Tuesday, August 26, 2014

'ராமானுஜன்'




'ராமானுஜன்'
--------------------
காச நோய்க்கும் 
பாச நோய்க்கும்
மாண்ட மாமனிதன் 
அன்பின் சிறு துளிக்காய்
அலைந்த ஏக்கப்பெருங்கடல்

இருதி சடங்கில் எண்ணி 9 பேர்கள்
மதமும் மூடத்தனமும்
உறவுகளை ஓடவைத்துவிட்டது போலவே
திரையரங்கில் படம்பார்க்கவந்த தலைகளை
எண்ணிவிடலாம்

இந்த தலைமுறை
பார்க்கவேண்டிய படம்மட்டுமல்ல
பாடமும் கூட

நெருப்புக்கவி சுப்பிரமணியபாரதி
இறந்தது 38 வயதில்
ஆனால் இந்த கணிதப்புயலின்
கல்லறையோ 33 வயதில் கட்டப்பட்டுவிட்டது
நம்மவர்கள்
சமகாலத்தில் மட்டுமல்ல
இன்றும் அரசாங்கம்
ஓர் நினைவு இல்லம் கூட நிறுவவில்லை

ஏ கருப்புப்பண கனவான்களே
நீங்கள் பணம் எண்ணியது போதும்
உங்கள் பகுதி மக்களுக்கு
இலவசமாய் இந்த படங்களையாவது காட்டுங்கள்

மதுவிற்பனையில் பணத்தை
அள்ளும் அரசாங்கமே
பள்ளிக்குழந்தைகள் இப்படம் பார்க்க
ஆவன செய்யுங்கள்

நாடு வெள்ளைகாரனுக்கு அடிமையாயிருந்ததின்
பயன் 'ராமானுஜரின் ஞானம் கேம்பிரிட்ஜ் இல்
பேராசிரியராக இருந்த ஜி. ஹெச். ஹார்டியின் மூலம்
உலகுக்கு தெரியவந்ததது
இல்லை என்றால் கடல் தாண்ட
தடுக்கும் மதத்தின் கருணையால்
கால் வயிற்று கஞ்சிக்கு
கிருக்கனாய் அலைந்திருப்பான்

எத்தனை பெரிய
இயக்குனர்கள் உள்ள தேசத்தில்
'ராமானுஜரின் ஞானத்தை
வெள்ளித்திரை மூலம்
உலகுக்கு தெரியவைத்த
பேராசிரியர் ஞானராஜசேகரனின்
முயற்சி போற்றத்தக்கது

நீயும் தெய்வமாகளாம்


ஏ அதிகார மிருகமே
நீயும் தெய்வமாகளாம்
----------------------------------
வணக்கத்திற்குறிய
மரத்துப்போன மனம்கொண்ட
மாண்பு மிகுக்களே

பெண்மையைப்போற்றி
நாட்டுக்கு தாய் நாடென்றும்
நதிக்கெல்லாம் பெண் பெயரிட்டு
பெருமை கொண்டது நம் மரபு
அவர்கள் தாய் பால் குடித்து வளர்ந்தவர்கள்

இன்றோ ...
புட்டி பாலுக்கும்
மது புட்டிக்கும் வளரும் தலைமுறைக்கு
தாயுக்கும், தாரத்துக்கும்,
தங்கைக்கும், குழந்தைக்கும்
கிழவிக்கும் பேததெரிவதில்லை
போதையின் கண்களுக்கு

ஏழைத்தொழிலாளியின்
பெண்னை கற்பளித்து
ஊரை விட்டே ஒதிக்கி
ஜாதியின் பெயராலும்
பணத்திமிராலும்
தப்பு செய்துவிட்டு
தறுதலைகள் வெளியே
சுற்றித்திரிகின்றனர்

