Sunday, August 14, 2016

வாழ வழி இல்லாதவர்களுக்கு மரணம் வரமா?

வாழ வழி இல்லாதவர்களுக்கு மரணம் வரமா?
+++++++++++++++++++++++++++++++++++++++++
திருப்பதி செல்பவர்கள் செம்மரத்திருடர்களா?
மரம் வெட்டுபவனுக்கு மரணதண்டனை
கொலைகாரர்களுக்கு கும்பாபிசேகம்
இது புதிய செய்தியல்ல
திருப்பதிசெல்லும் எல்லா பக்கதர்களுக்கும்
தெய்வதரிசனத்திற்கு முன் கிடைப்பது
சிறை தண்டனையே
8 முதல் 36 மணி நேரம் சிறைவைக்கப்படுகிறார்கள்
பாவப்பட்ட மக்கள் குழந்தை குட்டிகளோடு
தன் இயலாமை, துயரங்களோடு
எதை தின்றால் பித்தம் தெளியும் என்று திரிபவர்கள்
இந்த லட்டையும் தின்றுபார்க்க கூடும் கூட்டம் இது
பெத்த தாய்க்கு ரேசன் கடையில்
வரிசையில் நிக்காத
திரைப்படம் பார்க்க
வரிசையில் நிக்காத
பல மகன்களும் மகான்களும்
இங்கு வரிசையில் காத்துக்கிடக்கிறார்கள்
இருந்தும் இவ்வளவு கூட்டம் கூடுவது
காரணமில்லாமலா? சக்தியில்லாமலா?
என்ற கேள்விகளுக்கு கடந்த 20 ஆண்டுகளாய்
தொடர்ந்து சென்று வருபவர்களை சந்தித்தேன்
அவர்கள் சொன்னதிலிருந்து...
பெருமாளை அவ்வளவு எளிதில் பார்க்க போகமுடியாது
அவர் விரும்பினால்தான் ப்ராப்த்தம் இருந்தால்தான்
போகமுடியுமாம்
எனக்குத்தெரிந்த கோடீஸ்வரன்
உலகமகா திருடன் ஊரை ஏமாற்றுபவன்
நினைத்தால் காரை எடுத்துக்கொண்டு
டீக்கடைக்கு செல்வது போல் சென்று வருபவர்
அங்கு குறுக்குவழியில் வரிசையில் நில்லாது
தரிசனம் பார்த்துவருபவர்
அப்ப பெருமாளோட ப்ராப்த்தம்
இந்த உலகமகா திருடர்களுக்கு எப்படி கிடைக்கிறது?
பெருமாள் அந்த கோடீஸ்வரனுக்கு பங்குதாரர்
தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்கமாட்டார்
ஆனால் தவராமல் உண்டியலை நிறப்பிவிடுவார்
மற்றவர் நேர்மையானவர் நினைக்கும்போதெல்லாம்
அவரும்போகக்கூடியவர் தொழில் வளரவே இல்லை
தப்பு செய்பவனுக்கு அள்ளித்தருபனும்
நேர்மையாளனை ஏமாற்றுவதும் பெருமாள்தான் இருந்தும்
இருவரும் தொடர்ந்து திருமலைக்கு சென்றுவருகிறார்கள்
ஏன் என்றால் சிலருக்கு குடிப்பது புகைப்பது போல்
அவர்களுக்கு கோயிலுக்கு செல்வதும்
ஒரு பொழுபோக்கு
தெரிந்தே தன்னையும் ஏமாற்றி சுற்றியுள்ளவர்களையும்
ஏமாற்றிக்கொள்கிறார்கள் இவர்கள் மனம்
காரணம் தேடிக்கொண்டேயுள்ளது
நல்லது நடந்தால் பெருமாளோட கருணை எனவும்
தீயது நடந்தால் பெருமாளோட சோதனை எனவும்
பயணம் தொடர்கிறார்கள்
திருப்பதியில் ஓர் ஆன்மீக வியாபாரம் நடக்கிறது
செயற்கையான தடைகளும், காத்திருப்புகளும்
மிகப்பெரிய பிம்பம் கட்டமைக்கப்படுகிறது
எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகிறது
கருவரை தரிசனம் ஒரு நொடி கூட நிற்க அனுமதியில்லை
இதை நாம் பெருமையாக கருதுகிறோம்
தமிழ் நாட்டில் பல கடவுள்களை
பார்க்க ஆள் இல்லாமல் பூட்டிவைத்துள்ளனர்
திருப்பதியில் பார்க்கவருபவர்களை பூட்டி சிறை வைக்கிறார்கள்

முன் முடிவுகளை எடுக்காதீர்கள்

15 ஆண்டுகளுக்கு முன் ஒரு மென்பொருள் நிறுவனத்தில்
உடன் வேலை செய்த ஓர் நண்பர் என் முக நூலில்
என் தொலைபேசி எண்ணைக்கேட்டு செய்தி அனுப்பியிருந்தார்
கொடுத்தேன் சந்தித்தோம்
பழைய புதிய கதைகள் பேசி தற்போது
தனியாக ஒரு மென்பொருள் நிறுவனத்தை நடத்திக்கொண்டுள்ளதாகவும்
அதில் என்னுடைய உதவி தேவை என்றார்.
என்னைபற்றிய விசாரிப்புகள் என் பணி
நிறுவனம் தற்போதைய நிலை எல்லாம் விவாதித்தோம்
இது கடமையான விசாரிப்புகளே என்னைப்பற்றி
எல்லா தகவல்களும் முக நூல் மூலம் அறிந்து வைத்திருந்தான்
நான் முக நூலில் எதையாவது எழுதிகொண்டிருப்பதை
தொடர்ந்து வாசிப்பதாகவும் ஆச்சிரியப்பட்டான்
(இதுவரை ஒரு விருப்பத்தை (லைக்) கூட போட்டது கிடையாது)
என் நிறுவன உரிமையாளர் பற்றி கேட்டான்
எந்த பகுதி ஆள் என்றான் நான் சொன்னேன்
பூந்தமல்லி பக்கத்தில் காட்டுபாக்கம் என்றேன்
வேறு எந்த தகலும் சொல்லவில்லை
நீ ஏன் இவர்க்ளோடு சேர்ந்திருக்கின்றாய்
அந்த பகுதியே வன்முறை கும்பல்
பூந்தமல்லி பக்கம் அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்றார்
நான் சொன்னேன் ஒரு ஆளை பார்க்காமலே
எப்படி ஒருவரை தவராக பேசுவது என்று
தான் ஒரு (psychology) நிபுனன் என்றும்
பார்த்த நிலையிலேயே ஒருவரைப்பற்றி கணிக்கமுடியும் என்றார்
நீ தான் அவரை பார்க்கவே இல்லையே என்றேன்
உன் முக நூலில் பார்த்திருக்கின்றேன் என்றார்
எனக்கு ஆச்சரியம் தோற்றத்தை வைத்து
அவர்களின் அனுபவத்தின் மூலமாக
சில விபரங்களை சொல்லலாம் அது கூட அனுமானம்தான்
உள் மனதையும் ஒருவருடை குணத்தையும் நடத்தையையும்
எவ்வாறு கூற முடியும்
இவரைப்போல் பலபேர்
தனக்கு எல்லாம் தெரியும் என்பதுபோல் தன் குறைந்த
அனுபவத்தை வைத்து மனிதர்களை எடைபோடும் முட்டாள்கள்
ஜோசியக்காரர்கள் போலத்தான்
தன் முன் அனுபங்களை வைத்து சிலவற்றை சொல்லலாம்
அது எப்போதாவது பலிக்கலாம் அது ஓர் சதுரங்க வேட்டை
நம்பிக்கை இழந்தவர்க்கு அது மூடநம்பிக்கையை தரலாம் கடவுளைப்போல்
கருப்பா இருப்பவன் இப்படித்தான் இருப்பான்
இந்தப்பகுதியை சேர்ந்தவன் அடிதடி செய்வான்
அந்த மாவட்டத்தைச்சேர்ந்தவன் அப்படித்தான் இருப்பான்
இந்த மானிலத்தைச்சேர்ந்தவன் இப்படித்தான் இருப்பான்
அந்த ஜாதிக்காரன் இந்த மொழிகாரன் இப்படிப்பட்டவன்
என்ற முன் அனுமானங்களால்
பல நல்ல மனிதர்களையும் நல்ல உறவுகளையும்
இழந்துவிடுவீர்கள்
கருப்பா இருப்பவன் கெட்டவன்
நிற அரசியல்
அழுக்கு சட்டை போட்டவன் தாழ்ந்தவன்
உடை அரசியல்
இதைத்தான் கபாலி படம் பேசுகிறது
ஒருவரோடு பழகாமல் ஆய்ந்து அறியாமல்
முன் முடிவுகளை எடுக்காதீர்கள்
நான் இதுவரை யாரோடும் சண்டையிட்டது கிடையாது
பிடிக்காதவர்களோடு ஒதுங்கிவிடுவேன்
நண்பனின் தொலைபேசி அலைப்பிற்கு என் எண்
தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டது
இனிமேல் அப்படித்தான்

ரஜினி எனும் மந்திரச்சொல் கபாலி

பணம் பத்தைமட்டுமல்ல பதினொன்றையும் செய்யும்
உலகம் வியாபாரிகள் கைகளில்தான் உள்ளது
என்பதற்கான உதாரணம்தான் கபாலி
நகரத்து ரசிகர்கள் ஓரங்கட்டப்பட்டு
பெரு நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் 
கொடுத்து ஊழியர்களுக்கு
டிக்கெட்டும் வழங்கி
கொண்டாடி தீர்த்துவிட்டனர்
ஏன் இந்த பரபரப்பு
மக்கள் கொண்டாட்ட விரும்பிகள்
இது விடுமுறையோ விழாவோ இல்லாத காலம்
ஆடியில் பெண்கள்மட்டுமே
கோயில் குளம் என்று வலம் வருவார்கள்
மற்றவர்கள் காத்திருந்து கபாலியை கொண்டாடிவிட்டனர்
அவர்களுக்கு கொண்டாட ஏதாவது
காரணம் தேவை
ரஜினி எனும் மந்திரச்சொல்
ஒரு தனிபட்ட நடிகனின் ஆளுமைதான்
வயது வித்தியாசம் மொழி
தேச எல்லைகளை கடந்து ஈர்த்துள்ளது
சமூக வலைதளங்களில் மற்ற ஊடகங்களிலும்
ஏதோ சுனாமி அலையடித்து ஓய்ந்துபோய்விட்டது
100 கோடிக்கு தயாரித்து படம் வெளியாவதற்கு
முன்பே 300 கோடி வசூல் செய்துவிட்டனர்
நூறு ரூபாய் டிக்கெட்டைக் கூட ஆயிரக்கணக்கில் பணம்
கொடுத்து வாங்க ரசிகர்கள் சிறிதும் யோசிக்கவில்லை.
ரஜினி இப்படித்தான் நடிக்கவேண்டும் என
காகித புலிகள் கதை எழுதிக்கொண்டுள்ளனர்
கிழட்டுவயதில் காதல் செய்யாது
பறந்து பறந்து சண்டையிடாது
வயதுக்கேத்த கதாபாத்திரம் மகிழ்ச்சி
ப்ஞ்ச் என்ற பெயரில் அட்வைஸ் செய்யாமல்
அவன் சொல்றான் இவன் செய்ரான்னு ஆன்மீகம் பேசாமல்
இப்ப வருவேன் அப்ப வருவேன்னு அரசியல் சொல்லாமல்
மலேசியாவின் பண்ணையடிமை தமிழர்களின்
வாழ் நிலையை தன்
நுட்பமான நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கும்
ரஜினி நடித்துள்ள இரஞ்சித்தின் படம் பார்ப்பது “மகிழ்ச்சி”.
வெற்றி தோழ்விகளையும்
கதைகளையும் பற்றி கவலையில்லை
அதை நிறையவே விமர்சித்துவிட்டார்கள்
பரபரப்பும் அதிக அளவு கட்டண வசூலும்தான் பிரச்சனை
கபாலியை மட்டுமே பார்க்கவேண்டிய கட்டாயம்
நாடெங்கும் ஒரே படம்
நன்றாக ஓடிய அப்பா படத்தையும்
தியேட்டரைவிட்டு தூக்கிவிட்ட அயோக்கியத்தனம்
குறுகிய காலத்தில் பணம்பார்த்துவிடும்
மனோபாவம் பெருகிவிட்டது
உயர்த்திவிட்ட ரசிகர்களை ஏமாற்றிவிட்டனர்
தியேட்டரின் வசதி நகரம், கிராமம் என்ற
எல்லைகளை வைத்தே கட்டணங்கள் வசூலிக்கப்படுவது
நடைமுறை ஆனால் நடிகளுக்கு தகுந்தார்போல்
டிக்கட் விலையை ஏற்றியது
மிகப்பெரிய அயோக்கியத்தனம்
தன் ரசிகர்கள் ஏமாற்றப்படுவதை நடிரும் தடுக்கவில்லை
தனக்கு வேண்டியவர்கள் படத்தை ரிலீஸ் செய்வதால்
அரசும் கண்டுகொள்ளவில்லை
திருட்டு விசிடியும் இணையதளங்களும்
செய்வது அயோக்கியத்தனம் என்றால்
50, 100 ரூபாய் டிக்கெட்டை 500க்கும் 1000 க்கும்
விற்ற அயோக்கியத்தனத்தை என்ன சொல்வது

