Tuesday, December 30, 2014





ஆரிய இருட்டில் பூத்த
சூரிய சுயமரியாதை
மூட தமிழர்களை தத்தெடுத்ததால்
தந்தையான பெரியார்
வேத மூட்டைகளை காசியில் வெளுத்ததால்
பேத வேட்டைகளை அடித்து துவைத்தவர்
ஊரே வெள்ளையனுக்கு எதிராய் - நீ மட்டும்
உள்ளூர் கொள்ளையனுக்கு எதிராய்
சமூகம் ஒதிக்கிய சிறியார்க்கெல்லாம்
கருவரை காட்டிய பெரியார் நீ
மதம் தாண்டிய மகளீராய்
ஜாதி தாண்டிய மனிதனாய்
மதமழிக்க மதம் கொண்டாய்
எல்லொரும் மலருக்கு சாமரம் வீசும் போது
நீ மட்டும்தான் வேருக்கு வைத்தியரானாய்
விழுதுகளையும் பழுது பார்த்தாய்
இன்றோ
உன் இடம் நிரப்பப்படாமல்...
விழுதுகள் பழுதாய்...

பேய்களும் நல்லதே

+++++++++++++++++

பிசாசு

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியைபோலவே
பிசாசுவையும் கேள்விகளால் மனிதன் தேடிக்கொண்டுள்ளான்
இதுவரை நல்ல கடவுளையும் கெட்ட பிசாசுவையும்
காட்டிவந்த நமது திரையில்
முதல் முதலா நல்ல பிசாசுவை காட்டியுள்ளார்

கடவுள் கெட்டவராக இருக்கமுடியுமா ?
குறைகொண்ட ஊனமுற்ற உடலுடன்
தவரான படைப்புகளை படைத்ததனால்
படைப்புக்கடவுள் கெட்டவன்தான்
பிறப்பிற்கு பிறகு வேண்டுமானால்
சமூகமும் சூழலும் பொறுப்பாகலாம்

மிஷ்கின்னின் பெரும்பாலான படங்கள்
தகேஷி கிதானோ காப்பி அடித்ததாக
விமர்சிக்கிறார்கள்
இந்த உலகில் எதுவும் புதிதில்லை
சொல்லுகின்ற முறையும்
தன்மையும் மட்டுமே நம்முடையது

உலகின் முதல் மனிதன் ஆதாமை,
கடவுள் தனது சாயலில்தான் படைத்தார்
அவனது இரண்டாவது படைப்பும்
ஆதாமின் விலா எலும்பிலிருந்து
திருடப்பட்டதுதான் ஒரு (ஏவாளின்) பெண்ணின் படைப்பும்

படிப்பவர்கள் குறைவாக உள்ள
திரைஉலகில்
சன்முக ராஜாவாக இருந்தவர்
படித்து படித்து
ரஷ்ய நாவலில் வரும் கதாப்பாத்திரமான
மிஷ்கின் என்ற பெயரை தனக்கு சூட்டிக் கொண்டார்.

நிறைய புதிய முயற்சிகளை
தற்போதைய இளையதலைமுறை
செய்துவருவது பாராட்டவேண்டியது
குறைசொல்லியே
விதைகளுக்கு வெந்நீர் ஊற்றாதீர்

நாகா, பிரயாகா போன்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
மிஷ்கின் எடுத்திருக்கும் சில காட்சிகளில்
மனசு நெகிழ்ந்து கண்ணீராய் வழிகிறது.
அந்த அன்பும், பரிவும், மனிதாபிமானமும்தான்
இந்த வாழ்க்கையை நகர்த்தும் பெரும் சக்தி என்பதை உனர்த்துயுள்ளார்

ராதாரவியின் நடிப்பு அருமை ஒரு புதிய பரிமானம்
மகளின் பிசாசு ரூபம் பார்த்து கதறியழ, மேலிருந்து மகளின் கரங்கள் இறங்கி வந்து அவர் தலையையும் முகத்தையும் தடவிக் கொடுக்க... பெருங்குரலெடுத்து 'என் மகளே.. தெய்வமே.. வீட்டுக்கு வந்துடும்மா.. அடுத்தவங்களுக்கு தொந்தரவு தரலாமா?' என்றெல்லாம் அவர் கதற.. அங்கே கலங்காத கண்கள் மனிதருடையவையாக இருக்காது. அத்தனை நெகிழ்ச்சி.

பக்கத்தில் நண்பர் ஆனந்தின் முகம் பார்த்தேன் அழுதிருப்பார் என்று ஆனால் கண்களில் கண்ணீரில்லை
மனதிற்குள் அழுதிருப்பார் என நினைக்கின்றேன் என் கையை அழுத்தினார்

பேயை விரட்ட வரும் ஆவி அமலாவின் டுபாக்கூர்தனங்களைக் காட்சிப்படுத்தியிருப்பதில் புன்னகைக்க வைக்கிறது. எடுத்தது பேய்ப் படம் என்றாலும், தன்னால் முடிந்த ஒரு பகுத்தறிவுப் பிரச்சாரத்தை வைத்திருக்கிறார்.

ரவி ராயின் கேமராவும், அரோல் கொரோலியின் இசையும் படத்தின் பெரும் பலம். தேவையான காட்சிகளில் மட்டும் இசை. மற்ற நேரங்களில் மவுனம். மிக அழகாகச் செய்திருக்கிறார். படத்தில் இடம்பெறும் அந்த ஒற்றைப் பாடலில், வரிகளை விட வயலின் இசை மனதைப் பிசைகிறது.

கேட்டவேண்டுமெனில்
இந்த தொடர்பை சொடுக்குங்கள்ஹ்ட்த்ப்ப்ஸ்://வ்வ்வ்.யௌட்டுபே.காம்/watch?v=xtFE1eLcNUU
இது... அன்பும் பெரும் கருணையும் கொண்ட பிசாசு!
பேய்களும் நல்லதே


சரித்திரத்திற்கு சாவேது
+++++++++++++++++++++
நல்லமாங்குடியின் நாயகன்
மானவர்களுக்கு சொல்லிக்கொடுத்தது
போதும் என்று
பள்ளி ஆசிரியர் பணி துறந்து
மக்களுக்கு பாடமெடுத்தவனே

நீர்க்குமிழியாய் தொடங்கிய உன்
திரைப்பயணம் பொய்யில் முடிந்தது
உன் இறப்பு செய்தியும்
பொய்யாக கண்ணீரோடு
கவலையோடு காத்திருக்கிறது கலையுலகம்

1987 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும்,
2010 ஆம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருதும்
உன்னால்தான் உயர்வு பெற்றது
100 படங்கள் என்பது சாதனையல்ல
சரித்திரம்


துயரத்தையும் தூய்மையாக்கியவனே உன்
இறப்பிற்கு பின்தான்
சிலுவையே புனிதமானது
மரங்கலெள்ளாம் சிலுவையாக
மறுபிறப்பெடுக்க
மரிக்கத்துடிக்கிறது
யூதனாய் பிறந்து
கிறிஸ்துவனாய் இறந்தாய்
கிமு வை கிபி ஆக்கிய
காலத்தின் கைக்காட்டி நீ

30 வயதில் ஞானம் பெற்றாய்
30 வெள்ளிக் காசுகளுக்கு
காட்டிக் கொடுக்கப்பட்டாய் (யூதாசால்)
3 மணி நேரம் சிலுவையில்
உயிரோடு தொங்கினாய்
3 நாள்கள் கழித்து சாவை வென்று
உயிர்பெற்றெழுந்தாய்

நீ பட்ட துயரைவிட
உன் தாய் பெற்ற துயர் பெரிது
கன்னிப்பெண் கற்பமடைந்ததால்
பெத்லகேமே மரியாலை
படுத்திய பாட்டை
பாட மொழியில்லை
ஏசு இறை தூதராகும்வரை
ஏளனப்பட்டாள்

வருடா வருடம் பிறக்கின்றாய்
கொண்டாட்டங்களுக்கு
குறைவில்லை அன்று
ஒரே ஓர் சவுல் பவுலானான்
இன்றோ எங்கெங்கும்
சவுலின் சகோதரர்கள்

ஆயனே தன் ஆடுகளுகளை
பலியிடுகின்றான்
மேய்ப்பனே தன் ஆடுகளுகளை
வழி மாற்றுகிறான்

இயேசு மையச் செய்தி இறையாட்சி என்பதாகும்
இயேசு வழங்கிய முக்கியமான போதனைகளில் ஒன்று மலைப்பொழிவு
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.
ஏழைகளுக்கு மண்ணில் இடமில்லையா ஏசுவே

துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.
துயருறவே இவ்வாழ்வென்றால் ஏன் படைத்தாய் இறைதூதரே

கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.
கனிவில்லாதவர்களும் காசுடையோர் மட்டுமே சொத்தை சொந்தம் கொள்கின்றார் ஏசுவே

நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர்.
நீதி விலைபேசப்படுகிறது நீதிமான்களின் உயிர்கள்தான் நிறைவுபெறுகிறது இறைதூதரே

இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.
இரக்கமுடையோரை ஏமாளியாய் பார்க்கிறார்கள் ஏசுவே

தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.
தூய்மையான உள்ளத்தோரை பைத்தியமாய் பார்க்கிறது இறைதூதரே

அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.
வெள்ளைக்கொடிகளை வீழ்த்தி சிரிக்கிறார் ஏசுவே

நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.
உன் போதனைக்கேட்டு ஒரு சில சகாயங்கள்
உலவிக்கொண்டுள்ளனர் இறைதூதரே
அவர்களையும் விண்ணரசுக்கு விண்ணப்பிக்கச்சொல்லாதீர்

விண்ணரசு உங்களுக்காய் இருக்கும்போது
எதற்காக வறுத்தப்பட்டீர் இறைதூதரே
ஏசு இறக்கும்போது
கடைசியாய் சொன்னது
என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?