ஆறு வயது குழந்தையை ஓர்
ஆசிரியர் பலாத்காரம் செய்கிறான்
சேவைத்தொழில்
தேவடியாப்பசங்கள்
தாயுள்ளம் கொண்டோரை
ஆசிரியராக்குங்கள் அரசுகளே
ஓரே நாளில் 7 கற்பளிப்புச்சம்பவங்கள்-
இது தினசரி செய்திகள்

பள்ளிகளில் ஒழுக்கல்வி
கற்பிக்கப்படுவதில்லை
காசுக்காக கல்வியை
அரசும் தனியாரும்
கூவி.. கூவி விற்கும் கொடுமை

மனப்பாடம் செய்ய்யத்தெரிந்தவர்கள்
மட்டுமே புத்திசாளிகலாய்
மதிக்கும் உலகம்
காசு கொடுத்து கல்வியை வாங்கியவனிடம்
அரசு மது விற்று பணம் பறிக்கிறது

தாய்ப்பால் கொடுக்கமறுக்கும் தாய்
இலஞ்சத்தால் வளறும் தந்தை
மதுவால் தமிழர்களின் தாலியறுக்கும் அரசு
காமத்தையும் பொறிக்கித்தனத்தையும்
கலை என்று ஏமாற்றித்திரியும் கலைஞர்கள்
குற்றவாளிகள் எல்லாம்
அதிகாரத்தில் இருக்கிறார்கள்
காவல் நிலையத்திலேயே
கொலையும் கற்பழிப்பும் நடந்தேறுகின்றன
நீதிமன்றங்களுக்கு வெளியே
தீர்ப்புகள் தீர்மானிக்கப்படுகின்றன
சிறைச்சாலைகளில் கறிவிருந்து
பரிமாறப்படுகிறது
இங்கு ஒழுக்கமானவர்களேல்லாம்
பிழைக்கத்தெரியாதவர்கள்
தேசத்துரோகிகளெல்லாம் இங்கு
தேசியத்தலைவர்கள்
பெரும் கொல்லைக்காரர்களெல்லாம் இங்கு
தேசியதொழில் அதிபர்கள்

அட தேசிய திருடர்களே
ஆயுல் முழுவதும் திருடர்களாகவே
செத்தொழியாதிகள்
திருந்த ஓர் வாய்ப்பிருக்கிறது
பாவிகளே வாருங்கள்
பாவமன்னிப்பு கிடைக்கும்

தெய்வங்கள் இல்லை என்ற
தைரியத்தில்தானே
கோயிலுக்கு செல்கிறீர்கள்
உங்களையெல்லாம் படைத்தபின் எப்படி
தெய்வங்கள் உயிறோடிருக்கும்
கோயில்கள் கல்லறைகளாய்
மாறிப்போய்விட்டன

நக்கிப்பிழைக்கும் நாய்களே
ஆண்டுமுழுவதும் ஆடித்தீர்த்துவிட்டு
ஒரு மாதம் நோம்பிருப்பதும்
தவகாலமென மாமுனியாய்
வேடமிடுவதிலும் ஆவதென்ன
மாலையிட்டு விரதமிருந்து
மறுபடி தவறுசெய்வதன் நோக்கமென்ன

மானங்கெட்டவர்களே
மன்னிப்பு இருக்கும்வரை
நீங்கள் மாறப்போவதில்லை

அரசியல்வாதிக்கு 5 ஆண்டுகள்
58 வயதுவரை அதிகாரத்திலிருக்கும்
ஏ அதிகார வர்கமே
நீயும் தெய்வமாகளாம்

அட அயோக்கிய சிகாமணிகளே
மாதம் முழுவதும் தவறு செய்கிறீர்களே
ஒரு நாளாவது மனிதானாய் மாறுங்கள்
எளியோற்க்கும் ஏழைகளுக்கும்
திக்கற்றவர்களுக்கும் உதவுங்கள்
வாங்கும் சம்பளத்திற்கு ஓர் நாளாவது
உண்மையாயிருங்கள் அவர்கள்
உங்களை தெய்வங்களாய் வழிபடுவார்கள்