அறம் செய்ய தவறு

அறம் செய்ய தவறு
ஆறுவது சினம்
++++++++++++++
அலுவலகத்தின் ஆல் இன் ஆல் கார்த்திக் விடுமுறை
என்பதால் தேனீருக்காய் டி கடை வந்தோம்
இந்த தேசத்திற்கு என்னதான் ஆச்சு
எங்கும் புகைமண்டலம்
டீ கடை புகையில் காணாமல் போயிருந்தது
வாய் கிளிந்து நுரையீரல் அழுகி
எத்தனை முகேஸ்கள் பேசினாலும்
புகைப்பவர்கள் நிறுத்துவதே இல்லை
விலையை ஏற்றினாலும் கடையை மாற்றினாலும்
புகைப்பதும், குடிப்பதும் குறைவதே இல்லை
அரசு விலை ஏற்றி பணம் பார்த்துவிடுகிறார்கள்
சாதா ரூபாய் 10 பஞ்சு வைத்தது 20
ஏழைகளின் ஒரு நாள் உணவுக்கான செலவு
இவர்களது ஒரு புகைப்பானின் விலை
இங்கு அறம் சொல்லவும், செய்யவும் ஆள் இல்லை
புகைத்த புகையை நம் முகத்தில் ஊதுகிறார்கள்
பாக்கு போட்டு தேசத்தை துப்பித்தொலைக்கிறார்கள்
சுத்தமாக இருக்கும் என்று
நாங்கள் ஃபோரம் மாலுக்கு சென்றோம்
எங்கள் இருக்கைக்கு எதிரில்
இரு இளசுகள் வந்தமர்ந்தனர்
பொதுவெளி என்பதை மறந்து
இளசுகள் அவர்களுடைய படுக்கையறைபோல்
சில்மிசங்களை தொடங்கின
நண்பர் ஆனந்த் சினம் கொண்டார்
நான் ஆறுவது சினம் என்று அவ்வையின்
மொழி சொல்லி அமைதிபடுத்தினேன்
3 பெண்களை பெற்றதாளும்
சுவாதி கொலைக்குப்பின் ஏற்பட்ட மன அலுத்தத்தாலும்
நண்பர் பொங்கிவிட்டார்
கையை உயர்த்தி அடிவாங்வதற்குள்
கிளம்பி விடுங்கள் என்றார்
ஆண் பையன் பயந்து கிளம்பிவிட்டான்
பெண் சிலிர்த்தெழுந்து சண்டைக்கு வந்துவிட்டாள்
பொதுவெளியில் சில்மிசம் செய்வது
அவர்கள் சுதந்திரமாம் ?!!
எது சுதந்திரம்? காந்தியத்தான் கேட்கணும்
வாங்கிகொடுத்தவனையேதான் நாம்
சுட்டுக்கொன்னுட்டோம்
சுவாதி கொலைக்குப்பின் பெண் பிள்ளைகள்
கொஞ்சம் பார்த்து நடக்கனும் என்று நினைப்பது
பெண்களை பெற்ற தகப்பனின் தவிப்பு
காம மயக்கத்திலிருக்கும் இளசுகளுக்கு புரியவில்லை
எத்தனை கொலை நடந்தாலும்
நடப்பது நடந்துகொண்டேதான் இருக்கும்
அவரவர் வலி அவரவர்க்கு
அடுத்தவன் வலியெல்லாம் வேடிக்கை பார்ப்பதற்கு
தனிமனித ஒழுக்கத்தை சொல்லிக்கொடுக்கத்தவரி
சிகரட் அட்டையிலும்
திரைப்படத்தின் இடைவெளிலும் போட்டால்
அதையும் பார்த்து ரசித்துவிட்டுத்தான் போகிறார்கள்
கடைகார பெண்வந்தாள் ஏன் சார் வந்திங்கன்னா
டீ குடிச்சிட்டு போகவேண்டியதுதானே
நீங்க சண்டை போட்டதால்
அவர்கள் அடுத்த கடைக்கு போய்விட்டார்கள் என்றாள்
இந்த கடைகளே இவர்களை போன்றவர்களை
நம்பித்தான் நடத்துகிறார்கள்
உணர்ச்சிவசப்பட்டு நாக்கை துருத்துபவனை
நாம் கோமாளியாக்கிவிட்டோம்
அறிவால் சிந்திப்பவர்கள் கண்டும் காணாமல் போய்விடுகின்றனர்
பல பேர் வந்தியா டீ குடிச்சியா
பொத்திக்கிட்டு போகவேண்டியதுதானே
இது உனக்கு தேவையா என்பது போல்தான் பார்க்கிறார்கள்
நாட்டில் அறிவாளிகல் அதிகமாகிவிட்டார்கள்
நாங்கள் டீ குடிச்சிட்டு வெளியே வந்தோம்
பக்கத்து கடையில் அந்த ஆண் குரங்கு
அந்த பெண் குரங்கை சுரண்டிக்கொண்டிருந்தது
நண்பர் இப்போது
அறம் செய்வதை விட்டு
ஆறுவது சினமாகிவிட்டார்

திடீர் பயணங்களில்

திட்டமிடாத திடீர் பயணங்களில் பல மோசமான அனுபவங்களை சந்திக்க நேர்கிறது
திடீர் பயணங்களில் இரயிலில் இருக்கைகள் கிடைப்பதே இல்லை
நம் தேசத்தில் அதற்கான வாய்ப்புகளே இன்னும் 100 வருடங்களுக்கு இல்லை என்றே தோன்றுகிறது
எங்கள் பகுதியில் அகலபாதைக்காக நிறுத்திய கம்பன் எக்ஸ்பிரஸ் 20 ஆண்டுக்கு மேலாகியும்
இன்னும் தண்டவாலங்களை கூட போட்டுமுடிக்கவில்லை.
இத்தனைக்கும் அது முன்னால் முதல்வரின் தொகுதி
பகல் நேர பயணம் என்பதால் தனியார் பேருந்துகள் இல்லாததால்
தமிழக அரசு பேரூந்து ஒன்றில் ஏறி அமர்ந்தேன்
இருக்கையின் சாய்வு நிலை வேலை செய்யவே இல்லை
கை வைக்கும் கட்டையை எந்த எலிக்குப்பொறந்தவனோ சொரண்டி எடுத்திருந்தான்
வண்டி ஓடத்தொடங்கியதும் ஜன்னலொர கண்ணாடி ஆடிய சத்தம் காதில் யாரோ கொட்டடிப்பது போலிருந்தது
நகர எல்லையைத் தாண்டி வேகமெடுத்ததும் மொத்த பேரூந்தும் (வைபரேசன் மோடுக்கு) அதிர்வு நிலைக்கு மாறிவிட்டது.
காலை கீழே வைக்கமுடியவில்லை அதிர்வால் உடலே கூசியது கோபத்தில் நடத்துனரிடம் நிலைமையைச்சொன்னால்
சார் நாங்க மேலதிகாரிகளிடம் புகார் அழித்துவிட்டோம் அவர்கள் கண்டுகொள்வதே இல்லை என்றார்.
வடலூரைத்தாண்டியதும் மழை தொடங்கியது ஜன்னலொர கண்ணாடி மூடமுடியாததால்
பாவம் பக்கத்திலிருந்தவர் பாதி நனைந்துவிட்டார் பண்ருட்டி தாண்டும்போது என் தலைக்குமேல் நீர் சொட்டத்தொடங்கியது
தலையில் தண்ணீர் விழுந்தாலும் கோபத்தில் சூடு தலைக்கேறி நடத்துனரை நோக்கிசென்றேன்
என் நோக்கம் தெரிந்தவர்போல் என்ன ஒழுகுதா அங்கே பாருங்க என்றார்
பார்க்கவே பாவமாக இருந்தது ஓட்டுனரின் தலைக்குமேலும் நீர் சொட்டிக்கொண்டிருந்தது
எவ்வளவு மோசமான நிலையில் பணிசெய்கிறார்கள் என்று புரிந்தது
சரி அடுத்த நிறுத்தத்தில் இறங்கி வேறு பேருந்து பிடிக்க முடிவெடுத்தேன்
திண்டிவனத்திற்கு முன் வண்டி நின்றது ஒரு பெருங்கூட்டம் தட தடவென ஏறியது
பக்கத்தில் நின்றவர் முழுதும் நனைந்துவிட்டார் விபரம் கேட்டேன் அவர்கள் வந்த பேருந்தின் டயர் வெடித்துவிட்டதாம்
விசாரித்ததில் பாதி அரசு வண்டிக்கு மாற்று சக்கரமில்லையாம் (ஸ்டெப்னி)
சகிப்புத்தன்மையும் ஒப்பீடுகளிலும் தான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கின்றது பக்கத்தில் அமர்ந்திருப்பவர் பாதி நனைந்துவிட்டார்,
புதிதாய் ஏறி பக்கத்தில் நின்றவர் முழுதும் நனைந்துவிட்டார் என் கோபம் தனிந்துவிட்டது.
எண்ணமே வழ்க்கை மனமே உடல் இதுதான் வாழ்க்கை என்றாகி போனதால்
சூழலை மனம் ஏற்றுக்கொள்கிறது.
பக்கத்திலிருந்தவர் இன்னும் சூடு குறையவில்லை
இவங்களையெல்லாம் ரமணா விஜயகாந்த் பாணியில் தண்டிக்கவேண்டும் என்றார்
பக்கத்தில் நின்றவர் குலுங்கி குலுங்கி சிரித்துவிட்டு தொடர்ந்தார் அவரே பொண்டாட்டி பேச்சைகேட்டு
உருப்புடாம போயிட்டாரு என்றார் மற்றவர் சார் அந்தம்மாவே வை கோ பேச்சைத்தானே கேட்டது என்றார் அடுத்தவர்
என்ன சொல்றீங்க வை கோவே இன்னோரு அம்மா பேச்சை கேட்டுத்தானே செயல்பட்டார் என்றார்
எல்லாம் மறந்து அவர்கள் 1500 கோடி, 3 லாரி பணம் என அரசியல் மழையில் நனைந்துகொண்டிருந்தனர்
அரசியல்வாதிகளை மாற்ற 5 ஆண்டுக்கு ஒரு முறை வாய்ப்பு வருகிறது
58 வயது வரை பதிவியில் உள்ள இந்த அதிகாரிகளுக்கு ஏன் அக்கரை இல்லாமல் போனது
தொலைதூர பேரூந்துகளின் தரத்தையாவது மேம்படுத்துவார்களா?

தேவதைகளின் அவமதிப்புகள்

தேவதைகளின் அவமதிப்புகள்
தேவாங்குகளின் கொலைவெறிகள்
இதிகாசங்கள் இத்தனை இருந்தும்
பாஞ்சாலிகள் துகிலுரிக்கப்படுகிறார்கள்
துரியோதனன் அவமானப்படுகிறான்
துரோணர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்
அரசியல் தருமர்கள்
சுய நல சூதாடுகிறார்கள்
துரியோதனின் அவமதிப்பால்
மகாபாரதம் உறுவானது
சூர்ப்பனகையின் அவமதிப்பால்
ராமாயணம் உறுவானது
அவமானங்களை வளர்ச்சிக்கு
உரமாக்கியவன் புகழையடைகிறான்
அவமானங்களை பகையாக்கியவன்
புழலையடைகிறான்
வாழச் சொல்லிக்கொடுக்காமல்
பிழைக்கச்சொல்லித்தரும் நம் கல்வி முறை
இளைய தலைமுறையை
பணத்திற்குப்பின் ஓடச்சொல்லி
அதையே வாழ்கைமுறையாக்கி
வெற்றி வெற்றி என்கிறார்கள்
மனம் ஊனமாகி எல்லாம் பணமாகிபோய்விட்டது
அகிம்சை போதித்த தேசத்தில்
மகாத்மா மனங்களில் இன்றி
பணங்களில் மட்டுமே சிரிக்கின்றார்
தோழ்விகளை விரும்பாத
வெற்றிக்குப்பின் ஓடும் ஓர் சமூகம்
தோழ்விகளை எதிர்கொள்ளவும்
தோழ்விகளிலிருந்து மீண்டெழவும்
சொல்லிக்கொடுக்காத
வாழ்கைமுறைகளும் பல சமூக
துயரங்களுக்கு காரணமாகின்றது
உழைத்து மகிழ்வது மனித குணம்
அடித்து பிழைப்பது மிருக குணம்
மனிதா நீ உழைக்கப்போகிறாயா ?
அடித்து பிழைக்கப்போகிறாயா ?

