Thursday, May 15, 2014


சாத்தானின் ஆட்சி

++++++++++++++++


"சாத்தான் வேதம் ஓதுகிறது"
முன்னல் முதல்வரைப்பார்த்து
இன்னால் முதல்வர்

சாத்தான் என்பதற்கு பிசாசநாதன்,
தீய சக்கதிகளின் ஒர் உருவகம்
என்கிறார்கள்

பார்த்தனுக் கருளும் வைத்தார் பாம்பரை யாட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாம வேதம்
கூத்தொடும் பாட வைத்தார் கோளரா மதிய நல்ல
தீர்த்தமுஞ் சடையில் வைத்தார் திருப்பயற் றூர னாரே.

என்பது அப்பர் வாக்கு

சாத்தான் என்பவன் நிஜமான ஓர் ஆள் என்பதாகவே 
பைபிள் சொல்கிறது; அவன் காணக்கூடாத ஆவி மண்டலத்தில் 
இருப்பதாக அது குறிப்பிடுகிறது. (யோபு 1:6)

ஆதாமுக்கும் ஏவால் காலத்திலிருந்தே
அறியவைத்தவனையும்
ஆசானையும் சாத்தனாக்கிய சமூகம்

மனிதனுக்கு மரன பயத்தை
தந்தவன் சாத்தான்
சாவிலிருந்து தப்பித்துக்கொள்ள
மனிதனால் கண்டு பிடிக்கப்பட்டதுதான் கடவுள்

சமயம் சடங்கு, ஜாதி சம்பிராதயங்கள்
தானே முளைத்தது
கடவுள்கலாலும்
மரனத்தை வெள்ளமுடியவில்லை

தேவ குமாரனும், தேவ தூதர்களும்
தோற்ற இடம்
சாத்தனின் மரன முத்தத்தில்தான்

இங்கு சாத்தானின் ஆட்சி நடைபெருகிறது
கடவுளெல்லாம் வெறும் காட்சிகள்தான்
மருத்துவ அறிவு மரனத்தை
தள்ளி போடுகிறது

கடவுள் ஓர் கையாலாகாதவன்
பூ வைத்தவனை உலகம்
கண்டுகொள்வதில்லை
குண்டுவைத்தவனை
வலை வீசி தேடுகிறார்கள்
பூ வைத்தவனை உலகம்
போற்றாதவரை -இங்கு
சாத்தானின் ஆட்சிதான் நடைபெரும்



நாடு நாசமாய் போகட்டும்
++++++++++++++++++++++
இருக்கைப்பயணம்
முன்பதிவு செய்யாத பெட்டியில் எங்கும் தலைகள்
பாவம் நம் மக்கள் பாம்பாய் நெளியும்
வரிசையில் நின்று பயணச்சீட்டை எடுத்து
எந்த வசதியும் இல்லாமல்
கழிவரைகளின்பக்கத்தில் அமர்ந்து பயணிக்கிறார்கள்
இது சரிவராது என பேரூந்து நிலையம் வந்தேன்
நம் மக்கள் எங்குதான் செல்கிறார்களோ
எங்கு திரும்பினாலும் திருவிழாக்கூட்டம்
ஒருவழியாய் பதிவு செய்து இடம்பிடித்தேன்
நடுவழியே இருக்கைகள் மீறி பயணிகளை ஏற்றினர்
ஓர் ஊனமுற்றவர் ஏறினார் இவர்களை சமூகம்
மதிப்பதே இல்லை
ஊனமுற்றவர் இருக்கையில் ஒருவர் அமர்ந்து
மனிதாபிமானம் இல்லாமல் வாதம் செய்துகொண்டிருந்தார்
நடத்துனர் நமக்கென்ன என்று நகர்ந்துவிட்டார்
நான் எழுந்து இடம்கொடுத்தேன்
மறு நாள் கால்களுக்குமட்டும்தான் வலி

