Thursday, September 26, 2013

காமராஜர்


அரசியல் புத்தன்
அவதார புனிதன்
தொண்டில் அனுமன்
பொதுவாழ்வில் தூய்மை
தனிவாழ்வில் நேர்மை
மக்கள் நலம் சார்ந்து
சிந்தித்தவன்
அரசியல் ஞானி
போர்களத்தில் போராளியாயிருந்தும்
முனிவன் போல் வாழ்ந்தவன்
காமராஜர் ஓர் கருப்புத்தங்கம் -இது
விருதுநகர் பெற்றெடுத்த
விருட்சத்தின் வரலாறு

1903 ஜுன் 15ந்தேதி
குமாரசாமி சிவகாமி அம்மையாருக்கு
தேங்காய் வியாபாரியின்
மகனாய் பிறந்தார்
6 வயதில் தந்தையை இழந்தார்
27 ஆயிரம் பள்ளிகளை கட்டியவனுக்கு
6ஆம் வகுப்புக்குமேல்
பள்ளி செல்ல வசதியில்லை
தன் 16 வது வயதில்
காந்தியாரின் அழைப்பின் பேரில்
காங்கிரசில் சேர்ந்தார்

சுதந்திர தீயில்
தன்னையும் இணைத்தான்
தொண்டனாய் தொடங்கி
தொண்டாற்றி தொண்டாற்றியே
1940 ல் காங்கிரசின் தலைவனாகியவன்
1954ல் ஏப்ரல் 13ல்
முதலமைச்சராகி 9 ஆண்டுகள்
பணிசெய்து அந்த பதவிக்கே
இலக்கணமானவர்

தனக்கு எதிராக முதலமைச்சர்
பதவியில் நின்ற பக்தவட்சலம்,
சி.சுப்ரமணியம் இருவரையும்
தனது மந்திரிசபையில்
மந்திரியாக்கிய மகாமனிதர்

தனக்கு கிடைக்காத கல்வி
தரணிக்கு கிடைக்கச்செய்தவன்
27 ஆயிரம் பள்ளிகளை கட்டி
பசியோடுவரும் மானவர்களுக்கு
மதிய உணவளித்தார்

இனத்தை காட்டி கொடுத்தும்
உறவுகளை கூட்டிக்கொடுத்தும்
வைபாட்டிகளோடு வாழும் இந்த காலத்தில்
தன் தாயிக்கு கொடுத்துவந்த
மாதத்தொகை ரூபாய் 120 ஐ
முதலமைச்சர் ஆனபிறகும்
20 ரூபாய் கூட்டிக்கொடுக்காத
கொடுந்தூயவன்

அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய
நீர்பாசனதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவை கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம்,
காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு,
அமராவதி, வைகை, சாத்தனூர், கிருசுணகிரி, ஆரணியாறு
இவையெல்லாம் விவசாயம் வளர

அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட
முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:
பாரத மிகு மின் நிறுவனம்
நேருவே எதித்த நெய்வேலி அனல்மின் திட்டம்
மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)
இரயில் பெட்டி தொழிற்சாலை (ICF)
நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
குந்தா மின் திட்டமும்,
நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின்
வெப்ப மின் திட்டங்களும்
தமிழகத்திற்கு கொண்டு சேர்த்தார்

இளைஞர்களுக்கு வழிவிட
தலைவர்களை தொண்டர்களாக்கினார்
1963 ல் காந்தி பிறந்த தினத்தில்
தன் முதலமைச்சர் பதவியை துறந்தார்

1963 ல் அகில இந்திய காங்கிரஸ் தலைவரானார்
நேருவின் மறைவுக்குப்பிறகு
இந்தியாவின் இரண்டாம் பிரதமராக
சாஸ்திரியை 6 நாளில் தேர்ந்தெடுத்தார்
சாஸ்திரிக்குபிறகு காமராஜர்
பிரதமராவார் என பத்திரிக்கைகள்
எழுதியபோது உடனே மறுத்து
இந்திராவை பிரதமராக்கிய
ஒப்பனையற்ற மனிதன்
உண்மையும், எளிமையும் கொண்ட
உயர்ந்த உருவம்