மலைப்பொழிவில் சொன்னதை
மறந்தீரோ ?
மண்ணுலகை விட்டுச்செல்ல
மனமில்லையோ ?

நீங்கள் வருவதாய்
சகோதரர்களின் குரல்கள்
சத்தமாய் கேட்கிறது
வழி மாறிய ஆடுகளுக்களாய்
மேய்ப்பன் இல்லாத மந்தைகளாய்
மண்ணரசை மகத்தானதாக்க மனதுவையுங்கள்
விரைந்து வாருங்கள்
நம்பிக்கையோடு ...
நாங்கள்


திருவண்ணாமலை
++++++++++++++++
நண்பர் ஆனந்த் ரியல் எஸ்டேட் அதிபர் ஒரு இடம் பார்க்க போகலாம் என அழைத்தார்
காரில் ஏரியபின்தான் தெரிந்தது அது திருவண்ணாமலை நோக்கிய பயணம் என்று நான் கோயில்களுக்கு அதிகம் செல்லாதவன்
திருவண்ணாமலை "மதுரை" நகரினைவிட பழமையானது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் திருவண்ணாமலை நகரத்தை ஆண்டதை பரிபாடல் மூலம் அரிய முடிகின்றது. *கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலிமுனிவரால் திருவண்ணாமலை குறிப்பிடப் பெறுகிறது. கி.பி. 2ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் முக்கிய நகராக விளங்கிய திருவண்ணாமலை, கலை, மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது.
திருவண்ணாமலை ஒரு இறந்த எரிமலையாகும். பல நூற்றாண்டுக்கு முன் இது வெடித்து இதன் தீ குழம்பு நீரில் தோய்ந்து உருவானதுதான் தக்காணம் என்றும் கூறுவார்.

சிவனின் பஞ்சபூத தலங்களில், திருவண்ணாமலை அக்னி தலமாகும். வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடந்தாலும் தமிழ் மாதம் கார்த்திகையில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவமே மிக சிறப்பானதாகும். பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் பத்தாம் நாள் திருவிழாவே கார்த்திகை தீபத்திருவிழா ஆகும். இந்த பத்தாம் நாளன்று காலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். பின்னர் அண்ணாமலை என அழைக்கப்படும் மலையின் உச்சியில் 2,668 அடி உயர மலை மீது மாலை 6 மணிக்கு 1,500 மீட்டர் திரி, 3,500 கிலோ நெய்யினால் தீபம் ஏற்றப்படும். இந்த தீபமானது தொடர்ந்து பதினோறு நாட்கள் எரியக்கூடியது.

நாங்கள் சென்ற நேரம் சரியாக மாலை 6.00 மணி 7 கிலோ மீட்டருக்கு முன்னே கார்களை தடுத்துவிட்டார்கள் அங்கேயே சாலைகளிலும் வாய்க்கால் வரப்புகளிலும் கற்பூரம் ஏற்றி குப்புரவிழுந்து வணங்கிக்கொண்டார்கள் எங்குப்பார்த்தாலும் தலைகள் பாவம் மக்களுக்கு அவ்வளவு பிரச்சனைகள் எங்கு சென்றால் தீரும் என்று சுற்றி, சுற்றி வருகிறார்கள் இங்கு சுகப்படவில்லை எனில் வேறு இடம் வேறு சாமி
புனிதமான இடங்களெல்லாம் கூட்டம் சேரும் போது வியாபாரிகளும் கூடிவிடுவதால் ஆன்மீகம் வியாரமாகி வியாபாரம் அரசியலாகிவிடுகிறது.

இத்திருவிழா மட்டுமின்றி, ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் அண்ணாமலையை கிரி வலம் வருவார்கள் (கிரி என்பது மலை என பொருள்படும்). இது கிரிவலம் என அழைக்கப்படுகிறது. இம்மலையின் சுற்றளவு 14 கிமீ அகும். இத்தூரத்தை மக்கள், காலில் செருப்பு அணியாமல் சுற்றி வருவகிறார்கள். நான் அதிகம் நடந்ததே இல்லை விருப்பமில்லை எனில் காரிலேயே இருந்துவிடலாம் என நண்பர்கள் சொன்னார்கள் ஆனால் பெருத்த உடலோடும் சிறுவர் பெரியவர் என அனைவரும் நடந்துகொண்டிருந்தனர். ஒரு நண்பர் சொன்னார் பெண்களே நடக்கிறார்கள் உங்களுக்கென்னவென்று பெண் சக்தியின் பெருவெளி பெண்ணின் ஆன்ம ஆற்றல் இராமன், சீதையைப் பிரிந்த பின் புத்தி தடுமாறி திரிந்தகதை இராமாயணம் சீதையை அசோக வனத்தில் கண்ட அனுமன் சொல்லுவான் "பித்து நின் பிரிவில் பிறந்த வேதனை எத்தனை உள அவை இன்னும் ஈட்டவோ " என்று. இராமன் பித்து பிடித்துவனைப் போல இருந்தான் என்பது அனுமனின் வாக்குமூலம். ஆனால் பெண் பொறுக்கும் உடல் வலிகள் மகத்தானவை. பிரசவம் ஒன்று போதும் அதனால்தான் பெண்ணை சக்தி என்றார்கள் பெண் அன்பின் வலிமை உடல் வலிமையையும் உருவாக்கிவிடுகிறது. இத்தனைக்குப் பிறகும் நடக்காது இருந்தால் சரிபடாது என நடக்கத்தொடங்கினோம்

பாவம் நம்மவர்களுக்கு இறைவனை அடைய வழி தெரியாமல் குழம்பிபோய் இருக்கிறார்கள் மற்ற மதங்களில் சரியோ தவறோ ஒரு மார்கமிருக்கிறது ஓழுங்கு இருக்கிறது அதை சொல்லித்தருகிறார்கள் இங்கு எதுவுமில்லை பரிகாரமென்ற பெரயரில் தனி மனித மற்றும் சமூக ஒழுக்கங்கள் மீரப்படுகிறது பரிகார ஏற்பாடுகளும் பரிகார தரகர்களும் பணம்பார்ப்பதற்காக பெரிய அளவில் ஏற்பாடுகள் உள்ளது பிரச்சையோடு வருபவரை பரிகாரபூதம் விழுங்கிவிடுகிறது

இந்த மலையே சிவனென்றும் இந்த பூமியில் கால் பதித்தால் புனிதமென்று குப்புர விழுந்து வணங்கியவர் அங்கேயே அசுத்தம் செய்கிறார்கள் இத்தனை மக்கள் கூடும் நகரில் ஆத்திர அவசரத்திற்கு கழிப்பிட மருத்துவ வசதிகள் குறைவு அரசாங்கத்திற்கு மக்களைப் பற்றி சிந்திக நேரமில்லை
நடக்க பயந்த என் கால்கள் இந்த மனித நதியில் மிதந்து 4 கிலோ மீட்டர் கடந்துவிட்டேன் எனக்கே ஆச்சரியம் என்னை கடந்து பலரும் பலரை கடந்து நானும் சம வேகத்தில் ஒரு கூட்டமும் நடந்து கடந்துகொண்டிருந்தோம் யாரும் அண்ணாமலையாரைப்பற்றியோ அல்லது ஆன்மீகத்தைப்பற்றியோ பேசவில்லை
சொந்தக்கதை பேசி நடந்தனர் எதற்காக வந்தோம் என்பதை மறந்து கடமையே என்று கால்கள் நடக்க மனம் குரங்குகள் போல் நிலை தாவிக்கொண்டிருக்க வாய் பழங்கதை பக்கத்துவீட்டுகதை என பேசி நடந்துகொண்டிருந்தனர் ஏதோ சுற்றுலா செல்வது போல் வருகிறார்கள் கூடுகிறார்கள் களைகிறார்கள்
இந்த குறைகொண்ட கூட்டத்தைக்கண்டு நிறை கொண்ட தெய்வம் அருள் புரியவேண்டும் பிரம்மா, விஷ்ணுவின் அறியாமைக்கு காட்சி தந்த சிவன்
இந்த அற்ப மனிதர்களுக்கும் அருள் புரியட்டும்