அடுத்த பயணத்திற்காக உள்ளூர் பேரூந்து
பேரூந்தில் இடம் பிடிக்க கையில்
கிடைத்ததையெல்லாம் போட்டு முன்பதிவுசெய்தனர்
ஒருவர் ஜன்னல் வழியாய் தன் குழந்தையைப்போட்டார்
வட மானிலங்களைவிட நம் மக்கள் நல்லவர்கள்
சுய மரியாதை உள்ளவர்கள்
ஏறியவுடன் பயணச்சீட்டை எடுத்துவிடுகிறார்கள்

ஒருமணி நேர பயணத்திற்கே இத்தனைப்போட்டி
5 ஆண்டுக்கான அரசியல் இடம் தேடிகளின்
போட்டா போட்டியில் நாடே
ரனகளமாகி போயுள்ளது

மதத்தையும், கடவுளையும் நம்பி ஓர் கூட்டம்
ஜாதியை நம்பி ஓர் கூட்டம்
செய்ததைச்சொல்லி ஓர் கூட்டம்
திருடியதைச்சொல்லி ஓர் கூட்டம்
ஒன்றுமே செய்யாமல் ஓர் கூட்டம்
முழுதாய் திருடுவிட்டு பூசனிகாய் சின்னத்தில் ஓர் கூட்டம்
பாதியை செய்துவிட்டு மீதியை திருடிவிட்ட அல்வா கூட்டம்
வாக்குகளை விற்று போதையில் மிதக்கும்
பிரியாணி பொட்டலங்களுடன் காக்காய் கூட்டம் 
நல்லவர்கள் எல்லாம் எங்கோ ஓர் மூலையில்
செலவு செய்ய காசில்லாமல் 
செயலில் இறங்கவும் திரானி இல்லாமல்
புலம்பல் கூட்டம் 

இது தேர்வு நேரம்
அரசியல்வாதிளுக்கும், பள்ளி மாணவர்களுக்கும்
மட்டுமல்ல வாக்களிக்கும் மக்களுக்கும்தான்
அரசியல்வாதி தோற்றால் 5 ஆண்டுகள்தான் நாசம்
பள்ளி இறுதிதேர்வுகள் 
உன் வாழ்வையே மாற்றிப்போடும்
இந்த தேர்வு பயணத்தை செம்மையாய் செய்யுங்கள்
வருங்கால மன்னர்களே
எப்படியும் அடுத்த 5 ஆண்டுகள்
ஓர் திருடன் கையிலோ அல்லது
உள்ளதில் நல்ல திருடன் கையிலோ 
ஒப்படைக்கப்படும் நாடு நாசமாய் போகட்டும்
5 ஆண்டுகள் கழித்து
நாடு உங்களுக்கு ஓர் வாய்ப்புத்தரும்
நல்ல தலைவர்களாய் உருவாகுங்கள்

















மறைத்து வைத்த மனிதாபிமானத்தின் வெற்றி
+++++++++++++++++++++++++++++++++
விசிலடித்தும், காற்றைக்கிழித்து
கும்மாலமிட்டு வாழ்வை
குதூகலமாக்கும் 
திரைப்படம் செல்லும் பிள்ளைகளை
கொண்டாடாமல் இருக்கலாம் குறைந்தது 
குறைசொல்லாதீர்கள் பெற்றோரே

எல்லாமே கெட்டுக்கிடக்கும்
இந்த தேசத்தில்
திரையரங்கம் சென்று திரைப்படம் பார்க்கும்
பிள்ளைகள் நல்லாவர்கள்
ஒழுக்கமும் நேர்மையுமற்று
அடுத்தவரின் உழைப்பைத்
திருட்டுத்தனமாய் வீடுகளில் பார்ப்பதைவிட
பணம் செலவு செய்து
கலைத்துறையை வாழவைக்கும் நல்லவர்கள்

கொலுத்துத் திளைத்த திரைப்பட
ஜாம்பவான்களே
கோடிகளில் புரளும்
திரைப்பட முன்னனிகளே
இவர்களின் நலனை கருத்தில் வையுங்கள்