1967 ல் தேர்தலில்
தான் பிறந்த மண்ணில்
துரோகத்தால் தோற்றுப்போனார்
இந்த கருப்பு நிலவுக்கு
தோல்வி நிழல் தொடங்கியது

15 ஆண்டுகள் தமிழ் நாட்டின் சட்டமன்ற உறுப்பினர்
14 ஆண்டுகள் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர்
12 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்
9 ஆண்டுகள் தமிழ் நாட்டின் முதலமைச்சர்
5 ஆண்டுகள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்

இத்தனை பொறுப்புகளில் இருந்தும்
காமராஜர் இறந்தபோது  அவரின்
சொத்து மதிப்பு 10 வேட்டி, 10 சட்டை
63 ரூபாய் மட்டுமே
வட்டச்செயலாளறுக்கு
வாய்க்கால் வரப்பெல்லாம் சொந்தம்

மாவட்டச்செயலாளர்கள்
மலைகளும் தீவுகளையும் சொந்தமாக்கும்
இந்த காலத்தில்
சுய நலமில்லா தூய உள்ளத்தோடு
தொண்டாற்றிய கருணைக்கடல்

1975 அக்டோபர் 2ல் தன் தலைவனின்
பிறந்த நாளில் கண்மூடி காலமானார்
மனித புனிதனுக்காக
வானம் அழுதது
காமராஜரோடு காந்தியம்
வெள்ளாடைபூண்டு
விதவையானது


Saturday, September 14, 2013
















ஓணம் வாழ்த்துக்கள்
====================

மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில்
4 நபருக்கும் தூக்குத்தண்டனை
நாடே கொண்டாடிக்கொண்டுள்ளது

ஓர் திருமணத்திற்காய் அனந்தபுரம் செல்ல இரயில் ஏறினேன்
அந்த பெட்டியில் 80% கல்லூரி மாணவ மாணவிகள்
பெற்றவர்களுக்குத்தான் தன் மகள் மேல் எத்தனை பாசத்தின் பயம்
வழியனுப்ப வந்தவர்கள் கையசைத்து கிளம்பினார்கள்
இரயில் நகரத்தொடங்கியதும் ஆட்டமும், பாட்டமும், விசிலும் பறந்தது
இளசுகளின் கொண்டாட்டம் முதியவர்களை முகம்சுளிக்க வைத்தது
இவர்கள் மற்றவர்களின் நலன் விரும்பாதவர்களாக வளர்கிறார்கள்
தன் நலம் சுய விருப்பங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர்.

அம்மா கையசைத்து மறையும்வரை
அமைதியாக இருந்தவர்கள் நள்ளிரவு 2 மணி வரை ஆண் நன்பர்களை
அடிப்பதும், கிள்ளுவதும், ஆட அழைப்பதுமான அட்டகாசங்கள்
பாடல்களில் எல்லாம் ஆபாச அழைப்புகள் யாரோ,
யாரோ என்னோட புருசன், என் திமிருக்கு அரசன்...,
என்னை அனைப்பவன் யார், ஆழ்பவன் யார், மன்னவன் யார் போன்ற
கேள்விகள்  நிறைந்த பாடல்கள் மற்றும் குத்துப்பாடல்கள்
சரி எங்கே இந்த பெண்கள் தேடும் ஆண்மகன்கள் என்று தேடினேன்
அத்தனை ஆண் குரங்குகளும் கழிவறை பக்கத்தில் நின்று
தள்ளாடிக்கொண்டிருந்தார்கள் கழிவறையை
டாஸ்மார்க் கடை போல் மாற்றிவிட்டனர்
இளைய இந்தியா தனிமையின் சுதந்திரம் கிடைத்ததால் தடுமாறிக்கொண்டிருந்தது.