ஏ அதிகார மிருகமே
நீயும் தெய்வமாகளாம்
அவமானச்சின்னம் சிலுவை
ஏசுவுக்குப்பின் புனிதமானதுப்போல்
உன் தவறுகளை ஓர் நாள்
மனசாட்சி எனும் ஆனியில் அறைந்துபார்
நீயும் தெய்வமாகளாம்

குறட்டை




நண்பர்கள் இடப்புரம் ஆனந்தும் வலப்புரம் ஷாகிரும்
இருவரின் குறட்டையின் ஓசையில் 
தூக்கம் கலைந்தது

ஓய்வெடுக்கவேண்டிய வாய்
உழைத்துக்கொண்டிருந்தது
ஓய்வறியா மூக்கு
ஓய்ந்துகிடந்தது
சுவாசத்திற்கும் வாசத்திற்கும்
மட்டுமல்ல மூக்கு
குரங்கிலிருந்து வளர்ந்த
அழகின் பரினாம வளர்ச்சி
கண்ணீரின் வடி நிலம்
ஓசைகளின் ஒத்திசைவு
மூக்கை மூடுவது அபசகுணம்
மூக்கை மூடி பேசினால்
குரல் மாறும்
தாலாட்டு ஒப்பாரியாகிவிடும்
மூக்கு உடலுக்கு காற்று வடிகட்டி,
காற்று குளிரூட்டி
ஒரு நாளைக்கு ஒரு லிட்டர்
லைஷொசைம் எனும் திரவத்தை
சுரந்து காற்று கிருமிகளில் இருந்து
மருத்துவம் செய்யுது காக்கும்
மகா மருத்துவர்

வாசனை சொல்லும் வாத்தியார்
அமெரிக்காவில் 2.5 கோடி பேருக்கு
வாசனை அறியா வியாதியுள்ளது

தும்மலும் இங்கு அபசகுணமே
உயிர் ஒரு நொடி வெளிசென்று
உள் நுளையும் செயல்
காற்றுவெளியாய் நுளையும்
கயவர்களை தும்மித்துரத்தும்
எல்லைக்காவலன்

சுவாசப்பாதையில் இடர் வரும்போது
குறட்டை வருகிறது
உறங்கும் போது மல்லாக்க படுக்காதீர்கள்
உங்கள் நாக்கு சுவாசப்பாதையை அடைக்கிறது
தொடர் குறட்டையால் 70% (ஆக்ஜிசன்)
பிராணவாய்வு குறைகிறது
இதனால் மூளையின் செயல்திறன் குறைகிறது
மறதி, எரிச்சல், கோபம்,
இரத்த கொதிப்பு, நெஞ்சு வலி, பக்கவாதம் மற்றும்
நாளடைவில் இருதயம்
செயலிழக்கத்தொடங்குகிறது
என்று மருத்துவம் பயமுறுத்துகிறது

குறட்டையின் அளவை "பாலிசோம்னோ கிராம்"
மூலம் செலவு செய்து அறிவதைவிட
மனைவிமூலமே மருத்துவர்கள்
அதிக தகவல்கள் பெருகிறார்கள்
மேல் நாடுகளில் குறட்டைவிடும்
கணவரிடம் விவகாரத்து கோரும்
வழக்கு அதிகமாகிக்கொண்டுள்ளது
நம்மூர் பெண்களுக்குத்தான்
சகிப்புத்தன்மை அதிகம்
குடிகாரக்கணவன் வீட்டுக்கு எப்போது
வருவான் என்று தெரியாமலேயே
காத்திருக்கும் பத்தினிகள்
குறட்டையின் சங்கீதத்தில்
குடும்பம் நடத்தும் குத்துவிளக்குகள்
இருக்கும்வரை விவசாயிகளே
காவிரிக்காக கவலைகொள்ளாதீர்
மழை பொழியும்
வான்பொய்த்தால்
விலையில்லா அம்மா மேகங்கள்
தயாராகிக்கொண்டுள்ளது