நடிப்பதை நிறுத்திவிடுங்கள்
ரஜினி அவர்களே
+++++++++++++++

கொஞ்சம் பெரியார் அணை நிறைய கலெக்டர் கதை அதிகாரத்தில் இருந்தால் மட்டுமே மக்களுக்கு மிக நல்லது செய்யமுடியும் என்ற எண்ணம் எல்லா பெற்றோர்க்கும் இருப்பதால்தான் அதிகாரத்தை நோக்கிய பயணமாய் எம்புள்ள படிச்சி கலெக்டர் ஆகவேண்டுமென நினைக்கிறார்கள்
எல்லா அப்பனும் நினைத்ததைதான் சகாயத்தின் அப்பாவும் நினைத்தார் ஆனால் எல்லா பிள்ளைகளும் கலெக்டராகவில்லை சகாயம் கலெக்டராகிவிட்டார்
அவ்வளவு அதிகாரமிக்க பதவியை வெறும் சம்பளத்திற்காக தமிழ் நாட்டில் உள்ள 32 கலெக்டர்கள் நாற்காளி தேய்த்துக்கொண்டுள்ளனர்
சமீப செய்தி கோவை கலெக்டர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த 12 பேருக்கு கல்லூரியில் வேலைபோட்டுக்கொடுத்துள்ளார் ஒரு கலெக்டரின் பணி என்னவென்று பல கலெக்டருக்கு பாடம் எடுத்த கோவை கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்

வெளிநாட்டில் படித்து உள்ளூரில் கலெக்டராக பொறுப்பேற்கும் ரஜினி அன்று அரசனுக்கே அதிகாரமில்லாததால் கலெக்டராகிறார்
தனது சொந்த பணத்தில் ஒரு "அணை" கட்டி கொடுக்கிறார். கூடவே ஒரு கோயிலும் கட்டுகிறார். பிரிட்டிஸ் அரசாங்கத்தினர் ஏன் இரயில் பாதைகளையும்
பல கட்டுமானங்களையும் வழித்தடங்களையும் உருவாக்கினார்கள் என்பதை ராஜா லிங்கேஸ்வரன் மூலம் சொல்லியிருப்பது அருமை
‘எந்த வேலையாக இருந்தாலும் இஷ்டப்பட்டு செய்யணும் தொடங்கி பல நல்ல வசனங்கள் இருக்கின்றன.
முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரைக்கும் ரசிகர்களையும் கட்டிப் போட்டுவிடுகிறார் ரஜினி. மற்றவர்கள் பாடுதான் கஸ்டம்
சிவாஜி, படையப்பா, அருணாச்சலம், முத்து போனற சொத்தை இழக்கும் பழைய கதைதான்
அடுத்து க்ளைமாக்ஸ் பைக் சாகசம், பரசூட் ஜம்பிங் டைவிங்க் எல்லாம் தெழுங்குபடம் பார்ப்பது போல் இருந்தது
இப்படத்தில் இசை ‘ரஹ்மான் ரசிக்கமுடியவில்லை அவர் இரு ஆஸ்கார் எருமைகளை முழுங்கிய மலைபாம்பு போல் இருக்கிறார் அவர் வாயில் மேலும் மேலும் உணவுத்துண்டுகளை தினித்தால் வெறும் ஏப்பம்தான் வரும் கோடம்பாக்கத்தில் இப்போது நண்டு, சிண்டு, குண்டு (இமாம்) எல்லாம் பட்டயகிளப்புகிறார்கள் அவர்களை விடுங்கள் 10 ஆஸ்கார் வாங்கும் அளவுக்கு தகுதியுள்ள எம் எஸ் விஸ்வநாதன் எனக்கு விருதுகள் வேண்டாம் யாராவது இசையமைக்க வாய்ப்புகொடுங்கள் என பேட்டி கொடுக்கின்றார் கொஞ்சம் செவிகொடுங்கள் கலையுலகமே இந்தப்படத்தில் ‘மோனா…மோனா… என்று ஒரு பாடல் என் காதுக்கு வீனோ… வீனோ… என் கேட்கிறது

ரஜினி ஒரு சிறந்த நடிகர்!

'அவள் அப்படித்தான்' 'இளமை ஊஞ்சலாடுகிறது' 'அவர்கள்' 'மூன்று முடிச்சு' 'ஆறிலிருந்து அறுபதுவரை', 'எங்கேயோ கேட்ட குரல்' 'முள்ளும் மலரும்' 'ஜானி' உங்களின் உயரம் உங்களுக்குத்தெரியும்.
இன்னுமொருமுறை அளந்து பார்ப்பதில் தவரில்லை நம்மை பெரிதும் கவர்வது ராஜா லிங்கேஸ்வரன்தான்.

யாருக்குக் கிடைக்கும்
இந்த சிம்மாசனம்
ஆண்களே ரசிக்கும் ஆளுமை
குழந்தைகளையும் கொள்ளைகொண்ட பெருமை
பெண்களை பித்தாக்கும் திறமை
பணத்திற்காக வாழ்வதைவிட்டு
மனத்திற்காக வாழத்தொடங்குங்கள்
நடிப்பதை நிறுத்திவிடுங்கள்
ஒரு துளி வியர்வைக்கு
ஒரு பவுன் தங்க காசு கொடுத்த தமிழல்லவா
இந்த வாடகை வார்த்தைக்கு
வாயசைத்தது போதும்
பணத்தையும் புகழையும் பார்த்துவிட்டீர்கள்
படத்தில் அணை கட்டியது போதும்
இத்தனை இளைஞர்கள்
உங்களின் பின் இருக்கிறார்கள்
அவர்களை உங்கள் படங்களுக்கு பாலூற்றவும்
விசிலடிக்கவும் விட்டு வீனடிக்காதீர்கள்
மடைமாற்றுங்கள்


பாண்டி
பேர்தான் பாண்டி
ஆனால் கர்ணனின் குணமுண்டு
கேட்டே கொடுக்காத உலகில் - எனக்கு
கேட்காமலே உதவிக்கு வந்தவன்

பாண்டியை முதலில் பார்த்தது
OMR-ல் ஒரு software நிறுவனத்தில்
ஒரு தொழிலாளி முதலாளியையும்
ஒரு முதலாளி தொழிலாளியையும்
நல்லவன் என்று சொல்வது அறிது
அந்த நலிந்த நிறுவனத்தின் முதலாளி
பாண்டி நல்லவன் உங்கள் நிறுவனத்தில்
இணைத்துக்கொள்ளுங்கள் என
பரிந்துரை செய்தார்

பாண்டிக்கு எனக்கு பக்கத்து இருக்கைதான்
கொஞ்சம் முன்கோபி
வேதாளம் முருங்கையில்
ஏறி ஏறி இறங்கிவிடும்

எங்கள் முதலாளி ஓர் கலைப்பிரியன்
புதிது புதிதாய் கதை சொல்பவர்களை பிடிக்கும்
பாண்டியோ செய்தவேலையைக்கூட
சொல்லத்தெரியாதவன் ஆனால்
செயல்வீரன் உழைப்பாளி
பாண்டி இருக்கவேண்டிய உயரம் வேறு
ஆனால் பேச்சுக்கலை இல்லாததால்
பாண்டியின் உழைப்பிற்கு
யாரோ பெயர் பெருகிறார்கள் ஆனாலும்
இந்த கரையான் உழைத்துக்கொண்டேயுள்ளது

என் மனதில் பாண்டியைப்பற்றிய
வேறோர் எண்ணமிருந்தது
காதல் மணம்புரிந்ததால் குடும்ப உறவுகளின்
தொடர்பில்லாமல் கொஞ்சம்
பொருளாதார நெருக்கடியில் உள்ளதாக எண்ணி
என் பண பிரச்சனைகளை சொல்லவே இல்லை

எனக்கு LIC முன் ஓதிக்கீட்டில் (Pre Approval)
20 இலட்சம் தருவதாக
ஒப்புதல் கடிதம் கொடுத்திருந்தார்கள்
அந்த துனிவில்தான் வீடு வாங்க முயன்றேன்
ஆனால் என் நிறுவனம் சரியாக வரி கட்டாததால்
14 இலட்சம் தான் தரமுடியும் என்று சொல்லிவிட்டார்கள்
துண்டு விழுந்த 6 இலட்சத்திற்காக பல நண்பர்களிடம்
பணம் கேட்டுக்கொண்டிருந்ததை
பார்த்துக்கொண்டிருந்த பாண்டி
ஒரு தொகையை கேட்காமல் கொடுத்தவன்

பாண்டி உன் முன் கோபம் குறை
உழைத்தால்மட்டும் போததாது
அதை ஊதியம் கொடுப்போர்க்கு தெரியப்படுத்து
மனம் போற்றும் மனைவியும்
உன் குணம்கொண்ட பிள்ளையும்
கொண்டாடி வாழ்
உறவுகள் கூடும்
உலகம் உனை வாழ்த்தும்


