Sunday, November 10, 2013



சமூக விரோதிகள்
==============
உறக்கத்தில் ஏமாற்றுபவன்
திருடன்
விழித்தால் மாற்றிவிடலாம்

விழிப்பில் ஏமாற்றுபவன்
அரசியல்வாதி
5 ஆண்டுகளில் மாற்றிவிடலாம்

மயக்கத்தில் ஏமாற்றுபவன்
மதவாதி
தெரிந்தே திருடச்சொல்கிறோம்
சம்மதித்தே சரணடைகிறோம்
இல்லாத சாமிக்கும் பேய்க்கும்
எல்லாம் கொடுக்கிறோம்
பயம் காட்டியே
பணிய வைத்தவர்கள்
மாற மனமில்லாதவர்களாய்
மதங்களின் வாழ் நாள் அடிமைகளாய்

தீபாவளி
======
பூமியை சுருட்டி
கடலுக்குள் ஒளிந்த
அசுர மூடன்
(பூமிக்கு வெளியே கடலா)

கடலில் மூழ்கி
பூமியாய் மீட்க பன்றி அவதாரமெடுத்த
அதீத மூடன்
(கடலுக்குள் சண்டையிட பன்றியா? )

பூமியை காமம் கொண்டு பெற்ற
கடவுளின் பிள்ளைதான்
நரகாசுரன்
(கல்லைப்புணரும் கடவுள்
கடவுளுக்கு பிறந்தவன் அசுரனா)

அசுரனைப்பெற்ற அப்பனை தண்டிக்காமல்
கல்லைப்புணர்ந்த கடவுளை விட்டு விட்டு
கள்ளஉறவில் பிறந்த கணவனின் மகனைக்கொன்ற
கையாலாகாத பொண்டாட்டி பெண்கடவுள்

தலைமுறைகளை முட்டாளாய் நினைத்து
கதைச்சொன்ன முன்னோர்கள்
பாவம் காட்டுமிராண்டிகளாய்
இருந்த காலத்தில் சொன்னக்கதைகள்

மகனுக்கு பதிலாய் (கிருஷ்ணரை)
கனவனை கொன்றிருந்தாலாவது
அவதாரங்கள் மிச்சமாயிருக்கும்
தவறு செய்யும் கணவர்களுக்கு
பாடமாயிருந்திருக்கும்
மதத்தின் மீதான மானமாவது
காப்பாற்றப்பட்டிருக்கும்

காட்டுமிராண்டிகள் சொன்ன
கதையை கட்டியழும் நிகழ்கால இளசுகள்
காரணம் தெரியாமலேயே
திரிகளுக்கு தீ வைக்கும் தலைமுறைகள்

எதைப்பற்றியும் கவலைப்படாமல்
எல்லாவற்றையும் வியாபாரமாக்கும் முதலாளிகள்
விடுமுறையும் சலுகையும் கிடைத்தால்
எதைவேண்டுமென்றாலும் கொண்டாடும் இளசுகள்

தீபாவளி கதை கேட்ட காதுகளெல்லாம்
நம்மைக்காரித்துப்புகின்றன
நமக்குத்தான் வெட்கமே இல்லை
நம் கடவுள்கள் எவர்க்கும் ஒழுக்கமே இல்லை

காட்டுமிராண்டி காலத்தில் கதை சொன்ன
யூதர்களிடமிருந்து ஏசு கிருஸ்த்தவத்தை கண்டெடுத்தார்
பின் அவர்களே தவறுகளை உணர்ந்து
பழய ஏற்பாட்டிலிருந்து புதிய ஏற்பாட்டை எழுதினார்கள்

நபிகள் இஸ்லாமை கண்டெடுத்தார்
தன் மதங்களை புதுப்பித்துக்கொண்டனர்
நாம்மட்டும்தான் மாற மறுக்கும் மனம் கொண்டவர்கள்
எருமை தோல்களைவிட தடித்த இதையம்

இந்துமதத்தில் இருந்து
சீக்கியமும் புத்தமும் பிறந்தது
வாளெடுத்தவனை பயத்தில் பஞ்சாப்பில் விட்டு விட்டு
அமைதியாய்ச்சொன்ன புத்தனை
நாடு கடத்திவிட்டோம்