கம்யூனிஸ்ட்

கம்யூனிஸ்ட்
---------------------
1848 வரை ஐரோப்பாவில்
கம்யூனிஸ்ட் லீக்காக இருந்த சங்கம்
ரகசியமாய் இயங்கியது 
பின் உலகமெல்லாம் பரவியது
1848 ல் மார்க்சும் ஏங்கல்சும்
எங்கெல்லாம் முதலாளி வர்க்கம்
பாட்டாளி வர்க்கத்தை சுரண்டி ஒடுக்குமுறை செய்து
வர்க்க பாகுபாடு ஆதிக்கத்திலிருந்து
விடுபட முயற்சியை தொடங்கினார்கள்
முதலாளித்துவ குடும்பமுறை ஒழித்தால்
மூலதன முறை ஒழியும்
ஏற்ற தாழ்வு கல்வி நிலை மாறும்
முதலாளிவர்க்கம் மனைவிகளையும்
ஓர் உற்பத்தி கருவியாக பார்ப்பதால்
கம்யூனிஸ்ட்டுகள் தன் வீட்டு பெண்களையும்
பொதுவாக்கிவிடுவார்கள் என அஞ்சினர்
விளம்பரம் செய்தனர்
தனிமனித சுரண்டல்
தேசங்களுக்கிடையே சுரண்டல்
எங்கே வர்க்கங்களுக்கிடையே பகைமை
மறைகிறதோ அங்கே தேசங்களுக்கிடையே
பகைமை விளகும்
சமயம், மதம் கடவுள் இறையுணர்வு உள்ள
வீராவேசம் கற்பனை, பண்பாடு, கலைகள்
எல்லாம் பரவச நிலைகளே இவைகள்
தற்பெருமை கொள்ளச்செய்வது
மதிப்புமிக்க தொழில்களை
மருத்துவம், சட்டம், மத போதகம்
கலைஞர் அறிவியலர் எல்லாம்
முதலாளி வர்க்கத்தின் கூட்டாளிகளாக மாறிவிட்டன
குடும்ப உறவுளை சிதைத்து
உலகம் பணத்திற்காகவே
சுழலச்செய்தது
முதலாளிகள் தன் சந்தை பொருள்களை விற்க
நாடு தேடினார்கள் தன் அதிகாரத்தை
விரிவுபடுத்தினார்கள்
உள்ளூர் திறமைகள் கலை, பண்பாடு
கலாச்சாரம் அழிக்கப்பட்டன
உலகமயமாக்கப்பட்டன
மாடுகளை டிராக்டராக்கினார்கள்
கூத்தும் கலையும் இப்போது
திரைப்படமாகிவிட்டது
மருத்துவர்கள் பெரிய மருத்துவமனைகளில்
கூலிகளாக்கப்பட்டனர்
உலகம் முழுதும் சுவையும் உணவும்
ஓன்றாகிபோனது
நம்மூர் தண்ணீரில் அயல் நாட்டு குளிர்பானம்
நம்மூரில் இலவசமாய் நீர் எடுத்து இருபது ரூபாய்க்கு
நமக்கே விற்கிறான்
போக்குவரத்தும் தொலை தொடர்பும்
அனாகரீக உலகத்திலிருந்து
நாகரீக உலகத்திற்கு இழுத்துவரப்பட்டது
உள் நாட்டு உற்பத்திகள்
நலிவடைந்துபோனது
மக்களை மலிவை காட்டி
மயக்கிவிட்டார்கள்
உலக முதலாளிகள் தீர்மானித்ததைதான்
உலகம் பசியாறிக்கொண்டுள்ளது
கிராமங்களில் வயதானவர்களும்
வழி இல்லாதவர்களும்தான் உள்ளார்கள்
மற்றவர்கள் காசுக்காக நகரம்
தேசம் உறவு எல்லைகளையேல்லாம் தாண்டிவிட்டார்கள்
நம்மூர் கம்யூனிஸ்ட்கள் உண்டியலுக்கான
டப்பாக்களை தேடிக்கொண்டுள்ளனர்

மனிதம் வளரும்

தலைவர்கள்
மதங்கள் அழிந்தால்தான் மனிதம் வளரும்
++++++++++++++++++++++++++++++++++++++++
ஹரித்வார்: மகாராஷ்டிரா மாநிலம் அஹமத்நகரில் உள்ள சனி பகவான் கோவிலில்,
ஆண்களை போல பெண்களுக்கும் வழிபட சம உரிமை உண்டு. இது பெண்களின் அடிப்படை உரிமை. 
இதனை, அரசு நிலை நாட்ட வேண்டும். பெண்களை தடுப்பவர்களை, அரசு கைது செய்ய வேண்டும்'
என, ஐகோர்ட், ஏப்ரல் 1ல் உத்தரவிட்டது. அதன்படி
பெண்கள் உள்ளே நுழைந்தது கோவிலில் கற்பழிப்பு அதிகமாகும்
என்ற துவாரகா சங்கராச்சார்யார் கருத்து
பிற்போக்கானதும் ஆணாதிக்க சுய நலம்கொண்ட
உடலெல்லாம் கொழுப்பு தேங்கியவர்களின்
ஆதிக்கக்குரல்
ஆன்மீகம் மிக ஆழமானது. அதை, மேலோட்டமாக விமர்சனம் செய்வது
ஆன்மீக போலிகள்
சக்திக்கு சரி பாதி கொடுத்தவன் சிவன்
பெண்களை தெய்வமாகவும் நதிகளாகவும் புனதமாகவும் வழிபடும் நம்மினம்,
பெண்களை கோவிலுக்குள் நுழைய மறுப்பது சுய நலம்
யாறும் முழுமையான பெண்ணும் இல்லை ஆணும் இல்லை
அதுவே அர்த்தநாரீஸ்வரர் என்ற நிலை
ஆண்-பெண் அடையாளங்கள் உடல் சார்ந்த பிரிவுகள்
ஆனால் ஆன்மீகம் என்பது அடையாளங்களைக் கடந்து செல்லவேண்டிய ஓர் ஏற்பாடு
அதை அடையவிடாமல் தடுப்பது
இது போன்ற ஆன்மீக போலிகளின் புறப்பாடு
குழுக்களும் மதங்களும் மனிதனை புனிதாக்க புறப்பட்டவைகள்
ஆனால் சுய நலத்தின் சூது
மனிதனை மனிதாகக்கூட அல்ல
விலங்குகளாக மாற்றிவிட்டன
மதங்களுக்காக மனிதன் அடித்துக்கொண்டு சாகிறான்
விலங்குகள் உணவுக்காகமட்டுமே உயிர் கொல்லும்
மனிதன் மட்டுமே கருத்துக்காக உயிர் எடுக்கிறான்
தனிமனிதன் அன்போடும் அறிவோடும்தான் இருக்கின்றான்
ஓர் குழுவோடும் மதத்தோடும் தன்னை இணைத்துக்கொண்ட பின்
தான் சிந்திப்பதை மறக்கிறான் இரவல் சிந்தனைக்கு செவிசாய்க்கிறான்
சுயமாய் சிந்திப்பதை மறந்துவிடுகிறான்
சிந்திக்காதவரை தான் மதங்கள்
தொண்டர்கள் உள்ளவரைதான் தலைவர்கள்
மதங்கள் அழிந்தால்தான் மனிதம் வளரும்
தலைவர்கள் ஒழிந்தால்தான் தனிமனிதன் வாழ்வான்
துவாரகா சங்கராச்சார்யார் கருத்தில்
நியாம் இருப்பதாய் கருதினால் உண்மையில் அவர்
பெண்களின் கற்பைபற்றிய கவலை கொண்டவராய் இருந்தால்
முதலில் இது போன்ற குருக்கள் மற்றும் மடாதிபதிகளின்
ஆண்மையை நீக்கி அறுவை சிகிச்சை செய்யவேண்டும்
வருடம்தோறும் அந்த பகுதி பெண்களிடம்
குறைந்தது 100 பேரிடம் தான் ஒழுக்கமானவன் என
தகுதி சான்றிதழ் பெறவேண்டும்

ஏகலைவனும் கெளரவ கொலைகளும்

ஏகலைவனும் கெளரவ கொலைகளும்
---------------------------------------------------------
மகாபாரதம் முழுதும் வர்ணாஸ்ரமத்தை காப்பாற்ற துடித்த
கிருஷ்ண்னின் லீலைகள்தான்
காட்டுமிராண்டி காலத்து கதைகளுக்கு
இப்போதும் உயிகொடுத்துகொண்டிருக்கிறார்கள்
கெளரவர்கள் கெளரவ கொலைகளாய்
சுய நலத்தின் சூது துரோணர்
அவரின் சீடன் அர்ஜீனன் ஒரு மாபெரும் வில்வித்தை வீரன்
ராஜ குடும்பத்தை சேர்ந்தவன்
துரோணர் ஓர் பிராமனர்
அப்போதும் இப்போதும் பிராமனர்களைவிட
வர்ணாஸ்ரமத்தை காப்பாற்றத்துடிப்பது
மற்றவர்கள்தான்
ஏகலைவன் வேடுவ இனம்தான் என்றாலும்
அவன் மகத நாட்டைச் சேர்ந்த ஒரு காட்டுக்குத் தலைவன்.
தன்னை துரோணரிடம் சீடராக்கச்சொன்னான்
ஒரு சூத்திரனை தீண்டதகாதவனை
லட்சக்கணக்கான மனிதர்களை இந்து
மதம் மனிதராகவே ஏற்றுக்கொள்ளாததால்தான்
பலர் மதமாறிவிட்டார்கள்
சூத்திரனின் நிழல் பட்டாலும் குளிப்பதை
வழக்காமாக கொண்ட துரோணர்
“வர்ணாஸ்ரம தர்மப்படி கல்வி என்கின்ற அந்த வில்வித்தையை
சூத்திரனான நீ கற்றுக்கொள்ள உரிமை கிடையாது
என மறுத்து அனுப்பிவிடுகிறார்.
தன் சீடன் அர்ஜீனன் அரசனாகப்போகிறவன்
அவன் மூலம் ராஜ குருவாக மாற வாய்ப்பு இருப்பதாய்
அரசியல் கணக்கிடுகிறான்
திறமை இருப்பவனை கண்டெடுத்து
வளர்த்தெடுப்பவனே உண்மையான குரு
குரு என்பவன் யாரையும் மறுத்தல் கூடாது
மறுத்ததால் இவர் ஓர் அரசியல் தரகரானார்
ஆர்வம் உள்ளவர்களுக்கு ஆசிரியன் தேவையில்லை
என நிறுபித்தவன் ஏகலைவன்
குரைக்கின்ற நாயின் ஒலியை வைத்தே அம்பினால்
நாயின் வாயை இரண்டாகப் பிளந்து விடுகிறான் ஏகலைவன்
ஒலியை வைத்து துல்லியமாக அம்பெய்துபவன் அர்ஜூனன் மட்டும்தானே
இது யார் என வியக்கிறார் துரோணாச்சாரி.
ஒரு வேடன் வந்து அவர் காலிலே விழுந்து வணங்கி, “குருதேவா!
அந்த அம்பை எய்தியது நானே என்றான்
அர்ஜூனனுக்கு மட்டும் தெரிந்த வித்தை நீ எப்படி அறிந்தாய்
“யார் உனக்கு குரு? என்று கேட்கிறார்.,
மிகுந்த அடக்கத்தோடு ஏகலைவன் நீங்கள்தான் என சொல்லுகிறான்
நீ அல்லவா என்னுடைய தலைசிறந்த மாணாக்கன்” என்று
தட்டிக் கொடுத்திருக்க வேண்டிய துரோணர்
தன் சிலையை வைத்தே வில்வித்தை
கற்றதால் இனி வில் தொடக்கூடாது என
ஏகலைவனின் கட்டைவிரலை காணிக்கையாக
பெற்ற குரு துரோகி
வெட்டி வீழ்த்துகிறார் அன்று அந்த சூத்திரனின் வீரத்தை
தன் குருவுக்காக எதையும் தர
தயாராயிருந்தான் ஏகலைவன்
கட்டைவிரலை காணிக்கையாகப்பெற்றபின்னும்
இருளில் வில்லெய்தும் திறன் கண்டு அர்ச்சுனனும் துரோணரும் ஏகலைவனை விசாரிக்கிறார்கள்
ஏகலைவன் இடக்கைக் பழக்கமுல்லவன் உங்கள் நோக்கம் தெரிந்து
என் இடக்கை விரலை அப்போதே காணிக்கையாக தந்திருக்கவேண்டும் குருவே ஆனால்
நான் வேட்டுவன்தானே, அரசாளும் சத்தியர்களுக்கும் அவ்ர்கள் பேணும் அந்தணர்களுக்கும் உள்ள
சாமர்த்திய புத்தி எனக்கில்லையல்லவா? இப்போதும்
என் இடக்கைக் கட்டை விரலை காணிக்கை தரத் தயார் என்கிறான்
விரல்களை வெட்டிக் கொள்ளாமலேயே நினைத்ததை நிறைவேற்றும் வழியில்
இனி அர்ச்சுனனே உங்களின் தலை சிறந்த சீடனாக விளங்குவான்.
இக்கணம் முதல் நான் வில்லைத் தொடமாட்டேன் என சத்தியம் செய்கிறான்
சீடனில் சிறந்த சீடனாக சத்திரியர்களையும், அந்தணர்களையும்
அன்று வெட்கப்படச் செய்துவிட்ட வேட்டுவ வீரனே
இன்று வெட்கப்பட மறந்த நாணமற்ற நாகரீக சமூகம்
தலையை வெட்டித்திரிகிறது
பெரியாரின் இடத்தை திராவிட கட்சிகள் நிரப்ப முடியாது போனதின்
வெற்றிடத்தின் விளைவே இந்த கெளரவ கொலைகள்
கூட்டணிக்காக கணக்கிட்டுகொண்டுள்ள தலைவர்களே
பூக்களுக்கு வண்ணமடித்தது போதும்
வேர்கள் இங்கே பழுதாகிவிட்டதை கொஞ்சம் பாருங்கள்
ஆதிக்க மனம் எழுதிய பழைய ஏற்பாடுகளின் சில துளிகள்
இப்படியெல்லாம் இவர்களால் எப்படி யோசிக்க முடிந்தது
இதை இன்றும் புனிதம் என்கிறார்கள்
சூத்திரனின் தொழில் எது தெரியுமா?
வேதமறிந்த பிராமணர்க்குப் பணிவிடை செய்வதே சூத்திரர் தர்மம். சூத்திரர்க்கு அதுவே மோட்சப் பாதை.
(மனு தர்மம் 10:276)
சூத்திரனின் பெயர் எப்படி வைக்கவேண்டும் தெரியுமா?
பிராமணனுக்கு மங்களம், சத்திரியனுக்கு பலம், வைசியனுக்குச் செல்வம்,
சூத்திரனுக்கு அவனது அடிமை நிலை தோன்றும்படியான பெயர்களைச் சூட்ட வேண்டும்.
(மனு தர்மம் 3:23)