முருங்கை விதையில் முளைத்த மூங்கில் காடே - பாரதியார்

முருங்கை விதையில் முளைத்த
மூங்கில் காடே

அக்ரகாரத்துக்கு நீ அபிஷ்ட்டு
மழித்த முகங்களுக்கிடையே
விரைத்த மீசை வைத்த வேங்கை நீ

கரும்புக்காட்டுக்கு காவல் நின்ற
இரும்புக்கோட்டை நீ
வெள்ளையனை வெளியேயும்
வறுமையை வீட்டுக்குள்யேயும்
வார்த்தை வாளேடுத்து போராடிய ராஜகவி நீ

பக்தி பழமாயிருந்த
தமிழ் கவிதைகளின் பாதை மாற்றி
கடவுளை மிரட்டிய காவியப் பாடகன் நீ

சுய நலமில்லாதவன், சூது மறந்தவன்
தமிழுக்கு வந்த தவப்புதையல்
உறவுகள் ஒதுக்கிய போதும்
காக்கை குருவிகளை சொந்தமாக்கியவன்

உயிர் பிதுக்கி ஒளி செதுக்கிய
ஓவியக்கவிஞன்
எட்டயப்புரத்து எரிமலை
மின்னல் வார்த்தைகளில்
மின்சார கவி படைத்த கவிமலை
உன் வெடிகுண்டு கவிதைகளால்
வெள்ளையனின் பீரங்கிகளையும் வேர்க்கவைத்தவன்

புதுக்கவிதையின் பிதாமகன்
சமகால கவிஞர்களின் முகவரியழித்தவன்
வள்ளுவனின் வாரிசாய்
கம்பனுக்கு பிறகு வந்த தனிகாட்டுராஜா

பாடுபொருள், பாடும்முறை மாற்றிய
சரித்திரக்கவிஞன்
உன் இறுதி யாத்திரைக்கு மனிதர்களே இல்லையாம்
வராத நாய்களை விட உனக்கு
விசிறி வீசிய ஈய்களே மேல்

நீயே கம்பீரக்கவி, ஜீவ நதி
இறந்தும் கேட்கும் உன் புகழ்ராக சுதி


நெஞ்சுக்கு நெருக்கமான கதைகளை வெற்றியின் வாயிலை கொண்டு சேர்ப்பர்கள் மக்கள் தமிழ் நாட்டின் நல்ல இயக்குனர்களில் வசந்தபாலனும் ஒருவர்
இந்த காவியப்படத்தை எடுக்க நினைத்ததிற்கும் பட்ட பாட்டிற்கும் வசந்தபாலனுக்கு முதலில் வாழ்த்து சொல்லவேண்டும்.
கிட்டப்பா , கேபி சுந்தராம்பாள் கதையை எடுப்பதாக சொல்லி கடைசியில் ஏதோ ஒரு குழப்பத்தில் வசந்தபாலன் வசப்பட்டுவிட்டார்
இங்கே கூத்தும் பாட்டும் விடிய விடிய நடக்கும் மைக் தேவையே இல்லை.. கணீர்ன்னு பேசினா கடைகோடியில இருக்கறவனுக்கு கேட்கும்... அப்படி இருந்த நாடகங்கள் இன்று அவாக்களிடம் (கிரேசி மோகன்,ஒய்ஜி மகேந்திரன்,எஸ்வி சேகர்) மட்டுமே ஊசலாடிக்கொண்டிருக்கிறது.

நாசர் அபார நடிப்பு சித்தார்த் பாய்சில் அம்மனமாக ஓடத்தொடங்கிய ஓட்டம் உச்சத்திற்கு சென்றுள்ளது பிருத்விராஜ் நடிப்பும் அருமை போட்டி பொறாமையே இந்த படத்தின் கதை... அங்கிகாரத்திற்கு ஏங்கும் கலைஞகள் அவமதிக்கும் போது ஏற்படும் அதிர்வுகள்தான் இந்தபடம்
நீரவ் ஷா.. ஒளிப்பதிவு... மிக அருமை. ஜெயமோகன் வசனம் ரசிப்பு பல வசனங்கள் முன்பே பார்த்த ஞாபகம்.,
அம்மாவை அம்மா என்றால்தான் அழகு வேறு எப்படி அழைத்தாலும் அதில் அந்த உணர்விருக்காது வசந்தபாலன் நம்பி ஏமார்ந்த இடம் இசை
ஏஆர் ரகுமான் அவரின் பலமும் பலவீனமும் ஆஸ்கார்தான் கொஞ்சம் தாமதமாக கிடைத்திருக்கலாம் என தோன்றுகிறது ஏதோ வித்தியாசமாக தரவேண்டும் என மெனகெட்டு கெடுத்துவிட்டார்
நாடககலைஞர்களின் வாழ்வியலை இன்னும் உயிர்ப்போடு சொல்லி இருக்கலாம் நெகிழ்ச்சியான காட்சிகள் இல்லாமல் ஒரு குழப்பம் தெரிகிறது
ஏஆர் ரகுமான் காதலுக்கும் மற்ற கதைகளுக்கும் இது போன்ற முயற்சிகள் வெற்றியை தரலாம் இதில் ஏமாற்றமே

செல்வாக்குள்ள ஜமீன்தார் பெண்ணைப்பார்க்க சித்தார்த் ஏதோ அவசரத்துக்கு பாத்ரூம் போய் வருவதைப்போல அவ்வளவு சாதாரணமாக போய் வருகிறார். ஒரு இடத்திலாவது இந்த காதல்களின் தாக்கம் நமக்கு ஏற்படவில்லை. ஏன் இவர்களுக்குள் இப்படி உயிர்துறக்கும் அளவிலான ஒரு ஆழமான காதல் வந்து தொலைக்கிறது என்பதை பதிவு செய்யவில்லை, நிறைய சொல்லவேண்டுமென எதையும் ஆழமாக சொல்லாமல் ஓரு குழப்பம் தெரிகிறது
இந்த கப்பலை வசந்தபாலன் மட்டுமே ஓட்டவில்லை என தெரிகிறது


கார்காலம்கடந்துவிடும்
தூரிகை எடு
+++++++++++
உதட்டுக்கு மட்டும்
பூட்டிட திண்டுக்கல் சென்றவளே
விழிகளில் வழியுதடி

உதடுகளில் பொய்யும்
விழிகளில் உண்மையுமாய்
பெண்டகனின் ரகசியம் போல்
காப்பாற்றியதை விக்கிலீக் விழிகளில் கசியுதடி

உதடுக்கிருந்த வலிமை
இமைக்கில்லையடி
கற்பென்பதை தப்பாய்
கர்பிதம் கொண்டாய்

தேச துரோகி போல் உன் முகம்
முக்காடிட்டுக்கொண்டுள்ள போதும்
உன் முந்தானைமட்டும்
தப்பு செய்த தலைவன் சிறைக்கு
செல்லும் போது சிரித்து கையாட்டுவது போல்
சந்தோசம் கொள்கிறது

தொண்டையில் சிக்கிய வார்த்தைகளுக்கு
பூச்சி மருந்து அடித்ததால்
வரண்ட இதழ் வாடிப்போனது
கொஞ்சம் நீர்பாச்சு

உயிரோடுஅன்பை
ஒளிக்கவே பார்க்கிறாய்
ஒற்றை உயிரோடு முடிவதில்லை
வாழ்வு

முடிவெடுத்த பின்னே
தயக்கம் கூட தண்டனைக்குரியதுதான்
மோனம் பல நேரங்களில் பலம்
சில நேரங்களில் பலவீனம்

வீணை ஏந்திய பின்
உன் விரல்கள் நடுங்குவதேன்
நதியென நடந்து வந்து
வற்றிய பாலைவனமே

வானவில்லை வரையபுரப்பட்டவளே
வண்ணங்கள் உன்வாசலில் காத்திருக்கு
கார்காலம் கடந்து போய் விடும்
தூரிகை எடு

இணைவது மட்டுமே
இன்பமில்லை
வாழ்க்கை சுமையானபோது
பிரிவதும் இன்பம்தான்
விடுதலை பெறு
விண்ணைத் தொடு


திருடன் போலீஸ்
+++++++++++++++

நடு ரோட்டில் லஞ்சம் வாங்குவது
கடைக்குக் கடை வசூல் செய்வது
கற்பழிப்பும் கட்டைபஞ்சாயத்தும் செய்து
செய்திகளில் இடம்பிடிப்பது
அரசியல்வாதிகளில் எடுபிடிகளாய்
திரைப்படங்களில் நகைச்சுவைக்காய்
நக்கலடிக்கப்பட்டுக்கொண்டிருந்த
கடை நிலை
காவலர்களில் துயரங்களையும்
அதிகார அடிமைகளாய் அவர்களின்
வாழ்வைப்பற்றிய ஓர் பார்வை
காவலனே திருடனாய்
திருடனே காவலனாய்
சிந்திப்பதால் வந்த சிக்கல்
காவல் துறையின் துயரங்களை
நகைச்சுவையோடு
இயக்குனர் பட்டியலிட்டு இருப்பது
பாரட்டவேண்டிய முயற்சி