'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை.
வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி,
ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.
ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது.
அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற
எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும்.
ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.
இப்படி காரணம் சொல்லி
தீபாவளியை கொண்டாடுங்கள்
திருந்த முயலுங்கள்
இல்லை எனில் குழந்தைகளுக்காய்
குழந்தையாய் கொண்டாடிவிட்டு போங்கள்

எல்லா கொண்டாட்டங்களுக்குப்பின்னும்
நாம் எதையும் மாற்றிக்கொள்வதில்லை
கஸ்டப்பட்டு விரதம் இருந்து
சபரிமலைக்கு ஏறி
மலையவிட்டு இரங்கியதும்
மதுக்கடை வரிசையில் நிற்பவர்கள்


நவராத்திரி 

அறியாமை இருள் விலக
ஒன்பது நாட்கள்
அம்பிகை வழிபாடு செய்து
ஒளி பிறந்த பத்தாம் நாள்
விஜய தசமி

யாருக்கு ஒளி பிறந்ததென்று
எவனுக்கும் தெரியவில்லை
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்
அறியாமை இருளில் இருந்தோம்-அப்ப
ஒளி பிறக்கல

பல ஆண்டுகாலமாய்
ஆங்கிலயனுக்கு அடிமையாயிருந்தோம்-அப்ப
ஒளி பிறக்கல

சில ஆண்டுகள்
சுல்தான்களுக்கு அடிமையாயிருந்தோம்-அப்ப
ஒளி பிறக்கல

எல்லா கோயிலயும், சாமியையும்
கொல்லையடிச்சிட்டு போனாங்க-அப்ப
ஒளி பிறக்கல

பழமையும் அடிமையையும்
ஆதிக்க இருள் நீக்க
ஞான ஒளியாய்
புத்தன் வந்தான் அடித்து
வதைத்து, கொலை செய்து
அயல் நாட்டுக்கு அனுப்பிவிட்டோம்
அங்கபோயி அவன்
நம்மள கொல்றான்-அப்ப
ஒளி பிறக்கல
----------------------------------

நாளொன்றுக்கு
இருபத்தி நான்கு மணிகளின்
நடைமுறையில்

பகலின் அம்சம் சிவன்
இரவின் அம்சம் அம்பிகை

இரவெல்லாம் விழித்திருந்து
உலகுகாக்கும் தாய்க்கு
ஒன்பது நாள் திருவிழா....

உலகமென்றால்
எங்க சாமிக்கு இந்தியாமட்டும்தான்
அவதாரமெடுத்தாலும்
வடஇந்தியாவில் மட்டும்தான் எடுப்பார்கள்

நல்லா கொண்டாடலாம்
எல்லா கயவாளிகளும்
கைவரிசை காட்றது இரவினில்தான்
இரவெல்லாம் விழித்திருப்பவளுக்கு
இது ஏன் தெரிவதில்லை
------------------------------------------
பிரம்மனின் சாகாவரம் பெற்ற
அரக்கர்களை அழிக்க
அதற்க்கு சமமான
முப்பெரும் தேவியின்
சக்திகள்.....இச்சா சக்தி..கிரியா
சக்தி...ஞான சக்தி.....ஆக

துர்க்கைக்கு முதல் மூன்று நாள்
மகா லஷ்மிக்கு அடுத்த மூன்று நாள்
சரஸ்வதிக்கு கடைசி மூன்று நாள்..
கொண்டாட்ட வழிபாடுகள்.....

பிரம்ம சக்தி...பிரம்மாணி
விஷ்ணு சக்தி....வைஷ்ணவி
சிவன் சக்தி......மகேஸ்வரி
கர்த்திகேய சக்தி..கவுமாரி
இந்திர சக்தி..மாகேந்திரி
வராஹி சக்தி...வராஹி
பைரவ சக்தி..சாமுண்டா
நரசிம்ம சக்தி..நரசிம்மஹி

இவர்கள் காளிகா என்ற சண்டிகா தேவியுடன்
ஒன்பது தேவதைகளாகி..நவ ராத்திரிகளாயினர்...
சும்ப..நிசும்ப அரக்கர்களை ஒழித்து..தேவர்கள் காத்தனர்
மூவூலகம் காத்த
முப்பெரும் தேவிகளின்
இவ் அம்சங்களை

மூவூலகம் காத்தவர்களுக்கு
இந்த பூவுலகம்
காக்கத்தெரியலையே
-----------------------------------
முப்பெரும் தேவிகளும்
கல்வி..இசை..புகழ்..செல்வம்
தாணியம் தண்ணீர்..வெற்றி
தரும் சக்திகளை....