குழந்தை

குழந்தை
-----------------
புத்தகம் தூக்கும்
கல்விக்கழுதைகளாய்
மனப்பாட எந்திரங்களாய்
பணம் பூக்கும் மரங்களாய்
வளர்த்தது போதும்
வாழ்க்கையைச் சொல்லிகொடுங்கள்
மனித நேயத்தை மலரவிடுங்கள்
கல்லாய் நில்லாமல்
உங்கள் மரன நேரத்தில்
அவன் கண்களில் கண்ணீர் பூக்கட்டும்
ஒரு மனிதன்
தன் முன்னே நிற்கும் இருவரிடம்
ஒருவரிடம் அன்பாகவும் அடுத்தவரிடம்
கோபமாகவும் இருக்கமுடியும் என்பது
அவருக்கு நடிக்கத்தெரியும் என்பதுதான் உண்மையே
ஒரு அன்பானவரிடம் அன்பே வெளிப்படும்
அன்பில்லாதவனிடம் வெறுப்பே வெளிப்படும்
நெருப்பிலிருந்து நீர் வருகிறது என்றால்
அது நீராவியாகும்வரை காத்திருக்கவேண்டும்
நீரிலிருந்து நெருப்பெடுக்க அது எரிபொருளாகும்வரை
காத்திருக்கவேண்டும்
ஆனால் மனிதன் மட்டுமே
நீரிலிருந்து நெருப்பாகவும்
நெருப்பிலிருந்து நீராகவும் மாறும்
ரசவாதம் கற்றவன்
குழந்தைகளுக்கு நடிக்கவே கற்றுக்கொடுக்கிறோம்
பெரியவர்களை மதிக்க
அன்பு செலுத்த பழக்கவில்லை எனில்
அவன் கற்ற கல்வி
பண்பாட்டின் பரமபதத்தில் பாம்பிடம் மாட்டிய பாமரனாவான்
உங்களுக்கு வயதான பின்பு அன்பு கிடைக்காது
நீங்கள் காசை செலவழித்து கற்ற கல்வியால்
சம்பாதித்த பணத்தில் நல்ல வசதியுடைய நவீன
முதியோர் இல்லங்கள் உங்களுக்காய்
காத்திருக்கின்றன கவணமாயிருங்கள்
அயல் நாட்டுக்கு அனுப்பிய மகன்
வராமலே
அழுவதற்குக்கூட ஆள் இன்றி
அனாதையாய் சாவீர்கள்

Thursday, March 10, 2016

விஜயகாந்த்

விஜயகாந்த்
+++++++++++
விஜயராஜ் ஒரு திரை விரும்பி
பத்தாம் வகுப்புக்குமேல் படிப்பதுபோல் நடிக்க முடியாதததால்
நடிப்பையே படிக்கத் தொடங்கினார்
1980 களில் இருந்து 2005 வரை தொடர்ந்து மூன்றாம்
இடத்தை தக்கவைத்துகொண்ட முதல் கதாநாயகன்
திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு இவர் ஓர் கலங்கரை விளக்கம்
நடிகர் சங்கத்தின் எல்லா கடன்களையும் அடைத்த பெருமை
பூந்தோட்ட காவல்காரனுக்கு சிறப்பாக இசை அமைத்ததற்காக
இளையராஜாவிற்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கிய உள்ளம்.
1978 ஆம் ஆண்டு
‘இனிக்கும் இளமை’ என்ற திரைப்படத்தில்
ஒரு கௌரவத் தோற்றத்தில் நடித்தார்.
இன்று தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினர்
மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற கௌரவம் கிடைத்திருகிறது
MGR பெயரில் புரட்சியையும், கருணாநிதியில் இருந்து கலைஞரையும்
சேர்த்து புரட்சி கலைஞர் என்ற பட்டம் சூட்டிக்கொண்டார்.
1993 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்
இவரது ரசிகர் மன்றத்தினர் சுயேச்சையாகப் போட்டியிட்டனர்.
அவர்களில் பலர் வெற்றிபெற்றனர் அவர்களின் வெற்றியே
2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் தொடங்க அவருக்கு தைரியம் தந்தது
2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம்
தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினரானார்.
இவர் கட்சியைச் சேர்ந்த மற்ற வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.
2011 இரிஷிவந்தியம் தொகுதியிலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இத்தேர்தலில் அவரது கட்சிக்கு எதிர்க்கட்சித் தகுதி கிடைத்தது.
1990 களில் தொண்டு செய்ய தொடங்கினார்
தனது சம்பளத்திலிருந்து சக சினிமாத் தொழிலாளர்களுக்கு சங்கங்கள் மூலமாக வழங்கி வருகிறார்
கார்கில் நிதி, ஒரிசா வெள்ள நிவாரண நிதி, குஜராத் பூகம்ப நிதி, பள்ளி தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் குடுமப்ங்களுக்கு நிதி, சுனாமி பேரழிவிற்கு நிதி, திருமண நிதி என பட்டியல் நீண்டது போல்
தன் கட்சிக்கென்று பெரிதாய் ஒன்றும் கொள்கை இல்லாததால்
இலாப கணக்கிட்டு கூட்டணி முடிவையும் நீண்டுகொண்டேயுள்ளார்
சினிமாவில் கதா நாயகனாய் வெற்றிபெற்றவரால்
அரசியலில் சிரிப்புக்கு பஞ்சமில்லை
தயவுசெய்து கூட்டங்களில் பேசா பொம்மையாய் இருந்தால் அவருக்கு நல்லது
அவரது மனைவியை பேசவைத்து பார்க்கட்டும் சகித்திருப்போம்
இல்லையேல் சிரித்திருப்போம்

கட்டுப்பாடு

கட்டுப்பாடு
--------------------
உடல் மற்றும் மனம் சார்ந்தே
செயல்கள் நிர்னயிக்கப்படுகிறது
மௌனம் மனதை நெறிபடுத்தும்
எல்லாமே ஒர் எல்லைக்குள் கட்டுப்பட்டால்தான் நிம்மதிகிட்டும்
எல்லைகடந்தால் தொல்லைதான் எட்டும்
கட்டுப்பாடு என்பது
ஓர் கண்கட்டுவித்தை
மனிதர்கள் சந்தர்ப்பத்திற்காக
காத்திருக்கிறார்கள்
சந்தர்ப்பம்
கிடைக்கும்போடது தவறிவிடுவார்கள்
இந்தியாவிலிருந்து பாகிஸ்தான்
பிரிவினையின் போது
முதல் நாள்வரை மசூதிகளிலும்
கோயில்களிலும் பிரார்த்தனை
செய்துகொண்டிருந்தார்கள்
பிரிவினை என்றதும்
அகப்பட்டதையெல்லாம் அபகரித்த கள்வர்கள்
கண்ணில் கண்ட பெண்களையெல்லாம் கற்பழித்தனர்
தேசத்தின் தெருக்களில்
கீதையும் குரானும்
காமம் செய்துகொண்டிருந்தது
சந்தர்ப்பம் கிடைத்தவுடன்
மனிதன் மிருகமாகிவிடுகிறான்
மதம் காவலாகிவிடுகிறது
படித்தவனே தனிமையில்
அதிகம் தவறுகிறான்
படிக்காதவன் கூட்டத்தில் நிறைய
தவறு செய்கிறான்
கூட்டம் தன்னை அடையாளம் காணாது
என்ற தைரியம்
தனக்குள் இருக்கும் மிருகத்தை
கட்டவிழ்த்துவிடுகிறான்
வன்முறை வளர்கிறது
காட்டாறுகளால் பயிர்களுக்கு என்றும் பயனில்லை
கடலை அடைந்துவிடும்
அடைக்கிவைக்கப்பட்ட அணை நீரே
பசி தீர்க்கும்