20 ஆண்டுகள் நான் பார்த்த அனந்தபுரம் வளரவேயில்லை
மக்களும், வாகனமும் பெருகிவிட்டபோதிலும்
சாலை மற்றும் இதர கட்டமைப்புகள் வளரவேயில்லை
இரு கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தாலும்
காட்சிகள் மாறவில்லை படித்த மக்களை முல்லைப்பெரியாறு
போன்ற பிரச்சனைகளை எழுப்பி உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே
முட்டாளாக்கிவிட்டார்கள்.

இந்தி பாடல்களை மட்டுமே கேட்டு ரசித்த காதுகளில்
இளையராஜா வரவுக்குப்பின் தமிழிசை கேட்க தொடங்கினர்
எங்குபார்த்தாலும் தமிழ் பாடல்கள்
கல்யாணமண்டபத்தில் கொலவெரி பாடல் திரும்ப திரும்ப போட்டதால்
பாடலின் வரிகளை இன்றுதான் கூர்ந்து கேட்டேன்
அந்த மோசமான வரிகளுக்கு குழந்தைகள் அபி நயத்துடன் ஆடினார்கள்
தமிழ் பாடல்களுக்கு இந்த மாநிலமே ஆடியதில் மகிழ்ச்சி என்றாலும்
கலை சமூக பொறுப்பில்லாதவர்களிடம்
சிக்கியதால்தான் தலைமுறைகள் வீனாகிறார்கள்
நல்ல ஆட்சி செய்த மகாபலியை பாதாள உலகிற்கு அனுப்பிவிட்டோம்
இந்த படுபாவிகளிடம் மாட்டிக்கொண்டோம்
இது தான் தெய்வத்தின் தேசம் (திரு இழந்த அனந்தபுரம்)

ஓ மகாபலி மன்னனே பாதாள உலகிலிருந்து பூலோகதிற்கு ஓணம் பண்டிகையன்று தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக
கேரள மக்கள் நம்புகிறார்கள் வந்துபோகும்வரை அரசியல்வாதிகளின் கண்ணில் பட்டுவிடாதே
கேரள நன்பர்களுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்
கடவுள்
======

அச்சத்திற்கும்
பலவீனத்திற்கும்
படைக்கப்பட்டவன்
கடவுள்

தேவைகளுக்கு
தேடப்படுபவன்

பரிகாரங்களால்
பராமரிக்கப்படுபவன்

மறு ஜென்மத்தால்
மரனிக்காமல் இருப்பவன்

கடவுளின் சிலை
கானாமல் போனதால்
காவல் நிலையத்தின்
கதவு தட்டுபவர்கள்

போலியாக ஒர் கடவுள்
தேவையாயிருக்கிறார்

மருத்துவ மனைகளும்
காவல் நிலையங்களும்
நீதிமன்றங்களும்
கடவுள் மறுப்பாளர்களால்
நிரம்பி வழிகிறது

கடவுள்
எதிர்பார்ப்பின் உச்சம்
ஏமாற்றத்தின் எச்சம்
வாழ்வின் மிச்சம்

சிலருக்கு வியாபாரம்
பலருக்கு பங்குதாரர்


கண்டுபிடிக்கும்வரை ஆன்மீகம்
கண்டறிந்தால் அறிவியல்

அரசியல்வாதிக்கு ஆதாயம்
பலருக்கு பொழுதுபோக்கு
சிலருக்கு போதைவஸ்து

தன்னையறியாரின் தேடுதல்
தேடுதலில் தன்னையிழத்தல்
எங்கும் இருந்தும்
எங்கெங்கோ தேடும் பொருள்

பலவீனர்களின் பாதுகாவலன்
அன்னையின் வடிவில்
அன்பாய் இருப்பவன்
குழந்தை வடிவில்
குடியிருப்பவன்
இருந்தும் தேடுகிறோம்