கல்வியில்ல, செல்வமில்லை
தாணியமில்லை கிரிக்கட்ட விட்ட
உலகலவில ஒன்றிலும் பதக்கமில்லை
தண்ணீர்க்காய் வரப்பு தொடங்கி
வாய்க்கால் நீண்டு
மாநிலம்தோறும் சண்டையோ சண்டை

கொலுவில் வைத்து
நவதாணிய சுண்டலிட்டு
போற்றிப்பாடும்
இரவுத் தாலாட்டு

பிரம்மன் ..விஷ்ணு..சிவன்..மூவரும்
முப்பெரும் தேவியருள் அடக்கம்

சக்தியை வழிபட்டாலே
சகலத்தையும் வழிபடுதலுக்கு
சமம்

மங்களகரமான திருநாளில்
மங்கலங்கள் தரும்

அலைமகள்..கலைமகள்..மலைமகள் எனும்
முப்பெரும் தேவியரை..விரதம் கொண்டு வணங்கி
வெறுப்பு,,பொறாமை,,,அறியாமை,,பேராசை..அனைத்தும் நீங்கி...
வளம் நலம்..பலம் ..பெறுவோம்

ஒன்னுமே புரியல தோழர்களே
இந்த மூனுமகளும் இருந்தும்
மேல சொன்ன எதுவும்
நம்ம நாட்டவிட்டு போகல
நமக்கும் ஆசத்தான்
வெறுப்பு,,பொறாமை,,,அறியாமை,,பேராசை..
அனைத்தும் நீங்க

சிந்தியுங்க தோழர்களே......


போக்கும்
பொழுதைவிட்டு குறை நீக்கு
======================
ஆயுத பூஜை / சரஸ்வதி பூஜை
++++++++++++++++++++++++++
பிரம்மனின் மகள் சரஸ்வதி
மகளின் அழகில் மயங்கி
பிரம்மன் கற்பழிக்க முயன்றபோது
சரஸ்வதி பெண் மானாகி மாறி தப்பி ஓடுகிறாள்
பிரம்மன் ஆண் மானாகி துரத்துகிறார்
தவறு துரத்துகிறான்
இந்த கேடுகெட்டவனுக்கு
மரியாதை எதுக்கு
சிவன் வேடனாக மாறி
பிரம்மனை கொன்றுவிடுகின்றார்
தந்ததையை கொன்ற சிவனிடம்
தந்ததையின் உயிர் வேண்டி
தந்ததைக்கு மனைவியாகின்றாள்
இந்த மானங்கெட்டவள்

அவளுக்குத்தான் இன்று பூஜை
நன்றாக கொண்டாடுங்கள்
கலாச்சாரம் பேசும் நல்லவர்களே
எதர்க்காக கொண்டாடுகிறோம்
என்றே தெரியாமல்
விடுமுறைக்காகவும் முதலாளிகள்
வீசும் பொரிக்காகவும்
நன்றாக கொண்டாடுங்கள்


ஒழுக்கமில்லாத இந்த
சரஸ்வதியின் பொறுப்பில்தான்
கல்வி, கலை, விளையாட்டு
பன்பாடு மற்றும் வித்தை
இலாக்காக்கல் கொடுக்கப்பட்டுள்ளன
வித்தையின் பயன் தொழில்
தொழிலின் ஆதாரம் ஆயுதம்
அதனால்தான் இதை
ஆயுத பூஜை எங்கின்றோம்

ஒரு கடவுள் உள்ளவனெல்லாம்
உலகத்தை ஆள்கிறார்கள்
துறைக்கொரு கடவுளிருந்தும்
தெருவுக்கொரு தெய்வமிருந்தும்
துன்பத்தில்தான் இருக்கிறோம்

புத்தியை மறந்து கத்தியை துடைத்து
ஆயுத பூஜை கொண்டாடினோம்
சரஸ்வதியை யாரென்றே தெரியாத வெள்ளைக்காரன்
பீரங்கியால் சுட்டு நம்மை அடிமையாக்கினான்
இந்த தேசத்தில்தான் படிப்பறிவில்லாதவர்கள் அதிகம்
காசு உள்ளவனுக்கு மட்டுமே
சரஸ்வதி கல்வி கொடுக்கிறாள்