சனவரி 26

திருட்டுப் பழம் / சனவரி 26
----------------------------------------------
இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும் 26 சனவரி
1930ஆம் ஆண்டு இந்தியவின் பூர்ண விடுதலை அறைகூவலை காந்தி அறிவித்த நாளை நினைவுகூர
சனவரி 26 ஆம் நாள் காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
2 ஆண்டுகள், 11 மாதங்கள், 166 நாட்கள் பி ஆர் அம்பேத்கர் தலைமையில்
308 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில்
நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.
குடியரசு என்பதற்கு நேரடிப் பொருள் குடிமக்களின் அரசு.
மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் மூலம் தங்களுடைய தலைவனைத் தேர்ந்தெடுத்து அவர்கள்
ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசுநாடு.
நமது அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொண்ட நாள் 1950 ஜனவரி 26.
300 ஆண்டுகள் நடந்த அடிமை ஆட்சியிலிருந்து மக்களாட்சி பிறந்த நாள்
அன்னியத்துணியின் மோகம்
துணிவிக்க வந்தவனிடம் தேசத்தை விற்றுவிட்டோம்
போராட்டம், ஆட்சேபம், ஆத்திரமூட்டல் சவால் இல்லாமல்
தானாக கிடைப்பதால் சுவாரசியமும்
ரசிப்புத்தன்மையும் குறைகிறது
பணம்கொடுத்து வாங்கிய பழங்களைவிட
திருட்டு பழம் சுவையாகிறது
உலக அழகி மனைவியாயிருந்தாலும்
பக்கத்துவீட்டு குரங்குகளோடு மனம்
மரம் விட்டு மரம் தாவிக்கொண்டுள்ளது
மறைக்க மறைக்கத்தான்
திறக்கத்துடிக்கிறார்கள்
விக்டோரியா மகாராணி காலத்தில்
காலின் விரல்கள்கூட வெளியே தெரியாத அளவிற்கு
ஆடை அணியவேண்டுமாம்
கட்டைவிரல் திறந்தாலே காமம் வெடித்துவிடும்
என்றார்கள்
இப்போதோ பாதி நிர்வாணத்தில்
உலகம் நடமாடுகிறது
இருந்தும் காமம் கரைதாண்டவில்லை
யாறும் 1000 மனைவிகளோடோ
100 வைப்பாட்டிகளோடோ வாழ்வதில்லை
ஒற்றை மனைவியோடோ அல்லது பிரமச்சாரிகளாகவோதான் வாழ்கிறார்கள்
ஆங்கிலேயர்களை அப்புரப்படுத்த முடிந்த நம்மால்
அடிமைத்தனத்தை அப்புரப்படுத்த முடியவில்லை
துண்டு துண்டாய் இருந்த இந்தியாவை
வியாபாரம் செய்யவந்தவனிடம்
விலை போனார்கள் இந்தியர்கள்
வளத்திற்காய் நாட்டின் செல்வங்களையும்
மானத்திற்காய் நாட்டின் பெண்களையும்
களவாடினார்கள் மன்னர்கள்
பெண்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும்
கெளரவத்தின் அட்டையாளமாய் வைத்திருந்தனர் இப்போது
எதிரியை அவமானப்படுத்த பெண்களை கவர்வதில்லை
அவமானம் இங்கே தேசிய கீதமாகிவிட்டது
செல்வத்திற்காகவும் செல்வாக்கிற்காகவும்
வியாபார யுத்தம் நடக்கிறது
மறுபடியும் வியாபாரக்கைகள்
தேசத்தின் துகிலுரிக்க
தீயாய் துடித்திருக்க
அரசியல்வாதிகள் கற்பூரமாய் காத்திருக்கிறார்கள்
கா(கூ)ட்டிக்கொடுப்பதற்கு.

அறிவு

அறிவு
----------
சிந்தனையற்ற நிலைதான் பேரின்பம்
ஏசு சொல்கிறார்
ஈடன் தோட்டம் காத்துக்கிடக்கிறது
அறிவை துறந்தவர்களுக்காக
இறைவனின் இராஜ்யம் காத்துக்கிடக்கிறது
சிந்திப்பவர்களை ஈடன் தோட்டம்
ஏற்பதில்லை
அறிவு என்பது ஓர் கடன் வாங்கிய
செல்லாக்காசு
மனப்பாடம் செய்யப்பட்ட இறந்த காலத்திற்கு
சொந்தமானது
மனம் ஓர் குப்பைத்தொட்டி
நினைவாற்றல் என்பது குப்பைத்தொட்டியில்
குப்பையை கிளறும் ஓர் நாய்
ஞானம் உங்களுக்குள் மலர்ந்து
எழுந்து உங்களின் சொந்த மூலத்திலிருந்து
உருவானது
அறிவு நினைவாற்றல் மூலம் உருவானது
ஞானம் தியானத்தில் மலர்வது
அறிவாளி கேள்விக்கு பதில் தருவான்
ஞானி கேட்பவர்க்கு பதில் தருவான்
ஞானிகளின் கடமை அறிவிலிருந்து
ஞானத்தை காட்டுதலே
படித்துக்கொண்டே இருப்பவர்களால்
கேள்வி கேட்க முடியாது
மறுப்பதற்கும் சந்தேகம் கொள்வதர்கும்
ஓர் சிறப்பு நிலை வேண்டும்
கோழைகளால் சந்தேகமோ கேள்வியோ
கேட்கத்தெரியாது
அதற்கும் தைரியம் வேண்டும்
மதவாதிகளுக்கு வாழ்க்கையைவிட
வார்த்தைகளின் மேல் நம்பிக்கையுண்டு
எப்போதும் ஜபித்துக்கொண்டே இருப்பார்கள்
எதிரில் ஏசுவே வந்தாலும்
கண்டுகொள்ளமாட்டார்கள்
மூடர்கள் விளக்குகளைத்தான்
கைபற்ற நினைக்கிறார்கள்
ஓளியையல்ல

பொங்கல்

பொங்கல் நன்றி சொல்லும் திரு நாள்
ஓரறிவு முதல் தனக்கு உதவிய
எல்லா உயிர்களுக்கும் நன்றி சொல்லும் விழா
நன்றி மறந்தவர்களை ஒதுக்கிவிடுங்கள்
மாட்டை அவிழ்த்துவிட்டு மடி தேடும் மனது
கொம்பை சீவி விட்டு கை நீட்டும் வீரம்
வளர்த்து எடைபார்த்து விலை பேசும் அறிவு
வீரம் என்பது விலங்குகள்மேல் காட்டுவதல்ல என்கிறார்கள்
இது ஓர் சமூக வழக்கம்
எளியோர் பன்பாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல்
நாம் விழித்துக்கொள்ளவில்லை என்றால் இது தொடரும் ...
நம் உணவு, உடை, உறவு, படிப்பு,
விவசாயம், வேலை, திருமணம், கலை, பண்பாடு, சட்டம், ஆட்சி
என எல்லாவற்றிலும் ஆதிக்கச்சக்திகள்
எதை விரும்புகிறார்களோ அதுவே நிறுவப்படுகிறது
தன் விருப்பங்களுக்கு இடமில்லை
பொதுமையை நோக்கிய நகர்வு
இது சாத்தியமில்லை என்பதற்கு உலகில் பொதுவுடமை தோற்றதே உதாரணம்
ஒவ்வொரு உயிர்களும் வெவ்வேறாகவே தனித்தன்மையுடன் பிறக்கின்றது
ஒரே வீட்டுப்பிளைகள்கூட வேறு வேறு திறமைகள் உறுவங்களில்தான்
வேறு வேறு நிலைகளில்தான் இருக்கிறார்கள்
நம்மாள் முடிந்தது கல்விக்கூடங்களின் ஆடைகளில்மட்டும்
பொதுமைபடுத்தமுடியும் பள்ளி முடிந்ததும்
தனிமைத்தொடரும் தனித்துவமே சாதிக்கும்
அவரவர் வாழ்வை அவரவர் வாழட்டும்
அத்துமீறுதல் அபாயம்
எல்லோறும் சைவமாக மாறினாலும்
எல்லோறும் அசைவமாக மாறினாலும்
உலகில் உணவு பஞ்சம் வந்துவிடும்
இந்தியாவை உலகம் ஓர் சந்தையாக பார்க்கிறது
அவர்களின் பொருட்கள் விற்பனையாகவேண்டும்
அதற்கு நம்மூர் அரசியல் மற்றும் வியாபாரிகள்
விலைபோகிறார்கள்
போகி என்பது போக்கி என்பதாகும்
பழையதை போக்க வேண்டும் நம்மை புதுப்பித்துக்கொள்ள
பொருள்களை மட்டுமல்ல சிந்தனையிலும்
செயலிலும் புதுமைவேண்டும்
மனம் அறிவு சார்ந்த குப்பைகளை
கொலுத்தும் திரு நாள்
நம் அறிவுக்கு எது புதுமையோ
மனதுக்கு எது உண்மையோ
அவைகளுக்காக உயிர்ப்புடன் வாழலாம்
மாடு பிடித்தல் பழமை வீரமற்ற செயல் என்ற வாதமிருந்தாலும்
காளைகளையும் நம்மின மாடுகளையும்
காக்கும் கடமையும் அறிவும் எல்லோர்க்கும்
விழிப்புணர்வு தந்துள்ளது புதுமை
காளைகளை அடக்கமுடியாதது தோல்வியல்ல
அன்னியரிடமிருந்து நம் பன்பாட்டு விதைகளை
காப்பதில் தூங்கிய நம்மினம் விழிப்படைந்ததே நமது வெற்றி

மதம்

மதம்
+++++
வாழ்வதற்கான வழிகாட்டுதல் அல்ல
மரணத்திற்கு அப்பால் வழிகாட்டுகிறது
வாழ் நாளைவிட கல்லறைகளின்
புகழ் பாடி கை நீட்டி அழைக்கும்
மரணத்தின் ஊஞ்சல் மதம்
மரண பயத்தை மனிதனில் பழக்குவது மதம்
வயதனவர்களின் நம்பிக்கைகுறியதாய்
மரணத்தை எதிர்நோக்கி உள்ளவர்களும்
மரண பயத்தில் உள்ளவர்ளும் நிறைந்த
நம்பிகையிழந்த பிணங்களின் கூட்டமும்தான்
கோயில்களை தேடுகின்றனர்
கோரிக்கைகளுடன்
பொய்களின் மேல் கட்டப்பட்ட கோபுரங்கள்
மத அமைப்புகள்
மனிதனை அடிமைபடுத்தவேண்டிய
நோக்கோடு கோயில் மசூதி மடாலயம் தேவாலயங்கள்
கட்டமைக்கப்பட்டுள்ளன
இத்தனை குருமார்கள் துறவிகள் பக்தர்கள் இருந்தாலும் இந்த
உலகம் ஏன் இன்னும் தெய்வீகத்தன்மைபெறவில்லை
எல்லாம் சுய நலத்தின் சூது
பொது நலமின்மை அச்சம் அடிமைபடுத்துதல் போன்ற
மதங்களின் நோக்கமே
மனிதன் புதிய புதிய கடவுளையும்
மதத்தையும் தேடிக்கொண்டேயுள்ளான்
கிடைக்காதவன் மதுவில் மயங்கிக்கிடக்கிறான்
தற்காலிக நிவாரணங்களையே மதம்
செய்கின்றன நிறந்தரமான தீர்வுளை சொல்வதில்லை
பொய்யான நம்பிக்கை விதைகளை
பாறையில் விதைப்பது மதங்கள்
ஆசையின் போதையில் அழைத்துச்செல்கிறார்கள்
பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத்தேடி
பெண்கள் கோயில்களிலும்
ஆண்கள் மதுக்கடைகளிலும் விழுந்து கிடக்கிறார்கள்
மதங்கள்
வாழ்வியலை போதிக்காது
மரணத்தை மட்டுமே போதிக்கிறது