தந்தையை கொன்றவனை
பழிவாங்குவதுதான் படத்தின் முடிவு
இது அந்த தந்தை கதாபாத்திரம்
இறந்தவுடன் தெரிந்துவிடுகிறது
இருந்தும் நகைச்சுவையோடு
நயமாக முடிவை தந்துள்ளார்
இயக்குனர்
இசையமைப்பாளர்
யுவன் என்பது படம் தொடங்கும் போது
பெயர் போட்டபோது மட்டும்தான்
தெரிகிறது

காவல் துறை ஓர் யானை
கடைக்கு கடை, தெருவுக்கு தெரு
பிச்சை யெடுக்கலாம் கோயில் யானையாய்
பிரச்சனை தீர்க்கலாம் கும்கி யானையாய்
யானை உங்களை துரத்தினால்
மேடான பகுதிக்கு ஓடாதீர்
யானைக்கு பள்ளங்கலும்
பட்டாசுகளும் தீக்களும் பயம்
காவல் துறைக்கு
கை நீட்டுவதும்
கடமை தவறிய மேல் அதிகாரிகளும்
அரசியல்வாதிகளும் குடும்பமும் பலவீனம்

யானை
இருந்தால் சிங்காரம்
நடந்தால் கம்பீரம்
ஓய்ந்தால் உருக்குழைந்துவிடும்
காவலர்களின் வாழ்வும் அப்படித்தான்
அடுத்தவர்களின் கட்டளைகளுக்கு
அடிபணிந்தே வாழ்ந்தவர்கள்
பணி காலத்தில் அவர்களின் தொடர்புகள்
எல்லாம் தவரானவர்களோடுதான்
ஆதலால் பெரும்பாலானவர்கள் எல்லா
கெட்ட பழக்கங்களுக்கும் பழகிவிடுகிறார்கள்
பணி ஓய்விற்குப்பிறகு செய்வதறியாது
தவிக்கிறார்கள்
காவல் துறை பொதுமக்களோடு
நேரடி தொடர்பு கொண்டுள்ளதால்
அவர்களுக்கு ஒழுக்கம், மனம்
உடல், ஓய்வுக்குப்பிந்திய வாழ்வு குறித்து
பயிற்சிகள் தேவைபடுகிறது
அரசாங்கம் ஆவனசெய்யுமா ?


இலட்சிய நடிகர் SSR
தான் கொண்டதிராவிட
கடவுள் மறுப்புக்கொள்கைக்கு மாறாக
கடவுள் வேடமேற்று நடிக்க வந்த வாய்ப்புகளை
தொழில் என்று சொல்லி சமரசம் செய்யாமல்
நடிக்க மறுத்து இலட்சியபட்டத்தை பெற்றவர்

காசுக்காக எதையும் செய்யும் உலகில்
இலட்சியத்திற்காக வாழ்ந்த உத்தமன்

பணத்திற்காக பன்னாட்டு நிறுவனத்தின்
குளிர்பான விளம்பரத்தில் நடித்த விஜய்
கோடிகளை வாங்கிக் கொண்டு
குளிர்பான நிறுவனங்களுக்கு எதிராய் நடித்திருக்கிறார்
பொதுவாழ்வில் உள்ளோர்க்கு நேர்மை அவசியம்

படம் நன்றாக உள்ளதாக நண்பர் ஆனந்த்
படம் பார்க்க அழைத்தார்
வடபழனி கமலாவில் அரங்கு நிறைந்திருந்ததால்
அருகாமையில் உள்ள SSRக்கு
சொந்தமான திரையரங்கில் தம்பி கார்த்தி
ஏசி வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்துகொண்டு
(அவரின் முன் அனுபவம்
வியர்வையில் குளித்த கதை சொன்னார்)
கத்தி படம் பார்க்க சென்றோம்
கமலாவில் அரங்கு நிறைந்திருக்கிறது
இங்கு ஆளில்லை

வசதியான திரையரங்குகள் மட்டுமே
வசூலை அள்ளுகிறது
படம் பார்க்கவருவோர்க்கு வசதிகளை செய்துதர
திரையரங்க முதலாளிகள் முன் வரவேண்டும்

இயக்குனர் முருகதாஸ் தரமான
படம் தந்துள்ளார்
பன்னாட்டு நிறுவனத்தின் படையெடுப்பு
விவசாயிகள் தற்கொலை
நகரத்தார் மனநிலை ஊடகதர்மம்
அரசியல் ஊழல்
போன்றவற்றை துணிவாக தொட்டுள்ளார்
நமக்குத்தான் இவைகளை படித்து படித்து
மனம் மரத்துப் போய்விட்டது

நல்ல படங்களை எடுக்கும்போது
இயக்குனர் தன் மீதுள்ள நம்பிக்கையிழந்ததன் பயன்
தண்டத்திற்கு வந்து போகும் சமந்தாவின் பாத்திரப்படைப்பு
ஒரு சமூகப்போராளி வலிப்பு வந்தவன் போல்
ஆடுவது, பாடுவதும் !! சகிக்க முடியவில்லை
இந்த படத்திற்கு பாடல்களே தேவையில்லை
மட்டமான இசை காதுகள் வலிக்கிறது
ஒரு நல்லபடத்தை சாதாரன மசாலாபடம் போல்
முயன்று கொ(கெ)டுத்துள்ளார்

லைக்கா பெயரில்லாமல் தான் படத்தை அனுமதிப்போம்
என்று கூச்சலிட்ட வேல்முருகன் கூட்டம்
எங்ககே? சமரசமானார்கள் என்று தெரியவில்லை
லைக்கா பெயரோடுதான்
படம் திரையிடப்படுகிறது !!

இடைவேலையில் திரையரங்கில்
பன்னாட்டு குளிர்பானங்கள் நன்றாக விற்பனையாகிறது
இது விவசாயிகளின் இரத்தமல்லவா ?
விவசாயிகளை விட்டுத்தள்ளுங்கள்
உங்களுக்கு அவர்கள்மேல் அக்கறையில்லாமல் போகலாம்
உங்கள் மற்றும் உங்கள் உறவுகள் மீதாவது அக்கறைவையுங்கள்
குளிர்பானங்கள் உங்கள் உயிர்கொல்லிகள்
அந்த உணர்வை அலுத்தமாக சொல்லமறந்து
மசாலா தடவியதன் விளைவு 4 வது முறையாக
படம் பார்த்த நண்பரின் தம்பிமார்கள்
அண்ணனுக்குத் தெரியாமல் அயல்நாட்டு
குளிர்பானங்கள் அருந்தினர்
அன்புக்கு கட்டுப்படும் தம்பிகள் மாறிவிடுவார்கள்
மற்றவர்கள் கதி??
இந்த படம் பார்த்து ஒருவர் மாறினாலும் அது
இயக்குனர் முருகதாஸின் வெற்றி

முடிவில் இயக்குனர் விவசாயிகளுக்கு
சமர்ப்பணம் என்று நன்றி சொல்கிறார்
சிந்தனைகளோடு சமர்செய்து
செயலில் பணம் பார்த்துவிட்டார்கள்
லைக்கா நிறுவனம்
இதுவரை 100 கோடிவசூல் என்று தகவல்


அனைவரும் தொலாக்கியாவை போற்றுவோம்
ஊழியர்களின் விசுவாசமான பணிக்கு ஏற்ப 
அவர்களுக்கு மேற்கண்ட வாய்ப்பு வழங்கப்பட்டதில் 
500 பேர் புதிய பியட் புன்டோ கார்களையும், 
570 பேர் நகைகளையும், 
207 பேர் அடுக்குமாடி குடியிருப்புகளையும்
வாரிவழங்கி
முதலாளிகளுக்கெல்லாம்
முதலாளியானாய்
எத்தனைப்பேர்க்கு மனது வரும்
எல்லா நாய்களும்
ஏய்த்துதான் பிழைக்கின்றன
உழைப்பவனுக்கு
வெரும் எழும்புத்துண்டுகள்தான்


ஒளித்திரு நாளென்று

கொண்டாடி மகிழ்வோம்
+++++++++++++++++++++
கொலைகார தினத்தைக் 
கொண்டாடி மகிழ்வோம்
பன்றி உருவெடுத்துப்
பாய்போல் பூமியை சுருட்டியதை
வேற்று கிரகத்திலிருந்து
வெடிவைத்து மகிழ்வோம்
பன்றிக்கடவுள் பூமாதேவியை
புணர்வதில் பூரித்து மகிழ்வோம்
விதைத்தெளித்தால்
மழையில்லாது மாண்டுபோகும்
விவசாயிகளை காக்க ஓர்
கடவுள் இல்லை
நெல்லை விதைத்தவன்
கடனை அறுவடை செய்வதுபோல்
பன்றிக்கடவுளுக்கு அசுரன்
மகனாய் பிறந்தான்
அவனை கடவுளே கொலை செய்கிறார்
மதிகெட்டவர்கள்
கேள்வியே கேட்காமல்
ஒளித்திரு நாளென்று
வியாபாரம் பார்த்து
இல்லாதவன் இருப்பையெல்லாம்
இருப்பவன் இடமாற்றுகிறான்

