Thursday, September 11, 2014

பதில் தேடும் பயணங்கள்
----------------------------------------
பல நேரங்களில் கேள்விகளே பதிலாய்
மெளனமும் புன்னகையும்
கண்ணசைவும் விடைகலாகும்
பதில் தெரியா கேள்விகளுக்கு யுகங்களாய்
காலம் பதில் தேடிக்கொண்டேயுள்ளது
விடை தெரியும்வரை
பேய்களோடும் கடவுளோடும்
உறங்கிக்கிடக்கும் பதில்கள்
விடை கண்டவுடன்
விஞ்ஞானிகளோடு விழித்திருக்கிறது

நண்பரின் மகன் தன் தந்தையிடம்
திண்டுக்கல் பெரிய ஊராப்பா என்றான்
ஏன்டா பேசாம மூடிகிட்டு வா
சும்மா கேள்வி கேட்டுக்கிட்டுவந்த
வாயிலேயே குத்துவேன் என்றார்

குழந்தைகள் உலகில்
தோன்றும் காட்சிகள் எல்லாம் புதுமையே
அவர்களின் வாயடைத்தால்
மூளை சிந்திக்க மறந்துவிடும்
ஆசையிருக்குமிடத்தில்
அறிவு மழுங்கிவிடும் என்பர்
அது அறிவுக்குப்பொருந்தாது

திண்டுக்கல்லில் என்ன சிறப்பு
அவன் விடவில்லை
என் வயிற்றுக்கு பிரியாணியும், உன் வாய்க்கு பூட்டும் தான்
நாம் போவது திருச்சி
நீ ஏன் திண்டுக்கல்லைப்பற்றி கேட்கிறாய்
நிறைய திசைகாட்டிகளில்
தேசிய நெடுஞ்சாலை 45 திண்டுக்கல்
என்றுதான் போட்டுள்ளார்கள்
அதனால்தான் கேட்டேன் என்றான்

கேள்வியால் என்னை சுரண்டினான்
அவனுக்கோ அறிவுப்பசி
அவன் அப்பனுகோ வயிற்றுப்பசி
திண்டுக்கல் பாண்டியர் ஆட்சியிலும்
குறிப்பாக விஜய நகர ஆட்சியில்தான் ஏற்றம் பெற்றது
சிறந்த இராணுவத்தளமாக முன்னேறியது
திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின்
முக்கியமான படைத் தளங்களில் ஒன்று
ஆர்க்காட்டு நவாபுகளின் ஆட்சிக்குப்பின்
திண்டுக்கல் பிரியாணிக்கு புகழ்பெற்றது

தேசிய நெடுஞ்சாலை 45 என்பது
சென்னை தொடங்கி தேனியில் முடிகிறது
இதன் நீளம் 472 கிமீ ஆகும்
சென்னை முதல் திண்டுக்கல் வரைதான்
நான்குவழிச் சாலை வசதி உள்ளது.
திண்டுக்கல் வரை தெற்கு தொடர்வண்டிப் பாதையும்
இந்த நெடுஞ்சாலைக்கு இணையாக அமைந்துள்ளது.
அதர்க்காகத்தான்நிறைய திசைகாட்டிகளில்
திண்டுக்கல்லை குறிப்பிட்டு உள்ளனர்

தேசிய நெடுஞ்சாலை 45A
இது விழுப்புரத்திலிருந்து கிழக்காக சென்று
புதுச்சேரி அடைந்து அங்கிருந்து வங்க கடலோரமாக
நாகப்பட்டினம் சென்றடைகிறது
இதன் நீளம் 190 கிமீ

தேசிய நெடுஞ்சாலை 45B
இது திருச்சியில் கிளம்பி தெற்கில் சென்று
முத்தெடுப்பதற்காக தூத்துக்குடி செல்கிறது
விடை அறிந்ததும்
பையன் உறங்கிவிட்டான்
அறிவு விழித்திருக்கும்
தந்தைகளே பயணம் என்பது தேடல்,அனுபவம்
உங்களுக்கு தெரிந்ததைச் சொல்லிக்கொடுங்கள்
சொல்லிக்கொடுக்கும் பெரியோர்களைத்தான்
நாம் முதியோர் இல்லங்களுக்கு
அனுப்பிவிட்டோமே

நல்லவர்கள் இருக்கிறார்கள்
நாளையே சாக்கடைகள் சுத்தமாகலாம்
+++++++++++++++++++++++++++++++++++
ஒரு நண்பரிடமிருந்து
மற்றோர் நண்பருக்கோ
ஒரு உறவிடமிருந்து
மற்றோர் உறவுக்கோ
பணம் வாங்கிக்கொடுத்தால்
நட்பும் உறவும்
இரு புரமும் கெடும்
இது அனுபவம் ஆனால்
திரும்பத்திரும்ப இதில்
மாட்டிகொள்கிறேன்
தன்னிடமிருந்தால் மட்டும்
உதவுங்கள் நண்பர்களே
நட்பும் உறவும்
கெடாமலிருக்கும்

இரக்கப்படுவதையும், பிறருக்கு
உதவுவதையும் ஏமாளித்தனமாய் பார்க்கிறது
இந்த வியாபார உலகம் - இந்த
நொந்த சிந்தனையோடு ஓர்
நண்பரை பார்க்க ஐய்யப்பந்தாங்கள்
பேரூந்தில் ஏறினேன்

எனக்கு முன்னே தூய வெள்ளாடையில்
அரசியல் வாதிபோல் தோற்றம் உள்ளவர் ஏறினார்
நடத்துனர் எழுந்து நின்று
அவர் இருக்க இடம் கொடுத்தார்
உற்றுப்பார்தேன் முன்னால் மேயர்
முன்னால் சட்டமன்ற உறுப்பினர்
மிசா காலத்தில் போராடிய பெரியவர்
சா. கணேசன் அவர்கள் திமுக வை சேர்ந்தவர்
எழுந்து நின்று இடம் தந்த நடத்துனரின்
சிறிய துண்டு மற்றும் தொழிற்சங்க அட்டைகள்
அவர் அதிமுக என அடையாளம் காட்டியது

தலைவர்களிடம்தான் நாகரீகம்
குறைந்து போய்விட்டது
தொண்டர்கள் ஈரமனதுடன்
இருக்கிறார்கள் காமராஜரும், அண்ணவும் பெரியாரும்
வளர்த்த நாகரீத்தொண்டர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்

நடத்துனர் என்னிடம் வரும்போது
நன்றி சொல்லி எதிர்கட்சிக்கு
எழுந்து இடம்கொடுத்தீர்களே என்றேன்

"சார் அவர் எவ்லோ பெரிய மனுசன்
அந்த கட்சியிலயும் உள்ள நல்லவருசார்"
தொடர்ந்து கொஞ்சம் அரசியல் பேசினார்
ஒற்றை ஊழல் அந்த கட்சியின்
பல சாதனைகளை மறைத்துவிட்டதோ ?

நல்லவர்களே இல்லையா என்று
என்னும்போதல்லாம் ஓர்
நல்லவரை காண நேர்கிறது

ஏ இளைய மனிதா நம்பிக்கை வை
மழை பொய்யும்
நல்லவர்கள் இருக்கிறார்கள்
நாளையே சாக்கடைகள் சுத்தமாகலாம்