புலரட்டும் புத்தாண்டு

புலரட்டும் புத்தாண்டு
பொய்யும் புரட்டுமே
பிழைப்பாகி போன உலகில்
உண்மயும் அன்பும்
தப்பித் தழைக்கட்டும்
பாசமானவனை பைத்தியம் என்கிறார்கள்
காசுமானவனை கடவுள் என்கிறார்கள்
நாணமற்ற ஓர் சமூகத்தை
கட்டமைத்துக்கொண்டுள்ளோம்
லஞ்சம் வாங்குவது அதிகாரத்தின் அலுவலாகிப்போனது
சிறை செல்வது தியாகமாகிவிட்டது
ஜாதியில் பெருமை பேசுகிறார்கள்
மது அருந்துவது நாகரீகமாகிவிட்டது
உடல் தெரியாது ஆடை அணிவது அனாகரீகமாகிவிட்டது
உழைப்பே அவமானகிவிட்டது
எழுதிவைத்துக்கொள்ளுங்கள்
திருமணமாகாமலே குழந்தை பெருவது
நாகரீகமாகப்போகுது
திருமணமண்டபங்கள் விடுதியாகலாம்
எவற்றிக்கெல்லாம் வெட்கப்பட்டோமோ
அவைகளை வெட்கமேயில்லாமல் கொண்டாடிக்கொண்டுள்ளோம்
தனிமனித ஒழுக்கமெல்லாம்
தரம்கெட்டுப்போனதற்கு
சுய நலம் மட்டுமே காரணமானது
சுய நலம்பெற்றெடுத்த இரு பிள்ளைகள்
ஆன்மீகமும் அரசியலும்தான்
இரண்டிலும் மக்களுக்கு தெளிவில்லாதவரை
நமது விடிவெல்லாம் நாளும் இருளில்தான்
தன்னையறிதலுக்காய் ஆலயங்களுக்கு செல்பவர்கள்
அடுத்தவரின் மனம் சஞ்சலப்படுத்துவதாய் சலனப்படுத்துவதாய்
ஆடைகளின் கட்டுபாடுகளுக்காய்
சட்டம் போடுகிறார்கள்
ஆனால் அரை நிர்வாணமாய் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்
ஆடை மட்டுமா மனதை சஞ்சலப்படுத்துவதாய் சலனப்படுத்துவதாய் உள்ளது ?
ஆபரணங்களை என்ன செய்வது
கடவுளை தரிசிக்க கழுத்து நிறைய நகைகள் எதற்கு
முற்றும் துறந்த முனிகளுக்கும்
எல்லாம் கடந்த கடவுளுக்கும்
தங்கத்தால் ஆபரணம் எதற்கு
சிலை செய்யும்போதே ஆபரணமும் ஆடையுடனும்தான்
செய்கிறார்கள் சிற்பிகள் அதற்குமேல் தங்கத்தாலும் பட்டாலும்
சஞ்சலப்படுத்துவதும் சலனப்படுத்துவதும் எதற்கு
சட்டப்படி தடை செய்யப்பட்டால்
முதலில் தண்டிக்கப்படுவது சிலைகளைதான்
எளிமையின் உருவான இறைவனுக்கு
ஒரு நாள் குளியல் செலவு 1 லட்சம் ரூபாய்
திருமலையின் வரவு செலவு கணக்கைப்பார்த்தால்
இந்தியா ஏழை நாடென்று யாறும் நம்பமாட்டார்கள்
ஆனாலும் நாம் ஏழைகள்தான் நம் தலையை அடகுவைத்து
அரசியல்வாதிகள் கடன் வாங்கிவிட்டார்கள்
ஓர் இந்தியன் பிறப்பதற்கு முன்னே
கருவிலே கடன்காரணாகிறான்
ஈராக்கின் யுத்தத்திற்கு முன்
அமெரிக்காவின் இரானுவ தளவாட வியாபாரம் 30%
போர் நடந்து முடிந்தபின் 59% உலக இரானுவ தளவாட வியாபாரச்
சந்தையை அமெரிக்கா கைபற்றியது
முட்டாள் மூன்றாம் உலக நாடுகள்
ஆயுதம் வாங்கி குவித்தன
ஆயுதம் வாங்க கடனுதவியும் அமெரிக்காவே தந்தது
இரட்டை வருமானம் ஆயுதமும் விற்பது
வட்டிக்கும் பணம் கொடுப்பது இது இல்லாது
ஈராக்கின் எண்ணை கிணறுகளை தன்வசப்படுத்தல்
இது உலக அரசியல் உள்ளூர் அரசியல்
உங்களுக்கே தெரியும்
தெரியாவிட்டால் தேர்தல் வருகிறது
தெரிந்துவிடும்
ஆன்மீக அதிகாரமும் ஆன்மீக அடிமைத்தனமும்
அரசியல் அதிகாரமும் அரசியல் அடிமைத்தனமும்
நாணமற்ற நாகரீகத்தை புத்தாண்டுகளின்
தொடக்கத்தில் கையில் மதுபாட்டில்களுடன்
நிதானமில்லாமல்லாமல் கொண்டாடிக்கொண்டுள்ளனர்

மேய்ப்பனைத்தேடும்

யூத மண்ணிலே
ஏசுவின் விதைகள்
கல்லறைகளில் கிடந்த அவமானச் சிலுவையை
கழுத்தினில் தொங்கும் புனிதமாக்கினாய்
லாசரை மரணத்திலிருந்து உயிர்பித்தாய்
நீரை மதுவாக்கினாய்
குருடரை பார்க்கச்செய்தாய்
முடவனை நடக்கச்செய்தாய்
கடலின் அலைகளில் நடந்துகாட்டினாய்
பிதாவே உன் பிள்ளைக்குப்பிறகு
ஏவறும் அற்புதம் செய்ய வரவில்லை
பழங்கதை பேசியே மதவாதிகளால்
மதம் வளர்க்க முடியவில்லை
நீ வருவாய் என்ற நம்பிக்கையில்
உயிர் பிடித்து காத்திருக்கிறார்கள்
மேய்ப்பன் இல்லாத மந்தைகளாய்
உன் பிள்ளையின் இறப்பிற்குப்பிறகும் கன்னிமேரிகள்
காத்திருக்கிறார்கள் கற்பமடைவதற்கு
எந்த அதிசய விண்மீன்களும் இதுவரை வழிகாட்டவில்லை
எந்த அசிரிரியும் வாய்திறக்கவில்லை பூமியில்
கயவர்கள் நிறைந்ததால்
கடவுளே உனக்கு மனமில்லை
பூமிக்கு இன்னுமொரு பிள்ளையை அனுப்பிவைக்க
இப்போது சிலுவைகள் தேவையில்லை
கருவிலே கல்லறை கட்டிவிடுவார்கள் கயவர்கள்
இயேசு 13- 30 வயதுவரை இந்தியாவில் உலவியதாகவும்
இங்கிருந்தே ஞானமடைந்ததாகவும் கூறுகிரார்கள்
பின் தன் மக்களுக்காக தொண்டாற்ற
30 வயதில் இயேசு யோர்தான் ஆற்றில் யோவானிடம் ஞானஸ்நானம் பெற்றார்
பின் பாலைநிலம் சென்று 40 நாள் நோன்பிருந்தார்
அப்போது சாத்தானின் சோதனைகளில் மரணம் வென்றவர்
மானிட சூழ்ச்சியால் மரணம் தொட்டார்
இரவு உணவளித்து திருத்தூதர்கள் பன்னிருவரோடு
தன் காலடிகளையும் கழுவிய ஏசுவின்
காலை வாரிவிட்டவன் யூதாஸ்
முத்தத்தால் குற்றம் செய்தவன்
இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்துவிட்டான் 33 காசுக்காக
பிலாத்துவால் இயேசுவின்மீது குற்றம் காணமுடியவில்லை
ஆனால் யூத மதக்கும்பலுக்கு பயந்து இயேசுவை சிலுவையில் அறைய
தீர்ப்பு திருத்தப்படுகிறது
காசு வாங்கிய யூதாசுக்கு மனமிருந்தது வருந்தி செய்த தவறுக்காய்
தூக்குப் போட்டுக்கொண்டான்
பரலோக பிதாவே இங்கே பல யூதாசுகள்
காசுக்காக தனி நபரை மட்டுமல்ல
தேசத்தையே காட்டிக் கொடுக்கிறார்கள்
எளியோரும் இல்லாதோரும்தான் தூக்குப் போட்டுக்கொள்கிறார்கள்
காட்டிக்கொடுத்த காசால் சட்டத்தை விலைபேசிவிட்டார்கள்
மார்ச்சு 25ஆம் நாள் இயேசு மரியாவின் வயிற்றில் கருவானார்
டிசம்பர் 25ஆம் நாள் இயேசு மண்ணில் பிறந்தார்
தன்னால் இந்த உலகத்தில் அவமானப்பட்ட தாயின் மீது
அளவுகடந்த அன்புவைத்தவர் சிலுவையில் தொங்கும் போது
தாயைக் கவனித்துக்கொள்ளுமாறு சீடருக்குப் பணித்ததார்
இயேசு உயிர்பெற்றெழுந்து முதலில் காட்சியளித்தது
விலைமகள் மகதலா மரியாவிடம்தான்
உயிர்பெற்றெழுந்த இயேசுவை சீடர் தோமா
தம் கைகளால் தொட்டுப்பார்த்தாலொழிய நம்பப்போவதில்லை என்றார்
எட்டு நாள்களுக்குப் பின் இயேசு மீண்டும் தோன்றியபோது
தோமா இயேசுவைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" என்றார்
இயேசு அவரிடம் என்னைக் கண்டதால் நம்பினாய்.
காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்றார்
இயேசு இறுதி முறையாகத் தோன்றியது நாற்பதாம் நாள்
அன்றே அவர் விண்ணேகினார்
யூதம் இயேசுவை கடவுளாக, கடவுளிடம் மத்தியஸ்தம் செய்பவர்
மீட்பரின் இறைவாக்குகளை நிறைவேற்றவோ அல்லது
மீட்பருக்குரிய ஆளுமை தகமைகளைக் கொண்டிருக்கவோ இல்லை என வாதிடுகிறது
இசுலாம்
இயேசு மக்களை வழிநடத்த அனுப்பப்பட்ட கடவுளின் தூதராக,
மீட்பராக, இறை தூதராக, கடவுளின் செய்தியை பரப்ப வந்தவர் எனவும் வலியுறுத்துகிறது.
இயேசு கடவுளின் அவதாரமோ, கடவுளின் பிள்ளையோ இல்லை எனக் கருதுகிறது.
உலகில் ஓரே கடவுளும் அவருக்கு இணையாக துணையாக யாறும் இருப்பது உருவ வழிபாடாகக் கருதுகின்றது.
இயேசுவின்மீது நம்பிக்கை வைப்பது ஒரு முசுலிமாக இருக்கத் தேவையானது.
ஏனைய இறை தூதர்கள் போல் இயேசுவும் ஓர் முசுலிமாக கருதப்படுகிறார்.

பார்வை

பார்வை
++++++++
விழிகள் வேறானாலும்
பார்வை ஒன்றே
கடவுள் சிலைகள்
அழும் குழந்தைகளுக்கு ஆறுதல் பொம்மைகள்
இல்லாத உருவத்திற்கு உறுவகம் கொடுத்து
தர்க்கம், தத்துவம், காவியம், ஓவியம்
ஆடல் பாடல், ஆர்பாட்டம், திருவிழா
குதூகலம் கொண்டாட்டம், ஊர்வளம்
பல்லாக்கு, பவனி என போலியாய் கொண்டாடி
பொய்யாய் வாழ்கிறோம்
நிழலும் நிஜமும்
பொய்யும் உண்மையும்
கடந்து செல்லத்தான் பிறந்துவந்தாய்
உயிர்த்து வந்தது இறக்கத்தான்
எழுந்து வந்தது வீழத்தான்
நடந்து வந்தது படுக்கத்தான்
ஆட்சியடைந்தது இழக்கத்தான்
எதுவும் இல்லாது பிறந்து
எல்லாமும் அடைந்து
எதுவும் இல்லாது இறக்கின்றான்

காதல் கல்லறையில்

திருமண பந்தம் ஓர் நிர்பந்தம்
சம்மந்தபட்டவர்களை (இருவர்) தாண்டி ஒர்
சமூக அக்கரை உண்டு நிச்சயக்கப்பட்ட திருமணத்தில்
காதல் மணங்களில்
தவிப்பும் பரபரப்பும் இருக்கும்
சரியும் தவறும் கண்களுக்குத் தெரியாது
ஒரு வித மயக்கத்தில் இருப்பார்கள்
கனவும் தூரமும் அழகானது
அருகாமை கனவை கலைத்துவிடும்
கலைந்த கனவு பிரிவினைத்தேடும்
பணம் தேடும் வாழ்வில்
மனம் செத்துப்போகும்
காலத்தை தொலைத்தவன்
கடிகார முட்களை துரத்திக்கொண்டுள்ளான்
எண்களோடுதான் விளையாட்டு
திருமண ஊர்வலத்தில்
கல்லறையில் காதல்
அனாதையாய் குழந்தைகள்

பேய்கள் உண்மையா ?