முட்டாள்கள் இருக்கும்வரை
அரசியல், ஆன்மீகம், வியாபாரம், சினிமா
எல்லாமே அயோக்கியனின்
அடிமைகளே
ஒருத்தன் கத்திய வெளியே எடுக்க
கரணம் போடுகிறான்
இன்னோருவன் அந்த 'அம்மாவின் அடிவருடி"
பேருல வேல வச்சிக்கிட்டு சரணம் போடுகிறான்
ஒரு சாமி கவர்னர மிரட்டுகிறான்
கத்தி பிரச்சனை தீர்ந்ததா இல்லையான்னு
நாளைய இளைய தமிழகம்
திரையரங்கில் பாலோடு சொம்பு தூக்குகிறான்
உருப்புடுமா தமிழகம்


தீர்ப்பெழுதும் காலம் நெருங்கட்டும்
தீயோர் எண்ணம் நொருங்கட்டும்
++++++++++++++++++++++++++++++
திருச்சியில் ஆதரவற்ற குழந்தைகள் பராமரிப்பு 
மைய காப்பாளர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
காப்பகத்தின் காப்பாளர் பெயர் பிரபாகரன்
ஒழுக்ககேடுகளூக்கு உயர்வாய் இருந்த
இந்திய, இலங்ககை இரானுவத்தினரின் பாலியல் கொடுமைகளை
இலங்ககையில் கண்டோம்
உலகத்திற்கே உதாரனமான இரானுவத்தினரை
வைத்திருந்த தளபதி பிரபாகரனின் படையில்
எதிரியின் பெண்களையும் கண்ணியமாய் நடத்திய
தலைவனின் பெயரை வைத்துக்கொண்டு
குழந்தைகள் மீது மது அருந்தி
வந்து பாலியல் தொல்லைதரும்
இந்த நாய்களின் மீது
நடவடிக்கை எடுக்க
அதிகாரத்தில் இருக்கும்
நக்கித்திங்கும் நாய்களுக்கு
மனமில்லாத மகளிர் காவல்நிலையம்
புகார் பதிய மறுத்துள்ளார்கள்
புகார் தந்த சிறுமிகளை போலீஸ் மிரட்டுகிறார்களாம்
நேர்மையான தீர்ப்புகளும், அதிரகாரிகளும்
வெளிச்சத்திற்குவரும் இவ்வேளையில்
இந்த நாய்களுக்கு ஓர்
தீர்ப்பெழுதும் காலம் நெருங்கட்டும்
தீயோர் எண்ணம் நொருங்கட்டும்


அருகதையற்றவர்கள்
++++++++++++++++++++
1972 எம் ஜி ஆரின் கட்டுபாட்டிலிருந்து 
மீண்டு சிவாஜியுடன் சேர்ந்து ஜெயலலிதா நடித்த
C. V. ராஜேந்திரன் இயக்கிய
நீதி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது
நீதி வெற்றிக்காக மகிழ்ந்தார் ஜெயலலிதா

42 ஆண்டுகளுக்கு பின்
நீதி வென்றதாக எதிர்கட்சிகளும்
நடு நிலையாளர்களும் மகிழ்கிறார்கள்
அது படம் இது பாடம்

நீதி தமிழ் திரைப்படத்தின் ஓர் பாடல்
"போதை வந்த போது புத்தியில்லையே
புத்திவந்த போது நண்பனில்லையே" என்ற பாடல்

அடக்கிவைக்கப்பட்ட உணர்வு
அணைக்கப்பட்ட நீர்
புதுவெள்ளமாய் புரப்படும் போது
வரப்புகளையும் வாய்ப்புகளையெல்லாம் வளைக்கப்பார்க்கும்
பதவியும் பணமும் அதிகாரமும்
போதையாய் தலைக்கேரி
புத்தியில்லாமல் போய்விட்டது
புத்திவந்த போது நண்பனுமில்லை வயதுமில்லை

அரசியலில் திருடி சொத்து சேர்த்தவர்களுக்கும் இனி
சேர்க்கலாம் என எண்ணி அரசியலில் நுழைய இருப்போர்க்கும்
இது பாடம்

என் மீது போட்டது பொய் வழக்கு' என ஜெயலலிதா சொல்வது உண்மை என்றால்,
18 ஆண்டுகள் போராடி இவ்வளவு கஷ்டப்பட்டு,
எக்கச்சக்கம் செலவு செய்து, இந்த வழக்கை ஏன் இழுத்தடிக்க வேண்டும்?
ராகு காலம் எமகண்டம் ராசி
நட்சத்திரம் பார்த்து பூஜை பரிகாரம் செய்யும் ஆன்மீகவாதிகளாலும்
முழுக்க முழுக்க தவறான ஆலோசனைகளால்
தலையாட்டி பொம்மைகளாலும் ஜெயலலிதா வழி நடத்தப்பட்டார்
புத்திசாலிகள் அவருக்கு தேவையில்லை
துணிவுடன் சொல்லக்கூடிய மூத்த கட்சிக்காரர்களோ...
தவறு செய்யும்போது சட்டத்தில் இடமில்லை என்று நேர்மையுடன் சுட்டிக் காட்டக்கூடிய
உயர் அதிகாரிகளோ ஜெயலலிதாவின் சுற்று வட்டத்தில் இல்லை

சிலர் நினைப்பதுபோல் அவரது அரசியல் வாழ்க்கை
அஸ்தமித்து விடும் என யாராவது நினைத்தால் ஏமாந்துதான் போவார்கள்.
முடக்கிப்போடும் முயற்சி தீவிரமடையும் போதெல்லாம்
முன்னிலும் வேகமாக முன்னேறி வென்றிருக்கிறார்.
நீதிமன்ற தீர்ப்பு அவரது பத்தாண்டு பயணத்துக்கு தடை
உடல்நலம் குன்றாமல் இருக்குமாயின் போடுவார் வெற்றி நடை

தன்னுடைய தவறுகளை திசை திருப்புவதற்கு 18 வருடங்களாக
சட்டத்துறையை தன்போக்கில் ஆட்டுவித்துக் கொண்டிருந்தவரை,
கடைசி கட்டமாக குற்றவாளி என்று அறிவிக்க வேண்டிய
'அரசியல் தேவை' இந்திய சட்டத்திற்கு ஏற்பட்டிருக்கிறது.

ஒருவேளை, இத்தீர்ப்பும் இல்லாதிருந்தால் ஒரு சாமானிய மனிதன்
சட்டத்தின் மீது முழு நம்பிக்கையையும் இழந்திருப்பான்.
பணம் எல்லா தவறுகளில்லிருந்தும் காக்கும்
என்று எண்ணியோர்க்கு தீர்ப்பு அச்சம் விதைத்திருக்கிறது
ஜனநாயகம் இன்னும் செத்துவிடவில்லை.

தமிழக அரசியல் திரைத்துறையினர்
வசம் சென்றதற்கு சான்று
நடிகை தலைவியானதால்
மந்திரி முதல் கடைகோடி தொண்டன்வரை
நடித்துக்கொண்டுள்ளனர்

எல்லா தரப்பும் போராடுகிறார்கள்
சுய நலமே
நாட்டின் மீதும் ஜெயலலிதா மீதும்
அக்கரை உள்ளவர்கள் அவர் திருந்தவேண்டும்
திரும்பிவந்து நல்லாட்சி தரவேண்டும் என எண்ணாமல்
நீதி மன்றத்தையும் நீதிபதியையும் விமர்சனம் செய்துகொண்டு
பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திக்கொண்டுள்ளார்கள்
எதற்கு துணைபோகிறார்கள் ஊழலுக்கா

100 ரூபாய் சட்டை பையில்
100 ரூபாய் வங்கிகணக்கில்
4 கதர் வேட்டி, 4 கதர் துண்டு
4 கதர் சட்டை 2 ஜோடி காலணி
1 கண் கண்ணாடி 1 பேனா
சமையலுக்கு தேவையான பத்திரங்கள் -6

இது யார் சொத்து விபரம் தெரியுமா?
பத்து ஆண்டுகள் தமிழக முதல்வராகவும்,
பல ஆண்டுகள் அகில இந்திய தலைவரகவும் இருந்து
இந்தியாவில் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய
பெருந்தலைவர் காமராசர் மறைந்த போது அவரிடம் இருந்த மொத்த இருப்பே இது தான்
இன்றைய அரசியல்வாதிகள் இவர் பெயரை சொல்லவே அருகதையற்றவர்கள்.

