்த மவுனத்துடன் இருப்பது ஏன்?
இக்லாக்கை படுகொலை செய்தவர்கள் உள்ளூர் பா.ஜ.க.வுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.. அப்படியானால் இந்தியாவை 2022-23க்குள் இந்துதேசமாக மாற்ற வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்பாடுகளுக்கு பிரதமர் மோடி ஆதரவாக இருக்கிறார் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் தாத்ரியில் இக்லால் படுகொலை செய்யப்பட்டதும் குஜராத் கலவரங்களும் திட்டமிட்ட சம்பவங்களே என சமாஜவாதிக் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் குற்றம் சாட்டியுள்ளன.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இக்லாப்பின் வீட்டில் மாட்டிறைச்சி சமைக்கப்பட்டதாக வெளியான தகவல் புரளி என்பது தெரியவந்தது.
ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரம், மற்றும் மரபினைப் பொறுத்து
உணவு பழக்க வழக்க முறைகள் வேறுபடுகின்றன.
அவைகளைத்தாண்டி பொருளாதாரமும் சூழ் நிலைகளும் தீர்மானிக்கின்றன
அடுத்தவன் உணவை தீர்மானிக்க மற்றவர்க்கு என்ன உரிமை இருக்கிறது
மாட்டுகறி உண்பது தவறென்றால் உடனடி மாற்றம் சமூகத்தில் நிகழாது காலம் சொல்லிக்கொடுக்கும்.
முன்பு மாட்டுகறி உண்பது வழக்கமாய் வைத்திருந்த பிராமனர்கள்
காலப்போக்கில் சைவமாய் மாறிவிட்டார்கள்
திருமணங்களின் போது புரோகிதர் "கெளஹீ கெளஹீ"
எனும் மந்திரம் மாட்டை ஒரே வெட்டாக வெட்டு கறியை துண்டு போட்டு சமைக்கச்சொல்லி சொல்லப்படும் மந்திரம் இப்போதும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்
பழங்காலத்தில் எழுந்த பசுவதை எதிர்ப்பால் மாட்டுக்கு பதில் இப்போது தேங்காயை உருட்டி உடைக்கிறார்கள் பிராமனர்கள் மாறிவிட்டார்கள்
பசுவை கொல்வது பாவம் என்றவர்கள்
மனசாட்சி இல்லாமல் மனிதனை கொல்வதெப்படி?
அப்படியென்றால் ஆடுகளை கோழிகளை பழியிடுவதும்
சமைத்து உண்பதும் முறையா ?
எல்லா உயிர்களிலும் இறைவன் இருப்பது உண்மையெனில்
பசுக்களின் மேல்மட்டும் பாசமேன்
இந்துக்களுக்கு பசு என்பது புனிதமாக மேலானதாக கற்பிக்கப்பட்டுள்ளது
மனம் சார்ந்த ஓர் உணர்வு இதை மதிக்கவேண்டும் என எண்ணும் உரிமை மாற்று மதத்தவரின் உணர்வுகளுக்கும் உரிமைகக்கும் மதிப்பளிக்கவேண்டும்
என ஏன் மறந்துவிடுகிறோம்