பேய்கள் உண்மையா ?
+++++++++++++++++++
மனம் இடைவிடாது இயங்கிக்கொண்டேயுள்ளது
மனதை ஆட்கொள்ளத்தெரியாதவர்கள்
புகைக்கிறார்கள், குடிக்கிறார்கள்
இப்படி ஏதாவது ஒன்றிடம் சிறைபட்டு போகிறான்
பெண்கள் சமூக கட்டுபாட்டுக்கு பயந்து
வெற்றிலை போடுவது யாரிடமாவது சதா பேசிக்கொண்டே இருப்பது
ஆள் கிடைக்கவில்லை எனில்
கோயில் சிலைகளோடு பேசிக்கொண்டே இருப்பார்கள்
உடலும் மனமுமாகவே
மனிதனின் இயக்கம்
தன்னையே தள்ளி நின்று பார்ப்பது
வாட்ச்ஃபுல்னெஸ் (Watchfulness)
சாட்சியாக பார்ப்பது
விட்னெஸ் (Witness)
மனம் குழம்பிய நிலையில்
சிலைகள் தெய்வமாகவும்
நிழல்கள் பேயாகவும் தெரியும்
மனத்தெளிவுள்ளவன் பூசாரியிடமோ
மந்திரவாதியிடமோ செல்வதில்லை
பேய்கள் உண்மையா
1 : திடீரென்று நம் கண்களுக்கு தோன்றி மறையும் நிழல் உருவங்கள் போன்ற நிகழ்வுகள் நடக்க காரணம், நம் மூளையின் ஒரு வகையான மின்சார தூண்டல் தானாம் (Electric Stimulation Of The Brain)..!
2 : ஆவிகளுடன் நடத்தப்படும் உரையாடல்களின் போது நமக்கு கிடைக்கும் பதில்களுக்கு காரணம் பேய்களோ ஆவிகளோ இல்லை - இடியோமோட்டார் எஃபெக்ட் (Ideomotor Effect) தான் காரணம்..! தன்னை அறியாத நிலையில் ஏற்படும் உடல் அசைவுகள் சார்ந்த விளைவுகளை தான் இடியோமோட்டார் எஃபெக்ட் என்பர்..!
ஆவிகளுடன் தொடர்பு கொள்ள பெரிதளவில் பயன்படுத்தப்படும் ஓவ்ஜா போர்ட்டில் (Ouija board) நம் கைகள் தானாக நகர்வதற்கும் அசைவதற்கும் காரணம் இந்த விளைவு தானாம்..!
3 : தானாக ஒரு பொருள் அசைகிறது என்றால் அதற்கு காரணம் ஏதோ ஒரு ஆவியின் சக்தி என்று நினைத்து விடாதீர்கள், அதற்கு காரணம் - இன்ஃப்ரா சவுண்ட் (Infrasound)..! அதாவது மனித காதுகளால் 20,000 ஹெர்ட்ஸ் (Hertz) வரையிலான சப்தங்களை மட்டும் தான் கேட்க முடியும். அதற்கு கீழ் இருக்கும் ஒலிகளை நம்மால் கேட்க முடியாது. ஆனால் அதை அதிர்வுகளாய் உணர முடியும், அப்படியான அதிர்வுகளால் தான், சில பொருட்கள் தானாக அசைய காரணமாகும்..!
4 : உங்களுக்கு வரும் ஆவிகள், பேய்கள் சார்ந்த ஆழ்ந்த சிந்தனைகள் மற்றும் கனவுகளுக்கு காரணம் - ஆட்டோமட்டிஸம் (Automatism)..! அதீதமான தன்னை மறந்த நிலையில் கற்பனைகளும், எண்ணங்களும் வேறொரு வழியாக நம்மில் நுழையும் விளைவு தான் ஆட்டோமட்டிஸம் எனப்படும்..!
5 : குறிப்பிட்ட அறையின் இடம் மட்டும் குளிர்ச்சியாக இருக்க காரணம், அங்கு ஏதோ ஆத்மா இருக்கிறது, பேய் வல்லுநர்கள் சொல்லும் 'கோல்ட் ஸ்பாட்' (Cold spot) என்று நினைக்க வேண்டாம் அது - டிராஃப்ட் (Draft) ஆகும்..! அதாவது, அடைத்தே கிடக்கும் அறைக்குள் இருக்கும் ஒவ்வொரு பொருள்களுக்கும் தனிப்பட்ட உஷ்ணநிலை இருக்கும். ஏதாவது சிறு வழியாக சில்லென்ற காற்று நுழையும் போது சக உஷ்ண நிலையோடு இணையாத குறிப்பிட்ட அந்த இடம் மட்டும் குளிர்ச்சியாய் தோன்றுமாம்.!
6 : கேமிராக்குள் தூசி படிந்தால் எடுக்கும் புகைப்படங்களில் நிழல் உருவங்கள் அல்லது தெளிவற்ற உருவங்கள் தெரிவது சகஜம். அதை ஆவி, பேய் என்று நினைக்க கூடாது..
7 : பாழ் அடைந்த பங்களாவிற்குள் சென்றவர் ஒருவேளை மரணம் அடைந்தால் அல்லது மாபெரும் குழப்பததிற்கு ஆள் ஆனால் அதற்கு காரணம் ஆவிகளோ அல்லது பேய்களோ இல்லை - கார்பான் மோனாக்சைட் பாய்சனிங் (Carbon Monoxide Poisoning)..!
அதிக காலமாய் அடைக்கப்பட்டு கிடக்கும் இடத்தில் கார்பான் மோனாக்சைட் உருவாவது சகஜம்தான். அது சுவாசக் காற்றுக்கு பதில் உள் சென்றால் மயக்கம், குழப்ப நிலை, அதிக பட்சமாக மரணம் வரை கொண்டு செல்லும்.
8 : நிஜமாகவே உங்கள் கண்ணுக்கு ஒன்றுமே தெரியாது, ஆனால் பல பேர் சேர்ந்து பேய், ஆவி, ஆத்மா என்று சொல்லும் போது உங்களால் அதை உணர முடியும். அது நிஜமான ஆவி இல்லை அந்த விளைவின் பெயர் - மாஸ் ஹிஸ்ட்டிரியா (Mass Hysteria)..!
9 : சில குறிப்பிட்ட இடங்களில் நாம் பலவீனாமாக உணர்வோம். அதற்கு காரணம் அங்கே ஆவிகளின் சக்தி அதிகம் என்று அர்த்தமில்லை - அதற்கு காரணம் ஐயன்ஸ் (Ions)
ஐயன்கள் இயற்கையாகவே வானிலை மாற்றங்கள் மூலம் உருவாகும் ஒன்றாகும். நெகடிவ் ஐயன்கள் (Negative Ions) நமக்கு அமைதியையும், ஓய்வையும் தரும், பாசிடிவ் ஐயன்கள் (Positive Ions) தலைவலி மற்றும் உடல் பலவீனத்தை தரும்..!
10 : நாம் இறந்து விட்டதை போலவும், நம் உயிரற்ற உடலை நாமே பார்ப்பது போன்றும் நமக்கு 'நிஜம் போன்ற' கற்பனை எண்ணங்கள் வர காரணம் பேய் உலகம் சார்ந்த விடயமல்ல - அது மூளைக்குள் ஏற்படும் க்வான்ட்டம் மெக்கானிக்ஸ் விளைவாகும் (Quantum Mechanics)
மேலே உள்ள காரணங்கள் பேய்களுக்குமட்டுமல்ல தெய்வங்களுக்கும் பொருந்தும்
பேய்கள் உண்மையானால் தெய்வங்களும் உண்மையே

பெண் விடுதலை

விடுதலை பெறு
விண்ணைத் தொடு
+++++++++++
உதட்டுக்கு மட்டும்
பூட்டிட திண்டுக்கல் சென்றவளே
விழிகளில் வழியுதடி
உதடுகளில் பொய்யும்
விழிகளில் உண்மையுமாய்
பெண்டகனின் ரகசியம் போல்
காப்பாற்றியதை விக்கிலீக் விழிகளில் கசியுதடி
உதடுக்கிருந்த வலிமை
இமைக்கில்லையடி
கற்பென்பதை தப்பாய்
கர்பிதம் கொண்டாய்
தேச துரோகி போல் உன் முகம்
முக்காடிட்டுக்கொண்டுள்ள போதும்
உன் முந்தானைமட்டும்
தப்பு செய்த தலைவன் சிறைக்கு
செல்லும் போது சிரித்து கையாட்டுவது போல்
சந்தோசம் கொள்கிறது
தொண்டையில் சிக்கிய வார்த்தைகளுக்கு
பூச்சி மருந்து அடித்ததால்
வரண்ட இதழ் வாடிப்போனது
கொஞ்சம் நீர்பாச்சு
உயிரோடுஅன்பை
ஒளிக்கவே பார்க்கிறாய்
ஒற்றை உயிரோடு முடிவதில்லை
வாழ்வு
முடிவெடுத்த பின்னே
தயக்கம் கூட தண்டனைக்குரியதுதான்
மோனம் பல நேரங்களில் பலம்
சில நேரங்களில் பலவீனம்
வீணை ஏந்திய பின்
உன் விரல்கள் நடுங்குவதேன்
நதியென நடந்து வந்து
வற்றிய பாலைவனமே
வானவில்லை வரையபுரப்பட்டவளே
வண்ணங்கள் உன்வாசலில் காத்துக்கிடக்கிறது
கார்காலம் கடந்து போய் விடும்
தூரிகை எடு
இணைவது மட்டுமே
இன்பமில்லை
வாழ்க்கை சுமையானபோது
பிரிவதும் இன்பம்தான்
விடுதலை பெறு
விண்ணைத் தொடு

இளைய ராஜா

காற்றோடு கானம் சமைத்து
காதுகளுக்கெல்லாம்
இசையால் விருந்தளித்தவன்
தன் இசை சேரமுடியாத
செவி கேளாதவர்களின் வயிற்றுக்கும் 
உணவளித்த உன்னதம்
உரிமையும் இழந்து
உடைமையுமிழந்த இலங்கை அகதிகள்
நிவாரணமாய் நிதி உதவிய பேருள்ளம்
தன் உடல் விற்ற காசை
மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த பாலியல் தொழிலாளர்கள்
வெள்ள பாதிப்பிற்காக நிதி வழங்கிய தாயுள்ளம்
ஏ அதிகாரவர்க்கமே
அணைதிறக்க ஆணைக்காக காத்திருந்து
அப்பாவிகளின் உயிர் தின்றது போதுமா
செயல்படாது தூங்கிவிட்டு
செத்தவனுக்கு குழி தோண்டுகிறீர்கள்
உங்கள் இதயங்கள் என்ன நஞ்சா
பஞ்சாயிருந்தாலாவது ஈரம்பட்டிருக்குமே
ஊரே தண்ணீர் எங்களின் இமைகளில்தான் ஈரமில்லை
எதைச்சொல்லி அழுவது
சேமிப்பை எல்லாம் வெள்ளம் தின்றதையா
மானம் மறைத்த உடைகளோடு
உயிர் தப்பிய ஓடிவந்ததையா
முன்னரே சொல்லி இருந்தால்
முடிந்தவரை காத்திருப்போம்
இருந்த இரு கையில் உயிர்பிடித்து ஓடி வந்தோம்
இப்போது வற்றியது தண்ணீர்மட்டுமல்ல
எமது எதிர்காலமும்தான்
ஒரு நபர் ஆட்சியில் அமைச்சரும்
அதிகாரியும் சம்பள பொம்மைகள்
ஓடி ஒளிகிறார்கள் உண்மையை ஒளிக்கிறார்கள்
காரணம் சொல்ல எண்ணி கதைகள் புனைகிறார்கள்
தூறலோடு தொடங்கிய மழை காலம்
வாழ்வை தின்று
மரண யுத்தம் நடத்தி முடிவுக்கு வந்துள்ளது
இயற்கையின் பேரிடரை எதிர்கொள்வது மனிதம்
இது செயற்கையின் பேரிடர்
தவறு செய்தவர்களை சட்டத்திற்குமுன் நிறுத்துங்கள்
ஏ அரசியல் வாதிகளே
இப்போதும் அரசியல் செய்யாதீர்கள்
பாலியல் தொழிலாளி உடலைத்தான் விற்றாள்
உங்களை போல் உள்ளங்களையல்ல