மகாபாரதத்தில் விதுரநீதி சொல்லப்படுகிறது அதில்
அதிக அகந்தை, அதிகப் பேச்சு, பெரிய குற்றம், அதிக கோபம்,
தன்னை மட்டும் காப்பாற்றிக் கொள்ளும் ஆசை, நம்பிக்கைத் துரோகம்
இழைப்பது ஆகிய ஆறும் மனிதனின் ஆயுளை வெட்டும் கூரிய கத்திகள்


பக்ரீத் பெருநாள் 
"ஈத்-உல்-அஸா" என்னும் நோன்பைக் குறிக்கும் இந்தப் பக்ரீத் பெருநாள்
"கடமையைச் செய்வதாலேயே உண்மையான இன்பம் பிறக்கிறது" 
என்பதை உணர்த்தி கடமைகளை நிறைவேற்றுவதிலிருந்து 
தவறக்கூடாது எனவும் அறிவுறுத்துகிறது.
"அண்டை வீட்டுக்காரரிடம் நல்லுறவு பேணுங்கள்";
"வீண் செலவும் ஆடம்பரமும் இல்லாத முறையில் உண்ணுங்கள்.
முடிந்தவரை தருமம் செய்யுங்கள்";
"யாசிப்பவனுக்கு ஏதாவது கொடுங்கள்";
"நல்லவர்களின் வார்த்தைகளில் உண்மை இருக்கும்
- அவர்களின் குணமும் நற்குணமாக இருக்கும் -
அவர்கள் தவறான (ஹராமான) வழியில் பொருள் தேடுவதில்லை";
"முறையோடு சம்பாதிக்க வேண்டும். பிறரைத் துன்புறுத்தியோ,
நஷ்டப்படுத்தியோ, பொய் சொல்லியோ,
மோசடி செய்தோ, திருடியோ சம்பாதிக்கக் கூடாது";
"நீங்கள் உண்மை பேசுங்கள்.
அது அழிவைத் தந்தாலும் முடிவில் வெற்றியைத் தரும்";
இப்படி, ஒவ்வொருநாளும் வாழ்வில் மக்கள் கடைப்பிடிக்கக்கூடிய
எளிய - உயர்ந்த வழிமுறைகள் பலவற்றைக் கற்பித்த நபிகள் நாயகம் அவர்களின்
போதனைகளைப் பின்பற்றி பெருவாழ்வு வாழ சமுதாய மக்கள் அனைவருக்கும்
எனது உளமார்ந்த பக்ரீத் பெருநாள் வாழ்த்துகளைத்
தெரிவித்துக் கொள்கிறேன்

உயர்ந்த நெரிகளை கொண்ட இஸ்லாமின் மீது
எனக்கு மிகுந்த மதிப்புண்டு
சில இஸ்லாமிய நண்பர்கள்
மேற்சொன்ன எதையும் பின்பற்றாமல்
பணமும் சுயலனமே நோக்கமென வாழ்கின்றனர்
மூச்சுக்கு மூச்சுக்கு அல்லாவின் பெயரைச்சொல்லி
எதை செய்தாவது இலக்கையடைகிறார்கள்
அந்த அல்லாவே அவர்களுக்கு
நல்புத்தி தரட்டும்


காத்திருங்கள் இந்தியாவே ஏலத்திற்கு வரும்

++++++++++++++++++++++++++++++++++++++++
புதுச்சேரி என்றவுடன் சரக்கு மட்டுமே ஞாபகம் வரும் நம்மூர்காரர்களுக்கு
தற்போது தமிழத்தில் தடுக்கிய இடமெல்லாம் டாஸ்மார்க்
ஆதலால் புதுச்சேரியில் குடிகாரர்கள் குறைந்துவிட்டார்கள்
அரை நாளில் அத்தனையும் பார்த்துவிடலாம்
கால்வலியோடு பேரூந்து நிலையம் வந்தேன்
ஒருவர் சொன்னார் சென்னைக்கு ECR செல்ல ஏற்ற வழியல்ல
GST வழியில் பாதுகாப்பும் நேரமும் உறுதியென்றார்
அனுபவம் சொல்வதை நம்பி நான்கு பேரூந்துகளை விட்டுவிட்டேன்
5 ஆம் வண்டியில் வேறு வழியின்றி இடம்பிடித்து ஏறியமர்ந்தேன்
என் பக்கத்து இருக்கைமட்டும் ஆள் இல்லாமல் புரப்பட்டது
கொஞ்சம் நேரத்தில் ஒரு ஜோடி ஏறினார்கள்
மனைவியை என் பக்கத்தில் அமரவைத்துவிட்டு
அவன் ஓட்டுனரின் பக்கத்தில் அமர்ந்தான்
ஆண்கள் வெளி உலகில் தியாகிகள்தான்
இருந்தும் அவன் கவனம் முலுவதும் என்மீதே இருந்தது

நான் திரும்பி அந்த தங்கைக்கு முதுகுகாட்டி அமர்ந்தேன்
என் கால்களை நடக்கும் இடம் நோக்கி திருப்பிக்கொண்டேன்
உள் மனம் அவனுக்கு எழும்பி இடம் கொடுக்கச்சொன்னது
ஒரு மனம் சிரமங்களுக்கிடையில் இடம் பிடித்ததையும்
என் மூட்டுவலியையும் சொல்லி பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்தது
அடுத்த நிறுத்தத்தில் ஒரு கும்பலே ஏறியது
நான் தூங்குவதுபோல் கண் மூடியிருந்தேன்
ஏறியதில் ஒரு பெண்மணி என் பக்கத்துப்பெண்னிடம்
யம்மா ஓன் வீட்டுக்கார கால உள்ள தள்ளி ஒக்காரச்சொல்லு
என்றதும் அவளும் அவள் வீட்டுக்காரனும்
கண்களால் பேசிக்கொள்கிறார்கள்
என்னால் அதற்குமேல் அங்கு அமரமுடியவில்லை
எழுந்து அவனுக்கு இடம் தந்தேன்
அவன் எதிர்பார்த்து இருந்தது போல் அமர்ந்துகொண்டான்
பட்டிமன்றத்தில் தோற்ற ஓர்மனம் என்னை கேவலமாக திட்டியது
இருந்தும் மனம் புதுச்சேரியில் பார்த்த இடங்களை அசைபோட்டது

ரோமானிய வணிகவிடங்களாயிருந்து பின்
நான்காம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்து பல்லவப் பேரரசாலும்
10 லிருந்து 13ஆம் நூற்றாண்டு வரை சோழர்களின் வசமும்
13ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களிடமும். 14ஆம் நூற்றாண்டிலிருந்து
1638இல் பீஜப்பூர் சுல்தான் கைப்பற்றும்வரை விஜயநகரப் பேரரசின் அங்கமாக இருந்தது.
1674இலிருந்து பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சியில்,
இடையிடையே ஆங்கிலேயர்களிடமும் டச்சுக்காரர்களிடமும் கைமாரி
கடைசியில் 1962ஆம் ஆண்டில் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.
இருந்தும் பிரெஞ்சு கலாச்சாரம் பெரும் தாக்கம் ஏற்படுத்தியது தெரிகிறது

புதுச்சேரியின் சிறப்பாக அரவிந்தரின் ஆசிரமம்
மணக்குள விநாயகர் திருக்கோவில்
தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா
அமல உற்பவ அன்னை பேராலயம்
புதுச்சேரி கடற்கரை புதுவை பாரதி பூங்கா

அரவிந்தர் சுதந்திரப் போராட்டத்தில் இணைதல் பின்
சிறை வாழ்க்கை யோக நெறியில் அதிகம் அக்கறை கொள்ள வைத்தது
1910இல் ஷாம்சுல் ஆலம் கொலை வழக்கில் அரவிந்தர் மேல் குற்றம் சாட்டப்பட்டது
கைதாவதிலிருந்து தப்பிக்க
மாறுவேடத்தில் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரிக்கு வந்தார்
அங்கு ஆசிரமம் அமைத்து தியானத்திலும் யோகத்திலும் ஈடுபட்டார்
அரவிந்தரை சிறை ஆன்மீகவாதியாக மாற்றியது

இன்றோ ஆலயங்கள் ஆன்மீகவாதிகளை சிறை செல்ல தயார் செய்துகொண்டுள்ளது
கோயிலுக்கு சென்று பெண்கள் குனிந்து சாமி கும்பிட முடியவில்லை
கற்பகிரத்திலிருந்து காமுகன் வருகிறான்
சாமியார் என்று காலில் விழமுடியவில்லை
கட்டிப்பிடிக்கிறார்கள் கற்பமாக்குகிறார்கள்
ஒருவன் படுக்கையறையில் பெண் சிஷ்யையுடன்
ஆண்மீக ஆராட்சி செய்கிறான் அவனுக்கு அரசு
ஆண்மை ஆராட்சி நடத்துகிறது