தொழில் செய்யும் வியாபாரி
விபூதி பூசி பொட்டுவைத்து
தராசு எடையை தப்பாய் அளக்கின்றான்
ஊரை ஏமாற்ற விபூதியும் பொட்டும்

இவ்வளவு கூத்தும் ஆர்ப்பாட்டமும்
அபிசேகமும் நடந்தும்
தனித்துறை பொறுப்புள்ள கடவுள்
இந்த இந்தியாவை
தொழில் கல்வி, கலை,
விளையாட்டு மற்றும் வித்தைகளில்
ஏன் பின் தங்கியே வைத்திருக்கின்றார்கள்

ஒன்று கடவுள் மேல் குற்றமிருக்கவேண்டும்
அல்லது கடவுளை வணங்குபவன்மேல்
குற்றமிருக்கவேண்டும் இப்படி
குறை சொல்லியே போக்கும்
பொழுதைவிட்டு குறை நீக்க
ஒன்று செயல்படாத கடவுளை மாற்று
இல்லையென்றால் கடவுளை கும்பிடுபவனை மாற்று


இந்தியா ஓர் ஏழை நாடு
இந்தியக்கடவுள்கள் வசதியானவர்கள்

ஏழுமலையானின் ஒரு மணி நேர
குளிக்கும் செலவு 
சுமார் ஒரு லட்ச ரூபாய்
அவ்வளவு அழுக்கா ?
இல்ல ஆட்சியாளர்களின் 
அலட்சியக் கொழுப்பு

அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, 
நேபாளத்திலிருந்து கஸ்தூரி, 
சைனாவிலிருந்து புனுகு, 
பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் 
முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, 
தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 
51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். 
பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், 
காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது.
அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

அப்ப அழுக்க உருட்டி வைத்து
பிள்ளையார் பிள்ளையை
உருவாக்கிய சிவன் மனைவி 
பார்வதி சாமி மேல
அவ்வளவு அழுக்கா ?
இல்ல எதச்சொன்னாலும் நம்மாளு
நம்புவாங்கன்னு எழுதியவனின் கொழுப்பு

திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம்.
அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர்,
பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள்.
ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு
வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள்.

பீதாம்பரம் இல்ல 
எதுல ஒற்றினாலும் நிக்காது
வசூல் பண்ற பணமெல்லாம்
திருட்டு காசு
வியர்க்காம என்ன செய்யும்

ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து 
பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் 
திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. 
ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.
சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், 
அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் 
போன்ற வாசனைப் பொருட்கள் 
ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

இந்தியாவிற்குள்ளேயே அவதாரம்
எடுத்த சாமிக்கு
இந்திய பிரச்சனைகளையே
தீர்க்க முடியல அவ்வளவு நாற்றம்
தெலுங்கானா நாறுது
வாசனைக்கு
அன்னிய பொருட்கள் தேவையா

ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, 
இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. 
சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் 
ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை 
செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

எத்தனை ஏழைப் பெண்கள்
தாலிக்குக்கூட தங்கமில்லாமல்
முதிர் கன்னியாகவே
வாழ்வை முடிக்கிறார்கள்
நகையெல்லாம் சேர்த்து வைங்க
எவனாவது படையெடுத்து வருவான்

ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. 
இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. 
சூரிய கடாரி 5 கிலோ எடை. 
பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் 
ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. 
இதன் மதிப்பு ரூ.100கோடி.

அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது 
மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

கண்ணை திறந்து எதைப்பார்க்கிறார்னு தெரியல
நாட்டைப் பார்த்திருந்தால்
நாம்தான் வல்லரசு
வசூல மட்டுமே பாத்துட்டு
கண்ணை மூடிக்கிறார் போல

திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை 
கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. 
செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். 
உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், 
இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். 
அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். 
வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு 
பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. 
குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. 
வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் 
பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். 
ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

அலமேல்மங்கையின் உள்பாவாடையை
பயபக்தியுடனும் ஒழுக்கத்துடனும்
நெய்கிறார்கள். மக்கள்
ஆனால் அவரைத்தான் அவுசாரி வீட்டுக்கு
தூக்கிச்செல்கிறார்கள்
ஒழுக்கம்கெட்ட கடவுளை
வணங்கும் மக்களிடம்
எப்படி ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியும்
கொலையும் கொள்ளையும்
கற்பழிப்பும்தான் நாளிதலின் தலைப்புச்செய்தி