ஓஷோ

ஓஷோ
+++++++
குச்சுவாடா மின்சாரம் பாயாத
குக்கிராமத்தில் இந்த ஞான சூரியன்
உதித்தை உலகம் பரவசத்தோடு பார்த்தது
11-12-1931 பிறந்தார்
1974 ல் பூனாவில் ஆசிரமம் அமைத்தார்
1981 ல் அமெரிக்காவில் ரஜ்னீஸ்புரம் அமைத்தார்
அன்பை கடவுள் என்றான் இயேசு
வாழ்வே கடவுள் என்றான் ஓஷோ
இந்த அறிவுக்கடலில் கடவுள் முதல் காமம் வரை
தொடராக அலை அடித்துக்கொண்டே இருந்தது
கடவுளின் பெயரால் கடவுளை
அழிக்கும் அமைப்பு மதம்
ஜான் பால் போப்பை பைபிள் பற்றி விவாதிக்க
ஒரே மேடையில் அழைப்பு விடுத்தார்
அதிகாரம் எப்போதும் ஆன்மீகத்தின் அடிமை
பயந்துபோன போப் அதிபர் ரீகனிடம் சொல்லி
பொய் வழக்கு புனைந்து
1985 ல் அமெரிக்கா ஜெயிலில் அடைத்து
தாளியம் எனும் மெள்ள கொல்லும் விஷம் கொடுத்தனர்
19-01-1990 நரம்பு வெடித்து இறந்தார்
இந்த வாழ்வு
தன்னையறிதலின் தவம்
அறிதலை பிறர்க்கு உணர்த்தல்
முரண்பட்ட மனிதனே
முழுமையானவன்
நேற்றைபற்றி பேசுபவன்
நினைவாற்றல் உள்ளவன்
நிகழ்காலத்தில் உயிர்ப்போடு
பேசுபவன் நிஜத்தில் வாழ்கிறான்
மனமற்ற நிலைகளில்தான்
கடவுள் வாழ்கிறார்
இங்கு எதுவும் புதிதுமில்லை புனிதமுமில்லை
இன்றைய புதிது
நாளை பழையதாகிறது
இன்றைய கடவுள் நாளைய சாத்தான்
அறிவின் வெல்லத்தில்
எல்லாம் அடித்துச்சென்றுவிடும்
சொற்கம், நரகம், பரமபிதா, சாத்தான்
என்ற இருள்பயத்தில் இனி மதம் நடத்தமுடியாது
அறிவின் பேரொளியில்
எல்லாம் விளங்கிவிடும்
கணத்துக்கு கணம் வாழ்தலே பூரணம்
பயமும், குற்ற உணர்வும் மதத்தின் அடித்தளம்
அவ நம்பிக்கையே பயத்திற்கு காரணம்
இரண்டையும் ஒழித்தால் மதம் தானே ஒழிந்துவிடும்
மன தைரியமும் சுயசிந்தனையும்
ஆசையற்ற நிலை சரணாகதிதான்
கடவுளை அடையும் வழி
கோயில்கள் ஓர் குறுக்குவழி
கடவுளை அடையமுடியாத முட்டுச்சந்து
சடங்குகளும் சம்பிரதாயங்களும்
புனித நூல்களும் குழப்பம் ஏற்படுத்தும்
குழாயடி சண்டைகளால் எந்த குடமும்
நிறம்பப்போவதில்லை
நீர் விஷமாகிவிடும் குடங்கள் உடைக்கப்பட்டுவிடும்
கோயில்கள் ஓர் பொய்யான
ஆறுதல் தரும் கூடம்
பாமரர்களை ஏமாற்றி
எத்தர்கள் பிழைப்பு நடத்தும்
நியாமற்ற வணிக மண்டபம்
நான் முடியை தருகிறேன் நீ வைரத்தைகொடு
நான் பாவத்திற்கு மன்னிப்பு கேட்கிறேன் நீ சொற்கத்தை நீட்டு
நான் சில்லறை தருகிறேன் நீ சிகரத்தை காட்டு
இது மக்களையும் கடவுளையும்
முட்டாளாக்கும் முயற்சி
வெற்று மனங்களில்தான் இறைவன் இருக்கிறான்
எண்ணக்குப்பைகளில் இறைவன் இருப்பதில்லை
காணிக்கையாக கடவுள் கேட்பது
பூ, பழம் பாலல்ல எண்ணக்குப்பைகளை
அறிவுத்திரியில் எரித்திடுங்கள் தியானம்
உங்களை கடவுளிடம் கைபிடித்து அழைத்துச்செல்லும்
மந்திரம், தந்திரம், தோத்திரம்
ஜபம் வழிபாடு எல்லாம் கடவுளை அடையும் வழியல்ல
மெளனமே கடவுளின் மொழி அதுவே அவனின் வழி
அடக்கப்பட்ட உணர்வுகள்
சந்தர்பங்களுக்காக காத்திருக்கின்றன
வாய்ப்பு வரும்போது தன்னிலை மறந்து
மிருகமாய் வெளிப்படுகிறது

இராஜாஜி

இராஜாஜி
மெலிந்த தேகம் தெளிந்த சிந்தனை
தென்னகத்தின் பீஷ்மர்
மூதறிஞர், ராஜதந்திரி, தீர்க்கத்தரிசி
மகாத்மாவின் நெருங்கிய நண்பர்
பெரியார் தனக்கும் இராஜாஜிக்கும் உள்ள உறவை
கணவன் மனைவிக்கும் உள்ள உறவை போன்றது என்றார்
காந்தி இராஜாஜியை என் மனசாட்சியின் காவலர் என்றார்
இந்தியாவின் முதல் மற்றும் கடைசி
கவர்னர் ஜெனரல் இவர்தான்
நல்லான் சக்கரவர்த்திக்கும் சிங்காரம்மாளுக்கும் 10-12-1878 ல்
சேலம் மாவட்டத்தில் ஓசூர் வட்டத்தில் தொறப்பள்ளி கிராமத்தில் பிறந்தார்
தாயின் விருப்பப்படி அலர்மேலு மங்கையை 1898ல் மணந்து
தந்தையின் விருப்பப்படி சட்டம் படிக்க சென்னைவந்தார்
1900ல் சட்டம் முடித்து யாரிடமும் பயிற்சி மேற்கொள்ளாமல்
சேலத்தில் தலை சிறந்த வழக்கறிஞரானார்
1910ல் காந்தியை முதல் முதலாக சந்தித்தார்
காந்தியின் பெயரால் ஆசிரமம் அமைத்து
மதுவுக்கு எதிராக போராடினார்
சூரமங்களம் பங்கலா என்பது சேலத்தில்
பேய்வீடு என்று பேர் பெற்றவீடு
அதில்தான் குடிபுகுந்தார் இந்த அஞ்சா நெஞ்சன்
பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு மனைவி 1915 ல் இறக்க
தன் 5 குழந்தைகளுக்கும் தாயாகமாறி
மறுமண சிந்தனையின்றி குழந்தைகளை வளர்த்தார்
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிராய்
ஒத்துழையாமையை காந்தி அறிவித்தவுடன்
வழக்கறிஞர் தொழிலை புறக்கனித்து 1921ல் சிறை சென்றார்
1930 ல் உப்புச்சத்தியாகிரகத்திலும் பங்கெடுத்தார்
1933 ல் காந்தியின் மகன் தேவதாசுக்கு தன்
மகள் லெட்சுமியை மணமுடித்து
காந்தியின் சம்மந்தியானார்
மேற்கு வங்கம் கொந்தளித்த நிலையில்
எவறும் கவர்னர் பதவியை ஏற்க முன்வரவில்லை
ராஜாஜி கவர்னர் பதவி ஏற்று சரி செய்தார்
நேருவுக்கும் பட்டேலுக்கும் கருத்து வேறுபாடு
அதிகரிக்க அதை சரிகட்ட
இலாக்கா இல்லாத மந்திரியாக ராஜாஜி செயல்பட்டார்
பட்டேலின் மறைவிற்கு பிறகு
உள்துறை மந்திரியாக பதவியேற்றார் பின்
நேருவிடம் சொல்லிவிட்டு டில்லியைவிட்டு சென்னைக்கே வந்துவிட்டார்
இந்திய ஜனாதிபதி பதவியை துறந்து
தமிழத்தின் முதலமைச்சர் பதவி ஏற்றுக்கொண்டவர்
மதுவிலக்கு மசோதா, தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழையும் மசோதா
விவசாய கடன் மசோதாக்களை நிறைவேற்றினார்
உணவு பதுக்கலை தடுத்தார்
தீண்டாமை அகற்ற பாடுபட்டார்
ஆந்திராவிற்கு திருப்பதியை தந்துவிட்டு
சென்னையை தமிழ் நாட்டுக்குப் பெற்றுத்தந்தார்
பேச்சில் மிதவாதமும் செயலில் புரட்சியும் செய்தவர்
குலக் கல்வி கொண்டுவந்தது
அவரது தோழ்வியாக பார்க்கப்பட்டது
முஸ்லீம்கள் ஜின்னாவின் தலைமையில்
கொல்கத்தாவையும் பஞ்சாப்பையும் பிரித்து கேட்டு
வன்முறை பரவிய நேரம்
அதை முதலில் ஆதரித்தவர்
அதற்கான வரைவு திட்டத்தையும்
தீட்டிக்கொடுத்தவர் எல்லோராலும் முதலில் எதிர்க்கப்பட்டாலும்
பின்னாளில் காந்திஜியே ராஜாஜியின்
பாகிஸ்தான் திட்டத்தை ஏற்றுக்கொண்டார்
காங்கிரசிலிருந்து பிரிந்து சுதந்திரா கட்சியை
தொடங்கி திமுக வுடன் கூட்டு சேர்ந்து வென்று
தமிழகத்தில் காங்கிரசை வீழ்த்தி
அண்ணாவை முதலமைச்சராக்கினார்
25-12-1972 காலமானார்

மீண்டெழுவோம்

மீண்டெழுவோம்
++++++++++++++++
மேய்ப்பனை புறந்தள்ளி
ஏய்ப்பவனுக்கு ஓட்டளித்ததால்
மிதக்குது வெள்ளாடுகள் பாவம்
வெளுத்தது நரிகளின் சாயம்
அடுத்தவனின் அன்பளிப்பில்
ஆட்சியாளரின் முகமூடி
வெட்கமே இல்லாமல் ஓர்
விளம்பரத்தேடல்
மாற்றானின் பிள்ளைக்கு
மலடிகளின் முவரிகள்
நிவாரணத்தை நிர்வானமாக்கும்
நிர்வாக அடிமைகள்
தண்ணீர் ஏழை சென்னையில்
நீர் வீடு தேடி வந்தபோது
வீட்டைவிட்டே ஓடியதேன்
தார்போட்டு கார் ஓடிய சாலைகளில்
படகு பயணம் நடக்கிறது
மின்சாரம் தின்ற தண்ணீர்
வாய்பிளந்து நிற்கையில்
அறிவியல் தொலைந்துபோனதே
மொத்தமாய் திறந்தால்
சிங்காரச்சென்னை சீறழியும்
எனத்தெரிந்தே திறந்த நிர்வாகம் யார் பொருப்பு
செத்த உயிர்களுக்கு யார் பொருப்பு
காப்பாற்றுவார்கள் என நம்பியபோது
காணாமல் போனது ஓட்டு வாங்கிய கவுன்சிலர்கள்
மட்டுமல்ல உண்டியல் வசூலித்த கடவுளும்தான்
தெருவுக்கொரு திருக்கோயில்கள்
கடவுளெல்லாம் நீர் சமாதியில்
நீர் வடிந்தால் காப்பாற்ற மனித மடையர்கள் வருவார்கள் என்று
காத்திருக்கும் கற்சிலைகள்
கண்டுபிடிக்கப்பட்டது காப்பாற்றுவார்கள்
என்று நம்பி ஏமாற்றியவர்களையும்
செய்த செய்யாத குறைகளையும்
குடங்கள் தேடும் தண்ணீரையும் மட்டுமல்ல
கரைபுரண்டோடும் மனிதாபிமானத்தையும்தான்
நம்பிக்கையோடு மீண்டெழுவோம்

வித்யா சாகர்

தூசி புயலடித்து
சூரியன் கலங்காது
அணையா ஜோதியாக
அருட்பெரும் ஜோதியும்
அணையா விளக்காக
அண்ணா சமாதியும்
அணையா அடுப்பாக
சென்னை சிறைக்கு அடுத்ததாக
காசி நாடார் வீட்டு அடுப்புதான் எரிந்துகொண்டே இருக்கும்
சென்னைக்கு பிழைக்க வரும்
தென்னாட்டினரினருக்கு இவர்களின்
வீடுதான் புகலிடம்
பல தொழில் அதிபர்களுக்கு
முகவரி தந்தவீடு
தூசி புயலடித்து
சூரியன் கலங்காது
காசிப்புயல் காயங்களை
மருந்திடும் கரங்கள் உன்னது
வீழ்ந்துவிடும் மஞ்சு என
வீனர்கள் சொல்வதுண்டு
நெருங்கி நான் பார்த்ததுண்டு உன்
நிழல்கூட பயமறியாது என்று
நீயொறு நெருப்புப்பறவை
எல்லோறும் பிறந்து வியாபாரியாவார்கள்
நீ மட்டும்தான் வியாபாரியாவே பிறந்தாய்
ஒரு நிறுவனத்தை கட்டி எழுப்புவது
அவ்வளவு எளிதல்ல
24 மணி நேர சிந்தனையும்
தொழில் பற்றியே
உன் வியர்வையால் விளைனந்தது
இந்த மஞ்சு கோபுரம்
குறைகளும் குற்றங்களும்தான்
மனிதனின் உப பிறப்பு அதை
களைந்து வெள்வதுதான்
மானிட சிறப்பு
200 குடும்பங்களின் வாழ்க்கை
இருப்பது உன் பொருப்பு
நம்பிக்கை நிறைந்த நான்கு பேரை
உடன் வைத்துக்கொள்
ஊதியத்திற்காக மட்டுமல்லாது
உனக்காக பணிபுரிபவர்களாய் பார்த்துக்கொள்
உன் குறைகளை சொல்லச்சொல்
செவி கொடுத்து கேள்
கை தட்டும் காக்கைகள்
காணமல் போய்விடும்
மஞ்சுவை பற்றிய எதிர் நிலை
செய்திகள் வரும்போதெல்லாம்
நெஞ்சு நிம்மதி இழக்கும் அங்கு
6 வருடங்கள் பணிபுரிந்தது நான்
வீடுவாங்குவதற்கான தகுதியாக வங்கியில்
ஏற்றுக்கொள்ளப்பட்டது
மலரும் நினைவுகளாய் மறக்கமுடியவில்லை