இந்தியாவில் ஆன்மீகம், மதம், அரசியல், அதிகாரம்
எவ்வளவு கேவலமாக உள்ளது
என்பதற்கு சாட்சி
சங்கர ராமன் கொலை வழக்கு
81 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர்
பணம் பாய்ந்து இருக்கலாம்
அதிகாரம் பயமுறுத்தி இருக்கலாம்
21 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு
போதிய ஆதாரங்களை அரசு
தரப்பில் தாக்கல் செய்யவில்லை
10 ஆண்டுகள் நடந்த வழக்கின் முடிவில்
அவர் தன்னைத் தானே
வெட்டிக் கொண்டு செத்துவிட்டார்
என்கிறார்கள் இதனால் என்ன தெரிய வருகிறது
பொது மக்களே
சாமியார்கள் இருக்கிறவரை
கோயில்களில் சாமிக்கு இடம் இல்லை
தெய்வம் நின்னு கொல்லும் என்பார்கள்
10 ஆண்டுகள் நின்னு
செத்தவனையே திருப்பி கொன்னுட்டாங்க
நிதி இருந்தால் போதும்
வசதிப்படைத்தவனுக்கு எல்லோறும்
வளைந்து கொடுக்கிறார்கள்
நீதி, கடவுள், அரசியல் அதிகாரம்
இந்தியாவில் ஏலம்விடப்படுகிறது
காத்திருங்கள் இந்தியாவே ஏலத்திற்கு வரும்

Monday, December 29, 2014


அஞ்சான்
கதையில் நோஞ்சான்
தளபதி போன்ற கதையை
எத்தனைமுறை பார்ப்பது
இயக்குனருக்கு வெற்றிப்போதை தலைக்கேரிவிட்டது
எதை கொடுத்தாலும் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை
கதைக்குப்பஞ்சம்
பெண்ணின் சதையை நம்பி
எடுக்கப்பட்டதுபோல் தெரிகிறது

திரைப்படங்களிலிருந்து
கதையை தேடுவதை நிறுத்திவிட்டு
வாழ்க்கையிலிருந்து கதையை தேடுங்கள்
வீட்டுக்கு 100 கதைகள் உண்டு
ஒவ்வொருமனிதருக்குள்ளும் 1000 கதைகள் உண்டு

Thursday, September 11, 2014

பதில் தேடும் பயணங்கள்
----------------------------------------
பல நேரங்களில் கேள்விகளே பதிலாய்
மெளனமும் புன்னகையும்
கண்ணசைவும் விடைகலாகும்
பதில் தெரியா கேள்விகளுக்கு யுகங்களாய்
காலம் பதில் தேடிக்கொண்டேயுள்ளது
விடை தெரியும்வரை
பேய்களோடும் கடவுளோடும்
உறங்கிக்கிடக்கும் பதில்கள்
விடை கண்டவுடன்
விஞ்ஞானிகளோடு விழித்திருக்கிறது

நண்பரின் மகன் தன் தந்தையிடம்
திண்டுக்கல் பெரிய ஊராப்பா என்றான்
ஏன்டா பேசாம மூடிகிட்டு வா
சும்மா கேள்வி கேட்டுக்கிட்டுவந்த
வாயிலேயே குத்துவேன் என்றார்

குழந்தைகள் உலகில்
தோன்றும் காட்சிகள் எல்லாம் புதுமையே
அவர்களின் வாயடைத்தால்
மூளை சிந்திக்க மறந்துவிடும்
ஆசையிருக்குமிடத்தில்
அறிவு மழுங்கிவிடும் என்பர்
அது அறிவுக்குப்பொருந்தாது

திண்டுக்கல்லில் என்ன சிறப்பு
அவன் விடவில்லை
என் வயிற்றுக்கு பிரியாணியும், உன் வாய்க்கு பூட்டும் தான்
நாம் போவது திருச்சி
நீ ஏன் திண்டுக்கல்லைப்பற்றி கேட்கிறாய்
நிறைய திசைகாட்டிகளில்
தேசிய நெடுஞ்சாலை 45 திண்டுக்கல்
என்றுதான் போட்டுள்ளார்கள்
அதனால்தான் கேட்டேன் என்றான்

கேள்வியால் என்னை சுரண்டினான்
அவனுக்கோ அறிவுப்பசி
அவன் அப்பனுகோ வயிற்றுப்பசி
திண்டுக்கல் பாண்டியர் ஆட்சியிலும்
குறிப்பாக விஜய நகர ஆட்சியில்தான் ஏற்றம் பெற்றது
சிறந்த இராணுவத்தளமாக முன்னேறியது
திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின்
முக்கியமான படைத் தளங்களில் ஒன்று
ஆர்க்காட்டு நவாபுகளின் ஆட்சிக்குப்பின்
திண்டுக்கல் பிரியாணிக்கு புகழ்பெற்றது

தேசிய நெடுஞ்சாலை 45 என்பது
சென்னை தொடங்கி தேனியில் முடிகிறது
இதன் நீளம் 472 கிமீ ஆகும்
சென்னை முதல் திண்டுக்கல் வரைதான்
நான்குவழிச் சாலை வசதி உள்ளது.
திண்டுக்கல் வரை தெற்கு தொடர்வண்டிப் பாதையும்
இந்த நெடுஞ்சாலைக்கு இணையாக அமைந்துள்ளது.
அதர்க்காகத்தான்நிறைய திசைகாட்டிகளில்
திண்டுக்கல்லை குறிப்பிட்டு உள்ளனர்

தேசிய நெடுஞ்சாலை 45A
இது விழுப்புரத்திலிருந்து கிழக்காக சென்று
புதுச்சேரி அடைந்து அங்கிருந்து வங்க கடலோரமாக
நாகப்பட்டினம் சென்றடைகிறது
இதன் நீளம் 190 கிமீ

தேசிய நெடுஞ்சாலை 45B
இது திருச்சியில் கிளம்பி தெற்கில் சென்று
முத்தெடுப்பதற்காக தூத்துக்குடி செல்கிறது
விடை அறிந்ததும்
பையன் உறங்கிவிட்டான்
அறிவு விழித்திருக்கும்
தந்தைகளே பயணம் என்பது தேடல்,அனுபவம்
உங்களுக்கு தெரிந்ததைச் சொல்லிக்கொடுங்கள்
சொல்லிக்கொடுக்கும் பெரியோர்களைத்தான்
நாம் முதியோர் இல்லங்களுக்கு
அனுப்பிவிட்டோமே

நல்லவர்கள் இருக்கிறார்கள்
நாளையே சாக்கடைகள் சுத்தமாகலாம்
+++++++++++++++++++++++++++++++++++
ஒரு நண்பரிடமிருந்து
மற்றோர் நண்பருக்கோ
ஒரு உறவிடமிருந்து
மற்றோர் உறவுக்கோ
பணம் வாங்கிக்கொடுத்தால்
நட்பும் உறவும்
இரு புரமும் கெடும்
இது அனுபவம் ஆனால்
திரும்பத்திரும்ப இதில்
மாட்டிகொள்கிறேன்
தன்னிடமிருந்தால் மட்டும்
உதவுங்கள் நண்பர்களே
நட்பும் உறவும்
கெடாமலிருக்கும்

இரக்கப்படுவதையும், பிறருக்கு
உதவுவதையும் ஏமாளித்தனமாய் பார்க்கிறது
இந்த வியாபார உலகம் - இந்த
நொந்த சிந்தனையோடு ஓர்
நண்பரை பார்க்க ஐய்யப்பந்தாங்கள்
பேரூந்தில் ஏறினேன்

எனக்கு முன்னே தூய வெள்ளாடையில்
அரசியல் வாதிபோல் தோற்றம் உள்ளவர் ஏறினார்
நடத்துனர் எழுந்து நின்று
அவர் இருக்க இடம் கொடுத்தார்
உற்றுப்பார்தேன் முன்னால் மேயர்
முன்னால் சட்டமன்ற உறுப்பினர்
மிசா காலத்தில் போராடிய பெரியவர்
சா. கணேசன் அவர்கள் திமுக வை சேர்ந்தவர்
எழுந்து நின்று இடம் தந்த நடத்துனரின்
சிறிய துண்டு மற்றும் தொழிற்சங்க அட்டைகள்
அவர் அதிமுக என அடையாளம் காட்டியது

தலைவர்களிடம்தான் நாகரீகம்
குறைந்து போய்விட்டது
தொண்டர்கள் ஈரமனதுடன்
இருக்கிறார்கள் காமராஜரும், அண்ணவும் பெரியாரும்
வளர்த்த நாகரீத்தொண்டர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்

நடத்துனர் என்னிடம் வரும்போது
நன்றி சொல்லி எதிர்கட்சிக்கு
எழுந்து இடம்கொடுத்தீர்களே என்றேன்

"சார் அவர் எவ்லோ பெரிய மனுசன்
அந்த கட்சியிலயும் உள்ள நல்லவருசார்"
தொடர்ந்து கொஞ்சம் அரசியல் பேசினார்
ஒற்றை ஊழல் அந்த கட்சியின்
பல சாதனைகளை மறைத்துவிட்டதோ ?

நல்லவர்களே இல்லையா என்று
என்னும்போதல்லாம் ஓர்
நல்லவரை காண நேர்கிறது

ஏ இளைய மனிதா நம்பிக்கை வை
மழை பொய்யும்
நல்லவர்கள் இருக்கிறார்கள்
நாளையே சாக்கடைகள் சுத்தமாகலாம்