Saturday, September 7, 2013












உடைந்த நம்பிக்கை
================
தேர்தல்
+++++++
விடிந்தாலும் விழித்திருக்கும்
வீதி விளக்குகள்
புதிதாய் எம் வீதியில்
பேரூந்து பிறப்பெடுப்பு
கப்பி பார்க்காத சாலைகளுக்கெல்லாம்
தார் போடும் அதிகாரிகள்
கூன் கிழவிகளையும்
கும்பிடுபோடும் இளசுகள்
ரேசன் கடைகளில்
எல்லாம் கிடைக்கிறது
தலைவர் சிலைகலெல்லாம்
மாலையோடு நிற்கிறது
காற்றுவந்து போன குழாய்களில்
நீர் வருகிறது
குழாயடியைச் சுற்றி
உடைந்த குடங்களுக்குப்பதிலாய்
உடையாத குடங்களும்
உடைந்த நம்பிக்கையும்தான்
நீயும் ஆண்டவன்தான்
+++++++++++++++++++

அகிலத்தை ஆண்டவர்கள்

ஆயிரம்பேர் உண்டு

நினைவில் நின்றவர்கள்
நிறைவாய் யாறுமில்லை

மண் வென்றவரெல்லாம்
மண்ணாய் போனார்கள்

பெண் கொண்டவரெல்லாம்
பெயர் தெரியாமல் போனார்கள்

மனம் வென்றோர் மட்டும்
மகத்தான புகழ் கொண்டார்கள்

ஆயிரம்போர் கண்ட
அலெக்சாண்டர் தன் 33 வயதில்
வைரசுக்கு மாண்டுபோனான்

ஐரோப்பாவை தன் ஆளுமைக்கு
கீழ் வைப்பதற்காய் 87 போர் வெற்றிகளை
சூடிய நெப்போலியன்

வாட்டர்லூவில் தோற்று
7 ஆண்டுகள் சிறைபட்டு
வயிற்று வலிக்கு செத்துப்போனான்

ஆரியர்கள் ஆளப்பிறந்தவர்கள் என
ஆர்ப்பரித்த ஹிட்லர்
யூதர்களை கொன்றுகுவித்து

போலந்து நாட்டின் மீது
குண்டு வீசி 2ஆம் உலகப்போருக்கு
வித்திட்டு 6 ஆண்டுகள் போர் நடந்தது

ஒருவனின் மண் ஆசையால்
97 லட்சம் பேர் இறந்தனர்
2.3 கோடி பேர் ஊனமுற்றனர்

1945 மே மாதம் 30ல் போர் முடிவில்
தற்கொலை செய்துகொண்டு
செத்தேபோனான்

செல்லாததையெல்லாம்
சேர்த்துவைத்த மனிதா
நீ சேர்ந்த இடத்தினிலா செலவு செய்தாய்

அன்பாயிருக்க மறந்து
அடுத்தவன் நலம் கெடுத்தாய்
தரங்கெட்டுத்தனிமையிலே செத்தொழிந்தாய்

பொல்லாததை பொழுதாக்கி
அல்லாதவைகளை அறமாக்கி
தனக்காய் வாழ்ந்து தாழ்ந்துபோனாய்

அடுத்தவர்க்காய் வாழ்ந்து அன்பையும்
அஹிம்சையும் போதித்த புத்தர், ஏசு, காந்தி,
நபிகள்தான் நம்மில் ஆண்டவர்கள்