முகம் தெரியாத குயில்களின்
முகவரியாய் இந்த குக்கூ
என் பக்கத்திலிருந்த அன்பர் ஆனந்த்
கம்பீரமான தோற்றம் ஆனந்தமாய் விசிலடித்து
கொண்டாடிக்கொண்டிருந்தார் 
பல இடங்களில் தேம்பி தேம்பி
அழுதுக்கொண்டிருந்தார்
அந்த முரட்டுத்தேகத்தில்தான்
இழகிய இதயம் குக்கூ இசைத்துக்கொண்டிருந்தது
உருவுகண்டு எள்ளாமையை 
பாட்டன் வள்ளுவன் சொன்னது ஞாபகம் வந்தது

எளியோரின் வாழ்வை படமாக்கியது
பாரட்டுக்குரியது நடிகர்களெல்லாம்
பாத்திரங்கலாக வாழ்ந்திருக்கிறார்கள்
இயக்குனர் ராஜூமுருகனின் எழுத்தைப்போல்
படமும் கவித்துவமாக இரயில்களில் நகர்ந்தது
இசையும் பாடலும் அருமை
என்றாலும் இசைஞானி இருந்திருந்தால்
படத்தின் உயரம் இன்னுமோர் இடத்திற்கு சென்றிருக்கும்

பல இடங்களில் பாலாவின்
நான் கடவுளை ஞாபகப்படுத்துகிறது
தவரில்லை விளிம்பு நிலை மக்களின் பின்புலத்தை
சுற்றியே எடுக்கப்பட்டதால் அப்படி எண்ணக்கூடும்

படம் பார்த்ததில் ஒருவர் அந்த 3 லட்சம் பணத்தை
யார் எடுத்தார்களோ என பரிதாபப்பட்டார்
மனங்களைத்தேடும் கூட்டத்தில் அவர்
பணம் தேடிக்கொண்டிருந்தார்
பல இடங்களில் இயக்குனர்
நிமிர்ந்து நிற்கிறார்

படம் பார்த்துவிட்டு உச்சு கொட்டிவிட்டு போவதும்
திரையரங்கில் கைகுட்டை நனைய அழுதுவிட்டு
வெளியே சென்று காயவைத்துவிட்டு போகாமல்
வழி தடுமாறும்போது வழி காட்டுவதும்
சாலையை கடக்க கைபிடித்துவிடுவதும்
பிச்சை எடுக்காது வியாபாரம் செய்பவர்களிடம்
பொருள்கள் வாங்கியும் உதவுங்கள்
அதுவே இயக்குனரின் வெற்றி
மறைத்து வைத்த மனிதாபிமானத்தின் வெற்றி



















நீ இல்லாது நானும்
நான் இல்லாது நீயுமாய்
+++++++++++++++++
நிலவில்லாத வானம்
நீரில்லாத பூமி
பூவில்லாத வனம்
மனமில்லாத மலர்
சுவையிழந்த தேன்
சுனையில்லாத கான்
கனியில்லாத மரம்
குரலில்லாத குயில்
தோகையில்லாத மயில்
செவியில்லாத கானம்
விழியில்லா வண்ணம்
கடலணையா நதி
அலையில்லா கடல்
சிறகில்லாத பறவை
சிரிப்பில்லாத இதழ்
வீரியமில்லா விதை
வில்லிழந்த அம்பு
படையிழந்த அரசன்
நடையிழந்த அன்னம்
பனியிழந்த இமயம்
ஒளிமறந்த தீபம்
மொழிமறந்த கவிஞன்
முகமிழந்த நடிகன்

நொடிப்பொழுது பிரிகையில்
இன்னும் நிறைய
பேசியிருந்ததொரு காலம்
இப்போது உன் இடத்தில் ஒருத்தியும்
என் இடத்தில் ஒருவனும்
நீ இல்லாது நானும்
நான் இல்லாது நீயுமாய்