நீயும் ஆண்டவன்தான்
அன்பாயிருந்தால்
அடுத்தவர் நலம் விரும்பி
னால்




தண்டவாளங்களே
சிலுவைகளானதால்
+++++++++++++++++

இரயில் தண்டவாளங்கள்
ஆங்கிலயரிடம் அடிமையாயிருந்ததின்
அற்புத பரிசு

கப்பிக்கு பிறந்த
இரும்பு விழுதுகள்

எத்தனை கட்டைகள்
இணைக்க முயன்றும்
இணைய மறுக்கும்
இரும்பு இதயங்கள்

நிலையங்கள்தோறும்
பிரிக்க நினைத்தாலும்
கைச்சேர்த்து நடக்கும்
இரட்டை பிறவிகள்

ஊருக்குள் வந்ததால்
கடிகாரத்தேவைகளை
சங்கூதி கெடுத்தவன்

ஆற்றுக்கு கரைகட்ட
மறந்த அரசியல்வாதிகளின்
வெள்ளத்தடுப்புகள்

கைகோர்த்து நடக்கவும்
கதை பேசி சிரிக்கவும்

பல ஊர்களுக்கு
காலை கடன் போக்கவும்

காதலை இரயில் ஏற்றவும்
காதலின் அடையாளமாகவும்

நம்பி வருவோரை
நகரம் அனுப்பவும்

நம்பிக்கையற்றோரை
நரகம் அனுப்பவும்

தண்ணீர் தற்கொலைகள்
குறைந்தே போயின

தண்டவாளங்களே
சிலுவைகளானதால்
மரனம் நிஜமென
மனதிலெழுது
============

உடல்

உடை மாற்றுவது போல்
உயிர்
உடல் மாற்றும் நிகழ்வு
கிழிந்த ஆடைக்காக
எந்த உடலாவது
கதரி அழுததுண்டா

நீ மட்டும் ஏன்
கண்ணீர் வடிக்கிறாய் மனிதா
மரனம் நிஜமென
மனதிலெழுது
உடல் மாற்றங்கள் நிறைந்தது

வளர்ச்சியுடையவையெல்லாம்
மரனிப்பது நிஜம்
உடை
உடுத்தாமல் வைத்திருந்தால்
மடித்துப் போகும்
உடுத்தினால்
கிழிந்து போகும்

உடலும் அப்படித்தான்
உடலுக்குத்தான் மரனம்
உயிருக்கோ
புதிய உடல்

தனி மனித ஒழுக்கத்தால்
மரனத்தை தள்ளிப்போடலாம்
கவனம் கொள்
ஆரோக்கியமற்ற உடல்களில்
உயிர் ஒட்டியிருப்பதில்லை

மனிதா
மரனத்தை தள்ளிப்போட
வேண்டுமா
உடலை பராமரி





















நேற்றைய நிழல்
=============

என் புன்னகையை பரித்து - உன்
கூந்தலில் சூடினாய்

நெஞ்சத்தை கிழித்து
பொட்டிடுக்கொண்டாய்

பட படத்த என் கண்ணீர் நதியில் - உன்
தாகம் தீர்த்துக்கொண்டாய்

ஐயோ பாவம்
அவனும் புன்னகைக்கிறான்

பரித்துவிடாதே
அவனிடமாவது உண்மையாயிரு

நம்பிக்கையோடு உன்
நேற்றைய நிழல்














கைம்பெண்
=========
பூவிருந்த காம்பு
சுடரிருந்த விளக்கு
விதையிருந்த பழம்
நிலவிருந்த வானம்
சுரமிருந்த கானம்
நதி நடந்த பாலை
விடுமுறையின் சாலை
கொடி படர்ந்த கொம்பு
அதர்க்கும் மறு ம(ன)ணமிருக்கு நம்பு



காற்றாலைக் கிழவிகள்

==================


காற்றை விதைத்து
மின்சாரப் பூ பரிக்கும் பூமியிது

காற்றுக்கு கையாட்டும்
காற்றாடி மரங்கள்

தலை மட்டுமே ஆட்டும்
தஞ்சாவூர் பொம்மைகள் இங்கோ

தலைச்சுற்றும் 
மின்சார பொம்மைகள்

நாட்டுக்காய் ஓளி கொடுக்க
நட்டுவைத்த திருவிழா காற்றாடிகள்

சூறாவளிகளை சுருக்கு பைகளில்
காசாக்கும் காற்றாலைக் கிழவிகள்